Tamil Madhura கதைகள்,தொடர்கள் ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” -47

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” -47

உனக்கென நான் 47

தாயின் வருகைக்கு காத்துகொண்டிருந்த கன்றுகுட்டிபோல அவனது அழைப்பு வந்ததும் தன் தோழியிடமிரிந்து அதை வாங்கினாள். பறித்தாள் எனபதே உண்மை.

“ஹலோ அரிசி?”

அவனது குரல் கேட்ட மயக்கத்தில் “ம்ம்” என்றாள்.

“என்ன ம்ம். எதுக்கு நீ இங்க வரலை உன்ன நான் எவ்வளவு தேடுனேன் தெரியுமா?” என்று கூற “இல்லைங்க நான் வந்து மலை” என பிதற்றினாள்.

“ஐயோ அரிசி இன்னும் ஒருநாளைக்கு நான் உன்ன நினைக்க மட்டும்தான் முடியும் ப்ளீஸ் எதாவது பேசுடி நானும் உன் குரல கேக்கனும்” என்றான்

“அது வந்துங்க” என இழுக்க “அட போ அன்பு நான் ஃபோன வைக்குறேன்” என சோகமாக கூறினான். அந்த சோகம் இவளை சூழ்ந்து இவளது இதயத்தை கனக்க செய்தது.

“டேய் இருடா வச்சுடாத”

“அப்பாடி அரிசி பேக் டூத பார்ஃம் ஐ ஜாலி” என்று கத்த அங்கிருந்த கூட்டம் அவனை பார்த்தது. “மாப்பிளை என்ன காட்டிகொடுத்திடாதீங்க” எனபதுபோல பார்த்தார் போஸ். அதை புரிந்துகொண்டவன் “இல்ல மாமா என் பழைய பிரண்ட பாக்கபோறேன் அதான்” என்று சமாளித்தான். அந்த பழைய சினேகம் அரிசி என போஸுக்கும் சந்துருவுக்கும் மட்டுமே தெரிந்த ரகசியமாகும்.   ஆனால் போஸின் அருகிலிருந்த பார்வதி “ஏங்க ஊருகாரங்களுக்கு தெரிஞ்சுடபோதுங்க” என தன் கனவனை கன்டித்தாள்.

“ஆமா நான் காப்பு கட்டி இருந்தப்போ பம்புசெட் பக்கம் வந்து சைட் அடிச்சது யாரு?! அவளோட பேர் பார்வதின்னு நினைக்குறேன்” என பார்வதியை கிள்ள “ஏங்க நீங்களே புள்ளைங்கல கெடுத்துடுவீங்க போல” என கன்டித்தார் பார்வதி.

ஆனால் அங்கிருந்த பலரும் எதையோ எண்ணி சிரித்துகொண்டிருந்தனர். அவர்களுக்கு என்ன வசந்தகால நினைவுகலோ! கேட்டாள் எதுத்துபேசாதடி அப்புடின்னு சொல்லுவாங்க நமக்கு எதுக்கு வம்பு.

“பரவாயில்லடி வாடா போடான்னு கூப்பிட ஆரம்பிச்சுட்ட” என்றான்

“ஐயோ மன்னிச்சிடுங்க”

“ஏய் எனக்கு இது பிடிச்சுருக்குடி அப்புடியே கூப்பிடு”

“இல்லைங்க வேணாம் நான் ஏதோ தெரியாம சொல்லிட்டேன்” என அவள்கூற “அம்மா திட்டுவாங்க அதான?” என்று முடித்தான்.

அவள் “ம்ம்” என்றாள்.

“சுத்தம்! சரி விடு ஆமா உங்க ஊர்ல என்ன இது விசித்திரமான சம்பிரதாயமா இருக்கு எல்லாரும் மாப்பிளையையும் பொண்ணையும் கடைசிநாளைக்கு முன்னாடி நல்லா பேசிக்க சொல்லுவாங்க ஆனா இங்க எல்லாம் தலைகீழா இருக்கு” என்றான்.

