Tamil Madhura கதைகள்,தொடர்கள் ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 53

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 53

உனக்கென நான் 53

சன்முகம் மயங்கிவிழ சந்துரு “அப்பா” என தாங்கிபிடித்தான். அதற்குள் தன்னவனை காணாமல் வந்த அன்பு “மாமா” என ஓடிவந்தவள் தன் மாமனாரை பிடித்துகொண்டு “அப்பா வாங்க” என கத்தினாள்.

“என்னங்க பொண்ணுகத்துற சத்தம் கேக்குதுங்க” என்றார் பார்வதி. போஸோ கலைப்பாய் இருந்து எழுந்தவர். “என்னம்மா” என்றார்

“இல்ல அன்பு கத்துற என்னனு தெரியலைங்க”

“அடி போடி” என மீண்டும் தூங்க செல்ல அதற்குள் சத்தம் வெளியிலிருந்து வந்தது. பதறிபோய் ஓட அங்கு மூவரையும் பார்த்தார். பின் சந்துரு வண்டியை எடுக்க அந்த மருத்துவமனைக்கு விரைந்தனர்.

டாக்டர் பார்த்துவிட்டு “இவரு ரொம்ப எமோஷனல் ஆகிருக்காரு அதான் ரொம்ப நாளா அடக்கிவச்சுருந்த ஸ்ட்ரஸ் மொத்தமா வெளிய வந்துருக்கு மத்தபடி பயப்படுறதுக்கு ஒன்னுமில்லை மார்னிங்க கூட்டிட்டி போங்க” என்று கிளம்பினார்.

தன் தந்தையின் அருகில் சந்துரு அமர அவனது தோளை ஒரு கைதட்டியது. திரும்பி பார்க்க சுவேதாதான் அது. “ஏய் என்னப்பா அப்பாக்கு ஒன்னுமில்லையே”

“இல்ல சும்மா கொஞ்சம் ஸ்ட்ரஸ்ப்பா அவ்வளவுதான்”

பின் சன்முகத்தின் அருகில் சென்ற சுவேதா “என்னப்பா அதான் அண்ணாவுக்கு கல்யானம் முடிஞ்சிருச்சுல அப்புறம் என்ன கவலை உங்களுக்கு! ஓ என் கல்யானத்துக்கு யோசிக்குறீங்களா” என ஸ்ட்ரஸ் ரிலிப் செய்ய முயன்றாள்.

சன்முகமோ தன் வலி தன்னுடன் இருக்க “ஆமாமா உன்கல்யானத்த பத்திதான் யோசிச்சேன் எனக்கு ஒரு சத்தியம் பன்னுமா”

சுவேதா குழம்பிவிட்டாள். “என்ன அப்பா”

“இல்லம்மா நீ வாழுற வயசுல ஏன் சாகனும்னு நினைக்குற”

“என்னப்பா சொல்றீங்க”

“ஏம்மா உனக்கு இருக்குற அந்த வலிப்பு எதுவரைக்கும் இருக்குனு எனக்கு தெரியும்மா; பாவம் சுகு எனகிட்ட எப்புடி அழுதான் தெரியுமா”

“இல்ல அப்பா அப்புடில்லாம் இல்ல”

“அவன் தான் உன்ன கூட்டிபோய் ட்ரீட்மன்ட் பன்னுறான்னு சொல்றான்ல.”

“எனக்கு ஒன்னும் இல்லப்பா” என சமாளித்து பார்த்தாள். கண்கள் காட்டிகொடுத்தது.

“ஏம்மா உன் ரிப்போர்ட் கன்சல்ட் பன்னிட்டுதான் வாரோம். இன்னும் இரண்டு வருசம்தான் அதுல உனக்கு கெடு இருக்கு: எடுக்கு முரண்டு பிடிக்குற”

“மன்னிச்சிடுங்க அப்பா! நான் வாழ்ந்து என்ன ஆகபோகுது” என கண்ணீர் வந்தாலும் உதடுகள் சிரித்தன.

“இது சாகுற வயசு இல்லடா உனக்கு; நீ சுகு அன்பு சந்துரு எல்லாம் நல்லா வாழனும் ஒன்னா! இந்த அப்பா செத்தாகூட உங்கள பாத்துகிட்டு சந்தோஷமா இருப்பேன் காவேரிகூட சேந்து.” என கூற “அப்பா ஏன்ப்பா சாகனும்னு சொல்றீங்க” என்று அழுதிவிட்டாள்.

