உனக்கென நான் 36
சுகு தனக்குள் ஒளிந்திருந்த கணினி திறமையால் இனையத்தில் சலித்தெடுத்துகொண்டிருந்தான் அந்த மர்ம பெண்ணை.
அன்பரசிக்கோ அந்த காரின் வழியே சைகை செய்த நியிபகமும் ஜெனியின் மரணமும் கண்ணில் வந்து சென்றது. அந்த கையில் இருந்தது ஓர் மோதிரம் அது அன்பரசியின் கண்ணில் வந்தது. நிச்சயம் அது ஒரு பெண்ணின் கைதான். அவளை பலிவாங்க வேண்டும் என்று அன்பரசி எண்ணியது அனைவருக்கும் ஏற்படும் ஓர் இயல்பான எண்ணம்தானே.
சந்துருவின் மனமோ வேறுவிதமாக சென்றது. ‘அவள் ஏன் எழிலை கொண்றாள்?!. இப்போது சுவேதாவின் பெயரையும் கூறுகிறாள். என் மீது கோபம் என்றால் நேரடியாக என்னை கொண்று விடலாமே. நான் அன்பு செலுத்தும் அனைவரையும் ஏன் கொள்கிறாள். இப்போது அன்பரசியும்!’ என நினைவுகளும் அடைத்துகொண்டது அவனுக்கு.
அவள் யார் என அறிய தன் மூளைக்குள் பின்னோக்கி சென்று பார்த்தான். அன்று சுவேதா சந்துருவிடம் கேட்டாள். “சந்துரு உங்க அம்மாவ ஒருத்தன் அடிச்சு கொண்ணா நீ என்ன பன்னுவ?!”
அதற்கு சந்துருவிடம் பதில் இல்லை. சுவேதாவோ தன் மனதில் இருக்கும் பாரத்தை சந்துருவிடம் இறக்கலாம் என நினைத்தாள் போலும்.
அவளுக்கு மூச்சு சீராக இல்லை. சந்துரு அளளுக்கு ஆறுதல் சொல்ல அவளது கையில் கை வைத்தான். அவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
சுவேதாவின் ஏழு வயது அவளது தாய் அபிநயா அழகான பெண் நடிகையாகும் கனவுடன் பட்டினம் வந்தவர். வாய்ப்புகள் இல்லை அப்போது அவளுக்கு ஆதரவு தனசேகர் மட்டுமே. அவளுக்கு வேண்டிய பணங்களை வாரி இறைத்தார். ஆனால் இறுதியாக அவர் கேட்டது அபநயாவின் வாழ்கையை புரட்டிபோட்டது.
“ஹலோ மேடம் உங்களுக்கு நான் எவ்வளவு செலவு பன்னிருக்கேன் தெரியுமா?!” என்ற வார்த்தை தனசேகரிடம் இருந்து வந்து விழுந்தது. அபிநயா திகைத்து நின்றாள். அது தனசேகர் மீது அபிநயாவிற்கு காதல் பூத்துகொண்டிருந்த நேரம்.
“என்னங்க சொல்றீங்க?!”
“இல்ல நான் ஏன் உனக்கு செலவு பன்றேன்னு தெரியுமா?!”
“நான் நல்ல நடிகையா ஆகனும்னுதான்”
“ஓ கங்ராட்ஸ் மேடம்”
“என்ன இன்னைக்கு ஒரு மாதிரி பேசறீங்க குடிச்சிருக்கீங்களா” என்றாள்.
“ஆமாங்க மேடம் ஆமா இந்த வீட்டோட விலை என்ன தெரியுமா?!” என்றான்.
அபி முழித்துகொண்டே நின்றாள்.
“சரி விடு நான் நேராகவே சொல்லிடுறேன் எனக்கு நீ வேணும்”
“என்னங்க பேசறீங்க போய் தூங்குங்க காலையில பேசிக்கலாம்” என அவனை சமாதானம் செய்ய முயன்றார்.
ஆனால் அந்த மதுவின் ஆட்டம் மாதுவை ஆட்கொள்ள நினைத்தது. அவன் அவளை தூக்கிகொண்டு மெத்தையில் கிடத்தினான்.
அவன் மீதிருந்த காதலால் அபிநயாவும் எதுவும் தடுக்கவில்லை. எப்படியும் கல்யானத்துக்கு பிறகு நடக்கவேண்டியதுதானே என்று விட்டுவிட்டாள்.