“அது ஊர் சம்பிரதாயம் அத கிண்டல் பன்னாதீங்க”

“அதுசரி வேணும்னா தோப்புகரணம் போடவா?” என்றான் கிண்டல் கலந்த குரலில் மறுமுனையில் லேசான சிரிப்பு சத்தம் வந்தது அவளிடமிருந்து.

அதை ரசித்தவன் “சரி என்னமா அது சம்பிரதாயம் சொல்லுகேப்போம்” என்று ஃபோனை ஒருகாதிலிருந்து மறுகாதுக்கு மாற்றினான்.

“இப்போவா?” என்றாள்.

“ஆமாங்க மேடம் பின்ன இதுக்கு என்ன மேடையா போடனும்! வேணும்னா அதையும் செஞ்சிடலாம்” என்று சிரித்தான்.

தன்னவன் காதலுடன் பேசுவான் என்று எதிராபார்த்தால் ஆனால் காதலன் தன்னிடம் அந்த குறும்பு அரிசியின் வார்த்தையை விரும்புகிறான் என்று புரிந்தது.

“அது வந்துங்க முன்னாடி இங்க ஒரு ராஜா இருந்தாராம்” என ஆரம்பித்தாள்.

“ஓ இது ராஜா காலத்து சம்பிரதாயமா?” என்றான்

“டேய் அமைதியா கேளுடா இல்லைனா நான் சொல்லமாட்டேன்” என சினுங்கியவள் ஒரு வேகத்தில் டேய் என கூறியது நினைவுக்கு வர “ஐயோ தெரியாம சொல்லிட்டேங்க சாரி” என்றாள்.

“அத விடுங்க ஐயோ அரிசியா அன்பானு தெரியலையே” என்று சிரித்தான்

“அரிசிதான்” என்றாள் வெட்கத்துடன்.

“சரி மேல சொல்லுங்க அன்பு”

அவளுக்கு மனதில் ஒரு வலி “போடா நான் வைக்குறேன்” என்றாள்.

“ம்ம் இதுதான் மைடியர் அரிசி இப்ப சொல்லு”

அவள் கள்ளத்தனமாக சிரித்துகொண்டே “அந்த ராஜாவுக்கு இங்க ஒரு பொண்ண பிடிச்சுபோயிடுச்சாம்.”

“அது எப்புடிடி” என்றான்

“அவர் ஊர சுத்திபாக்க மாறுவேசத்துல வந்தாராம் அப்போ பாத்துருக்காரு”

“ஓ அவர் சைட் அடிக்க வந்தாருன்னு சொல்லு”

“டேய் ஒதவிழும் அப்போ நீ சைட் அடிப்பியா” என்று கோபமானாள்.

“ஆமா சைட் அடிச்சுருக்கேன்டி”

அதைகேட்டு அரிசி அமைதியாக இருந்தாள். “ஹலோ யாரன்னு கேக்க மாட்டியா”

“ம்ம் சொல்லவேணாம் ப்ளீஸ்” என்று மறுத்தாள்.

“ஹே அவ உன்னவிட அழகா இருப்பாடி”

“அப்போ நீ அவளையே கட்டிக்கோ எனகூட பேசாத” என்று கோபமானாள்.

“ஐயோ அந்த ஒருகை சட்டை போட்டுகிட்டு பைகிழிஞ்ச சட்டை, அப்புறம் வாயில அந்தபுளியங்கா, அதுலையும் அந்த பாவாடைய வேட்டிமாதிரி மடிச்சுகட்டியிருந்தா பாரு அய்யோ அததான் நான் முதல்ல சைட் அடிச்ச பொண்ணு அதுக்குஅப்புறம் யாரும் அந்த அளவுக்கு அழகு இல்லடி” என பனிமலையை தூக்கி வைத்துவிட அவள் உருகிபோய்விட்டாள்.