“பின்ன என்னம்மா உன்ன மட்டும் எப்புடி நான் சாக விடுவேன்” எனகூறி விட்டு சுவேதாவின் கையை எடுத்து தன் தலையில் வைத்ததார். “சத்தியம் பன்னுமா நீ ஆபரேஷன் பன்னுறேன்னு”  சுவேதாவும் “பன்னிகுறேன்ப்பா” எனகூற சுகு மௌனமாக நின்றான். அவன் உள்ளம் மகிழ்ந்தது அனுக்கு மட்டும்தான் தெரியும்.

பின்ன தன் காதலியை காப்பாற்ற வலி இருந்தும் தவற விடம் பயம் அவனுக்கு “நான் எங்க அம்மாவ பாக்க சீக்கிரம் போறேன்டா” என்று சிரிப்பாள்.

“ஏய் அப்ப உன்ன நினைச்சுகிட்டு இருக்குற எனக்கு என்னடி முடிவு நானும் உன் கூட வந்துடவா”

“லூசாடா நீ! நீ நிம்மதியா ஒரு பொண்ண கட்டிகிட்டு வாழனும்டா” என முத்தம் தருவாள்.

“சுவேதா முரண்டு பன்னாத சொன்னா கேளுடி!”

“ஏன்டா நான் இப்பதான் கொஞ்சம் சந்தோஷமா இருக்கேன் இதே சந்தோஷத்தோடயே செத்துடுறேனே என்ன விட்டுருடா. என்னால இனி கஷ்டம் வந்த தாங்க முடியாதுடா” என குழந்தையாக மாறுவாள்.

“ஏன்டி உன்ன கஷ்டபடுத்திகிட்டு என்னையும் கஷ்டபடுத்துற”

“அதான்டா சொல்லுறேன் அந்த லதாவ கல்யானம் பன்னிகோ அவதான் ரொம்ப பிரியமா இருக்கா உன்மேல! அப்புறம் உனக்கு பிறக்குற குழந்தைக்கு என்பேரு வச்சிடாத என்னமாதிரி வீனா போயிடுவா”

“நீ சரியா வரமாட்ட இரு சந்துருகிட்ட சொல்லுறேன்” என ஃபோனை எடுக்க “ஐய்யோ அண்ணாகிட்டயா வேணாம்டா” என ஃபோனை பிடுங்கிவிடுவாள். ஆனால் இன்று தன் தந்தையிடம் மாட்டிகொண்டு சம்மதம் தெரிவித்ததில் சுகுவுக்க மகிழ்ச்சி. கேட்டால் செயற்கையா வாழ்கைய அதிகபடுத்துனா சுவாரஸ்யம் இருக்காதுன்னு ஐன்ஸ்டின் டயலாக் பேசுவா! அப்புறம் என்ன அவமட்டும் இயற்கையாவா சாகபோறா அந்த போதை பொருள் அது இதுன்னு உடம்ப கெடுத்துகிட்டு இப்ப சாகபோறேன்னு சொன்னா விடமுடியுமா.

“ஏய் சுவாதா அப்பா என்ன சொல்றாங்க” முறைத்தான் சந்துரு.

“டேய் அண்ணா அன்னிய விட்டட்டு நீ இங்க என்னடா பன்னுற போ போய் அவங்கள பாரு” என விரட்டினாள்.

“நான் போறது இருக்கட்டும் உனக்கு என்ன பிராப்ளம்! டேய் சுகு நீயாவது சொல்லுடா” அவனும் மௌனமாகவே நின்றான்.

“டேய் அது பெரியவங்க மேட்டர் உனக்கு என்ன வந்துச்சு அன்னிய விட்டுட்டு இப்புடி வந்திருக்கியே அவங்க ஏமாந்துறபோறாங்க”

“அதெல்லாம் ஒன்னும் ஏமாற மாட்டா!”

“என்னடா சொல்லற”

“ஆமா அவ ஆட்டம் எல்லாம் பகல்லதான்! நைட் அவ தூங்கனா நவீன கும்பகர்னன்தான் எழுப்பவே முடியாதுப்பா” என சந்துருகூற “உனக்கு எப்புடிடா அவங்க ஃபீலிங்க தெரியும்” என சுவேதா கூறும் தருனம். போஸ் அங்கு வர அனைவரும் மௌனாமாமார்கள்.

