Tamil Madhura கதைகள்,தொடர்கள் ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 38

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 38

உனக்கென நான் 38

சந்துருவுக்கு அந்த பெண்கூறிய ‘சுவேதாவை பார்சல் பன்னிடலாம்’ என்ற வார்த்தை அடிக்கடி கேட்டது. கூடவே எழிலரசி இறந்த காட்சியும் மாறி மாறி வந்து சென்றது. கூடவே அவள் கூறிய பெயர்களையும் நினைத்து பார்த்தான். எழில், சுவேதா, பார்வதி, அப்புறம் மாமா, அப்புறம் அப்பா, கடைசியா அன்பு.

சந்துருவுக்கு நன்றாக விளங்கியது. தன் மனதில் பாசமாக வைத்திருப்பவர்களை கொல்கிறாள். அப்படி என்றால் என்மீது தான் கோபம். இனிமேல் யாரையும் சாகவிடமாட்டேன் என சிந்தித்து கொண்டே ஃபோனை எடுத்தான்.

“சொல்லுடா சந்துரு என்ன எதுவும் பிராப்ளமா நீயும் சுகுவும் ஏதோ ரகசிய மாநாடு போட்டுறீக்கீங்களா என்ன! இங்க என்னடான்னா சுகு மந்திரிச்சுவிட்ட மாதிரி திரியுறான்” வழக்கமான கிண்டளுடன் மஞ்சு.

“நான் சொல்றத மட்டும் கேளு மஞ்சு” என் கூறியவனின் மனதில் ‘நாம் எது பேசுனாலும் அவள் கேட்டுகிட்டு இருப்பா’ என இனைப்பை துண்டித்தான். பின் காரை எடுத்துகொண்டு கிளம்பியவன் அருகிலிருந்த ஒரு டெலிபோன் சென்டருக்கு சென்று மீண்டும் அழைத்தான். இம்முறை தன் கைபேசிக்கு விடுப்பு வழங்கியிருந்தான்.

“டேய் என்னடா ஆச்சு உனக்கு ஏன் ஏதோ லேன்ட் லைன்ல இருந்து கூப்புடுற” சற்று பதட்டமானால் மஞ்சு.

“மஞ்சு நான் சொல்றத மட்டும் கேளு; நீங்க எல்லாரும் கார் எடுத்துட்டு அன்பரசியோட விட்டுக்கு போங்க”

“ஏண்டா அன்னா!?”

“அட யம்மா அவளுக்கு கல்யாணத்துல எல்லாருக்கும் வர்ர மாதிரி தனிமையா ஃபீல் பன்றாலாம்‌. அவதான் சொன்னா அப்புறம் சுவேதாவும் நானும் கூட வர்ரோம் அந்த கம்பெனி கன்ஸ்ட்ரக்ஸன் ஆரம்பிக்கனும்ல” என்றான்.

“டேய் அண்ணா போதும் போதும் நம்பிட்டேன். உனக்கு அண்ணிய பாக்காம இரூக்க முடியல அதான் ஏதேதோ பிட்டு போடுற நீ நடத்து”

“ஏன் உனக்கு கல்யாணம் ஆகும்போதும் பாலாஜி இப்புடிதான் பன்னானா?!”

“எங்க லவ் தெய்வீகமானது அதபத்தி பேசாதே” என சிரித்தாள்.

“ம்ம் பாத்தோம் பாத்தோம் கோயில்ல ஓடிபோய் தாலி கட்டிகிட்டத நான்தான் பாக்காமலா இருந்தேன்” என வழக்கம்போல் பேச ஆரம்பித்தான்.

“அப்போ நீயும் ஓடிபோய் கல்யாணம் பன்னிகோ அன்பு அண்ணிய. அதுல ஒரு சுவாரஸ்யம் இருக்குடா” என்று சிரித்தாள்.

“ஏண்டி ஆனா நீ கடைசி வரைக்கும் நல்ல புள்ள மாதிரியே இருந்துகிட்டு நீதாண்டி மொதல்ல ஓடிபோய் பன்னிகிட்ட”

“தாங்கயூ யுவர் ஹானர்” என்றாள்.