இரவில் விளக்கு வெளிச்சம் மிதமாக இருக்க அவன் இதயத்தில் கைவைத்து கொண்டு கேட்டாள். “ஏங்க என்ன அவ்வளவு பிடிக்குமா”
அவன் எதுவும் பேசவில்லை.
“நானும் உங்கள காதலிச்சேன் அத சொல்றதுக்கு முன்னாடியே நீங்க இப்புடி பன்னிட்டீங்க. சரி விடுங்க கல்யாணத்துக்கு அப்புறம் நடக்குறதுதான” என்றாள்.
எரிச்சலடைந்தான் அவன் “ப்ச்ச் இங்க பாரு அபி! என் பொண்டாட்டி போனவாரம் தான் செத்துபோனா”
“என்னங்க சொல்றீங்க” அபியின் இதயத்தில் ஓர் அடி.
“ஆமாடி நான்தான் கொண்ணேன்!” அபி அவன்மீதிருந்து கையை எடுத்தாள் போர்வையுடன் எழுந்து அமர்ந்தாள்.
“அப்போ என்ன ஏன் ஏமாத்துனீங்க” என்று அழுதாள்.
தனசேகர் சிரித்தான்.
“என்ன கல்யாணம் பன்னிகோங்க ப்ளீஸ்” என்று அழுதாள்.
“ஹலோ உன்ன கட்டிகிட்டு என்ன பிச்சை எடுக்க சொல்றியா என் பொண்டாட்டியோட தங்கச்சி ஒருத்தி இருக்கா அவள்தான் கல்யாணம் பன்னபோறேன். அவள் கட்டுனாதான் எனக்கு சொத்து கிடைக்கும். என் மாமனுக்கு இருந்ததே இரண்டு பொண்ணுங்கதான். மாமனையும் கொண்ணாச்சு என் பொண்டாட்டியையும் கொண்ணாச்சு இப்போ சொத்துக்கு வாரிசு அவ தங்கச்சி மட்டும்தான் அவள நான் கட்டிகிட்டா எல்லாம் ஓவர்டி. அத விட்டுட்டு உன்ன கட்டிகிட நான் என்ன முட்டாளா?” என்று சிரித்தான்.
அபியோ அழுதுகெண்டே “அப்புறம் எங்க என்னோட வாழ்கைய அழிச்சீங்க?!” என்று அழுதாள்.
“நீ ஏன்டி அழாகா பொறந்த அது உன் தப்பு எனக்கு உன் உடம்பு வேணும் அவ்வளவுதான். நீ எனக்கு கிளி மாதிரிடி அதான் இந்த மாளிகைய உனக்கு கூண்டாக செஞ்சு உன்ன வச்சுருக்கேன். ஆமா இன்னொரு விசயம் மறந்துட்டேன் நான் சொல்லாம எவனும் உனக்கு சினிமால சான்ஸ் குடுக்க மாட்டான்டி. நீ எப்போவுமே என்னோட கிளிதான்” என கன்னத்தை கிள்ளிவிட்டு எழுந்து நடந்தான். கட்டிலில் தன் வாழ்கையை இழந்து அழதுகொண்டிருந்தாள் அபிநயா.
அவளது சிறை வாழ்கையில் அவளுக்கு சிறிது மகிழ்ச்சு அளிக்க பிறந்தாள் சுவேதா.
அபி கர்பமாக இருந்தபோது அவளை அனுபவிக்க முடியாமல் பெல்டால் தோலை உறித்துவிட்டான். ஆனாலும் தன் குழந்தைக்காக அதை பொறுத்துகொண்டாள். இறுதியாக வீட்டின் குளியலறையில் நந்தினியின் உதவியுடன் சுவேதா அவதரித்தாள்.
அந்த குழந்தையை பார்த்ததும் தான் பட்ட கஷ்டங்கள் மறைந்து கண்ணில் ஓர் மகிழ்ச்சி தெரிந்தது.
ஆனாலும் தனசேகர் அங்கு வந்தால் குழந்தை நந்தினியின் கையில்தான் இருக்கும். பள்ளி செல்லும் வயதில் சுவேதா தனி அறையிலேயே உறங்குவாள். பல கனவுகள் அவளை வாட்டி எடுக்கும். அவள் அழுதுகொண்டே போர்வையை இறுக மூடிக்கொண்டு உறங்குவாள்.
தனசேகர் வீட்டிற்கு வராத நாட்களில் அபியோ சுவேதாவின் தலையை வருடிகொடுத்து கண்ணீருடன் பார்த்துக்கொண்டிருப்பாள்.
