Tamil Madhura கதைகள்,தொடர்கள் ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 37

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 37

உனக்கென நான் 37

மஞ்சுவும் சுகுவும் உள்ளே ஓடி வரவே அங்கு சுவுதா துடித்துகொண்டிருந்தாள். ஒரு வழியாக போராடி அவளது வலிப்பை சரிசெய்து விட்டனர். ஆனாலும் சுவேதா மயக்கநிலையில் இருந்தார்.

“சுகு நீ போய் என் கார எடுத்துட்டு வா” என சாவியை கொடுக்க சிறிது நேரத்தில் ஓர் கார் வந்து அந்த குதிரை கட்டிடத்தின் எதிரில் நின்றது.

சுவேதாவை கைகளில் ஏந்திகொண்டு காரில் கிடத்தினான். மஞ்சு சுவேதாவுடன் பின் இருக்கையில் அமர்ந்து அவளை கைகளால் பிடித்துகொண்டாள். சுகு வாகனத்தின் சாரதியாக இருக்க சந்துரு அருகில் அமர்ந்தான்.

வேகமாக கார் சென்று கொண்டிருந்தது. “மஞ்சு ஏற்கனவே இந்த மாதிரி வலிப்பு வந்துருக்கா இவளுக்கு?!” என்றான் சந்துரு.

“ம்ம் ரொம்ப எமோஷனாலா பேசும்போது வந்துருக்கு அதுனாலதான் ட்ரக்ஸ் எடுத்துகிறா ஆனா இப்ப நேரத்துக்கு ட்ரக்ஸ் எடுக்கலைனா கூட ஃபிக்ஸ் வந்துடுது” என்று சுவேதாவை தோளில் சாய்த்துகொண்டு நெற்றியில் கைவைத்து பிடித்திருந்தாள்.

காரின் வேகம் சட்டென சுழியை அடைந்தது. மஞ்சுவின் கைகள் முன்னால் இருந்த சீட்டில் மோதின. கையில் சிறிய சிராய்ப்பும் ஏற்பட்டது. ஆனால் சுவேதா ஃஸேப்.

“ஸ்ஸ்ஸ் ஆ ஏன் இப்புடி ஓட்டுறீங்க” என்றாள்.

“ம்ஹும் என்ன ஏன்மா சொல்ற அங்க பாரு”

முன்னால் ஒரு குடிமகன் கையில் ஒரு குச்சியை எடுத்துகொண்டு வழிமறைத்தான்.

“சைடு போட்டு ஓட்டுடா சும்மா குடிச்சுட்டு டிஸ்டர்ப் பன்னிகிட்டு இருப்பானுக” எரிச்சலானான் சந்துரு.

வாகனத்தை திருப்ப அங்கேயும் வந்து நின்றான். பொறுமை பறிபோனது சுகுவுக்கு. “டேய் எருமை மாட்டுக்கு பதிலா நீ போகவேண்டியது இருக்கும் பாத்துக்கோ”

காரின் அருகில் வந்தவன் ஒய்யாரமாக ஜன்னலில் கை வைத்தான். “ஹலோ பாஸ் இந்த பஸ் பாண்டிச்சேரி போகுமா?!” என்று கண்களை சுருக்கினான்.

“இத பாத்தா உனக்கு பஸ் மாதிரியாடா தெரியுது?!” இது சுகு.

“பொண்ணுங்களும் குடிக்க ஆரம்பிச்சுட்டீங்களா உங்ககூட பான்டிசேரி வர்ராங்க?” என்றான் உள்ளிருந்த பெண்களை பார்த்து.

சந்துரு சிரித்தான். “அவங்க உன்னவிட எக்ஸ்பீரியன்ஸ் அதிகம்டா ஒன்லி ட்ரக்ஸ்” என்றான் சுகு. மஞ்சு முறைத்து பார்த்தாள். “அவங்க அவங்க கஷ்டம் அவங்களுக்கு மட்டும்தான் தெரியும்” என்று முறைப்பது கண்ணாடி வழியே தெரிந்தது.

“சார் இது பாண்டிச்சேரி போற பஸ் இல்ல பின்னாடி மஞ்சள் கலர்ல ஒரு ரயில் வருது அதுல கேளுங்க” என பின்னால் வந்து ஆட்டோவை கோர்த்துவிட்டான்.

