Tamil Madhura கதைகள்,தொடர்கள் ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 43

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 43

உனக்கென நான் 43

தன் மடியில் உங்கிபோன சுவேதாவின் தலையைகோதிவிட்டாள் அன்பு. வயதில் மூத்தவள் என்றாலும் நீண்ட நாட்களுக்கு பிறகு கிடைத்த அன்னை மடியை யாரும் விட்டுகொடுக்க மாட்டார்கள். சுவேதாவும் அப்படியே. சில நாழிகை உறங்கினாள். அன்பரசி அப்படியே ரசித்துகொண்டிருந்தாள். பின் சுவேதா சோகமாக எழுந்து அமர அவளை பார்த்து லேசாக புன்னகைத்தாள் அன்பு.

 

“ஐயோ அன்னி ரொம்ப நேரம் தூங்கிட்டேனா? ஸாரிங்க கால் வலிக்குதா?” என்றாள். “அப்படியெல்லாம் இல்லைங்க அன்னி நீங்க வேனுமுனா தூங்குங்க” என்றாள்.

 

“அட போ அன்பு நான தூங்கி நீ பாத்தது இல்லையே அப்புறம் நீ உன் கல்யானம் வரைக்கும் இப்புடிதான் உட்காந்துகிட்டு இருக்கனும். அப்புறம உனகூட ரொமான்ஸ பன்ன முடியலைனு சந்துரு என்னை திட்டுவான இது எனக்கு தேவையா” என்றாள் சிரித்துகொண்டே.

 

சுவேதாவின் குழந்தை மனம் பிடித்துபோனது அன்புக்கு. “இப்போ மனசு எப்புடி இருக்கு அன்னி” என்றாள். பரவாயில்லையே ஒரு வழியா அன்னினு கூப்பிட்டுட்ட!” என்றுகூற அன்பு அப்போதுதான் உணர்ந்தாள். “நீங்க என் பக்கத்துல இருக்கும்போது எனக்கு எதுவும் வராது அன்னி” என்று அன்பரசியின் கன்னத்தை கிள்ளி கொஞ்சிவிட்டு தன் தாய் பார்வதியை தேடி நகர்ந்தாள்.

 

அன்பரசியின் மனம் லேசாக கனத்திருந்தது. தன் சிறுவயது வாழ்கைக்கும் சுவேதாவின் வாழ்கைக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்ந்தாள். “இவங்களுக்கு இதுக்குமேல கஷ்டத்தை கொடுக்காதே என ஆண்டவனை வேண்டி எழுந்தாள். தன்னை அறியாமலேயே சுவேதா அன்பின முதல் குழந்தையாக மாறியிருந்தாள். என்ன தாயைவிட மகளுக்கு ஒரு வயது அதிகம். இருந்தாலும் மனதளவில் அவள் குழந்தைதான்.

 

மெதுவாக எழுந்து வந்த அன்பு சமையலறையில் நுழைய அங்கு பார்வதியின் அருகில் நின்றிருந்தாள் சுவேதா. அவளிடம் கவலை இல்லை. “அன்னி உங்களுக்கு சமைக்க தெரியுமா?! அம்மா நல்லா சமைக்குறாங்க வாசனையே ஆளை தூக்குது.” என்று முகர்ந்துகொண்டே கூறினாள். “ம்ஹும் உங்க அன்னிய நீதான் மெச்சிகனும்” என்றார் பார்வதி.

 

“ஏன் அம்மா” என்றாள் சற்று எதிர்பார்ப்புடன் அன்பின் குறும்புகதை கிடைக்கும் என்று அது பொய்யகவில்லை.

 

“எனக்கு தலை வலியா இருக்குமா அப்பாவுக்கு நீபோய் டீ போட்டு வா அப்புடின்னு சொல்லிட்டேன்” என்று பார்வதி கூறும்போது “எப்போ அம்மா?” என்று குறுக்கிட்டாள் சுவேதா.