“இன்னும் நியாபகம் இருக்காடா” என்றாள் குறும்பாக.

“சரிங்க மேடம் நம்ம கதையவிடுங்க அந்த ராஜா டாவ் அடிச்சிட்டு அப்புறம் என்ன பன்னாரு”

“ம்ம் அந்த பொண்ண் அவ்வளவு அழகா இருப்பாங்கலாம் அன்னைக்கு தண்ணி எடுக்க போனப்போ அந்த ராஜா பாத்துருக்காரு, அப்புறம் நல்லா சீரோட வந்து பொண்ணுகேட்டுருக்காங்க”

“பார்டா அப்புறம்”

“ஊர்ல எல்லாருக்கும் சம்மதமாம் ஒரு வழியா நிச்சயம் முடிச்சுட்டாங்களாம்”

“ம்ம் அப்புறம் என்ன ஆச்சு கல்யானம் பன்னிகிட்டு சந்தோஷமா இருந்தாங்களா”

“குறுக்க பேசாதடா”

“சரிங்க அரிசி மேடம்”

“அப்போ ஒருநாள் அந்த ராஜாவும் அந்த பொண்ணும் குளத்துகரையில சந்திச்சு பேசிட்டு இருந்துருக்காங்க! அவங்க பேசினதுல நேரம் போறதே தெரியலையாம். அப்போ அங்க ஒரு புறா ஒன்னு வந்துச்சாம்.”

“ம்ம்”

“அத ராஜா எடுத்து பாக்க அதுல ஒரு தூது அனுப்பிருந்தாங்களாம். அத எடுத்து படிச்சா ஒரு பெரிய மன்னர் இந்த நாட்டுமேல போர் தொடுத்து வரபோறதா ஓலையில இருந்துச்சாம். அப்போ அந்த விசயத்த தன்னோட காதலிகிட்ட சொல்லிருக்காரு.”

“ஐயோ அப்புறம்”

“அந்த மன்னர்கூட போர் செஞ்ச யாரும் உயிரோண இருந்தது இல்லை. அந்த பொண்ணு அழுதுச்சாம். உனக்கு வேற கல்யானம் ஏற்பாடு பன்றேன் பொண்ணி. அப்புடின்னு அவர் எழுந்திரிக்க. அவ நான் சுமங்கலியா செத்துடுறேன் அப்புடின்னு அந்த ராஜாவோட கத்திய எடுத்து குத்திகிட்டாலாம்”

“அச்சச்சோ!”

“ஐயோ பொண்ணி ஏன்டி இப்புடிபன்ன நான் சும்மா உன்கூட விளையாடினேன்டி அப்புடின்னு அழுதாறாம் அப்போதான் அவ தப்பு பன்னிடானு தெரிஞ்சதாம்.அவ செத்துபோயிட்டா, அந்த கவலையில மன்னர் தனக்கு கீழ இருக்குற ஊர எல்லாம் மக்களுக்கு செப்பு பட்டயத்துல எழுதி குடுத்துட்டு ஒரு ஆத்துல போய் கல்ல கட்டிகிட்டு குதிச்சுட்டாராம்”

“அய்யோ ஜோடிய பிரிச்சுட்டியே அரிசி”

“என்ன?”

“ஒன்னுமில்ல சொல்லு”

“அதுல இருந்துதான் இந்த கட்டுபாடு எங்க ஊர்ல” என முடித்தாள். அவனோ கேளியாக சிரித்தான்.

“ஏன்டா சிரிக்குற”

“இல்ல நல்லா கத சொல்லுறப்பா! நான் இங்க உங்க அப்பாகிட்ட கேட்டேன் அவரு வேறமாதிரி சொன்னாரு” என அவன்கூற நாக்கை கடித்தாள்.மனதில் ஐயோ எங்க அப்பா ஊர் மானத்த வாங்குறாரே

“என்ன சொன்னாரு” என்றாள்.