பக்கத்தில் இருந்திருந்தாள் தலையில் செல்லமாக ஒரு கொட்டு வாங்கியிருப்பாள். ஆனால் ஃபோனில் முடியாதல்லவா ‘ஓ ஆமா ஃபோன் ஃபோன்ல இவ்வளவே நேரம் பேசிகிட்டு இருக்கேனே’ என தலையில் அடித்தவன் “உன்கூட பேசுனாலே இப்புடிதான் எதாவது சொல்லிகிட்டே இருப்ப ஒழுங்கா சீக்கிரம் கிளம்புங்க” என சந்துரு கூறும்போதே

“ஏய் சுகு சந்துரு தான் பேசுறான்” என ஃபோனை கொடுத்து ஓடிவிட்டாள்.

“சுகு நான் சொல்றத மட்டும் கேளு! நீங்க எல்லாரும் என் மாமா வீட்டுக்கு போயி கல்யாணவேலைய பாருங்க நானும் வந்துடுறேன். அங்க என் மாமாவ மீறி எதுவும் நடக்காது.”

“ம்ம் சரிடா அதுவும் கரெகட்தான்”

என இனைப்பை துண்டித்தான்.

அதன்பின் நேராக சுவேதாவின் வீட்டிற்கு வண்டியை செலுத்தினான்.

“ஏய் என்னடா சர்பிரைசா இருக்கு காலங்காத்தால வந்துருக்க ஒரு ஃபோன் பன்னிருக்கலாமே! இன்னைக்கே அமெரிக்கா கிளம்பிட்டியா?!” என கேளிவிகளை அடுக்கினாள்.

நந்தினி அம்மா அங்கு வந்தார். “வாப்பா சந்துரு” எனீறு கூற சந்துருவும் பதிலுக்கு சம்பாஷனை செய்தான்.

“அம்மா சுவேதாவ அன்பரசியோட வீட்டுக்கு அனுப்புறீங்களா?!”

“ஏன்டா எதுவும் பிரச்சனையா?!” முந்தினாள் சுவேதா.

“இல்ல அவளுக்கு கொஞ்சம் தனியா ஃபீல் ஆகுதாம்” என்றான்.

“அப்போ பக்கத்துல இருக்குற காட்டுக்குள்ள பேய் ஒரு பாம்ப பிடிச்சு பார்சல் பன்னி அனுப்பு விளையிடிட்டு இருப்பாங்க” என சிரித்தாள்.

“ஏய் லூசு, அது சின்ன வயசுல பன்னதுடி” என்றான்.

“நான் தனியா போகமாட்டேன்பா” என்று விளையாடினாள். “தனியா யாரு போக சொன்னா நானும் வாரேண்” என்றான்.

“அதான பாத்தேன் என்னடா சூரியன் மேற்க உதிக்குதுனு” என்று நந்தினி அம்மாவின் தோளில் கழுத்தை வைத்துகொண்டு சிரித்தாள்.

நந்தினி அவளது கன்னங்களை தன் கைகளால் அனைத்து கொண்டு “ஏண் சுவேதா அதான் சந்துரு கேக்குறான்ல போயிட்டு வா” என்றார். பின் சம்மதம் வழங்கபடவே ஒரு வாரத்துக்கு தேவையான துணிகள் எடுத்து வைக்கபட்டன.

“என்னடி டீசர்ட் ஜீன்ஸ்னு எடுப்பீனு பாத்தா ஒரு சேலையும் சுடியுமா எடுத்து வைக்குற?!”

லேசாக வெட்கத்துடன் அவனை பார்த்தவள் “சுகுவும் வர்ரான்ல அதான்” என்றாள்.

“அது சரி! ஆமா உனக்கு யாரு சொன்னா?” என்று அதிர்ந்தான்.