 

“அது ஒரு பத்து வருசம் இருக்கும்மா”

 

“ம்ம் அப்போ ஜாலிதான் மேல சொல்லுங்க அம்மா” என்றாள் சுவேதா ஆர்வமாக.

 

“அப்போதான் டீ போட்டு எடுத்துட்டு வந்துட்டா! எனக்கே ஆச்சரியமா போச்சு. அவங்க அப்பாவும் நல்லா இருக்குனு சொல்லிட்டு போயிட்டாரு! சரி நம்ம மக முதல்ல போட்ட டீ எப்புடி இருக்குனு ஒரு ஆர்வத்துல அந்த கோப்பைல மீதி இருந்த டீய போட்டுட்டு நான தெரியாம குடிச்சுட்டேன். ஐயோ” என பார்வதியின் முகம் அஸடகோனலாக மாறியது.

 

“என்ன அம்மா சீனிக்கு பதிலா உப்ப போட்டு வச்சுட்டாங்களா? நான்கூட ட்ரை பன்றேன்னு அப்புடிதான் பன்னிட்டேன் அதுல இருந்து கிச்சன் பக்கமே நந்தினி அம்மா என்னை அலோ பன்றது இல்ல” என்று சிரித்தாள்.

 

“உப்பனாகூட பரவாயில்லையே! இவ கோலம்போட வச்சிருந்த மாவ எடுத்து தட்டி வச்சுருக்கா! பாவம் அந்த மனுசன் எப்புடிதான் அத குடிச்சாரோ” என மீண்டும் முகம் மாறியது பார்வதிக்கு.

 

“என்ன அன்னி நான் படிச்ச ஸ்கூல்ல நீங்க ஹெட்மாஸ்டரா இருப்பீங்க போல! சரி விடுங்க அன்னி உங்க நிலமையாவது பரவாயில்லை சந்துரு நல்லா சமைப்பான். ஆனா நான் என்ன பன்றது.” என்று சிரித்தாள்.

 

“எது மாப்பிள்ளை சமச்சு இவ நல்லா உட்காந்து சாப்பிடுவாளா ராணியாட்டம் தோலை உறிச்சுபுடுவேன்” என்று திட்டினாள் பார்வதி.

 

“ஓ அப்புடியா அம்மா அப்போ எனக்கு சமைக்க கத்துகொடுங்க நான் அன்னிக்கு சமைச்சுபோட்டுகிறேன். எங்க அன்னிய நாங்க சமைக்கலாம் விட மாட்டோம். என்ன அன்னி நான் சொல்றது.” என்று அமைதியாக நின்றிருந்த அரிசியை பார்த்தாள்.

 

“இல்ல அன்னி நான் கொஞ்சம் சமைப்பேன அம்மா சும்மா சொல்றாங்க” என்று கூறினாள் அன்பு.

 

“அன்னி இந்த கோலம் போடுற போட்டிக்கு நான் வரலை” என வயிற்றை பிடித்தாள். “இல்லமா அவ இப்போ கொஞ்சம் சமைப்பா! நானும அப்பாவும் எங்கயாவது கோயிலுக்குபோனா உங்க அன்னிதான சமைச்சு ஸ்கூலுக்கு எடுத்துட்டு போவா” என்று விவாதத்தை முடித்தார்.

 

“ஆமா ஆண்டி ஒன்னு கேக்கனும்னு நினைச்சேன். சின்ன வயசுல அன்னி ரொம்ப வாலுனு கேளிவிபட்டேன் உண்மையா?!” என்று எதாவது சுவாரஸ்யமாக இருக்கிறதா என்று பார்த்தாள்.

 

“ஆமா கொஞ்ச ஆட்டமா போடுவா அதுலையும் இவங்க பாட்டிசெல்லம் வேற இவங்க அப்பா இவளை நான் அடிச்சுட்டா என் கன்னம் பழுத்துடும். அதுனாலயே ஓவர் செல்லம்.” என கூறிவிட்டு எதையோ நினைத்து சிரித்தார்.

 

“ஏம்மா சிரிக்குறீங்க?”