“சுவேதா நல்லா படிச்சு வெளிநாட்டுக்கு போகனும் சரியா” இதுதான் அபியின் அறிவுறை தனசேகரின் நடத்தையால் தாய்நாட்டையே வெறுத்திருந்தாள் அபி. “போம்மா நான் உன்கூட தான் இருப்பேன்” என கட்டிகொள்வாள் சுவேதா அந்த ஏழு அகவையில் அவளை அணைத்துகொண்டு கண்ணீருடன் அழுவாள் அபி.
“அம்மா அழாத நான் ஸ்கூலுக்கு போயிட்டு வரும்போது உனக்கு சாக்லெட் வாங்கிட்டு வாரேன்” என்று கண்ணீரை தன் குழந்தை துடைக்க அப்போது முகத்தில் இருந்த சாட்டை காயத்தின் மீது கை படவே.
“ஸ்ஸ்ஸ் ” என்றாள் அபி.
“என்னமா புன்னு இருக்கு” என்று பார்த்தாள்.
“அது நான் ரூம் கதவ தொறந்தேனா அப்போ கன்னத்துல இடிச்சிருச்சுடா” என்று சமாளித்தாள்.
அபியின் உதட்டை தடவியவள் “இங்கேயும் அடி பட்டுருக்குமா” என கூறினாள். பின் சுற்றிலும் பார்க்க கை முதுகு என தெரிந்த இடங்களில் எல்லாம் காயம் இருந்தது.
சுவேதா அழுதுகொண்டே “அம்மா வலிக்குதா!” என்றாள். அபியும் கண்ணீருடன் “இல்லடா அம்மாக்கு வலிக்காது” இதயத்தில் இருக்கும் வலியை விடவா அது பெரியது என நினைத்துகொண்டு கூறினாள்.
“அம்மா இதெல்லாம் எப்பமா அடிபட்டுச்சு” என சீருடை அணிந்த சிறுமியாக கேட்டாள்.
“அம்மா படியில இருந்து தவறி விழுந்துட்டேன்டா குட்டி. வேணும்னா நந்தினி அம்மாகிட்ட கேளு” என்று சிரிக்க கையில் பையுடன் நந்தினி நின்றிருந்தாள்.
“இனிமே பாத்து நடங்கம்மா!” என கூறிவிட்டு நந்தினியை பார்த்தவள் “அம்மாக்கு வலிக்கும் சித்தி ஏதாவது மருந்து இருக்கா” என்று கேட்டாள்.
நத்தினியோ சோகமாக “நான் மருந்து போட்டுவிடுறேன் நீங்க சமத்தா ஸ்கூலுக்கு போவீங்களாம்” என வழியனுப்பி வைக்க “டாடா” என மறைந்தாள் குட்டி தேவதை சுவேதா.
அவள் சென்றதும் மொத்த அழுகையும் வெளிவர நிலைகுலைந்து சரிந்தாள் அபி. நந்தினி அவளை தாங்கிபிடித்து “என்ன அக்கா இது குழந்தை முன்னாடி அழுதுகிட்டு வாங்க சாப்பிடுங்க” என்றாள்.
“இல்லமா இந்த காயம் வலிக்கும்னு அவளுக்கு தெரியுது. எப்புடி வந்துச்சுனு கேக்குறா நான் என்ன சொல்றது?!” என அழுதாள்.
“சரி விடுங்கக்கா சுவேதா முன்னாடி அழாதீங்க அவ மனசு பாதிச்சிடும்” என்று ஒரு வழியாக சமாதானம் முடிந்தது.
அன்று இரவு அந்த சம்பவம் அறங்கேறியது. சுவேதா தன் அறையில் தனிமையில் உறங்கிகொண்டிருந்தாள். அவள் கனவில் வந்தது அந்த குண்டு மிஸ் “ஏய் சுவேதா என்னடி சோகமா இருக்க நாளைக்கு வரும்போது உங்க அம்மா இல்லைனா அப்பாவ கூட்டிட்டு வா?” என்று திரும்ப திரும்ப வந்தது கூடவே அந்த டீச்சர் கையில் பிரம்பால் அடித்ததும் தோன்றி வலித்தது.
மற்ற ஆசிரியர் என்றால் நந்தினியை அழைத்துசென்று சமாளித்து விடலாம் ஆனால் இந்த குண்டு மிஸ் கிட்ட எதுவும் பன்ன முடியாது. நாளைக்கு கூட்டிட்டு போகலைனா கை சிவநதுடும். பயத்தில் எழுந்து அமர்ந்தாள். வியர்வை நெற்றியில் இருந்து வழிந்து கழுத்தை அடைந்தது.
