Tamil Madhura கதைகள்,தொடர்கள் ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 52

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 52

உனக்கென நான் 52

பேருந்தின் சக்கரங்கள் பார்வதியை எதிர்பார்த்து சுழன்றன. காவேரியின் மனதில் தன் தந்தையின் நினைவுகள் அரித்துகொண்டிருந்தன. “ஏங்க அப்பாவ அப்புடியே ஒரு எட்டு பாத்துட்டு வந்துடலாம்ங்க”

“காவேரி நீ புரிஞசுதான் பேசுறீயாமா” என்ற சன்முகத்தின் ஒற்றை வார்த்தையில் அமைதியானாள் சோகமாக மாறியது முகம். சன்முகத்திற்கு வருத்தம்தான்.

“ஏன்மா எனமேல கோபமா?”

“இல்லைங்க மனசு ஒருமாதிரி இருக்கு அதான்”

“அத உங்க அன்னி பார்வதி சரிபன்னிடுவாங்க வா” என்று கூறும்போது சிறிய புன்னகை தோன்றி மறைந்தது.

“ஏய் பார்வதி நீ மாசமா இருக்குறது தெரிஞ்சா போஸ் எவ்வளவு சந்தோஷபடுவான் தெரியுமா” என்றதும் கவலைகள் மறைந்து தன்னவனை பார்த்து சிரித்தாள். அவளது மனதின் தற்போதைய மருந்த அந்த புது சொந்தங்கள்தான்.

“அன்னி கையால திறக்கட்டும்ங்க அப்பதான் ராசி”

“ம்ம் கன்டிப்பா உன் ஆசைதான் எனக்கும்”

“ஆனா வருவாங்களா?” என்றாள் சந்தேகமாக.

“நீ கூப்பிட்டு வரமாட்டேன்னு எப்புடி சொல்லுவான். தங்கச்சினு ஓடி வந்துடுவான். நீ ஏன் அதபத்தி நினைக்குற”

“இல்லங்க மனசுல ஏதோ உறுத்தலா இருக்கு அதான் கேட்டேன். அண்ணா வரலைனு சொல்லிட்டா என்ன பன்றது” என்றாள் குழந்தை மாதிரி

“உன் பையன் வந்து திறக்கட்டும் இன்னும் எட்டு மாசம் வெயிட் பன்னுவோம்” என சன்முகம் கூற “ச்சீ போங்க எப்பவும் கிண்டல் பன்னிகிட்டு. அதெல்லாம் அண்ணன் வரும்.”

‘அப்பாடா சிரிச்சுட்டா’ என மனதில் மகிழ்ந்த சன்முகம் “உனக்கு என்ன குழந்தைடி வேணும் நான பையன்னு பிக்ஸ் ஆகிட்டேன்.” என்றார். “எனக்கு இளவரசனா இருந்தாலும் சரி ஏன்ஜலா இருந்தாலும் சரிதாங்க.”

“ஆமா நீ எப்புடியும் வளர்க்கபோறது இல்ல”

“என்னங்க சொல்றீங்க” அதிர்ச்சியானாள் காவேரி. அது எந்த அளவுக்கு உண்மையாகும் என்று அப்போது தெரியவில்லை.

“அடி லூசு அங்க அன்னிக்கும் எனக்கும் ஒரு ஒப்பந்தம் இருக்கு சின்ன வயசுல! என் குழந்தை அவங்கதான் வளப்பாங்கலாம்.” என்று சிரித்தார்.

“அப்போ என் மருமகள நான் வளத்துகிறேன்” என்றாள்.

“என்னடி அன்னிக்கு பொண்ணுனே பிக்ஸ் ஆகிட்டியா”

“ஆமா அண்ணி மாதிரி அழகா ஒரு பொண்ணு பிறந்தா எப்புடி இருக்கும்” என வானத்தை பார்த்ததாள்.