“மாப்ள நீங்க வீட்டுக்கு போங்க”

“இல்ல மாமா இருக்கட்டும்”

“ஐயோ கல்யானம் ஆன புதுசுல இப்புடி இருந்தா உங்க அத்த பார்வதி பேய் அடிச்சிடும் பூதம் பிடிச்சிடும் அப்புடின்னு சொல்லுவா”

“ஆமா அன்கில் அன்ப தனிய விட்டுட்டு வந்துருக்கான்” என சுவேதா தன் பங்கை ஆற்றனாள்.

“ஆமாமா நீயும் கூட கிளம்பு”

“இல்ல நான் அப்பாகூட இருக்கேன்”

“இது கொஞ்சம் சரியில்லாத ஏரியாமா அதான் நீ சந்துருகூட கிளம்பு அதான் நானும் சுகுமாரும் இருக்கோம்ல”என கூற அரைமனதுடன் கிளம்பினர்.

கார் அந்த குளிரில் அமைதியாக செல்ல “சுவேதா நான் உன் அண்ணன்தான அப்புடிதான நினைக்குற”

“டேய் ஏன்டா அப்புடி கேக்குற”

“இல்ல சும்மாகேட்டேன் உன்ன என் சொந்ததங்கச்சியாதான் நான் பாக்குறேன் அத புரிஞ்சுகோ” எனகூற அதன் உள் அர்த்தம் புரிந்தவள் மௌனமாக இருக்க கார் வீட்டைநோக்கிவிரைந்தது.

“மாமாக்கு எதுவும் ஆகாதுலமா” என்று பார்வதியை வருத்திகொண்டிருந்தாள். “ஏய் போய் தூங்க்குடி இப்பதான் உங்க அப்பா பேசுனாரு சும்மாதானாம் எந்த பிரட்சனையும் இல்லைனு சொல்லிட்டாரு”

“அது இல்லமா இன்னொரு தடவ கேக்குறியா”

“எதுக்கு உங்க அப்பா என்ன அடிக்கவா இப்ப நீ தூங்கறியா இல்லையா”

“சரிம்மா” என தன் தாயின் மடியில் படுக்க.

“ஏய் உள்ள போய் படுடி மாப்ள வந்துகிட்டு இருக்காங்க” என்று திட்ட அன்பு “போம்மா” என எழுந்து சென்று நுழைந்தாள்.

அப்போது பேப்பர் சுற்றபட்ட அந்த டைரி அன்பின் காலில் தவறி விழுந்தது. “ஆஆஆ அம்மா” என கத்தினாள்.

“சேட்டை பன்னாம தூங்கறியா இல்ல சூடு வைக்கவா” என பார்வதி வாசலில் சென்று அமர்ந்தார். அதை எடுத்து பிரித்தாள் அன்பு. உள்ளே முதல் பக்கத்தில் ஜெனியின் அந்த வெள்ளை உடை இருக்க அதில் அவள் தேவதையாக தெரிந்தாள். எப்படியும் வானத்து தேவதைகளின் காதலை சேர்த்துவைக்கும் பனியை பெற்றிருப்பாள் என நினைத்தாள் அன்பரசி.

பின் அடுத்த பக்கத்தை பிரட்ட அதில் அந்த குருப் போட்டோ. ‘யார்டா அது என தலைமேல கைய வச்சு கொம்பு வைக்குறது’ என பார்க்க அது ஜெனியின் கைதான். “குசும்புகாரி” என செல்லமாக திட்டியவளை அந்த டைரி மெதுவாக பிரட்ட வைத்தது. அதை பிரட்டியதால் தன் நிம்மதி கெட போவதை அன்பு உணரவில்லை.

“அக்கா ஆஆஆ இல்லைங்க நான் இல்ல என்ன மன்னிசிடுங்க தெரியாம” என்று புலம்பினான் சேகர். உடனே விளக்குகள் எரிய “என்னடா ஆச்சு அதேகனவா” என்றாள் ஜான்சி தன் தம்பியின் தலையில் கைவைத்துகொண்டே.