“அதயும் உன் வாயால ஒருதடவ கேக்கனும்னு ஆசையா இருக்கு நீயே சொல்லிடு” என்றான்.

வேறு வழியில்லாமல் மாட்டிகொண்டாள். “சரிப்பா மன்னர்லாம் இல்ல ஆனா பொண்ணி உண்மை”

சந்துருவின் மனதில் ‘அட நான் சும்மாதான போட்டு வாங்க்குனேன் இது என்ன இப்புடி ஒரு பூதம் கிளம்புது’ என ஓடியது. அவளோ கூற ஆரம்பித்தாள்.

“பொண்ணினு ஒருத்தங்க இருந்தாங்களாம். நல்ல அழகா இருப்பாங்க ஆனா கருப்பு அதனால யாரும் பொண்ணுகேட்டு வரலையாம். அப்போ ஏதோ மந்தாகினி இலையாம் அத அரைச்சு குளிக்க வச்சுருக்காங்க. அப்புடியே சிவாஜிபட ரஜினி மாதிரி பளிச்சுனு ஆகிட்டாங்கலாம்.” அப்போ நிறைய பன்னைகாரங்க வந்துபொண்ணு கேட்டுருக்காங்க. அதுல ஒருத்தருக்கு பேசி முடிச்சுருக்காங்க”

‘ம்ம் சொல்லு”

“சந்துரு சிரிக்காத”

“நான் சிரிக்கலப்பா நீ சொல்லு” என வாயை பொத்திகொண்டான்.

“ம்ம்! ஆனா அந்த பொண்ணி குளிக்குறதுக்கு முன்னாடி அவரு வந்து பாத்துட்டு! அந்த பொண்ணுகிட்டயே பொண்ணி இல்லையானு கேட்டுருக்காரு பாவம். அவ அவரு கால்ல விழுந்து அழுதாலாம். அப்பறம் அவரு சத்தம்போட்டு கல்யானத்த நிறுத்த அந்த பொண்ணு அவர் நினைப்புலேயே கடைசிவரைக்கும் வாழ்ந்து இறந்துட்டாங்கலாம். பாவம்ல அவங்க!” என்று பறிதாப்பட்டாள்.

“நான்தான் பாவம்னு நினைக்குறேன்! சும்மா உங்க்கிட்ட போட்டு வாங்குனேன் ஹா ஹா! உங்க அப்பாகிட்ட நான் தைரியமா பேசி நீ பாத்துருக்கியா அப்புறம் எப்புடி இத கேட்டுருப்பேன் கொஞ்சமாவதுயோசிக்கமாட்டியா. என அரிசினா எவ்வளவு சார்ப்பா இருப்பா தெரியுமா?”

“அரிசிதான் வேனும்னா என்ன ஏனடா கட்டிக்குற” லேசான கோபம்

“நீதானடி அந்த அரிசி! இந்த கோபம் அவளோடதுதான்! சரி அதவிடு நீயாவது ஒரிஜினல் கலரா இல்ல எதுவும் மந்தாகினியா” என்றான்

“ஏன் நான் கருப்பா இருந்தா கட்டிக்கமாட்டியா”

“இல்ல கல்யானத்துக்கு சிகப்பு சேலை வாங்கிவச்சுருக்கேன். நீ கலர மாத்திகிட்டா வேற எடுக்கனும் அதான்”

மௌனமாக இருந்தாள்.

“என்னம்மா பேச்சயே காணோம்” என்றான். “ஒன்னமில்லை” குரல் கனத்தது. அவன் புரிந்துகொண்டான்.

“ஏய் லூசு எனக்கு பிடிச்சதே அந்த அழுக்கா எல்லாரையும் அழ வைக்குற அரிசியதான் நான் அவகிட்ட அழக எதிர்பாக்கல. சின்ன வயசுல எனக்கு அழகு தெரியலடி உன் மனசுதான் தெரிஞ்சது. அதுதான் எனக்குவேணும். நீ எப்புடி இருந்தாலும் உனக்கென நான் எனக்கென நீதான்டி லூசு கண்ண தொட” என்றுகூறும்போது சந்துருவுக்கும் லேசாக கண்கள் கலங்கின.