“அப்போ நமக்கு பொண்ணு பிறந்து அவங்களுக்கு பையன்னா”

“கல்யானம் பன்னிடலாம்ங்க”

“ஏய் வயசு கூட இருக்கும்டி”

“பரவாயில்லங்க சொந்தம் விட்டுபோக்கூடாது”

“ம்ம் அப்ப ரெண்டுமே பொண்ணுனா” என சன்முகம் கூர காவேரி மனதில் பதிந்திருந்த பதில் “கல்யானம்தான்” என கூற “ஏய் லூசு என்ன பேசுறேன்னு தெரியுதா” என்றார் சிரித்துகொண்டே.

காவேரி நாக்கை கடித்துகொண்டா “ஐயா தெரியாம சொல்லிட்டேன்” என சிரித்தாள்.

“யாருக்கு தெரியும் இனி இதெல்லாம் நடந்தாலும் ஆச்சரியபடுறதுக்கு இல்ல” என சன்முகம்கூற அவருக்கு அடி கிடைத்தது. “விடும்மா வலிக்குது” என சிரிக்க அவர் தோளில் சாய்ந்துகொள்ள சிலமணிநேரத்தில் அந்த ஊர் வந்தது.

காவேரியும் சன்முகமும் பார்வதியின் வீட்டை நெருங்கியநேரம் உள்ளிருந்து கேட்ட குரல்கள்.

“ஏன்டி ஒரு உப்பு ஒழுங்கா போட தெரியுதா உனக்கு இதுவே என அண்ணன் பொன்னு சென்பகம்னா எப்புடி சமைப்பா தெரியுமா? போயும் போயும் உன்ன கட்டிகிட்டு வந்துருக்கான்பாரு. இத நாய்க்கு ஊத்துடி” இது மாரியம்மாளின் குரல்.

“குடுங்க அத்த நான் உப்பு போட்டுட்டு வாரேன்.” என்றார் பார்வதி.

“ஆமா சீமையில இல்லாத பொண்ணு இவ!” என முனங்கிகொண்டே “உப்பு மட்டுமா பிரட்சனை இது சாப்பாடு மாதிரியே இல்லடி சும்மா எப்ப பாத்தாலும் குலைய வச்சுகிட்டு”

“அவருக்கு அப்புடி இருந்தாதான் அத்த பிடக்கும்” என்று சோகமாக கூற

“அப்ப என்ன எங்கயாவது கோயில்லபோய் தூக்கிபோட்டுட்டு வந்துடுங்க ரெண்டுபேரும். அப்புறம் நிம்மதியா இருங்க” என்று குமுற பார்வதி கண்ணில் நீர் வந்தாலும் மௌனமாக இருந்தார். எல்லாம் தன் கனவனுக்காக.

இந்த பேச்சுவார்த்தைகளை கேட்ட காவேரி பயந்துகொண்டே நிற்க “அத்த அப்புடிதான் திட்டிகிட்டே இருப்பாங்க உன்ன பாத்த சந்தோஷமாகிடுவாங்க வா” என சன்முகம் அழைத்து வந்து “போஸ் போஸ்” என குரல் கொடுக்க பார்வதி வெளியில் வந்தாள். சட்டென கண்ணீரை துடைத்துகொண்டாள்.

வாங்க அண்ணா வாங்க அன்னி அவுக வெளிய போயிருக்காங்க

அங்க யாருகூடடி பேசிகிட்டு இருக்க வேலைய பாக்காமஎன உள்ளே இருந்து மாமியாரின் குரல்.

சன்முகம் அன்னா வந்திருதக்காங்க அத்த

யாரு போஸோட பிரன்டுதான

ஆமா அத்த

ஆமா அவனுக்குதான இப்ப கல்யானம் முடிஞ்சிதுள்ள?” என மாரியம்மாள் கூறும்போதே

நீங்க உள்ள வாங்கன்னாஎன பார்வதி அழைக்க

ஆமா அந்த பொண்ணுகூட அந்த *****ஜாதி பொண்ணுதானஎன்றார் மாரியம்மாள். அவ்வளவுதான் மனதில்காத்துகொண்டிருந்த அனைத்து சோகங்களும் காவேரியை சுற்றி வளைக்க முன்னால் எடுத்து வைத்த கால்கள் சிலையாக மாறி பின்னால் வைத்தாள்.