பின் கார் கிளம்பி ஒரு பெரிய மருத்துவமனையின் முன் நின்றது. அதற்குள் சுவேதா விழித்திருந்தாள். அவளால் சிறிது நடக்க முடிந்தது. மஞ்சுவின் மீது கைகளை போட்டு நடந்தாள். அவளது மறுகையை பிடித்து சுகுவும் உதவி செய்தான். சுவேதாவின் உடல் போதை நேரம் தவறியதால் நடுங்க துடங்கியது.

“மஞ்சு என்னால முடியலடி” சுவேதா புளம்பினாள். “கொஞ்சம் பொறுத்துகோடி” என்றாள் மஞ்சு.

டாக்டரிடம் சென்றனர். சுவேதா ஒரு அறையில் துயில்கொள்ள செய்தனர். மருத்துவர் சன்முகத்திற்கு தெரிந்தவர் அதனால் சந்துருவும் சம செல்வாக்கை பெற்றிருந்தான்.

சுவேதாவின் கையில் ஏற்கனவே தழும்புகள் இருந்த இடத்தில் மேலும் ஒரு ஊசி ஏற்றப்பட்டு உயரத்திலிருந்து நீர் குமிழிகள் சென்று கொண்டிருந்தன.

மருத்துவர் அழைக்கவே மஞ்சுவும் சந்துருவும் அவரின் அறைக்கு சென்றனர். சுகு சுவுதாவின் அருகில் அமர்ந்திருந்தான்.

“ஏன்டி உனக்கு என்னதான்டி பிரச்சனை ஏன் இப்புடி பன்ற உனக்கு எத்தனை தடவ சொல்லியிருக்கேன் உனக்காக தான்டி அந்த லோகுகூட சண்டை போட்டேன்” என உறங்கிகொண்டிருந்த சுவேதா விடம் பேசினான் சுகு.

அவளால் எதுவும் பேசமுடியாதல்லவா ஓர் பொம்மை போல உறங்கிகொண்டிருந்தாள். சுகுவின் கண்ணில் கண்ணீர் இருந்தது. “நீதானடி சொன்ன என்ன லவ்பன்றேன்னு நான் சொல்ற எதையாவது நீ இதுவரைக்கும் கேட்டுருக்கியா.! சிகரெட் குடிக்காதடா கேன்சர் வரும்னு சொன்ன ஆனா நீ ஊசிபோட்டுகிட்டு இருக்க. நான் செத்தா எப்புடி உன்னால தாங்கமுடியாதோ. அது மாதிரிதான்டி நானும் ஏன் நீ புரிஞ்சுக்க மாட்டேங்குற” என்றழுதான் சுகு.

மயக்கத்திலும் அவனது குரலை கேட்ட சுவேதாவின் கண்ணில் கண்ணீர் வரவே அதை துடைத்து விட்டு அவளையே பார்த்துகொண்டிருந்தான்.

“சந்துரு நான் சொல்றது உனக்கு புரியும்னு நினைக்குறேன்” இது டாக்டர்.

“அப்போ அந்த ட்ரக்ஸ்தான் இதுக்கு காரணம்னு சொல்றீங்களா” சந்துரு

“ஆமாம்பா சுவேதா மனசுக்குள்ள எதையோ வச்சுகிட்டு அதை யாருகிட்டயும் சொல்லமுடியாம மறக்கனும்னு நினைச்சு ட்ரக்ஸ் எடுத்துகிறா அங்கதான் பிரட்சனை அவ ரொம்ப நாளா ட்ரக்ஸ் சாப்புடுறா. இப்போ ஊசி போட்ட தடயமும் இருக்கு” என்று டாக்டர் கைகளை முறுக்கினார்.

“ஆமா சந்துரு அவ ப்ளட் சாம்பில்ல பாத்தாலே தெரியுதே அதுவுமில்லாம ஊசி போடுற அளவுக்கு அவ உடம்பு ஒத்துகுதுனா சிகரெட் மாத்திரை அது இதுன்னு கொஞ்சம் கொஞ்சமா போயிருக்கா”

மஞ்சு இறுகிய முகத்துடன் “அப்போ டாக்டர் மஞ்சுவோட லைஃப் அவ்வளவுதான?” என்றாள்.

“இல்லமா எனக்கு தெரிஞ்சு ஒரு மறுவாழ்வு மையம் இருக்கு தனஞ்செயன்னு ஒருத்தர் நடத்துராரு அவரு ஒரு காந்தியவாதி இப்போ இந்த ஹோம் நடத்துராரு நீங்க அங்க கூட்டிகிட்டு போங்க நிறையபேர குணபடுத்திருக்காங்க இது அந்த அட்ரஸ்” என ஒரு கார்டை தேடி எடுத்தார்.