“மாப்பிள்ளய கூப்பிடுங்க” என ஒருவர்கூற “சரிடி அழாத நான் வைக்குறேன்” என கிளம்பினான்.

அவள் ஏக்கமாக அந்த மொபைலை பார்க்க மலர் வந்து அதை வாங்கிகொண்டாள். “என்ன அரிசி பேசிட்டியா”

“ம்ம்டி” என கூறிவிட்டு தன் அறையில் போய் அடைந்துகொள்ள மலை அவள் பக்கத்தில் வந்து அமர்ந்துகொண்டு தன் தோழியின் அழகை ரசித்துகொண்டிருந்தாள்.

“ஏய் அரிசி நீ இவ்வளவு அழகாவாடி இருப்ப பட்டுசேலையில”

அன்பு மௌனமாகவே அமர்ந்திருந்தாள். தன்னுடைய கல்யான நியாபகமும் வந்து சென்றது மலருக்கு அவளும் இந்த மாதிரி கனவிலேயேதான் அமர்ந்திருந்தாள். அதிலும் தன்னவன் நினைப்பில் கழுத்தின் அணிகலனை காலிலும் கொழுசை கழுத்திலும் மாட்டி நடக்க ஊறவினர்கள் செய்த கிண்டலை அவளால் எப்படி மறக்கமுடியும்.

“சரி அன்பு நான் வெளிய உட்காந்துருக்கேன் எதுன்னா வேனும்ன கூப்பிடு” என தன்னவன் எண்ணை கைபேசியில் பதிவிட்டு கிளம்பினாள் ஹலோ மாமா பாப்பா என்ன செய்யுறா” என்று

அவள் போனதும் “எனக்கு உன்ன எப்புடி இருந்தாலும் பிடிக்கும்டி” என சந்துரு கூறியது திரும்ப திரும்ப எதிரொலித்தது. அவளுக்குள் உள்ளுக்குள் ஓர் இனம் புரியாத மகிழ்வு. தனக்காக ஒரு உயிர் உள்ளது என நினைக்கும்போது ஆனந்தம்தானே. அதுவும் உயிரினும் மேலான காதல் கள்வன்.

“எங்கப்பா பொண்ணு அவதான்பா இந்த காப்ப எடுத்து குடுக்கனும்” என்று ஒருவர்கூற. “அவளுக்கு கூச்ச சுபாவம்ங்க அதான் வரலை பெரிப்பா வேணும்னா நம்ம வளர்மதி சந்துருக்கு முறைமதான அவள எடுத்துகுடுக்க சொல்லுங்க” என போஸ் கூற.

“சரிப்பா” என அந்த பெரியவர்கூற ஒரு பெண் சந்துருவை ஓர கண்ணால் ரசித்தபடி வந்தாள். பாவாடை தாவணி அணிந்திருக்க அவளுக்கு பதினேழு வயது இருக்கலாம். சந்துருவின் கண்களை பார்க்கவே தயங்கினாள். ‘அரிசிய போய் கூச்ச சுபாவம்னு சொல்லிட்டீங்களே மாமா’ என மனதில் கூறினான். ஆனால் அவள் வந்து இருந்தால் எல்லாரும் கிண்டல் செய்தே அவளை கிறங்க வைத்திருப்பர் என்பது போஸிக்கு தெரியும். அதுவுமில்லாமல் பொண்ணின்மீது அடுத்து நடக்கபோவதை பாருங்கள்.

“அந்த பெண் சந்துருவின் அருகில் வந்து நின்று அந்த காப்பை எடுத்து சந்துருவின் தங்கையான சுவேதாவின் கையில் கொடுத்த அடுத்த நொடி அங்கிருந்த அனைவரும் அவள்மீது சந்தனத்தை எடுத்து பூசினர். அதில் ஒரு பெண் ஒரு சிறிய பாத்திரத்தில் எடுத்து வந்த மஞ்சள்நீரை ஊற்றி அந்த வளர்மதியை நனைய செய்தனர்.