“இப்பொதான் மஞ்சு ஃபோன் பன்னா எல்லாரும் கிளம்ப போறாங்களாம்” விசயத்தின் விபரீதம் புரிந்தது. சுவேதாவை காப்பாற்றதான் இவ்வளவு ஏற்பாடும். ஆனால் இந்த தோழிகள் இப்படி செய்வார்கள் என்று இவன் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.

சுவுதாவை உயரத்தில் இருக்கும் பூந்தொட்டிபோல் பாதுகாக்க வேண்டும் என்பது புரிந்தது. அப்போது அருகில் இருந்த நந்தினி அம்மாவை பார்த்து.

“அம்மா உங்க ஃபோன் குடுங்க என்னோடது சார்ஜ் போட்டுருக்கேன்” என்றான்.

“இந்தாப்பா ” என அவர் கொடுக்க தன் மாமாவை தொடர்பு கொண்டான். நவீன யுகத்திலும் இத்தனை எண்களை நினைவில் ஆழ்த்துவது சந்துருவால்தான் முடியும்.

ஆனால் மேஜையின் மீதிருந்த ஃபோனை அன்பரசிதான் எடுத்தாள். சந்துரு என்ற பெயர் மிகுந்த ஆர்வத்துடன் அதை எடுக்க தூண்டியது.

“ஹலோ சொல்லுங்க”

ஒற்றை குரலில் கண்டுபிடித்துவிட்டான். “ம்ம் அப்பா இல்லைங்காளா?” என்றான்.‌ ‘அன்புனு கூப்பிடுடா செல்லமா அரிசினாவது கூப்பிடுடா’ என ஏங்கினாள்.

“இல்ல வெளியே போயிருக்காங்க”

“இல்லைங்க என்பிரன்ட்ஸ் உங்கள புரிஞ்சு இருக்க முடியலையாம். அதான் கல்யாணம் வரைக்கும் உங்க வீட்டுல தங்கிகிறேன்னு சொன்னாங்க”

“சரிங்க நான் அப்பாகிட்ட சொல்றேன்” என வாயால் கூறிவிட்டு ‘இது உன் வீடுடா ஏன்டா என்கிட்ட பர்மிஷன் கேக்குற’ என்று மனம் ஏங்கியது.

“இல்ல புதுமில்லுக்கு இடம் வாங்குனோம்ல அங்க கன்ஸ்ட்ரக்ஸன் ஒர்க் ஸ்டார்பன்னலாம்னு இருக்கோம் நீங்கதான் உங்க கையால..!” என இழுத்தவன் “அப்புடியே கல்யாணம் முடியுர வரைக்கும் அங்கேயே தங்கலாம்னு இருக்கோம்” என்றான்.

“ம்ம் யாரு மா?!” போஸ் வந்துவிட்டார்.

“அவங்கதான்பா உங்ககிட்ட பேசனுமாம்” என ஃபோனை கொடுத்துவிட்டு ஓடியவளின் மனதில் ‘அவன் என்ன பாக்கதான் வர்ரான்’ என்ற ஆசையும் பிம்பமாக வந்து சென்றது.

போஸிடம் பேசி சம்மதம் வாங்கிவிட்டான் எப்படியோ. சந்துருவின் எண்ணம் எல்லாம் அனைவரையும் ஒரு புள்ளியில் சேர்த்துவிட்டால் அந்த ஜான்சியிடம் இருந்து காப்பாற்றிவிடலாம் என்பதுதான்.

சிறிது நேரத்தில் சுவேதாவை அழைத்துகொண்டு காரில் தன் வீட்டிற்கு சென்றான். சன்முகம் சுவாதாவை பார்த்து “வாம்மா என்ன பெட்டியெல்லாம்?! ஒரு வழியா சம்மதிச்சுட்டியா?” என்றார்.

“இல்லப்பா இவளாவது சம்மதிக்குறதாவது. நான் இவ கால்லயே விழுந்து பாத்துட்டேன். இப்போ மட்டும் ஒத்துகுவாளா என்ன?” என்றான்.

“ஏன் சுவேதா என்ன பிரச்சனை உனக்கு?!” என்று திட்டினார் சன்முகம்.