“ஒகே சார் நாங்க பாக்குறோம்” என கார்டினை எடுத்து தனது மனிபையில் வைத்தான் சந்துரு.

“ம்ம் சந்துரு ட்ரிப்ஸ் ஏறிமுடிஞ்சுதும் ஒரு ஒன் ஹவர்ல முழிச்சுடுவாங்க நீங்க கூட்டிட்டு போங்க” என்றார்.

சரி என சந்துருவும் மஞ்சுவும் சுவேதா இருக்கும் அறையின் அருகில் வந்தனர். அவர்களின் காலணி சத்தத்தை உணர்ந்த சுகு தன் கண்களை துடைத்துகொண்டு சுவேதாவின் கண்களையும் துடைத்து விட்டான். பின் எழுந்து ஜன்னலின் அருகில் சென்று நின்றான். அது தன் மனதை சிறிது நிதானம் செய்வதற்காக.

ஆனால் சுவேதாவின் கண்களில் நீர் மீண்டும் வந்ததது. மஞ்சுவோ சந்துருவிடம் கண்களாலேயே பேசினாள். அவளது கண்கள் சுகுவையும் சுவேதாவையும் இனைப்பதுபோல பார்த்தன. சந்துரு புரிந்துகொண்டான்.

அவன் நிதானமாகட்டும் என்று அமைதியாக நின்றான் சந்துரு. சிறிது நேரத்தில் திரும்பிய சுகு “என்னடா மந்திரவாதி மாதிரி திடீர்னு வந்து நிக்குறீங்க” என கிண்டல் செய்தான் தன் மனதை மறைத்தான்.

“ஆமா கேராளால நம்பூதரிகிட்ட படிச்சுட்டு வந்தேன். போடா இவனே! இப்புடி கதவ தொறந்து போட்டு இருந்தா உள்ள வராம என்ன செய்வாங்களாம்” என சந்துர முடித்தான்.

சிறிதுநேரம் மூவரும் பேசிக்கொண்டிருக்க சுவேதா கண் விழித்தாள். அந்த மேஜையில் பிரட் பால் என வைக்கபட்டிருந்தது. சுவேதா சாய்ந்து அமர்ந்தாள்.

“சரிடா டாக்டர் எட்டு மணிக்கு வரசொன்னாரு நாங்க போயிட்டு வந்துடுறோம்” என இருவரும் அவர்களை கழட்டிவிட்டு கிளம்பினர்.

“ஏய் நீ மதியமும் சாப்பிடலை ஒழுங்கா நாங்க வர்ரது குள்ள சாப்பிட்டுடு” என மஞ்சு சுவேதாவை திட்டிவிட்டு கிளம்பினாள்.

“ஏய் ஏண்டி ஒழுங்கா சாப்புட மாட்டியா” இது சுகு.

அவள் அவனை பார்த்தாள். “நல்லா தெம்பா சாப்புட்டாதானே அடுத்து அபின் அது இதுன்னு சாப்புடலாம்” என திட்டினான்.

அவள் அவனை பார்க்க முடியாமல் தலைகுணிந்து அமர்ந்தாள். அதற்குள் சந்துரு பிரட்டையும் பாலையும் எடுத்து வந்து ஊட்டிவிட்டான். அவள் எதுவுமே பேசாமல் சாப்பிட்டாள்.

“ஏன்டி என்ன இப்புடி படுத்துற உனக்கு என்னதான்டி பிரச்சனை” என்றான். அவள் அவனது கைக்குள் தன் கையை கொடுத்தாள். அவன் பற்றிகொண்டான்.

இருவரது கண்களும் ஒன்றின் அழகை ஒன்று ரசித்தன. சுவேதாவின் கண்களில் நீர் வரவே சுகுவின் கண்களும் அதை பிரதியெடுத்தன.

அவன் அவளது கண்களை துடைத்துவிட்டான் “எதாவது கேட்டா சின்னபுள்ள மாதிரி அழவேண்டியது” என்றான். அவள் அவனது கண்களை துடைத்தாள். “சரி சாப்பிடு” என ஊட்டினான்.

“இல்லடா போதும்” என்றாள்.

அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள். “இங்க பாரு சுவேதா நான் கஷ்டபடுவேன்னு நீ என்கிட்ட எதையோ மறைக்குற எதுனாலும் சொல்லு” என்றான்.