 

“அந்த தோட்டத்துல அன்னைக்கு இவ பன்ன கூத்து இருக்கே” என்று சிரித்தார். “சொல்லுங்க அம்மா” என கெஞ்சினாள் சுவேதா. அதற்குள் “ம்ம் நாளைக்கு மாப்பிள்ளை நம்ம ஊர்ல மில் கட்டுறதுக்கு பூஜை பன்ன போறாங்கலாம் அதனால சீக்கிரமா ரெடியாகுங்க சும்மா எப்பயும்போல லேட் பன்ன கூடாது.” என்று கூறிகொண்டிருந்தார். அருகில் இருந்த சன்முகம் “அட ஏன்டா நீ சும்மா எல்லாரையும் மிரட்டிகிட்டு! ஒன்னும் அவசரம் இல்லைமா இவன் இப்புடிதான் சொல்லிகிட்டு இருப்பான்” என்று தன் நண்பனை பார்த்தார்.

 

“டேய் உன் தங்கச்சிய பத்தி தெரியாதே உனக்கு படத்துக்கு போகலாம்னு சொன்னா படம் முடிஞ்சாலும் ரெடி ஆகமாட்டா நீ என்னடான்னா இப்புடி பேசிகிட்டு இருக்க“ என்று தன் பக்க நியாயத்தை வைத்தார்.

 

“நீ சும்மா சொல்லாதடா உனக்கு தெரியாது என் தங்கச்சி மாதிரி இல்லடா உன் தங்கச்சி” என்று பாச சண்டை புரிந்துகொண்டிருந்தனர். “சரி சரி விடுங்கப்பா அப்போ காவேரி மில்ஸ் இங்கயும் ஆரம்பிச்சாச்சு ஐ ஜாலி அப்போ சந்துரு இங்கயே டேரா போட்டுருவான்” என்று கூறிய சுவேதாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கூடவே அன்புக்கும்

 

“இது காவேரி மில்ஸ் இல்லமா! சுவேதா அன்பரசி மில்ஸ், நீங்கதான் இதுக்கு இன்சார்சாம் ரொம்ப ஸ்டிரிக்டா சொல்லிட்டான்” என கூற போஸ் முதல் அன்பு வரை அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

 

“டேய் என்னடா சொல்ற அவளுக்கு என்னடா தெரியும்” இது போஸ்.

 

“இதுக்கே இப்புடி சொல்ற! இங்க ஒரு வீடு கட்ட போறானாம். ஏன்டானு கேட்டேன் அதுக்கு அன்பு அத்தைய பிரிஞ்சு இருக்க மாட்டாளாம் அதனால இங்கயே தங்கிக்கலாம்னு சொல்றான். எதுன்னா பிரட்சனைனா நீ வேனா அங்க தங்கிக்கோப்பா அப்புடின்னு சொல்றான் நான் என்ன செய்றது?” என்றார் சிரித்துகொண்டே.

 

“மாப்பிள்ளைகிட்ட நீ சொல்லுடா”

 

“எனக்கு தெரியாதுப்பா நீயாச்சு சந்துருவாச்சு என்னை விடுங்க” என்று நழுவினார் சன்முகம்.

 

“ஐ அப்போ அன்னிதான் எனக்கு பிஷினஸ் பார்ட்னரா” என்று துள்ளி குதித்தாள் சுவேதா. ஆம் அபி நிறுவனங்களும் காவேரி நிறுவனங்களும் இப்போது இனைந்துதான் செயல்படுகிறது. அதில் அன்பையும் இனைத்திருந்தான் சந்துரு.

 

மாப்பிள்ளையை கேட்க மனமில்லாமல் இருந்தார் போஸ். மறுநாளும விடிந்தது. பூஜைகள் முடிய முதல் கல்லினை நாட்ட அழைத்தான் சந்துரு.

 

“சுவேதா வா! அன்பு நீயும் வா! அத்தை வாங்க “ என அனைவரையும் அழைத்தான் சந்துரு. அன்பரசியோ தன் தாயினை பார்த்து அனுமதிக்கு நின்றிருந்தாள்.