உடனே தன் ஒரே ஆதரவான தன்னவனின் தோளில் சாய்ந்துகொணாடாள்.

ஏய் அழாதடி இப்போ என்ன நடந்திருச்சு சின்னபுள்ளையாட்டம் அழாதஎன சன்முகத்தின் கண்ணும் கலங்கியது. பார்வதி என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தாள்.

சன்முகத்தின் தோளில் சாய்ந்து அழுதுகொண்டிருந்த காவேரி “போஙலாங்க” என குரல் கொடுக்க சன்முகத்தின் காதில் மட்டும் கேட்டது.

“சரி நீ அழாத” என சமாதான படுத்தியவர். “சரிம்மா தங்கச்சி போஸ்கிட்ட எதுவும் சொல்லவேனாம் வருத்தபடுவான் நான் இன்னொரு நான் வாரேன்” என தன் மனைவியை தோளில் சாய்த்துகொண்டு நடந்தார்.

“ஏய் அழாதடி அவங்க அப்புடிதான் எப்பவும் பேசுவாங்க”

“இல்லைங்க என்ன எல்லாரும் காயபடுத்தாராங்க நான் பிறந்த்துல இருந்து உங்கல பாத்த அப்புறம் தான் சந்தோஷம்னா என்னனு தெரிஞ்சுகிட்டேன்.” எனவிம்மி அழுதவள். “எங்க அப்பாகிட்ட காசு இருந்துச்சு ஆனா ஒரு கோயிலுக்கு கட்ட காசு கொடுப்பாரு ஆனா சாமிய நாங்க வெளிய இருந்துதான் கும்பிடுவோம்.” என அவள் அழ சன்முகத்திற்கு என்ன ஆறுதல் கூறுவது என்றே தெரியவில்லை.

“என் பிரன்ட்ஸகூட எனக்கு தண்ணி தரமாட்டாங்க! அப்புடி ஒரு நாள் தாகத்துல எடுத்து குடிச்சுட்டேன் அவ அந்த பாட்டில குப்பைல போட்டுட்டா அதுவும் கையால தொடாம! அன்னைல இருந்த தாகம் வந்தாலும் யாருகிட்டயும் கேக்கமாட்டேன்” என விம்மி அழுதாள்.

“நான் உங்கள கல்யானம் பன்னிகிட்டு ரொம்ப கஷ்டபடுத்துறேன்ல?”

“இப்ப நீ அடி வாங்க போற எனகிட்ட”

“அப்புடி அடிச்சு கொண்ணுட்டு வேற கல்யானம் பன்னிகோங்க ப்ளீஸ்” என அழுதாள்.

“இங்க பாரு நான் உன்ன நினைச்சு வாழுவேனே தவிற இன்னொரு பொண்ணு சான்சே இல்ல. சும்மா நீ என இப்புடி புலம்பிகிட்டு இருக்க. முதல்ல உன் தாழ்வுமனப்பான்மைய விட”

“அது இந்த சமுதாயம் எனக்கு குடுத்த பரிசுங்க அத விட முடியல, பாருங்க இப்ப என்ன ஆச்சுனு”

“ஐயோ உங்க அண்ணன் அப்புடி சொன்னானா இல்ல அன்னிதான் அப்புடி சொன்னாங்களா? ஏன்டி மனச குழப்பிக்கிற”

“இல்லைங்க என்னதான் நீங்க சொன்னாலும் என் பிறப்ப மாத்த முடியாதுல்ல” என அழ சன்முகம் அவளை அனைத்துகொண்டு அந்த பேருந்தில் ஊருக்கு திரும்பினர். பயனம் முடியும் வரை அழுதுகொண்டே வந்தாள். சன்முகமும் சமாதனபடுத்தி பலனில்லை.

வீட்டிற்கு வந்தவள் அந்த அறையில் சென்று அழுதுகொண்டே உறங்கினாள். சன்முகம் சமையலைமுடித்து அவளை எழுப்பி ஊட்டினார். “இந்தாம்மா சாப்பிடு பாப்பா இருக்குல வயித்துல”

“என பையனையும் அப்படிதான சொல்லுவாங்க” என்று கண்ணீர் வற்றிய கண்ணுடன் கூறினாள்.