கடிகாரமோ மணி இரண்டை காட்டியது நல்ல இருள் சூழ்ந்திருந்தது. சுவேதாவுக்கு தன் அன்னை மடியில் உறங்க வேண்டும் போல இருந்தது. மெதுவாக தன் அறை கதவை திறந்தாள். அவள் கையில் அந்த டெடிபியர் அதையும் இழுத்துக்கொண்டே மாடிமீது ஏறினாள்.
தன் தாயின் அறையை பார்த்தாள் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன ஆனால் படிகள் இருளாக இருந்தது.
தன் தாய் தனக்காக விழித்திருக்கிறாள் என எண்ணி அந்த வெளிச்சத்தை நோக்கி வேகமாக முன்னேறினாள். அந்த கதவின் அருகில் நின்றாள்.
‘நீ தான எங்க அம்மாவோட கன்னத்துல இடிச்ச நான் வளந்ததுக்கு அப்புறம் உன்ன எரிச்சுடுறேன் இரு’ என மனதுக்குள் பேசிகொண்டே அந்த கதவை தள்ளினாள். அது பூட்டியிருந்தது.
சாவி துவாரங்களின் வழியே கண்களின் ஒளியை செலுத்தினாள். ஆனால் சுவேதாவின் கண்ணில் நீர் நிரம்பிவிட்டது.
அங்கே அபியின் உடலை விளக்கொளி ரசிக்கும்படி அவள் அந்த கட்டிலில் கட்டிவைக்கபட்டிருந்தாள். உதட்டில் காலையில் இருந்த இடத்தில் இருந்து ரத்தம் வடிந்து கொண்டிருந்தது. சிகையோ கலைக்கபட்டிருந்தது.
வெளியில் சுவேதா பார்த்தகாயங்களைவிட அதிக காயங்கள் இருந்தன. அருகில் தன் தந்தை கையில் சாட்டையுடன் தன் தாயை அடித்துகொண்டிருந்தான். அபி சுவேதாவை என்றுமே தனசேகரிடம் அனுப்பியது இல்லை. தூரத்தில் இருந்து பார்த்திருக்கிறாள் அவ்வளவுதான். தனசேகர் வந்தவுடன் சுவேதா தன் அறைக்கு சென்று தாழிட்டு கொள்ள வேண்டும் இதுதான் அபியின் உத்தரவு.
ஆனால் ஏன் இன்று வெளியே வந்தாளே தெரியவில்லை. அவள் பார்த்துகொண்டிருக்கும்போதே சாட்டையால் தன் தாய்க்கு அடி விழுந்தது. சுவேதாவுக்கும் அந்த வலியை உணரமுடிந்தது. கண்ணிலிருந்த நீர் கழுத்திலிருந்த வியர்வை துளிகளுடன் கலந்தது.
“ஏண்டி அந்த குட்டி பிசாசு வேணாம்னு சொன்னேன் நீ கேட்டியாடி?!” என மறுபடியும் ஒரு அடி அடித்தான்.
“இங்க பாருங்க நீங்க என்ன என்னவேணாலூம் பன்னீகோங்க சுவேதா நல்லா வாழனும் ப்ளீஸ்” என அழுதாள்.
“பாக்கலாம்டி அந்த பிசாச ரூம்குள்ளேயே நீ எத்தனை நாள்தான் ஒளிச்சு வைக்குறேன்னு. அதோட கழுத்தை திருகி நான் கடல்ல வீசுறேன்டி” என சாட்டையால் அடிக்க அது அபியின் உதட்டில் ஏற்கனவே காயம் இருந்த இடத்தில் பட்டது.
“அம்மா அம்மா..” என அழ ஆரம்பித்தாள்.
சட்டென திரும்பிய தனசேகர் கதவை திறக்க குட்டியாக இருந்த சுவேதா காலில் புகுந்து ஓடினாள்.
அங்கே கிடந்த தாயின் புடவையை எடுத்து அபியை மறைத்தாள். அடுத்து அவளது கட்டுகளை அவிழ்க்க முயன்றாள். பிஞ்சு கையால் அது முடியவில்லை.
“அம்மா வலிக்குதா” என அழுதுகொண்டே ரத்தத்தை துடைத்தாள். அதற்குள் தனசேகர் நெருங்கவே.
“சுவேதா ரூம்குள்ள ஓடுமா வெளியே வராத ஓடு” எனாறாள்.
