உனக்கென நான் 28
ராஜேஷை பார்த்த அன்பரசியோ ஓடினாள். “ஏய் சின்ன புள்ளைங்கள மட்டும்தான் ரேகிங்க பன்னுவியா” என ராஜேஷ் சிரித்தான்.
அதற்குள் எதிர்புறமிருந்து ஜெனி வந்தாள். ஓட முயன்ற அன்பரசியை பிடித்தாள் ஜெனி. “ஏன்டி ஓடிக்கிட்டு இருக்க?!”
திரும்பி பார்க்க ராஜேஷ் நின்றிருந்தான். “என்னடா லவ்பன்ற பொண்ணுகிட்ட அராஜகம் பன்றியா” ஜெனி சிரித்தாள்.
“அட ஏன்மா நீ வேற நான் அராஜகம் பன்றேனா இல்ல இவ பன்றாளானு கேளு” என அன்பரசியின் பக்கம் தராசை கீழிறக்கினான்.
“அப்புடி என்னடி பன்ன?” என ஜெனி கேட்கவே “நான் எதுவும் பன்னலடி” என விழித்தாள். அதற்குள் ராஜேஷ் “ஆமா இவ சின்ன குழந்தை வாயில விரல் வச்சா கூட கடிக்க தெரியாது. ஜுனியர் பொண்ணுங்கள நிறுத்தி வச்சு ரேகிங் பன்னிகிட்டு இருக்கா அதுலையும் அந்த பொண்ணுங்களோட லவ் மேட்டர் தான் கேப்பாளாம்”
“டேய் இதுல என்னடா இருக்க ரேகிங் நாரமல்தான” என ஜெனி முடித்தாள். “நானும் அதை தப்பு சொல்லல என்ன ரேகிங் பன்னுவானு ஒரு ஆசையில வந்தேன் ஆனா இவ ஓடிட்டா” என ராஜேஷ் உதட்டை பிதுக்கினான்.
“ஏன்டி ரேகிங் தான சும்மா பன்னிவிடுடி” ஜெனியின் செல்ல அதட்டல். “இவன நம்பாத ஜெனி ரேகிங்னு சொல்லிட்டு முத்தம் கொட்க்க வருவான் அதான் ஓடுரேன்” அன்பரசி தன் மயில் விழிகளை சுருக்கினாள்.
“உங்கள திருத்த என்னால முடியாதுப்பா இது உங்க பிரச்சனை இதை நீங்களே பாத்துக்கோங்க என்ன ஆள விடுங்க” ஜெனி நழுவ முயன்றாள். போகும்போது அன்பரசியை ராஜேஷிடம் ஒப்படைத்துவிட்டு சென்றாள்.
“ஏன்டி நம்ம லவ்பன்னி ஒரு வருசத்துக்கு மேல ஆச்சு எங்கயாவது என்கூட வெளியே வந்துருக்கியா இல்ல ஒருமணிநேரம் முழுசா பேசிருக்கியா அட்லீஸ்ட் ஃபோனலயாவது பேசிருக்கியா” என அவளை பார்த்து கேட்டான்.
“வெளியே சுத்துரது போன்ல பேசுரது இதுதான் வவ்வா ராஜேஷ்” என அவனது விழியை பார்த்தாள். அவனும் அவளது விழியை பார்க்க இருவரது விழித்திரையும் விரிவடைந்தன.
“கண்டிப்பா அது லவ் இல்ல அன்பு ஆனா அதெல்லாம் காதலோட சுகமான தருனங்கள். எதிர்காலத்துல நம்மகூட வரப்போற நினைவுகள். அது நீ எனக்கு தரகூடாதா” என அன்பரசியின் ஒரு கையை தன் கையால் பற்றிக்கொண்டு விரலுக்கு சொடுக்கிட்டான்.
“நான்தான் என்னையே உனக்கு தரபோறேனே இந்த நினைவுகள்தான் உனக்கு முக்கியமா” என மற்றொரு கையையும் அவனுக்கு பரிசளித்தாள்.