“ஏய் இப்ப எதையும் நினைக்காம சாப்புடுறியா இல்லையா” என சன்முகம் முதல்முறையாக கோவபட அவள் அமைதியாக சாப்பிட்டாள். பின் தன் கனவன் மடியில் உறங்கினாள்.

காவேரி எவ்வளவு அழகான பெயர் உனக்கு அதுக்கு ஏத்த அழகுதான்டி நீ! உன்ன நான் பாத்தப்போ நீ அழகா கையில ஒரு குழந்தைய வச்சுகிட்டு இருந்த அத ரோட்டுல விட்டுட்டு போனதால அது பஸ்ல அடிபட தெரிஞ்சது. அத காப்பாத்திட்டு உனக்கு கைல காயம் வேற இருந்துச்சு. ஆனா நீ அந்த பெத்தவங்க்கிட்ட போட்ட பாரு சண்டை. ரொம்ப துணிச்சலா இருந்த சும்மா ஒரு வேலுநாச்சியார் மாதிரி. அப்புடி தைரியமா இருந்தவ ஏன்டி இந்த விஷயத்துல மட்டும் இப்புடி கோழையா இருக்க என மனதில் புலுங்கினார்.

அந்த இரவின் ஓட்டம் இப்படியே முடிய சோகமாக இருவரும் பேசிகொள்ளாமலே நாட்கள் ஓடின. அந்த வாரம் வந்தது. அத்றகு இடையில் அந்த பங்களா வீட்டிற்கு மாறியிருந்தனர். பின் அந்த காரில் ஏறிகொண்டா தன் கன்பெனியை பார்க்க சென்றாள்.தன் அன்னன் இல்லாத வருத்தம் இருந்தாலும் தன் அன்னியை நினைத்துகொண்டு கையெழுத்திட்டு வேலையை துவங்கினாள்.

தன் தொழில் திறமையால் நான்கு யூனிட்டாக இருநந்த தன் மில்லை ஐந்தாவது யூனிட்டை திறக்கவே அனைத்துவேலையாட்களும் பாராட்டினர்.

“லிங்கம் ஐயா பொண்ணுனா சும்மாவா!”

“முதலாளி அம்மா நல்லா இருக்கனும்” சம்பளமும் உயர்ந்தது கூடவே கம்பெனியும் வளர்ந்தது.

“அதான அந்த செல்வம் கம்பெனியால நம்ம நடுதெருவுக்கு வந்துடுவோம்னு பயந்துட்டோம்ம்மா மகராசி எங்கள காப்பாத்த வந்துட்ட” என சிலர் என காவேரியின் மில் வளர்ந்தது

ஆம் எல்லாம் லிங்கம் மற்றும் சந்திரசேகரின் யுக்திகள்தான். எங்கு சென்றாலும் தன் பெண்ணை அழைத்துசெல்வார்கள். அதனால் தொழில் அனைத்தும் காவேரிக்கு அத்துபடி.

சில மாதங்களில் கம்பெனி என்றுமில்லாத அசுரவேகமடைந்தது. அனைத்து மற்ற பெரிய முதளாலிகளும் இந்த சிறிய கம்பெனியை பார்த்து அஞ்சினர். பல இடையூறுகள் வந்தன. ஆனால் காவேரியின் நேர்மைக்கு முன் அனைத்தும் பொடியானது.

காவேரியால் நடக்கவே இயலாத நிலை அது. மிகுந்த சிரமத்துடன் ஃபைல்களை பார்த்துகொண்டிருந்தாள். ஆம் குட்டி முதலாளி பிறக்க இன்னும் சில மணிதுளிகள்தான் பாக்கி. ஆனாலும் அடுத்த வாரம் டெலிவரி என்று கூறியதாலும் முக்கியமான வேலை எனபதாலும் வந்திருந்தாள். பிரம்மதேவர் அவனது ராஜ வாழ்வுக்கான குறிப்புடன் நின்றிருந்தார்.