அதன் பின் சுவேதாவின் கையில் சில பழங்களைகுடுத்து அவளுக்கு ஊட்ட கூறினர். சுவேதாவும் புரியாமல் ஊட்ட ஒரு கையில் காப்பு மறுகையில் பழமிருக்க அனைவரும் அவளையும் நன்றாக சந்தனகுளியல் செய்தனர். பாவம் ஏமாந்துவிட்டாள். சந்துருவோ சிரித்துகொண்டே நிற்க.

“டேய் அண்ணா என்ன பாத்தா காமடியா இருக்கா” என்று கூறிவிட்டு அவனுக்கும் அப்பிவிட்டாள்.

அடுத்து வந்த பெண்கள் சிலர் வளர்மதியையும் சுவேதாவையும் பிடித்து பழங்களை வாயில் தினிக்க அவள் தின்றினாள். இந்த சுற்றம் சூழ்ந்த அன்புதொல்லையை அவள் சிரித்துகொண்டே ரசித்தாள். பின் “தங்கச்சி அண்ணாவுக்கு காப்பு கட்டிவிடுமா” என குரல் கேட்க சந்துருவின் கைகளில் கட்டிவிட்டாள்.

“மாப்பிள்ள தங்கச்சி காப்பு கட்டிருக்க அது கைலதான் குழந்தைய முதல்ல குடுக்கனும்” என ஒருவர்கூற

“என் அண்ணாவோட குழந்தைய வளக்கபோறதே நான்தான்” என கூற அனைவரும் சிரித்தனர். அந்த இடமே மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்த்து..

சுவேதா சந்துருவின் அருகில் வந்து “டேய் நானும் சொந்தங்களோட இருந்துருந்தா எனக்கும் இப்புடி சந்தோஷமா கல்யானம் நடக்கும்ல” என்றாள்.

“அப்புடியே ஒன்னு போட்டா தெரியும் சொந்தம் இல்லையாம். நீயும் என பொண்ணுதான்டி” என பார்வதி அவளை செல்லமாக அதட்ட “அம்மா” என அவளை கட்டிகொண்டாள் சுவேதா. “இனி அப்புடி சொல்லகூடாது” என தன் புது மகளின் தலையை கோதிவிட்டாள்.

“சரிப்பா பொண்ணுவீட்டுக்கு கிளம்பலாம்” என ஒருவர் கூற பல்ரும் மாப்பிள்ளைக்கு அறிவுரை வழங்கி கலைந்து சென்றனர். அன்பரசியின் இல்லத்தை நோக்கி.

அங்கே அன்புக்கு வளையல் பூட்டி சந்தனம் பூசி சடங்குகள் அரங்கேறின. இடை இடையே வந்த அந்த கிண்டல் பேச்சுகளில் முகம் சிவந்தாள் அன்பு.” அரிசிக்கு வெடெகத்த பாருங்கப்பா” என சுவேதா தன் அன்னியை மேலும் சிவக்க செய்தாள்.

பின் அன்பு அந்த அறையில் அடைக்கபட்டாள். அவளுக்கு காவலாக சுவேதாவை நியமித்தனர். நாத்தநாரை காத்துகருப்பு அண்டாம பாத்துகனுமாம். “அன்னி எதுன்னா வேணும்னா கேளுங்க நான் இங்கதான் இருப்பேன்” என்று குரல் கொடுத்து ஒரு சேரை எடுத்து அமர்ந்துகொண்டாள்.