“இன்னும் மூனு மாசம் தான் இருக்கு நம்ம காலேஜ் லைஃப் முடிய அதான் கேக்குறேன் எனக்கான உன் நேரத்தை குடுடி” என அவளது விழிகளை பார்த்து மோதிரவிரலில் சொடுக்கிட்டான்.
“ஏய் இன்னும் கொஞ்சநாள் தான்டா பெருத்து கோ” என சமாளித்தாள்.
“இங்க பாருடி நீ டீச்சர் ஆகனும்னு ஆசைபடுற ஆனா எனக்கு ஒரு டிகிரி வேணும் அதுக்காகத்தான் படிச்சேன் அப்புறம் எங்க அப்பாவோட பிஸினஸ்தான் ரன்பன்ன போறேன் அதனால்தான் சொல்றேன் வேலை பிஸில உன்ன பாக்க முடியாம போயிடுமோனு பயமா இருக்குடி” என சுண்டு விரலில் சொடுக்கிட்டான்.
“பயப்படாதடா எங்க வீட்டுல வந்து கேளுடா என் அப்பா ரொம்ப நல்லவர்டா இன்னொரு குழந்தை பெத்தா அன்ப பிரிக்கனும்னு எனக்காகவே வாழ்ந்துகிட்டு இருக்காரு கண்டிப்பா என் விருப்பத்துக்கு உறுதுனையாதான் இருப்பாரு”
“அது இல்ல அன்பு இப்போ எங்க அப்பா பிசினஸ் அவ்வளவு நல்லா போகலை நிறைய கடன் இருக்கு எனக்கும் ஒரு டீச்சர் ஆகனும்னு தான் ஆசை ஆனா என்ன பன்றது” என ராஜேஷின் குடும்ப சூழ்நிலை அவனது கண்ணில் வெளிப்படுத்தினான்.
முதல்முறையாக தன்னவன் தன் மனதின் துக்கமான பக்கத்தை வெளிகாட்டுகிறான். இதுவரை அன்பரசியை சிரிக்க வைக்கவேண்டும் என்றே முகத்தில் பொய் சிரிப்பினை உதிர்த்துகொண்டிருந்தான்போலும். ஆனால் இன்று அவனது விழியோரத்தில் நீர் வழிந்தது.
“ஏண்டா அழற” அனபரசியின் கண்களும் கலங்கியது. “அன்பு ஒரு ரெண்டு வருசம் பொறுத்துகோட அதுக்குள்ள நான் நல்ல நிலைக்கு என் குடும்பத்த கொண்டு வந்துட்டு உன்ன அதுல சேத்துகிறேன்” என அன்பரசியின் கன்னத்தில் கைகளை வைத்தான். அவளது கண்ணீர் ராஜேஷின் விரலை தடமாக எண்ணி வெள்ளமென ஓடியது.
“நான் காத்துருக்கேன்டா இந்த ஜென்மம் உனக்கு மட்டும்தான் இது உன்மேல் சத்தியம்” என அவனுக்கு வாக்களித்தாள்.
கண்கள் கலங்க ராஜேஷோ “நான் உன்ன கஷ்டபடுத்துறேனா?!”
“ஏய் ச்சீ ஏன்டா அப்புடி நினைக்குற அழாத ” என அவனது கண்களை துடைக்க இவனோ “நீ மட்டும் ஏண்டி அழற” என அவளது கண்களை துடைத்துவிட்டான். இன்னும் அழ கண்ணீர் நிறைய வேண்டும் என இறைவன் நினைத்திருப்பான் போலும். அந்த புயலும் வீச காத்திருந்தது.
அந்த சதுரங்க அறையில் சுவேதாவின் ஓசையால் திரும்பினான் சந்துரு. அவனருகில் வந்தவள் “உன்கிட்ட கொஞ்சம் பேசலாமா?!” என கேட்கவே சந்துருவின் இயல்பான குணம் “சரி” என தலையாட்ட வைத்தது.