அவள் அவன் முகத்தை பார்த்தாள் அதில் உண்மை இருந்தது. அவள் மனதில் ‘என்ன பத்தி சொல்லி யாரையும் கஷேடபடுத்த கூடாதுனுதான் போதையால கொஞ்சநேரம் மறகக் முயற்ச்சி பன்றேன் ஆனா நீ கேக்குற. யாரையுமே கஷ்டபடுத்தகூடாதுன்னும்போது உன்ன எப்புடிடா’ என பார்த்தாள்.

இருவரும் அப்படியே இருக்க கதவு தட்டும் சத்தம் கேட்டது “டேய் கதவ தொற” இது சந்துரு.

கதவு மூடாமல்தான் இருந்தது. “தொறந்து தான்டா இருக்கு உள்ள வா” என்று கூறு விலகி அமர்ந்தான் கையில் ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டான்.

சுவேதாவோ அரை டம்ளர் பாலை எடுத்து கையில் வைத்துகொண்டாள்.
உள்ளே வந்த சந்துரு “சரி போகலாம்டா” என கூற நால்வரும் கிளம்பினர். மஞ்சுவும் சந்துருவும் முன்னே நடக்க வேறு வழியில்லாமல் சுகுதான் அவளை கைதாங்கலாக அழைத்து வந்தான்.

காரில், “மஞ்சு சுவேதாவோட வீடு எங்க?! ரொம்ப இருட்டாகிடுச்சு போய் விட்டுட்டு வந்துடலாம்” என்றான் சந்துரு. இந்த முறை சாரதி சந்துரு. சுகு சுவேதாவின் அருகில் இடமாற்றம் செய்யபட்டிருந்தான்.

இருவரும் ஒருவரை ஒருவர் தொடாமல் அமர்ந்திருதனர். வீடு என்ற வார்த்தையை கேட்டவுடன் “மஞ்சு வீட்டுக்கு வேணாம்டி ப்ளீஸ்” என்றாள் அவளது உடலில் நடுக்கம் இருந்தது அது காரினால் ஏற்பட்ட அதிர்வு இல்லை.

“ம்ம் சரிடி என் ரூம்க்கு போகலாம்! சந்துரு என் ரும் தெரியும்ல அங்க வண்டிய விடு” என்று வண்டி மஞ்சுவின் ருமுக்கு சென்றது. அங்க சில தோழிகள் சுவேதாவை வரவேற்றன. சுவேதா போகும்போது ஜாக்கிரதை டி என கண்ணாலேயே சொன்னான் சுகு.

பின் இருவரும் கிளம்பி சென்றனர் தங்கள் இல்லத்திற்கு.

மறுநாள் காலை விடிய மஞ்சுவும் சுவேதாவும் மஞ்சள் நிற சுடிதார் அணிந்திருந்தனர். சுவேதா மிகவும் அழகாக இருந்தாள். அது மஞ்சுவின் சுடிதார் என்பதால் மேலும் அழகாக இருந்தது.

காலையில் ஹோம்க்கு செல்வதற்காகதான் இந்த ஏற்பாடு “என்ன சுவேதா புதுசா சுடிதார்” என்றான் சுகு அவளிடமிருந்து கண்களை விலக்க முடியாமல்.

“ஆமா இவ வேற என்ன வச்சுருக்கா?! ஒன்லி சுடிதார்தான்” இது சுவேதா.

“இதுல நீ அழகாதான இருக்க இனிமே சுடிதார்தான் சரியா” என காதல் ஆணை பிறப்பித்தான் சுகு. அது அவரகளுக்கு மட்டும்தான் தெரியும் என நினைத்திருந்தனர். அதை கவனித்த சந்துரு வும் மஞ்சுவும் ஏளன சிரிப்பு வீசினர்.

ஒருவழியாக மகாத்மா இல்லம் என பலகையிடபட்ட இடத்தை அடைந்தனர். அங்கு ஒரு சன்முகத்தின் வயதையொட்டிய ஒருவர் வந்து “நான் தனஞ்செயன் உங்களபத்தி டாக்டர் சொன்னாருப்பா உங்க அப்பா இங்க நிறைய பொருளுதவி பன்னிருக்காங்க” என சந்துருவை பார்த்து சிரித்தார்.

தன் தந்தையை எண்ணும்போது சந்துருவுக்கு வியப்பாக இருந்தது.