“ஒன்னுமில்லை அன்கிள் சும்மாதான்” என சோகமாக தலையை கீழே குணிந்துகெண்டாள்.

அவள் முகம் வாடுவதை பார்த்தவன் “சரி விடுங்கப்பா” என கண்ணால் சைகை காட்டினான்.

அவரும் புரிந்துகொண்டு “சரி பெட்டியோட எங்க கிளம்பியாச்சு” என்றார்.

“நாங்க மட்டும் இல்லப்பா நீங்களும் வர்ரீங்க”

“எங்கடா”

“மாமாவையும் அத்தனையையும் பாக்க!”

“இல்ல அன்கிள் பொய் சொல்றான். இவன் அன்பு அன்னிய சைட் அடிக்க தான் கூப்பிடுறான்” தன் பங்கை செம்மையாக செய்தாள் சுவேதா. அவளது முதுகில் அடித்தவன். “இல்லப்பா சும்மா சொல்றா”

சன்முகத்திற்கு சிறிது புன்னகை வந்தது. அவர் மனதில் அன்பரசி இந்த வீட்டின் மகாராணி ஆகவேண்டும் அவ்வளவுதான்.

“அங்க மில் கன்ஸ்ட்ரக்ஸன் ஆரம்பிச்சுடலாம்னு இருக்கோம் கல்யானத்துக்கு முன்னாடி அடிக்கள் நாட்டிரலாம்பா”

“ம்ம் சரி சந்துரு” இது சன்முகம்.

“அன்கிள் அந்த அடிகள் யாரு நாட்ட போறான்னு தெரியுமா உங்க மருமகதான் அதான் என் அண்ணி” என்று சிரித்தாள்.

“ஏய் வாயாடி நீ வேணுமா பன்னு அன்பு ஒன்னும் சொல்லமாட்டா”

“அப்போ அப்பா பர்மிஷன் தேவையில்லை அன்னி பர்மிஷன்தான் வேணும்?!” என்று கண்களை செல்லமாக விரித்தாள்.

அவளது கேலிபேச்சுகள் சந்துருவின் முகத்தில் புது கல்யாண மாப்பிள்ளை உணர்வை ஏற்படுத்தின.

“அப்பா இவள பாருங்கப்பா” என்றான். முதல்முறையாக அடுத்தவரை பற்றி குறை கூறுகிறான் சந்துரு அதுவும் செல்லமாக.

“ஆமா சந்துரு போஸ்கிட்ட கேட்டுட்டியா?!” என்றார்.

“ம்ம் சொன்னேன்பா தாத்தாவோட கல்லுவீடுனு எதோ சொன்னாரு. என்னையும் சுகு பாலாஜிய அங்க தங்க சொன்னாரு. மத்தவங்க மாமா வீட்டாலயே இருக்க சொல்லிட்டாரு”

சந்துருவுக்கு அன்பரசி மீது ஆசை இல்லாமலா அவன் அறையில் எங்கு பார்த்தாலும் அன்பரசியின் நினைவுகளால் நிரப்பியிருந்தான். அதிலும் புளியங்காய் தினத்தின் நினைவாக அந்த சட்டையின் ஒரு கையை தன் லாக்கரில் பத்திரமாக வைத்துள்ளான் பொக்கஷமாக.

“எப்பேடா கிளம்புறோம்” ஆர்வமானாள் சுவேதா.

இன்னைக்கு கிளம்பினாள் ஆபத்துதுதான் என உணர்ந்தான் சந்துரு.

“இன்னைக்கு இங்க தங்கிக்கோ நாளைக்கு காலையில கிளம்புறோம்” என கூற “அப்போ நாளைக்கே வந்து என்ன கூப்பிட்டுருக்கலாமே” என்றாள்.

“இன்னைக்கு எனக்கு போர் அடிக்குது அதான் உன்னை கூட்டிட்டு வந்தேன்” என சிரித்தான். “போடா லூசு” என சுவேதா பெட்டியை இழுத்துகெண்டு நடந்தாள்.

