Tamil Madhura கதைகள் ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 44

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 44

உனக்கென நான் 44

அன்பரசி தன்னவனை கட்டிகொண்டு நின்றாள் ஒரு குழந்தையின் கையில் சிக்கிய டெடிபியர் போல. அவனுக்கும் இப்போதுதான் புரிந்தது அன்பு தன்னைதான் நினைத்துகொண்டு இருக்கிறாள் என்று. அவனது கைகளும் அவளை நோக்கி முன் வந்தன. தன்னவளுடன் சிறிது விளையாட ஆசை அவனுக்கு.

“ஹலோ மேடம் நான் மறுபடியும் சொல்றேன் எனக்கு அந்த அரிசிதான் வேனும் நீங்க இல்லை! நீங்க வேற யாரோன்னு நினைச்சு என்னை கட்டி புடிச்சிட்டு நிக்குறீங்க”

அவ்வளவுதான் அடக்கி வைத்திருந்த அன்பை கொட்டினாள் அவன் நெஞ்சில். தனது மென் கைகலால் சரமாறியாக தாக்கினாள். “போடா ஓலைபட்டாசு இத சொல்ல இவ்வளவு நாளா?” என்று அடித்த இடத்தில் வலிக்கும் என மீண்டும் தலை சாய்த்தாள்.

“இதுதான் என் அரிசி!” என்று அனைத்துகொண்டான் தன்னவளை. “டீச்சர் டீச்சர்” என்று ஒரு குரல் ஒலித்தது. சட்டென இருவரும் விலகிகொண்டனர். அங்கே ஒரு சிறுவன் மரபொந்தில் ஒலிந்துகொண்டிருந்தான். அவனது கண்கள் மட்டுமே புலபட்டது வெளியே.

“ஸ்கூலுக்கு போகலையாடா” என்று தன் பதவியை வைத்து தன் தவற்றினை சரி செய்ய முயன்றாள். “நான் எங்க தாத்தா செத்துபோயிட்டாருனு லீவு எடத்துட்டேன் டீச்சர்.” என்றான் தெளிவாக. “இரு உங்க அப்பாகிட்ட சொலறேன்” என அவள்கூற “நானும் உங்க அப்பாகிட்ட சொல்றேன் இந்த சார கட்டிபுடிச்சீங்கன்னு” என்றான் பதிலுக்கு. அந்த வகுப்பில் அதிக செல்லம் கொடுத்தால் வந்த விளைவு இது. சந்துருவோ நக்கலாக சிரித்துகொண்டே நின்றான். ‘இது உன் பிரட்சனை நீயே சமாளி’ என்பதுபோல.

அவளோ என்ன காப்பாத்துடா பல்ல காட்டாத எனபதுபோல பார்த்தாள். இது ஹீரோ ரிவன்ஜ் டைம். ஹீரோயின் ஆபத்துல இருக்காங்க அல்லவா. “தம்பி இங்க வாடா” என்றதும் வந்தான் அந்த சிறுவன். “என்ன சார்?”.

“உனக்கு டீச்சர் வீடு தெரியுமா?”

“ம்ம் ஊருக்கே தெரியுமே மிலிட்டரி பெரிப்பா வீடுதான”

“சரி நீ போய் இந்த அக்கா ஒரு மாமாவ கொஞ்சிகிட்டு இருக்காங்கனு சொல்லு இந்தா சாக்லெட்” என அன்புக்கு வாங்கி வைத்தருந்த சாக்லெட்டை கொடுக்கவே திரி கொழுத்திய ராக்கெட் வெடிபோல மின்னலென பறந்தான்.”ஐயோ அவன் சொல்லிட போறாங்க” என பயந்தாள்.

“சொல்லட்டுமே எனக்கு பிரட்சனை இல்லை உனக்கு எதாவது பிராப்ளமா?” என்று அவளை பார்த்தான். அவள் மீண்டும் வெட்கம் என்ற கொழுசில் மௌனம் எனும் திருகானியை மாட்டிகொண்டாள்.

“ஓய் அரிசி உனக்கு வெட்கம் எல்லாம்பட தெரியுமா?” என்று அவன் கேட்க மேலும் வெட்கம் வந்து அவளை மேலும் சிவக்க செய்தது. அந்த கன்மாய் கரையில் நடந்தனர். “அன்பு புளியங்கா கிடைக்குமா?” என்றான்.