இன்னும் நேரம் இருக்குப்பா என கடவுள் கூற அதெல்லாம் முடியாதுப்பா நான் எங்க அம்மாவ பாக்கனும் என வயிற்றில் அடம்பிடித்தான் அந்த குட்டி முதலாளி. காவேரிக்கு வலி அதிகமாக மில்லிருந்த பெண்கள் ஓடிவந்தனர்.

“என்னமா ஆச்சு”

“ரொம்ப வலிக்குதுக்கா அவர கூப்பிடுங்க எனக்கு பயமா இருக்கு” என்று பதறினாள்.

“அம்மா ஐயா வர லேட் ஆகும்மா”

“அம்மா வலிக்குது ஆஆஆ” என கத்த

“ஏய் என்னங்கடி பாத்துகிட்டு இருக்கீங்க ஆஸ்பத்திரிக்கு தூக்குங்க”

“அக்கா எந்திரிக்க முடியல”

“கிறுக்கிகலா ரூம் அடைங்கடி! சும்மா பேசிகிட்டு இருப்பாளுக” என அந்த பாட்டி வர காவேரி மிகவும் சிரம்பட்டாள். அந்த பெண்களால் தன் முதளாலியின் கண்ணீரை பார்க்கமுடியாமல் எல்லாரும் சோகமாக இருக்க

“என்னடி இது எப்பவும் நடக்குறதுதான்” என அந்தபாட்டி அதட்டி வேலை வாங்க அந்த நேரம் சன்முகம் பதறிகொண்டு வந்தார். சில பெண்கள் அவளை வெளியிலிருந்து தடுக்க முகத்தில் கவலையுடன் நின்றிருந்தார்.

‘எனக்குனு அவதான் இருக்கா கடவுளே அவள எனக்கு திரும்ப கொடுத்துரு’ என வேண்டிகொண்டிருந்தார்.

காவேரியோ தன்னவனின் கண்ணீரை அந்த சிறிய கண்ணாடி துளை வழியே பார்க்க அவனது கண்ணீரை துடைக்க மனம் நாடியது. ‘கடவுளே என் உயிர் போனாலும் பரவாயில்ல அவருக்கு ஒரு வாரிசு பிறந்திடனும்’ என இவள் வேண்ட மயக்கமடைந்தாள்.

குழந்தைசத்தம் அந்த அறையை நிரப்ப “குட்டி முதளாலி சார் பிறந்துருக்காரு” என அந்த பாட்டி கூற அனைத்து பெண்களும் கொஞ்ச ஆரம்பித்தனர். காவேரி லேசாக கண்விழித்து தன் மகனை வாங்கினாள். “அவர கூப்பிடுங்க” எனயை நிரப்ப “குட்டி முதளாலி சார் பிறந்துருக்காரு” என அந்த பாட்டி கூற அனைத்து பெண்களும் கொஞ்ச ஆரம்பித்தனர். காவேரி லேசாக கண்விழித்து தன் மகனை வாங்கினாள். “அவர கூப்பிடுங்க” என்றாள். அவரது வாரிசை தோற்றுவித்த மகிழ்ச்சியில்.

ஒரு பெண் வெளியே போக சன்முகத்தை வெளியே இருந்த அந்த டெலிஃபோன் அழைத்தது. அதை எடுத்து பன்றாள். அவரது வாரிசை தோற்றுவித்த மகிழ்ச்சியில்.

ஒரு பெண் வெளியே போக சன்முகத்தை வெளியே இருந்த அந்த டெலிஃபோன் அழைத்தது. அதை எடுத்து பேசவேசவேயில்லை சன்முகம் ரிசிவர் கீழேயில்லை சன்முகம் ரிசிவர் கீழே விழுந்து நொருங்கியது.

“ஐயா ஆண்குழந்தைங்க! அம்மா உங்கள வர சொன்னாங்க” என்றாள்.

சன்முகம் கண்ணீருடன் வந்து தன் குழந்தையை தூக்கி சந்திரசேகர்என வாய் குழற சந்துருஎன கூறினார். காவேரியின் முகத்தில் அதிர்ச்சி.