ஆம் அவளது உலகம் சேகரை சுற்றித்தான். தந்தை செல்வம் இறந்தபின் தனக்கு இருக்கும் ஒரே உறவு தம்பிதான். தம்பிக்காக தொழிலை நல்லமுறையில் கவனித்தவள். தன் தந்தை சாவிற்கு காரணமான அனைவரையும ஃபலிவாங்குவதும். தன் தம்பிக்கு ஒரு நல்லா வாழ்கை ஏற்படுத்துவதும்தான் லட்சியம்.

ஆனால் சிறுவயதில் எப்போதாவது வரும் கனவு இப்போதெல்லாம் அடிக்கடி ஏற்படுகிறது. தன் தம்பி தூங்காமல் சிரம்படுவதை பார்த்து வேதனைபட்டாள். அதிலும் அந்த ஜெனியை கொல்லும் போது இவன் உடன் இருந்தான்.

“அக்கா வேனாம்க்கா அந்த பொண்ணு அழகா இருக்கு” என கூறும்போதே ரத்தம் அவனதி கன்னாடியில் தெரித்தது.அதில் சற்று பயந்துவிட்டான். அப்போதிருந்து இந்த கனவு அடிக்கடி வர ஆரம்பித்துவிட்டது. ஆம் அவன் கனவு வந்துவிட்டு “அக்கா தலை வலிக்குதுக்கா” எனபான்

பின் “நான் ஏன் அப்புடி பன்னேன்”

“இல்லம்மா எனமேலதான் தப்பு” எனபான். ஜான்சி தோளைதட்டிய பிறகுதான் கூறுவான் “அக்கா இந்த கனவுல இருந்து தப்பிக்க முடியாதா செத்துடலாம் போல இருக்கு” என்று ஒருமுறை அழுதிருக்கிறான். “அக்கா அந்த ஜெனி ஆவிதான் இப்புடி பன்னுதோ” எனபான். “டேய் அதுக்குமுன்னாடில இருந்து உனக்கு இந்த கனவு வந்திருக்குடா”

“ஆமாக்கா ஆனா அடிக்கடி வரலையே” என்ற வாசகம் ஜான்சியை யோசிக்க வைத்தது.

ஆரம்பத்தில் அதிகமாக கனினி என்று சுற்றுவதால் இப்படி ஆகிறது என்று நினைத்தாள் ஜான்சி ஆனால் அவன் கூறுவது நாளுக்குநாளா அதிகமாக பயந்தாள் ஜான்சி. “ஒன்னுமில்லைடா” என தட்டி தூங்க வைப்பாள்.

அவனது கனவில் குறிப்பாக அவன் கூறியது. அந்த பாழடைந்த பங்களா அப்புறம் அந்த ஆடைகிழிந்த ஒரு பெண் ஓட இவன் துரத்திகொண்டு போவான். சில நடுக்கங்கள் ஏற்பட அவன் நிற்க அந்த பெண் ஒருமூலையில் அமர்ந்துகொண்டு அழ “மன்னிச்சுடுங்க தெரியாம பன்னீட்டேன” என்று கெஞ்ச “என கற்புக்கு என்னடா பதில்” என அந்த பெண் கழுத்தை அறுத்துகொள்ள. “நீ செத்ததுக்கு அப்புறம் எனக்கு என்னடி இருக்கு” என இவனும் அறுத்துகொள்ள திடுக்கிட்டு விழித்துகொள்வான்.

இன்றும் அப்படியே நடக்க “நம்ம அப்பாவ கொண்ண எல்லாத்தையும் பலிவாங்கிட்டு அவங்க ரத்ததுல உனக்கு கல்யானம் பன்றேன்டா அக்கா உனக்கு! உனக்குனு ஒருத்தி வந்துட்டா இந்த கனவு வராதுடா” என சபதம் எடுத்து அவனை உறங்க வைத்தாள்.

தன் கை அவனை அரவனைக்க தன் நினைவுகள் அந்த நாளை நோக்கி நகர்ந்தன.