 

“அன்னி சும்மா அம்மாவ பாத்து பயப்படாதீங்க சந்துரு இருக்கான் அவன் பெரிய ரவுடியாக்கும் அவன் பாத்துப்பான் சும்மா வாங்க” என கிண்டலடித்தாள்.

 

அனைவரும் கைவைக்க அன்பு தன்னவனின் மீது ஒருகை வைக்க அவனோ மற்றோரு கையை அவள்மீது வைத்தாள். சுவேதா இருவரின் கைகளும பிரியாதவாறு அனைத்துகொண்டாள்.அனைவரின் ஆசியுடன் முதல்கல் அடியெடுத்து வைத்தது அதுதான் அவர்கள் மன வாழ்கைக்கு அச்சானி.

 

அதன்பின் அனைவரும் வீட்டிற்கு வரவே சுவேதா போராடி இருவரையும் தனியே அனுப்பிவைத்தார். “நல்லா ஊர சுத்திட்டு வாங்க அப்புறம் அன்னி எனக்கு புளியங்கா வேனும் சரியா” என சந்துருவை பார்த்து நக்கலாக கேட்டாள்.

 

“இன்னும் மூனுமணி நேரத்துக்கு உங்களை இந்த வீட்டுபக்கமே பாக்ககூடாது” என்பது சுவேதாவின் உத்தரவு வேறு வழியில்லாமல் அந்த கன்மாய் அருகில் நடந்தனர்.

 

“இந்த பாம்பு புத்து நியாபகம் இருக்கா?” என்றான். அவள் மௌனமாக சிரித்தாள். அன்று அந்த பாம்பு படாதபாடு பட்டுச்சோ இல்லையோ இவன் ரொம்ப கஷ்டபட்டுட்டான்.

 

“பரவாயில்லையே நீ சிரிக்ககூட செய்வியா?” என அவன்கூற வெட்கத்தில் முகம் சிவந்தாள்.

 

“ஆமா சுவேதா கேட்டது நியாபகம் இருக்கா?”

 

அவள் “என்ன?” என்பதுபோல இவன் முகத்தை பார்த்தாள்.

 

“புளியங்கா புளியங்கா!” என்றான்

 

மீண்டும் வெட்கி குணிந்துகொண்டாள்

 

அந்த சிரிப்பை ரசித்தான் சந்துரு. இருந்தாலும் ‘நான் அவளுடைய மனதினைன் அலங்கரித்தவன் இல்லை. பின் ஏன் அன்பிடம் அன்பை எதிர்பார்க்கிறேன்” என மனதில் ஒரு வலி வந்தது. அதன்பின் மௌனமாக நடந்தான்.

 

அதுவரை நன்றாக பேசிகொண்டிருந்தவனின் குரலை ரசித்து வந்தவளை இவனது தற்போதைய மௌனம் நிலைகுலைய செய்தது. ஏக்கமாக அவன் முகத்தினை பார்த்தாள் தாயிடம் இரைக்கு ஏங்கும் குஞ்சுகள்போல அன்பு எனும் இரைக்காக அன்பானவல் எதிர்பார்த்தாள்.

 

அவனது மௌனம் அவளது மனதிலும் ஒரு விதை விதைத்தது. ‘பாவம் சந்துரு அம்மா இல்லாம கஷ்டபட்டான் இப்போ அவன் காதலிச்ச பொண்ணும் அவன்கூட இல்ல அவள நினைச்சுகிட்டே வாழுறான். அவன் மனது முழுக்க அவள்தான இருப்பா! எனக்கு அங்க இடம் இல்லையே நான அவர் மனைவியாகலாம் ஆனா அவர் நேசிக்குற பொண்ணா ஆக முடியாதே! பின்ன ஏன் அவர் அன்புக்கு ஏங்குறேன்.’ என மனதில் ஓட அழவேண்டும்போல இருந்தது.