“ஆமாம்மா உங்க அப்பா நம்ம வீட்டுக்கு நிரந்தரமா வந்துட்டாரு” என சந்துருக்கு முத்தம் வைத்தான். காவேரிக்கு கண்கள் கலங்கியது.

“அழாதமா உங்க அப்பா முன்னாடி நீ அழகூடாது” என கூற கண்ணீர் வடிய உதட்டில் சிரிப்பை முயன்றாள்.

சந்திரசேகராக மறித்து. இன்று தன் மகள் மடியில் சந்துருவாக அவதறித்த தன் தந்தையை சீரும் சிறப்புமாக வளர்த்தாள். அந்த மில்லில் வேலை செய்யும் அனைவருக்கும் சந்துரு என்றாள் விருப்பம்.

அனைவரும் அவனை தூக்கி கொஞ்ச போஸ் ரானுவத்திற்கு சென்றதால் பார்வதியும் தன் மருமகனை பாக்க வரமுடியாமல் போனது. அதன்பின் அன்பரசி எனும் குட்டி தேவதை அவதறிக்கும் போதுதான் பார்த்தார் பார்வதி அந்த இரு பிள்ளைகளையும். பார்வதியின் வீட்டிற்கு செல்ல காவேரிக்கும் சிறிது பயம் இருந்தது. அதற்கு காரண்ம உங்களுக்கு தெரியுமே

ஆனால் அன்னிக்கு பிரசவவலி என்று தெரிந்ததும் மிகபெரிய மீட்டிங்கை “அடுத்த வாரம் பாத்துகலாம்” என கிளம்பிவந்தவளுக்கு தன் மருமகள் அன்பரசியை தொடும் பாக்கியம் கூட இல்லாம்ல் போனது காவேரியின் துர்அதிஷ்டம் தான். ஆனாலும் தன் மருமகளை தன் மகனுக்கு எடுக்க வேண்டும் என ஆசை அவளுக்கு. அது இன்று நிறைவேறிவிட்டதை நினைத்து சன்முகதின் கண்ணில் இன்று ஆனந்த கண்ணீர்.

இதை கேட்ட சந்துரு மௌனமாக நின்றிருந்தான்.

“அன்னைக்கு அதான் அவ கடைசி நாளைக்கு முன்னாடி நைட் “ என சன்முகத்திற்கு கண்களில் நீர் வந்தது.

“என்னடி உன் பிள்ளைய நீயே கண்ணு வச்சுடுவ போல” என தன் ஏழுவயது மகனின் தூங்கும் அழகை ரசித்துகொண்டிருந்த தன் மனைவியின் அருகில் நின்றாள்.

“இல்லைங்க அழகா தூங்குறான்ல”

“அவனுக்கு விளையாட ஒரு பாப்பா வேனும்னு உனக்கு தோனலையாடி” என சன்முகம் கூற “ஆமாங்க பாவம் தனியா விளையாடுறான்ல” என்றாள் வெட்கபட்டுகொண்டு

“வா ஒரு பாப்பா பர்ஜேஷ் பன்னிட்டு வந்துடலாம் கடைல”

“என்ன கடைலயா அப்ப நான் எதுக்கு இருக்கேன்” என்று முறைத்தாள்.

“நீதான் வேலைனு சுத்திகிட்டு இருக்கியே!”

“கம்பெனியும் பாக்கனும்லங்க”

“அப்ப நான் வேற கல்யானம் பன்னிகிட்டு ஒரு பாப்பா பெத்துக்க வேண்டியதுதான் வேற வலியில்லை.”

“அடி விழும்” என்று தன்னவனின் மார்பில் சாய்ந்துகொண்டாள். அப்போது சந்துரு புரண்டுபடுக்க “பையன் டிஷ்ட்ரப் ஆகுறான் நாம் கீழ போகலாம்” என காவேரியை தூக்கிகொண்டு நடக்க காவேரி சிரித்துகொண்டே வெட்கபட்டாள்.