மற்ற அனைவரும் கல்யான வேலையாக பறந்தனர். போஸும் சன்முகமும் ஊரில் இருக்கிறார்களா என்றே தெரியவில்லை. சந்துருவின் தோழர்களும் அன்பை பார்த்து சென்றுவிட்டனர். போகும்போது “என்ன சுவேதா அடுத்து உனக்கும் சுகுவுக்கும்தான்” என கூற “ஏய் உங்களுக்கு எப்புடிடி தெரிஞ்சது” என கேட்க “அது ரகசியம்” என அந்த பெரிய வீட்டை நோக்கி நடந்தனர்.

பெண் வீட்டில்தான் தாலிபூட்டும் வைபவம் நடைபெறும் எனபதால் சந்துரு அங்கு ஒரு மேடையே அமைக்க சொல்லிவிட்டான். அதை பார்வையிட வந்தான்.(அவன் எதை பார்வையிட வந்திருப்பான் என உங்களுக்கே தெரியும்)

“அத்த அத்த மாமா இல்லையா” என்றான்.

“மாப்பிள்ள வெளியவே நில்லுங்க” என்று வழிமறித்தாள் பார்வதி.

“இல்ல மாமா” என்றான் ஆனால் உள்ளம் அன்பு என்றது.

“அவுக டவுனுக்கு போயிருக்காங்க! நீங்க பெரிய வீட்டுக்கு போங்க மாப்பிள்ள எதாவது காத்துகருப்பு அனிடிரும்” என்றார்.

தன்னவனின் குரலை கேட்ட அன்புக்கு அந்த கதவை துளைத்துகொண்டு அவனை பார்க்கவேண்டும்போல இருந்தது.

அன்பின் மடியில் ஆழ்ந்த துயில்

காணும் ஏக்கமில்லா காதலனில்லை

அந்த இனமதில் அன்பையே அடைய

தவமிருந்த கண்ணாலன் காண

வந்திருந்த காலமிதில்

சாத்திரங்கள் பிரித்த உந்தன்

தலைக்கென் மடியுண்டு என்னவா

அதில் நீ துயிலுறங்க நானுந்தன் தலைகோதி

மகிழும்காலம் நாளைமுதல் அதுவரை

காத்திரு கண்ணாலா!

என்றென்னை நான் சாந்தபடுத்த

உந்தன் தேன்குரல் என்னை ஈர்க்குதடா

அரிசியான நான் உமியென கதவுதுளைத்து

வர இதய தசைகள்ஏங்குதடா

இங்கிருந்து செல் இல்லையேல்

உன்னை சுற்றும் எந்தன் மனம்

இந்த உடலையும் உன்னிடத்தில்

இழுத்துவர வெட்கம்விட்டு

கட்டி யனைத்துவிடுவேன் அட்டையென.

என் மன்னவா சென்றவிடு!

என கதவின் பின்னாலிருந்து அவனிடத்தில் மனதால் பேசிகொண்டிருந்தாள். ஆனால் அவள்கை விரல்கள் அந்த கதவினை வெட்கத்துடன் தடவிகொணடிருந்தது. தன்னவன் தோளில் சாய்ந்து கையால் அவன் இதய துடிப்பை கேட்பதுபோல் அந்த கதவில் சாய்ந்திருந்தாள்.

“சரிங்க அத்த நான் வாரேன்”என சத்தமாக கூறிவிட்டு நகர்ந்தான். பார்வதி சிரித்துகொண்டே உள்ளே சென்றார்.

மணித்துளிகள் நரகமாக மாற மெதுவாக நகர்ந்தது சந்துருவுக்கு. மறுநாள் தன்வாழ்கையை அரிசி இல்லை தன் அரசியிடம் ஒப்படைக்கும் நாள். இரவில் அந்த நிலாவை பார்த்தான்.

“அது என்னப்பா அங்க லைட்டு போட்டுருக்காங்க” என்று தன் தந்தையிடம் கேட்டவன் அதை அதற்கு அப்புறம் ஏறெடுத்து பாரித்தானோ தெரியாது. ஆனால் அதை வர்ணிக்காமல் கவிஞர்கள் இம்மண்ணில் மரித்தது இல்லை.