அனைவரையும் தன் பாதுகாப்பு வளையத்துக்குள் சுருக்கிகெண்டது சந்துருவுக்கு சற்று அமைதி தந்தது.

“பார்வதி மாப்பிள்ளை வர்ராங்களாம் நீ போயி அப்பாவோட வீட்டு சுத்தம்பன்னி ரெடி பன்னி வை” என போஸ் கூற தன்னவன் தங்கும் இடத்தை சுத்தம் செய்ய ஆசை கெண்டு தாயுடன் கிளம்பினாள்.

“நீ எங்கடி வர்ர?” இது பார்வதி “இல்லமா அப்பா தாத்தா விட்ட சுத்தமாபன்ன சொன்னாங்கள்ள அதான் நானும்” என்றாள்.

“கல்யாணபொண்ணு ஆட்டம் போடாதடி வீட்டுலயே இரு அப்புறம் உனக்கு கால்ல முள்ளு குத்ததுனா கூட உங்க அப்பா என்ன தொலைச்சுபுடுவாரு அதுவுமில்லாம நிச்சயமான பொண்ணு வெளியே சுத்தகூடாதுடி எதாவது காத்து கறுப்பு அண்டிரும்” என்று அனுமதி மறுத்து சென்றார் பார்வதி.

அன்பரசி சோகமாக வந்து தன் அறையில் அமர்ந்தாள்.

ஓர் குரல் அவளை உற்சாக படுத்தியது. “என்னம்மா நீ போகலையா?!”

“அம்மா வேணாம்னு சொல்லிட்டாங்கப்பா”

“ஏன்?!”

“காத்து கருப்பு அடிச்சிடுமாம்” என்று கிளிப்பிள்ளை போல் ஒப்பு வைத்துவிட்டாள்.

“அந்த மேரேஜ் அட்வைஸ் சங்கத்த மொதல்ல கலைக்கனும்!.” என்று புலமாபியவர். “அவ தனியா கஷ்டபடுவா நீ போயி உதவி பன்னுமா எதாதவது சொன்னா என்கிட்ட சொல்லு நான் பாத்துக்கிறேன்.‌ஓடுங்க போயி சந்துருவுக்கு வீடட ரெடி பன்னுங்க ” என செல்லமாக கூற அன்பரசியோ கூட்டிலிருந்து வெளிப்பட்ட பட்டாம்பூச்சி ஆனந்தமாக சிறகை விரிப்பதை போல பறந்தாள் அந்த வீட்டை நோக்கி.

-தொடரும்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 53ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 53

உனக்கென நான் 53 சன்முகம் மயங்கிவிழ சந்துரு “அப்பா” என தாங்கிபிடித்தான். அதற்குள் தன்னவனை காணாமல் வந்த அன்பு “மாமா” என ஓடிவந்தவள் தன் மாமனாரை பிடித்துகொண்டு “அப்பா வாங்க” என கத்தினாள். “என்னங்க பொண்ணுகத்துற சத்தம் கேக்குதுங்க” என்றார் பார்வதி.

யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 07யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 07

அத்தியாயம் – 07   அதுல்யா இரவு நேர வேலைக்குப் புறப்பட்டுச் சென்றதும் கின்டில் டிவைஸைத் தூக்கிக் கொண்டு ஸோபாவில் சாய்ந்தாள் வைஷாலி. கின்டிலில் இலவசத் தரவிறக்கத்திற்கு ஏதாவது நாவல்கள் இருக்கிறதா என்று பார்த்து இலவசமாக இருந்த நாவல்களை பூச்சிய விலையில்

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 11ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 11

11 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன்   அக்ஷரா பேசிய அனைத்தையும் யோசித்தவனுக்கு எவ்வளவு பாசமான குடும்பம் இருந்திருந்தா அவங்க இல்லேன்னாலும் மதிப்புகுடுத்து அவங்க சொன்னமாதிரி வாழ்வேன்னு சொல்லுவா. அதுவும் குழந்தைங்களோட அப்டியே தனியா  வாழ்றவ எவ்வளோ பிரச்னை வந்திருக்கும்.. விஷயம்