மலையின் காதல்
தன் கதிரவனைக் காணாமல் கண் மூடியவளே!
கோபத்தால் பனிக்குள் மூழ்கியவளே!
உன் காதலை உணராமல் எங்கே சென்றான் அவன்!
உன் முழுமையான மலை முகத்தை வெளிக்கொணர
புன்னகையோடு காலையில் சூரியன் வெளிவருவான்
உன்னை சூழ்ந்துள்ள கருமேகங்களை விலக்கி
உன்னிடத்தில் தன் காதலை வெளிப்படுத்தி
உன்னை மகிழ்விப்பான்
~ஸ்ரீ !!~
மலையின் காதல் – கவிதை