“ஹேய் ஜானு யூ ஹேவ் லட்டர்”

“ஃபிரம் வேர்? ஃபஃட்டி”

“ம்ம் ஃபிரம் யுவர்டாட் பிங்கி”

“ஓ கிவ் தட் டு மி”

“ஐ கேன் ஓபன் யா”

“பட் யு கான்ட் அன்டர்ஸ்டேன்ட் அவர் லாங்குவேஜ் ஸ்வீட்டி”

“ஹே ஐ எம் ஜுலி ஃபிரன்ட் ஆஃப் ஜானு ஐ ணோ டமில்யா”

“ஹாஹா யா ஸ்பீக் சம்திங் ஃபார் மி”

“வெயிட்! ம்ம் சாப்பாட்டுயா!; எபடி இருகான;! ம்ம் நானீ நலமா! ம்ம் வணகம்”

“கிழிஞ்சது வணக்கம் வணகமாயிருச்சு”

“தட்ஸ் ஓவர்யா இட்ஸ் டமில்”

“யா யா எனாப் ஜுலி கிவ் இட் ஐ டிரான்ஸ்லேட் ஃபார் யூ” என அந்த லட்டரை வாங்கி பிரித்தாள்.

ஜான்சிம்மா எப்புடி இருக்க. தம்பிய பாத்துட்டு வந்தியா(ம்ம் வாரத்துக்கு ஒருமுறை பாத்துட்டு வந்துட்டுதான்பா இருக்கேன். இப்பல்லாம் அவன் புரோக்ராமிங்க ஸ்கில் அதிகமாகிட்டே போகுது என தனக்குள் பதில் கூறினாள்). நல்லா இருக்கியானு நீ திரும்ப கேக்காதமா நான் நல்லா இல்ல.(என்னப்பா ஆச்சு).பல வருசத்துக்கு முன்னாடி நான் அந்த காவேரி மேல தெரியாம கார் ஏத்திட்டேன் அதனால அந்த காவேரி மில்ஸ் முதளாலி திட்டம் போட்டு இப்ப அப்பாவ இந்த மாதிரி ஆக்கிட்டாங்கம்மா. ஜான்சி புரியாமல் விழித்தாள்.

ஆமாமா அப்பாவுக்கு ஆக்ஸிடன்ட் ரெண்டு காலும் போயிருச்சும்மா அந்த கம்பெனி லாரிதான் அப்பா மில்லுக்கு போனப்போ வந்து மோதிட்டாங்க. நீதான்மா அவங்கள தட்டிகேக்கனும். நல்லா படிச்சுட்டு ரெண்டுபேரும் வாங்க. அதுக்கு முன்னாடி நான் செத்தாகூட வரகூடாது. இதுதான்மா ஒரு மகளா நி எனக்கு பன்னவேண்டிய கடமை.

என லட்டர் முடிய கண்ணீருடன் நின்றாள்.

“ஹேய் ஸ்வீட்டி வாட் ஹேப்பன்” இது ஜுலி.

“நத்திங் யா”

“தென் ஒய் யூ ஹேவ் டியர்”

“மை ஃபாதர் காட் ஆக்ஸிடன்ட் அன்டு லாஸ்ட் ஹிஸ் லெக்ஸ்” என தன் தோழி அழுததும் ஜுலிக்கு தன் தந்தை யார் என்றே தெரியாது.ஆனாலும் தந்தை பாசம் என்றால் இதுதானா என உணர்ந்து. தன் தந்தையாக நினைத்து வருந்தினாள்.

“அதுக்குதான்டா தம்பி அப்பா இறந்தப்போ நீ அவ்வளவு அழுதும் நான் உன்ன விடல. இதுக்கெல்லாம் அப்பா எனக்கு குடுத்த அந்த கடமைதான்டா காரணம். அந்த காவேரி குடும்பத்த நான் முழுசா அழிக்கனும். அவனையும் அவன் சார்ந்தங்களையும் அவங்க பிரண்டுனு யாரையும் விடமாட்டேன்” என்று சபதம் எடுத்துகொண்டு எழும்போது சேகர் தன் அக்காவின் கையை இறுக்கமாக பற்றிகொண்டான்.பின் அவளை பார்த்தவள் அவனருகிலேயே அமர்ந்தாள்.

“என்ன அன்பு என்ன இன்னும் தூங்கலையா” இது சந்துரு.

“இல்லா மாமாக்கு எப்புடி இருக்கு”

“அப்பாவுக்கு எதுவும் இல்ல நீ தூங்கு” எனகூறும்போது அந்த டைரி அவள் கையிலிருப்பதை பார்த்தான்.