“சார் இது.!” என சந்துரு கூறும்போதே “இவங்கு சுவேதா இவங்க மஞ்சுளா இவரு சுகுமார் கரெக்டா! டாக்டர் என்கிட்ட நேத்தே ஃபோன் பன்னி சொல்லிட்டாரு” அப்போது ஒரு அழகான பெண் அங்கு வந்தாள். அவளது கால்கள் ஒரு இடத்தில் நிற்காமல் நாட்டியம் ஆடியது. ஹோமில் உள்ள எல்லா முதியவர்களையும் பார்த்துகொள்கிறாள் அல்லவா அதனால் அப்படி.

“இது என் பொண்ணு எழிலரசி” என கூறும்போதே அவள் வணக்கம் வைத்தாள்.

“நல்லா பொம்மை மாதிரி அழகா இருக்கீங்கக்கா ரெண்டு பேரும்” என இரு மஞ்சள் தோழிகளையும் கூறினாள். “அண்ணா அப்பா ஏன் இப்போல்லாம் இங்க வரமாட்டேங்குறாங்க அடுத்த தடவை வரலைனா அவங்க அனுப்புற காசு ரிட்டன் பன்னிடுவேன்” என சந்துருவிடம் உரிமையாக சண்டை போட்டாள். பின்ன சன்முகம் எங்கு சென்றாலும் பாடும் புராணங்களில் சந்துருதான் பிள்ளையார் சுழி.

“அப்போ நான் வந்தா ஏத்துக்மாட்டியா தங்கச்சி” என்றான் சந்துரு பதிலுக்கு.
அனைவரும் சிரித்தனர். சந்துரு எழிலரசியை முதலில் பார்த்த நாள் அன்றுதான்.

அவளது அந்த சிறிய கண்களும் நாட்டியமாடும் கால்களும் வேடிக்கையான பேச்சும் நினைவில் சந்துருவுக்கு என்றுமே அகழாதவை

அந்த தருணத்தை அசைபோடும் போதே சந்துருவின் கைபேசி ஒலித்தது. “சொல்லுடா சுகு என்ன ஆச்சு”

“டேய் அவளோட பெயர் ஜான்சிடா அப்புறம் சேகர்னு ஒரு பேரும் காட்டுதுடா வேற ஹின்ட் இல்லடா அதுக்குள்ள என் லேப்டாப் யாரோ ஹேக் பன்னிட்டாங்கடா” என்றான்

ஒரு மூன்றாவது குரல் கேட்டது “வெல்டன் பாய்ஸ் பரவாயில்லையே சீக்கிரம் கண்டுபிடிச்சுட்டீங்களே ஆமா நான் ஜான்சி என் தம்பி சேகர். இப்போ அது முக்கியம் இல்லை இங்க உங்க ரெண்டு பேருக்கும் புடிச்ச ஒரு உயிர் இருக்கு அதுக்கு சுவேதானு பெயர். உனக்கு திருமனபரிசா அவளை பார்சல் பன்னிடுறேன் சந்துரு” என துண்டிக்கபடவே.

“ஏய் சுவேதாமேல கை பட்டது உன் தலைய எடுத்துட்டு வேண்டி”என சுகு புலம்பிகொண்டிருந்தான்.

“சுகு கோபபடாம யோசிடா” என்றான் ச்நதுரு “ம்ம் கரெக்ட்தான் மச்சி நீ வை” என இனைப்பை துண்டித்தனர்.

மறுநாள் விடியலுடன் அன்பின் வீட்டில் கல்யாணபந்தல் போடும் வேலை துவங்கியது.

-தொடரும்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 32ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 32

32 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன் ஆதர்ஷ் அமைதியாக இருந்தான். ” அப்டினா நான்தான் புரிஞ்சுக்காம எல்லாத்தையும் இழந்துட்டேனு சொல்றியா?” என “இல்லை ஆதவ், எமோஷனல் பீலிங்ஸ் எல்லாருக்குமே பொதுவானதுதான். எல்லா நேரத்துலையும் நம்மளால ப்ராக்டிக்கால ஒத்துவருமா வராதான்னு யோசிச்சு யோசிச்சு

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 50ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 50

உனக்கென நான் 50 “என்னங்க அந்த பலசரக்கு கடையில வேலைக்கு ஆள் கேட்டாங்க அவங்களுக்கு வயசாகிருச்சுல அதான் முடியலையாம் கூடவே நானும் இருந்தா அவங்களுக்கும் பேச்சுதுனையா இருக்கும்ங்க நான் போகட்டுமா” என்று அனுமதி வாங்கிகொண்டிருந்தாள் காவேரி தன் கனவன் சன்முகத்திடம். “இல்லமா