அவளது கண்ணில் ஒரு சிறிய சோகம். “என்ன ஆச்சு அரிசி” என்றான். “அந்த புளிய மரத்துல தீ வச்சுட்டாங்க அது நான் ஸ்கூலுக்கு போயிட்டு வர்ரதுக்குள்ள எரிஞ்சிடுச்சு” என கண்ணின் ஓரம் நீர்துளி எட்டிபார்த்தது. “ஹே லூசு இதுக்குபோய் ஏன் அழற” என்றான் அவளை சமாதான படுத்த. “அது இந்த ஊரோட செல்லபுள்ளை மாதிரி அதான்” என அழ அவளது கண்ணீரை துடைத்தான்.

“சரிங்க டீச்சர் உங்க மேல சில என்குவரி இருக்கே!” என்று கூற அழத விழிகளுடன் “என்ன” என்பதுபோல நிமிர்ந்து பார்த்தாள். “நீங்க ஒரு பாடம் நடத்துனா முழுசா சொல்லிகுடுக்க மாட்டீங்களாம்”

“இல்லையே” என்றாள் அழுத்தமாக கணகள் மட்டும் அந்த மரத்தின் பிம்பத்தில்.”இல்ல எனக்கு ஒரு டீச்சர் நீச்சல் சொல்லி குடுத்தாங்க ஆனா நான் இன்னும் கோர்ஸ் கம்ப்ளீஷன் சர்டிபிகட் வாங்கல அதான் சொன்னேன்” என்று கூற “அதான் சொல்லி குடுத்தேனே” என்றாள்,

“எப்புடி என்னைய முழங்கால் அளவு தண்ணில விட்டுட்டு நீங்க ஆழமான இடத்துல விளையாடுனீங்களே அப்புடியா டீச்சர்” என கூற சந்துருவின் அழகான நினைவுகளை எண்ணி சந்தோஷபட்டாள். “அது நீங்க முங்குனா அம்மா என்னை கொண்ணுபோட்டுரும் அதான் அப்புடி விட்டுட்டு போனோம்.” என்றாள் அந்த அரிசி.

“சரி அப்போ இப்ப சொல்லிகுடுங்க”

“போங்க சந்துரு நீச்சல் தெரியாமயா இருக்கீங்க”

“நிஜமா பழகல அரிசி’ கத்துகிட்டா உன்கிட்டதான்னு விட்டுட்டேன்”

“சும்மா சொல்லாதீங்க மாமா”

என அவர்கள் வார்த்தைகளில் அவர்கள் நெறுங்கினர். அதை அவர்கள் உணர்திருக்கவில்லை. சுவேதாவுக்குதான் நன்றி சொல்ல வேண்டும். “ஐயோ அரிசி எங்க அம்மா எனக்கு பொய் சொல்ல கத்துதரல”

“நான் நம்ப மாட்டேன்பா”

“அடி கிறுக்கி எனக்கு தெரிஞ்ச ஒரே நீச்சல் கடப்பாறை நீச்சல்தான் வேனுமனா அடிச்சு காட்டவா” என்றான்.

அவள் சிரித்துகொண்டே அவனை பார்த்தாள். “நீ போங்கு ஆட்டம ஆடுற அரிசி இது சரிபட்டு வராது. நான் குடுத்த பீஸ் எனக்கு திரும்ப வேனும்” என்று திட்டவட்டமாக கூறினான்.

“பீஸா அப்புடின்னா?”

“அதான் அத்தை எனக்குனு கொடுத்த பார்லீஜிய நீதான சாப்புட்ட நம்ம அக்ரிமன்ட்படி அது நீ எனக்கு நீச்சல் கத்துகொடுக்குறதுக்கு பீஸ் அது எனக்கு இப்போ வேனும்”

“அது இப்போ எப்புடி வரும்?”

“அதெல்லாம் எனக்கு தெரியாது அரிசி! எனக்கு வேனும் அவ்வளவுதான்” என்ற அடுத்த நொடியே அவளால்தான் தரமுடியும் தன்னவனின் கன்னத்தில் முத்தம் பதித்துவிட்டு ஆதவன் மறைந்தவுடன் தலைகுனியும் ஆதவமலர்கள் போல வெட்கி தலைகுனிந்தாள். சந்துருவோ சிலையென ஆனான்.

அவளது செய்கையில் அமைதியானவன் அவளை ரசித்தான் ஆனால் அவளது மௌனம் மட்டும் தடையாய் இருந்தது. “அப்போ நீச்சல் கத்துகுடுக்க சொன்னா இதுதான் கிடைக்குமா? சரி அதான் நான் தண்ணில விழுந்தா என்னை காப்காத்த நீ இருக்கீல அதுவே போதும்! என்ன அரிசி காப்பாத்துவீங்கல்ல?” என்றான்.

“ம்ம்” என்றாள் அவன் கேட்டதின் அர்த்தம் புரிந்துகொண்டு.