“போம்மா நானும் உன்கூடயே இருக்கேன்” என்று அழுதாள். அந்த நொடி சாட்டை சுவேதாவின் முதுகையும் பதம்பார்த்தது. “அய்யோ அம்மா ” என்று அலறீனாள்.
தனசேகர் தன் ஒற்றை கையில் சுவேதாவை தூக்கினான். அவளோ அவனது கையை கடித்தாள்.
வலியில் அவன் விடவே பொத்தென விழுந்து தாயை பார்த்தாள்.
“அம்மா சொன்னா கேப்பியா மாட்டியா ஓடுடி” என்றாள். உடனே ஓடிசென்று தாழிட்டு கொண்டாள்.
அந்த டெடிபியர் மட்டும் தன் தாயின் அறையை காவல்காத்துகெண்டிருந்தது.
“ஏண்டி ஆத்தாலும் புள்ளையும் சேர்ந்து நாடகமா ஆடுறீங்க” என்ற வசனத்தை தொடர்ந்து சாட்டையின் ஓசை பலமாக சுவேதாவின் அறையை அடைந்தது.
அவள் இரவெல்லாம் உறங்காமல் அழுதுகொண்டே இருந்தாள். அவளது வாயில் வந்த வார்த்தை “அம்மாவுக்கு வலிக்கும் அம்மா அம்மா வலிக்கும் மா” என்பதை மந்திரம்போல் சொல்லிகொண்டிருந்தாள் சுவேதாவின் அறை கதவுக்கு பின்னால் இருந்து.
இரவுமுழுவதும் அந்த அடிகளின் ஓசையை கேட்டுகொண்டும் ஒருதுளிகூட கண்கள் மூடவில்லை. கடிகாரமுள்ளும் சுவேதாவை பார்த்துக்கொண்டே முன்னேறியது. காதை உண்ணிப்பாக வைத்திருந்தாள். காலை அறு மணி அளவில் கதவு திறக்கும் சத்தம் அதை தொடர்ந்து காலடி சத்தம். பிறகு கார் கிளம்பும் சத்தம்.
கதவை திறந்துகொண்டு ஓடினாள். அந்த டெடிபியர் அவளது காலில் மிதிபட்டது. கட்டிலில் இருந்து போர்வையை எடுத்து தாயை மூடினாள். பின் தன் பால்பற்களால் அந்த கயிற்றை அவிழ்த்தாள். இது நந்தினி என்றும் செய்வது. ஆனால் தன் மகள் வருவாள் என சிறிதும் எதிர்பார்க்கவில்லை.
கண்ணில் நீர் ஓட சுவேதாவை கட்டி அணைத்து முத்தமிட்டாள் அபி. அவளது ரத்தம் சுவேதாவின் கன்னத்தில் ஒட்டியது.
“அம்மாக்கு வலிக்கும் அம்மா அம்மா” மீண்டும் அதே சொல்லிகொண்டிருந்தாள்.
சந்துருவிடம் பேசும்போதும் அதே கூறினாள். “அம்மாக்கு வலிக்கும் சந்துரு அம்மா அம்மா வலிக்கும்” அவள் உடலில் வித்தியாசம் தெரிந்தது.
அவள் சுயநினைவில் இல்லை. “அம்மா அம்மா வலிக்குதாம்மா” என்றாள். அவள் கையிலிருந்த அபிநயாவின் புகைப்படம் கீழே விழுந்தது. சுவேதாவும் அந்த இருக்கையிலிருந்து கீழே விழுந்தாள். சந்துருவின் கைகளில் இருந்து விடுவிக்க பட்டாள்.
கீழே விழுந்தவளின் உடலில் உதறல் ஏற்பட்டது. சுற்றிலும் பார்த்தான் சந்துரு. அருகில் இருந்த ஒரு இரும்பு நாற்காலியை பிடிமானமாக கொடுத்தான். வலிப்பு நிற்கவில்லை.
சந்துருவின் கைபேசி பதறியது. “ஏய் சந்துரு எங்கடா இருக்க இன்னும் செஸ் பில்டிங்க்ல இருந்து வரலையா மஞ்சு சொன்னா?”
“சுகு சீக்கிரம் இங்க வாடா எமர்ஜென்சி சுவேதாவுக்கு வலிப்பு வந்துடுச்சு”
சுகுவும் மஞ்சுவும் அந்த கட்டிடத்தை நோக்கி ஓட துடங்கினார்.
-தொடரும்.