காதலன் என்றாலே கள்வன் கவிஞன்தானே அந்த வரிசையில் இன்று நுழைந்த சந்துருவின் இதயம் அந்த நிலவில் தன்னவள் முகத்தை காட்டி கண்ணாம்மூச்சி காட்டியது.

வின்வெளி ஓடம் நீரைதேடி நிலவை

நோக்கிய நேரமிது நானோ

நீ இருக்கிறாயா என்றுபார்க்கிறேன்

ஆனால் இந்த புதுகாதலனுக்கு(கவிஞனுக்கு)

தெரியா ரகசியம் அந்த வான்மதிதான்

உன் பிரதிபலிப்பு அதன் ஒளி உன்முகத்தின்

சிரிப்பு இந்த காரிருள் உந்தன் கருங்கூந்தல்டி

என கண்ணம்மா

உன் வெட்கத்தை நட்சத்திரமாக செய்தானோ அந்த

பிரபஞ்ச ரகசியமறிந்தவன். என்னை

ஈர்க்கும் நீ நியூட்டனுக்கு புலப்படாத

நான்காவது ஈர்ப்புவிதியோ

உன்னால் கவர்ந்து விழுந்து நொருங்கினேன்

என்னே சிறையெடுத்தாய்.

நான் உன் ஆயுள்கைதியடி

நீ எந்தன் ரதியடி!!!

என அவன் மனது கூறிய அந்த கவிதையை நினைத்தவன். என்னடா இது காதல்ன்னு வந்துட்டா எல்லாருமே கவிஞர்தானா என நினைக்க “டேய் வந்து தூங்குடா நாளைக்கு நீ நினைச்சாலும் தூங்க முடியாது” என பாலாஜி கேலியாக கூறி அவனை அழைத்துசெனைறான்.

மறுநாள் திருமனநாள் விடிய அனைவரும் கூடியிருந்தனர். அப்போது மனமகனும் மனமகளும் தயாராகிகொண்டிருந்த நேரம். ஒரு கார் அதிவேகமாக வந்து நின்றது. பலத்த ஹரன் ஒலியும்.

“யார்டா அது” என சந்துரு எட்டி பார்க்க சுகு அதிர்ச்சியில் உறைந்துநின்றான்.

அதிலிருந்து ஒருபெண் மிக அழகாகவும் உடன் நல்ல வலிமையான ஒருவனும் வந்தான். அவர்களை பார்த்த சந்துரு தன் நண்பனை பார்க்க ஒன்றும் விளங்கவில்லை.

“என்னடா ஆச்சு யாரு அது”

“ஜான்சி” என்றான் சுகு அதிர்ச்சியாக

“என்ன ஜான்சியா” இது சந்துரு

“ஆமா அவங்கதான் ஆதே ஜான்சிதான் அது சேகர்” என்றான்.

அந்த பெண் சந்துருவை கடக்கும்போது  கட்டைவிரலை வைத்து டிக்டாக் என சைகை செய்து செனாறாள்.

-தொடரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

வேந்தர் மரபு- 59வேந்தர் மரபு- 59

வணக்கம் தோழமைகளே! வேந்தர் மரபு 59அடுத்த அத்தியாயம் உங்களுக்காக   Download Nulled WordPress ThemesDownload Nulled WordPress ThemesDownload Best WordPress Themes Free DownloadDownload Best WordPress Themes Free DownloadZG93bmxvYWQgbHluZGEgY291cnNlIGZyZWU=download intex firmwareFree Download WordPress Themeslynda

வேந்தர் மரபு – 50வேந்தர் மரபு – 50

வணக்கம் தோழமைகளே! வேந்தர் மரபு அடுத்த அத்தியாயம் உங்களுக்காக வேந்தர் மரபு – 50 Download WordPress ThemesDownload WordPress Themes FreePremium WordPress Themes DownloadDownload WordPress Themesfree online coursedownload huawei firmwareDownload WordPress Themesfree download udemy