“சரி போகலாமா” இது சந்துரு

“இன்னும் கொஞ்சநேரம் இருக்கலாமே!” என மனம் கூறினாலும் “ம்ம் போலாங்க” என்றாள் வாய் வார்த்தையாக. பின் இருவரும் எழுந்து நடக்க ஆதவன் உச்சியில் இருந்து அவர்களை ரசித்துகொண்டிருந்தான்.

“இப்போ இருக்கறது யாருனு தெரிஞ்சுகலாமா?” என்றவனை குழப்பமாக பார்த்தாள். “இல்லைங்க அரிசியா இருந்தா அந்த மாங்காய் பரிச்சு தருவா அதான் கேட்டேன்” என காய்கள் நிறைந்த ஒரு மாங்காய் மரத்தை காட்டினான்.

அவள் இவனை பார்த்துவிட்டு ‘ஐயோ ஆசையா கேக்குறாங்களே சின்ன புள்ளையா இருந்திருந்தா இன்னாரம் எறிருக்கலாம்’ என்று நினைக்கும்போது உள்ளிருந்த அனபு “ஏறுடி சும்மா உன்னால முடியும்”; “போடி சந்துரு இருக்காரு அப்புறம் சிரிச்சா வெட்கமா போயிடும் நான் மாட்டேன்பா” என சண்டை நடந்தது.

“இருங்க நான் அந்த தாத்தாகிட்ட கேட்டு வாங்கி தாரேன்” என்றாள்.”அட போங்கப்பா எனக்கு திருட்டு மாங்காய்தான் வேனும்” என்று கெஞ்சினான். அவளும் வழியில்லாமல் அந்த கம்பிகளின் அருகில் நின்றுகொண்டு ஒரு குச்சியை எடுத்தாள். தன்னால் எட்டியவரை தாவி பார்த்தாள். சந்துருவோ சிரித்துகொண்டே அருகில் நின்று அவளை ரசித்தான்.

மூச்சு வாங்க அவளால் முடிந்தது அந்த சிறிய பிஞ்சு மட்டுமே. “நான் ஹெல்ப் பன்னட்டுமா” என்றான். அவள் அந்த குச்சியை அவளிடம் கொடுத்தாள். அதற்குள் அவன் அவளை தூக்கினான். “இப்போ பறி அரிசி” என்றான். அவளது உடல் தன்னவனின் கை பட்டதால் சிலிர்த்தது. “மாமா இறக்கிவிடு யாராவது பாத்துட போறாங்க”

“நீ பறிச்சுபோடு நான் பாத்துகிறேன்”

பதட்டத்துடன் ஒரு மாங்காயை பறித்தாள். அவள் இறங்கியதும் “அது என்ன மாமா? எப்பவும் சந்துரு வாடா போடானுதான கூப்பிடுவ?” என அவன் கூற “அம்மாதான் சொன்னாங்க” என தாயை மாட்டிவிட்டாள்.

“ஓ நீ அத்தையோட்ட பேச்ச கேட்டு நடக்குற பொண்ணா? எனக்கு தெரிஞ்சு நீ அத்தை பேச்ச கேட்டதே இல்லையே! சரி அப்போ நான் அத்தைகிட்டயே கேட்டு பாத்துடுறேன்” என்று மாங்காயை எடுத்துகொண்டு நடந்தான்.அவள் பதறிகொண்டே பின்னால் ஓடிவந்து அவன் கையை பிடித்துகொண்டாள். “இல்ல மாமா நானாதான் கூப்பிட்டேன் அம்மா சொல்லல” என்றாள்.

“அட அரிசி” என அவளது தோளை அனைத்துகொண்டு நடந்தான்.இருவரும் நடந்து வந்து வீடு சேர்ந்தனர். அங்கே வாசலில் சுகு ஃபோன் பேசிகொண்டுருந்தான்.

“இப்ப என்னங்க சுவேதாதான டார்கெட் இந்த கல்யானம் முடிஞ்சதும் நான் அவளை பேக் பன்னிடுறேன். சரிங்க இப்போ வச்சிடுங்க யாராவது பாத்துடபோறாங்க” என பதட்டத்துடன் காலை வைத்தான் சுகு.

சந்துரு சுகு எனும் நிலையத்தில் இறங்கிகொள்ள அன்பு மட்டும் அந்த மாங்காயை கொண்டு சுவேதாவை தேடி நகர்ந்தாள்.