“ஆமா மேடம் இப்புடி நடுராத்திர உட்காந்துதான் டைரி எழுதுவீங்கலா. அது எப்புடின்னு எனக்கும் சொல்லி குடுங்க”

“ம்ம் இது நான் உங்கள நினைச்சு எழுதற டைரி இப்ப காட்டமாட்டேன்”

“என்னடா இது எனக்குனு சொல்லுற ஆனா நான் பாக்க கூடாதா”

“நீங்க என் புருசனா இருந்தா பாக்கலாம் ஆனா நீங்க என்னோட லவ்வராதான் அதானால நோ”

“ம்ம் அப்ப நான் சாகுற வரைக்கும் பாக்க முடியாது”

“என்ன?!!!!”

“இல்லம்மா அரிசி நீ எனக்கு எப்பவுமே காதலிதான் நமக்கு நூறு குழந்தை பிறந்தாலும் நீ எனக்கு செல்லமான காதலிதான். அதனாலதான் அப்புடி சொன்னேன்”

“ம்ம் சரி நீங்க தூங்குங்க” என அங்கிருந்த மேஜைக்கு சென்றாள்.

“என்ன அரிசி அவ்வளவு ரகசியமா”

“இல்லைங்க”

“அப்புறம் என்ன? இங்கயே உட்காந்து எழுதுங்க” என்று கட்டிலில் அமர்ந்தான்.

“எதுக்கு நீங்க ஒட்டுகேக்குறமாதிரி ஒட்டுபாக்கபோறிங்களா”

“ஆமா என் லவ்வர் கையெழுத்து எப்புடி இருக்குனாபாக்கத்தான்”

“டீச்சர் கையெழுத்து நல்லாவாங்க இருக்கும்”

“அதுக்கு இல்ல அரிசி நான் வீட்டுல டெடி பியர கட்டிபிடிச்சுட்டுதான் தூங்குவேன். அதான் “ என இழுத்தான். அரிசிக்கு வெட்கம் வரவே “அதுக்கு” என அவளும் இழுக்க.

“உன் தலையனைய நான் எடுத்துகட்டுமா இல்லைனா அப்புறம் உன்னதான் கட்டிபிடிக்க வேண்டியிருக்கும்”

‘அதுக்குதான்டா நான் இருக்கேன்’ என நினாத்தவள்.

“இந்தாங்க” என அதை எடுத்து அவனிடம் கொடுத்துவிட்டு அந்த கட்டிலில் அமர்ந்து டைரியை புரட்ட அவன் கலைபில் தூங்கினான்.

அன்பரசி டைரி படிக்க அரிசி தன்னவனை அடிக்கடி பார்த்துகொண்டாள்.

-தொடரும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஒகே என் கள்வனின் மடியில் – 3ஒகே என் கள்வனின் மடியில் – 3

ஹாய் பிரெண்ட்ஸ், சென்ற பகுதிக்கு நீங்க அளித்த வரவேற்புக்கு மிக்க நன்றிப்பா. இந்த பகுதியில் நீங்க ஆவலுடன் எதிர்பார்த்த ஹீரோ ஹீரோயின் சந்திப்பு. படிச்சுட்டு ஒரு நிமிடம் செலவழிச்சு கமெண்ட்ஸ்ல உங்க கருத்துக்களைப் பகிர்ந்துக்கலாமே. பேஸ்புக் அக்கவுண்ட் இருக்கவங்க அதே ஐடியை 

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 48ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 48

உனக்கென நான் 48 சந்துருவை கடக்கும்போது அந்த பெண் டிக்டாக் என சைகை செய்ய நண்பர்கள் இருவரும் அதிர்ச்சியில் நின்றிருந்தனர். அவள் சிரித்துகொண்டே செல்ல அந்த நேரம் “சந்துரு இந்தா இத அன்புக்கு!!” என சன்முகம் வந்த நேரம் அவரது கையிலிருந்த

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 50ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 50

உனக்கென நான் 50 “என்னங்க அந்த பலசரக்கு கடையில வேலைக்கு ஆள் கேட்டாங்க அவங்களுக்கு வயசாகிருச்சுல அதான் முடியலையாம் கூடவே நானும் இருந்தா அவங்களுக்கும் பேச்சுதுனையா இருக்கும்ங்க நான் போகட்டுமா” என்று அனுமதி வாங்கிகொண்டிருந்தாள் காவேரி தன் கனவன் சன்முகத்திடம். “இல்லமா