அங்கிருந்த ஒரு மேஜையில் இருவரும் எதிர்எதிரே அமர்ந்தனர். சந்துருவோ கைகட்டி அமர்ந்தான் ஏளனமாக. சுவேதா தன் பையிலிருந்த போதைப்பொருட்களை எடுத்து மேஜை மீது வைத்தாள். சந்துரு அதிர்ந்துவிட்டான்.
“ஏய் என்ன இதெல்லாம்”
சுவேதா மேஜையில் தன் முகம் பதிக்க அவளது கூந்தல் அவளை மூடியது. சிறிதுநேரம் என்ன நடக்கிறது என்று புரியாதவன் அவளது உடல் குலுங்குவதை பார்த்து அழுகிறாள் என்பதை உணர்ந்தான்.
“ஏய் சுவேதா அழாத நான் மஞ்சுவுக்காகதான் அப்படி நடந்துகிட்டேன் நான் எல்லா பொண்ணுங்களுக்கும் பாதுகாப்பாதான் இருக்கும்னு நினைப்பேன் எதாவது தப்பா பேசிருந்தா மன்னிச்சிடு” என பெண் என்று பாராமல் கூட மன்னிப்புகேட்க அவன் தயங்கவில்லை.
சிறிதுநேரம் அவள் அழுதுவிட்டு எழுந்திருக்க அவளது முகத்தை பார்த்தான். அதில் அவளது வலி தெரிந்தது. அவனது முகத்தை பார்த்தவள் “உன் உணர்வ பகிர்ந்துகிறதுக்கு ஒரு உயிர் இந்த பூமில இல்லைனா என்ன பன்னுவ” என்றாள்.
“என்ன?” என்றான்.
“ஆமா என்னோட சந்தோஷத்தையும் துக்கத்தையும் பகிர்ந்துக்க இந்து உலகத்துல இந்த பவுடரை விட்டா எதுவும் இல்லை” என அந்த அபினை காட்டினாள்.
அதை அவள் வெளியே போட்டுவிட்டு தன்னிடம் பேசுவதால் அவளது நம்பிக்கைக்கு உரியவனாய் தன்னை நினைத்திருக்கிறாள் என்பதை உணர்ந்தான். உடனே அந்த போதை பொருட்களை கையில் எடுத்தான் அடுத்த நொடி அது குப்பையில் கிடந்தது.
“உனக்கு ஏன் யாரும் இல்லைனு நினைக்குற நான் இருக்கேன் உனக்கு என்ன பேசனும்னு தோனுனாலும் என்கிட்ட சொல்லு” என்று அவளுக்கு ஆறுதல் அளித்தான்.
அப்போது மேஜையின் மீதிருந்த அவனது கையில் தன் கையை வைத்தாள். இதுவே வேறு சூழ்நிலை என்றால் சந்துருவின் கை மிகவேகமாக அவன்பக்கம் வந்திருக்கும் ஆனால் இந்த சூழலில் அவனால் கையை எடுக்க முடியவில்லை. அவனது கையில் முகம் புதைத்து அழுதாள் சுவேதா.
அவளுக்குள் இத்தனை வருடமாக இருந்த மொத்த கவலைகளையும் சந்துருவிடம் கொட்டிவிடவேண்டும் என்று நினைத்தால் போலும்.
சந்துருவும் அமைதியாக இருந்தான். அவளாக கூறட்டும் என்று.
அந்த நாள் நினைவுகள் விமானத்தை ஊடுருவி இருவரது மூளையிலும் ஓடி கொண்டிருக்க சந்துருவின் விரல்களில் விரல் கோர்த்திருந்தாள் சுவேதா. விமானத்தில் யாரும் பார்த்துவிடுவார்கள் என்ற ஐயம் அவர்களுக்கு இல்லை.
சந்துருவை பார்த்த சுவேதா “அந்த நாள் திரும்ப வருமா” என்றாள். “இன்னும் மூனு நாளைக்கு நாம் அதைதான் வாழபோறோம்” என அவளை பார்த்து சிரித்தான். அவளும் சிரித்துகொண்டே சந்துருவின் தோளில் சாயவே விமானம் தரையிறங்கியது.
-தொடரும்.