சிறிது நேரம் காதலை காமம் ஊடுருவ தன் அடுத்த ஏன்ஜலுக்காக காத்திருந்த தன்னவனை கட்டி அனைத்தாள். “ஏங்க பையன் வேனுமா பொண்ணு வேனுமா”

“உனக்குதான்டி சமைக்க தெரியல! அதனால ஒரு பொண்ணு பெத்துகுடு அவளாவது நல்லா சமைக்கட்டும் எனக்கு. அதுவுமில்லாம அன்பரசிக்கு ஒரு நாத்தனார் வேனும்ல. ரொம்ப சுட்டிதனம் பன்றாலாம் தங்கச்சி சொல்லுச்சு”

“அப்போ பாத்துட்டு வரலாமா”

“ம்ம் வா கிளம்பு போகலாம்”

“இப்பவேவா”

“ஆமா இப்புடியே கிளம்பு”

“ச்சீ போங்க” என வெட்கபட “சும்மா சொன்னேன்டி நீ உன் மறுமகள பாக்க இப்புடி கிளம்புனாலும் கிளம்பிடுவ” என்று சீன்டினார்

“சரி நாளைக்கு சந்துருக்கு பள்ளகூடம் முடிஞசதும் சந்துருவ பிக்கப் பன்னிட்டு கிளம்பி வந்துடு நான் அன்புக்கு பொம்மைலாம் வாங்கிட்டு வந்துடுறேன்.”

“நாளைக்கு குடிக்காம வாங்க அப்புறம் அண்ணாகிட்ட சொல்லிடுவேன்”

“அய்யோ ஆத்தா அவன் கிட்ட சொல்லிடாது அப்புறம் நான் செத்தேன்! ஆமா அவன் தான் ஊருல இல்லையே அப்புறம் எப்புடி சொல்லுவ”

“அதான் அன்னி இருக்காங்கள்ள”

“அதுக்கு அவன் கிட்டயே சொல்லிடலாம்” என்று சிரிக்க தன் மனைவியை கட்டி அனைத்துகொண்டார்.

“ஏங்க அந்த செல்வம் என்ன பேச்சு பேசுனான் தெரியுமா”

“ம்ம் யாரு அந்த SS கம்பெனி முதளாலியா”  என அவளை மேலும் இறுக்கினார் தன் அன்பை காட்ட.

“ஆமாங்க அவன் தான் இன்னைக்கு மீட்டிங்கல! எல்ல ஸ்டாக் புரோக்கர்ஸ்ஸும் அப்புறம் காட்டன் முதலாளிங்களும நமக்கு அவங்க சேர் போட்டு புடு மில் கட்டிதாரேன் உங்க குவாலிட்டி பிடச்சிருக்கு. இன்னமும் இந்த செல்வத்துகிட்ட ஏமாற தயார இல்லனு சொல்லிடாங்க”

“ம்ம் அவன் குவாலிட்டிதான் ஊருக்கே தெரியுமே. நல்ல முடிவுதான் எடுத்துருக்காங்க அப்ப காவேரி மில் இன்னும் பெரிசா ஆகபோகுதா”

“காவேரி மில்ஸ் இல்லசந்துரு மில் ஓகேவா!” என சன்முகத்திற்கு முத்தம் வைத்தாள்.

“ம்ம் சரிங்க மேடம்”

“ம்ம அவன் அந்த மீட்டிங் முடிஞ்சு வெளிய வந்து ஏய் காவேரி வீட்டுல பாத்திரம் தேக்கவேண்டியவடி நீ! நீ எனக்கு போட்டியா வாரியா! உன் உயிர் உனக்கு இல்லடி அப்புடின்னு மிரட்டுனான் எனக்கு பயமா இருக்குங்க”

“அடி லூசு குலைக்குற நாய் கடிக்காதுடி! வா நாம் டுவின்ஸ் பிறக்க வைக்கலாம்” என மீண்டும் விளையாட்டை துவங்கினார்.