 

“அன்பு நான ஒன்னு சொல்லட்டுமா? நீ என்ன தப்பா நினைச்சாலும் பரவாயில்லை” என்றான்.

“ஐயோ இல்லைங்க” என்று பதறினாள்.

 

“நான் யார லவ் பன்றேன்னு உனக்கு தெரிஞ்சாகனும்! நான் அதை சொல்லிடுறேன் என்னால முடியல மனசு வலிக்குது. அத கேட்டுட்டு எல்லாம் உன் விருப்பம்” என அவள் கண்களை பார்த்தான்.

 

அவளிடம் அது என்ன என்ற ஆர்வத்தைவிட, அது நானா இருக்ககூடாதா என்ற ஏக்கம் இருந்தது. அந்த பளிங்க கண்ணை பார்த்தான்.

 

“எனக்கு உன்னை பிடிக்கலை அன்பரசி” என்றதும் அவள் இதயம் நொருங்கியது.

 

“ப்ளீஸ் அரிசி என காதலை ஏத்துகோ!” என்று அவள் கண்ணை பார்த்தான் கையில் அவளுக்கு தெரியாமல் பறித்த அந்த ரோஜாவேறு! அரிசிக்கு திருட்டு மாங்காய் பிடிக்கும் அல்லவா. அதனால திருட்டு ரோஸ்.

 

அவனது வார்த்தையை கேட்டவள் கண்கள் கலங்கின. “சாரி அன்பு நான் எதாவது தப்பா பேசிருந்தா என்னை மன்னிச்சிடு! நான் எப்போவுமே லவ் பன்னது பன்றது எல்லாமே அந்த குறும்புகாரி அரிசியதான்!” என்றான்

 

அடுத்த நொடி அன்பரசி தன்னவனை கண்ணீருடன் கட்டியனைத்தாள். அந்த ரோஜா கீழே விழுந்து இவர்களை படம்பிடித்தது. காதல் படம் எடுக்க ஜெனி இல்லை அல்லவா!. (ஆனா இந்த ஜெனி இருக்கா)

-தொடரும்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

பேரறிஞர் அண்ணாவின் ‘ரங்கோன் ராதா’ – 20பேரறிஞர் அண்ணாவின் ‘ரங்கோன் ராதா’ – 20

“நண்பா! கொடுமைக்கு ஆளான என் தாயாரின் சோகம் நிரம்பிய கதையை அவர்கள் கூறி முடித்த பிறகு என் கண்களிலே கொப்புளித்த நீரைத் துடைத்துக் கொண்டேன் – என் தாயாரை நோக்கி, ‘அம்மா! பிரேத பரிசோதனை செய்து பயனில்லை. இனி நடக்க வேண்டியதைக்

உள்ளம் குழையுதடி கிளியே -4உள்ளம் குழையுதடி கிளியே -4

ஹாய் பிரெண்ட்ஸ், சென்ற பகுதிக்கு தந்த வரவேற்புக்கு ஆயிரமாயிரம் நன்றிகள். உங்களைப் போல நானும் பண்டிகைக் கால வேலைகளில் பிஸியாக இருக்கிறேன். கிடைக்கும் இடைவேளைகளில் அப்டேட்ஸ் தந்து விடுகிறேன். இன்று ஹிமாவின் கடந்தகாலம் சரத்துக்கு மட்டுமில்லை உங்களுக்கும் சிறு ஆச்சிரியத்தைத் தரலாம்.

கபாடபுரம் – 12கபாடபுரம் – 12

12. அந்த ஒளிக்கீற்று   இருளில் எங்கிருந்தோ எதிர்வந்த அந்த ஒற்றை ஒளிக்கீற்றே கரைகாணாப் பேரிருளுக்குப் பின் விடிந்து விட்டாற் போன்ற பிரமையை உண்டாக்கிற்று அவர்களுக்கு.   “மற்றொருவருடைய ஆட்சிக்குட்பட்ட கோ நகரத்தில் இப்படியொரு இருட்குகை வழியைப் படைக்கும் துணிவு வர