“என்ன சுகு ஏதோ பேக்கிங்னு பேசிகிட்டு இருந்த” என்றான் சந்துரு. சுகுவின் முகத்தில் ஒரு அதிர்ச்சி அலை தோன்றி மறைந்தது. பின் நிதானித்துகொண்டான். “இல்லடா அப்பா ஃபேக்டரில பேக்கிங் டிபார்ட்மன்ல ஸ்ட்ரைக்காம் அதான் விசாரிச்சுட்டு இருந்தேன்” என்று அவனிடம் சமாளித்தான். “சரிடா நான் பெரிய வீட்டுக்குபோறேன் ரொம்ப டையார்டா இருக்கு” என நகர்ந்தான்.

“டேய் சாப்பிட்டு போடா”

“இல்லடா நான் சாப்பிட்டேன்” என்று வேகமாக நடந்தான். அப்போது வெளியே வந்த பார்வதி “அந்த தம்பி ஏன் சாப்பிடாம போறாங்க” என்றார். சந்துருவுக்கு ஏதோ தோன்ற “இல்ல அத்த அவனுக்கு தலை வலிக்குதாம் அதான் தூங்க போறான்” என்று சமாளித்துவிட்டு உள்ளே நுழைந்தான்.

“என்ன அரிசி மேடம் ஒரே ரொமான்ஸாம்” என்று வம்பிழுத்தனர் மஞ்சுவும் சுவேதாவும்.

“இல்ல அன்னி”

“அந்த சின்ன பையன்தான் புட்டுபுட்டு வச்சானே. எங்க டீச்சர் அக்கா ஒருமாமாவ கட்டிபுடிச்சாங்கனு” என்று சுவேதா வாசல்படியில் அமர்ந்துகொண்டு அன்பையும் அமர வைத்து பின்னாலிருந்து கட்டி அனைத்துகொண்டாள். அந்த அளவுக்கு நெருக்கம் ஆகிவிட்டனர்.

“சும்மா சொல்லுங்க அன்னி” என காதில் கிசுகிசுத்தாள். அன்போ வெட்கத்தில் இருக்க சந்துரு நுழைந்தான். அவனை பார்த்ததும் எழுந்திருக்க முயற்சி செய்தாள் அன்பு. ஆனால் சுவேதாதான் கட்டிபோட்டிருந்தாள் அல்லவா

“அன்னி நீங்க ஏன் எழுந்திருக்கறீங்க உட்காருங்க” என்று மிரட்டினாள் செல்லமாக.

அதன் பின்னால் வந்த பார்வதி “ஏனடி மாப்பிளை நிக்குறாரு நீ உட்காந்துகிட்டா இருக்க எந்திரிச்சு உள்ள போடி” என்றார். அன்பின் முகம் வாடியது. அதை பார்த்த சுவேதா “அம்மா இது ரேகிங்மா உங்களுக்கு தெரியாது மாப்பிளை பையன இப்புடி பன்னனும் அது சிட்டில ஒரு சம்பிரதாயம்மா” என சுவேதா சமாளித்தாள்.

“என்ன சிட்டியொ” என பார்வதி நகர “ஹலோ சந்துரு இப்ப அன்னிய இம்பிரஸ் பன்னுங்க” என்றாள் சுவேதா.

-தொடரும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 05ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 05

5 – மனதை மாற்றிவிட்டாய் கை கழுவி விட்டு அமைதியாக வந்த திவி அனைவரிடமும் “நான் கிளம்புறேன் … கொஞ்சம் வேலை இருக்கு” என்றாள். அவளை நம்பாமல் பார்த்தவர்களிடம் ” ஐயோ, நிஜமாத்தான் சொல்றேன்… அத்தை நீங்களாவது சொல்லுங்க நான் வந்ததுல

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 50ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 50

உனக்கென நான் 50 “என்னங்க அந்த பலசரக்கு கடையில வேலைக்கு ஆள் கேட்டாங்க அவங்களுக்கு வயசாகிருச்சுல அதான் முடியலையாம் கூடவே நானும் இருந்தா அவங்களுக்கும் பேச்சுதுனையா இருக்கும்ங்க நான் போகட்டுமா” என்று அனுமதி வாங்கிகொண்டிருந்தாள் காவேரி தன் கனவன் சன்முகத்திடம். “இல்லமா

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 38ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 38

38 – மனதை மாற்றிவிட்டாய் திவியும், அர்ஜுனும் அறியாத விஷயம் இவர்களின் உரையாடலை மேலும் இருவர் கேட்டதுதான். ஒன்று சுந்தர், மற்றொருவர் ஆதி. புது ப்ராஜெக்ட் கன்பார்ம் ஆயிடிச்சு. அதுக்கு நேர்ல ஒன்ஸ் பாத்து பேசிட்டா நெக்ஸ்ட் கிளைண்ட் கிட்ட டெமோ