மறுநாள் சந்துரு கேட்ட அந்த பாரின் சாக்லெட் கொரியரில் வர அதில் ஒரு பகுதியை எடுத்து அன்பரசிக்கு வைத்திருந்தாள். சன்முகம் அன்புக்கு பொம்மைகளை வாங்க சிறிது மதுவும் குடித்தார் எனபதே உண்மை

காவேரிக்கு தன்னை பின்பற்றியை வந்த வண்டியை பார்த்து பயம்.தன்னவனுக்கு அழைக்க சன்முகமோ பயந்துகொண்டு “இவ நான் சரக்கடிச்சத ஃபோன்லயே கன்டு பிடிச்சுடுவா” என பயந்துகொண்டு எடுக்கவில்லை.

பின் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு சந்துருக்காக காத்துகொண்டிருந்தாள் பதட்டதுடன். அவன் வந்தான். கையில் அந்த சாக்லெட்டை எடுத்து நடந்தாள். “அம்மா அம்மா” என சந்துரு ஓடி வர அந்த வெள்ளைகார் அவனைநோக்கி விரைந்து வந்தது.

அப்போதுதான் கண்கள் விரிய பார்த்தாள். அந்த காரை இயக்குவது அந்த செல்வம். அசுரவேகம் அவனது ரத்தவெறி இன்று சந்துருவை குறிவைத்து.

என்ன செய்வது என்று தெரியாமல் விழித்த காவேரி வேகமாக ஓடிசென்று “சந்துரு” என அவனை ரோட்டின் அந்த பக்கம் தள்ளிவிட செல்வம் காவேரியின் மீது கார் ஏற்ற அவள் முன் சக்கரங்கள் ஏற தன் மகனை கண்ணீருடன் பார்த்தாள். “சந்துரு அப்பாவ பாத்துகோட” என கூறினாலும் வார்த்தைகள் வரவில்லை.

கண்ணாடி வழியே பார்த்த செல்வம் அவள் துடித்துகொண்டிருப்பதை கண்டு ஆத்திரம் மேலோங்கியது. “இன்னும் சாகலையாடி நீ” என திட்டிவிட்டு மீண்டும் வண்டியை இயக்க அந்த காரின் பின் சக்கரங்கள் ஏற ரத்தவெள்ளத்தில் இறந்தாள் தன் மகன் கண்முன்னே!

இதை கூற சன்முகம் அழுது அப்படியே சரிய கண்ணீருடன். “அப்பா” என அவரை தாங்கிபிடித்தான் சந்துரு. “மாமா” என அன்பரசியும் ஓடிவந்திருந்தாள்.

-தொடரும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் ‘ஒகே என் கள்வனின் மடியில் – 14’தமிழ் மதுராவின் ‘ஒகே என் கள்வனின் மடியில் – 14’

சிலநாட்களில் உறவினர்கள் அனைவரும் சென்றுவிட, கர்ப்பகாலத்திலும் விடுப்பு எடுக்காமல் தன்னை தினமும் பார்க்க வரும் கல்பனாவை வர வேண்டாம் என்று சொல்லிவிட்டாள் காதம்பரி. அண்ணனோ தனது சோகத்தை ஆற்றிக் கொள்ள காதலியின் வீட்டில் தங்கிவிட்டான்.   வேலைகாரி வேறு “பாப்பா ரெண்டு

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 32ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 32

32 – மனதை மாற்றிவிட்டாய் ஆதியை எப்படி நேருக்கு நேர் பார்ப்பது என வெட்கம் எழ அவன் கண்ணில் சிக்காமல் இருக்கவேண்டுமென சுற்றிக்கொண்டே இருந்தாள் திவி. முன்தினம் அவளது உணர்வுகளை அவள் வார்த்தைகளால் கேட்டதே மனதில் ஓடிக்கொண்டிருக்க, அவளை காண தோன்றினாலும்

மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய்- 39மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய்- 39

39 மாதவனின் இந்தச் செயலைக் கண்டு சுஜி விக்கித்துப் போய் நிற்க, மினியோ மாதவனைக் கண்டு கொள்ளவே இல்லை. அன்று வானிலையின் காரணமாக விமானம் கிளம்ப தாமதமாக மனது விட்டுப் பேச வாய்ப்பு கிடைத்தது. சுஜிக்கு மினியின் மனதில் ஒளிந்திருந்த உண்மையும்