Tamil Madhura கதைகள்,தொடர்கள் ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 24

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 24

உனக்கென நான் 24

பாட்டியின் முகத்தில் கோபம் இருந்தது அந்த கோபத்தின் காரணங்களாய் அரங்கேறிய சமபவங்கள் மாரியம்மாளின் மூளையில் சிதறி கிடந்தது.

பார்வதி போஸின் தந்தைவழி முறைப்பெண் ஆனால் மாரியம்மாளுக்கோ தன் அண்ணன் பெண் சென்பகத்தை திருமணம் செய்து வைக்கும் ஆசையில் இருந்தாள். விதி வலியது தான் போஸிற்கு என்னவோ தன் தாய்வழி சொந்தங்களின் மீது அவ்வளவு நாட்டம் இல்லை. பார்வதியின் குணமும் அழகும் போஸை ஈர்த்துகொள்ளவே திருமனத்தில் அறங்கேறி முடிந்தது. தன் மருமகள் மீது மாரியம்மாளுக்கு எப்போதும் சிறிது கசப்பு இருந்துவந்தது. ஆனால் பார்வதியும் தன்னால் முடிந்தவரை வேலைகளை செய்து வந்தாள்.

மாமியார் உடைத்தால் மண்சட்டி மருமகள் உடைத்தால் பொன்சட்டி என சொலவாடைக்கு ஏற்றார்போல் பார்வதி செய்யும் அனைத்துவேலைகளிலும் குற்றம் கண்டு கொண்டிருந்தார் மாரியம்மாள். தாயின் ஆசையை நிறைவேற்ற தடையாய் இருந்தவள் என்பதாலோ என்னவோ.

“என்னடி குழம்பு வச்சுருக்க ஒரு உப்புகூட ஒழுங்கா போடதெரியலை உன்னை யெல்லாம் என் பையன் எப்புடிதான் கல்யாணம் பன்னானோ அப்புடி என்னதான் கண்டான் உன்கிட்ட” மறுவார்த்தை பேசாமல் உப்பை கலக்கினாள் பார்வதி. “உப்பு போட சொன்னா மொத்தமா அள்ளி தட்டிடுறதா வேணும்னா அய்யாசாமி மாட்டுவண்டில போயி தூத்துகுடில ஒரு வண்டி உப்பு அள்ளிகிட்டு வந்து தட்டு” என திட்டினார்.

பார்வதியோ எதுவும் கூறாமல் மௌனமாக நின்றாள். “போடி போய் வேலைய பாரு இடிச்சு வச்ச புளிமாதிரி நிக்குற” என திட்டிமுடிய அமைதியாக சென்று சமையலறையில் தஞ்சம்புகுந்தாள்.

தன் மாமியார் பற்றி பார்வதி அறிந்ததுதான் அதிலும் போஸ்  “அம்மாவிடம் கொஞ்சம் அன்பா நடந்துக்கோ அப்பா இல்லாம வளத்தாங்க அப்போவும் சொந்தகாரங்க யாரும் நாங்க கஷ்டபட்டப்போ முன் வரல அதனால உங்க அப்பா மேல கோவமா இருக்காங்க; ஆனா நாங்க கொஞ்சம் நல்ல நிலைக்கு வந்ததும் எங்க தாய்மாமன் அம்மாகிட்ட பேச்சுவார்த்தை வச்சுகிட்டு எனக்கு அவங்க பொண்ண கட்டலாம்னு பார்த்தாங்க ஆனா எனக்கு உன்னதான் பிடிக்கும் அதான் உன்மேலயும் கோபபடுவாங்க கொஞ்சம் அனுசரிச்சு நடந்துக்கோ” என போஸ் கூறியிருந்தார். அதனால்தான் பார்வதி அமைதியாக இருந்தாள். அதிலும் பெரியவர்களை மதிக்கும் குணமும் இயல்பிலேயே உண்டு.

மாரியம்மாளும் கோபம் இருக்கும் இடத்தில்தான் குணமும் இருக்கும் என்பதுபோல தன் மருகமகளுக்காக “டேய் டவுன்ல போய் சுத்திட்டு வாரியே அவளையும் கூட்டிட்டு போய்ட்டு வாடா;”

“அவ தலையில ஒரு முழம் பூ வாங்கி வைக்ககூட உனக்கு நேரம் இல்லாம போச்சா”

“டேய் அவ உன்னை நம்பிதான் வந்துருக்கா சும்மா எப்பவும் போல ஊர்சுத்தாம சீக்கிரம் வீட்டுக்கு வந்துசேரு உனக்கு கல்யாணம் ஆகிறுச்சு நியாபகம் வச்சுக்கோ” என பார்வதிக்காக தன் மகனிடம் வாதிடவும் செய்வார். ஒரே மனவருத்தம் போஸின் இந்த முடிவுதான்.

மாமியார் உப்பிற்காக சண்டையிட்ட நேரம் “போஸ் போஸ்” என ஒரு குரல் கேட்க வெளியில் வந்தாள் பார்வதி. அங்கு சன்முகமும் காவேரியும் வந்து நின்றனர்.

“வாங்க அண்ணா வாங்க அண்ணி அவுக வெளிய போயிருக்காங்க” என கூறிகொண்டிருந்ததாள். “அங்க யாருகூடடி பேசிக்கிட்டு இருக்க வேலைய பாக்ககாம” என உள்ளே இருந்து மாமியாரின் குரல்.

“சண்முகம் அன்னா வந்திருக்காங்க அத்த” என பார்வதி குரல் கொடுத்தாள். “யாரு போஸோட பிரண்டுதான” என கேட்டார். “ஆமா அத்த” என முடித்தாள்.

மாரியம்மாள் மனதில் தோன்றும் எழுத்துகளை சங்கிதமாக மாற்றிவிடும் வாய் கொண்டவர். “ஆமா அவனுக்காதான இப்போ கல்யாணம் முடிஞ்சுதே அவன்தான” என திருவிளையாடல் துவங்கியது.

“நீங்க உள்ள வாங்கன்னா” என பார்வதி அழைத்துகொண்டிருக்க இருவரும் முன்னேறினர்.

“ஆமா அந்த பொண்ணுகூட அந்த *** ஜாதி பொண்ணுதான” என முடித்தார் மாமியார். காவேரியின் கால்கள் சிலையாக நின்றன கண்கள் கலங்கின.

காவேரியின் குடும்பம் செல்வத்தில் குறைவில்லை என்றாலும் ஜாதிகளின் அடிப்படையில் பின்தங்கியிருந்தது. “ஏம்பா சன்முகம் நம்ம ஜாதில உனக்கு பொண்ணே கிடைக்கலையா” என காவேரியின் காதில் படும்படியே பேசி சென்றவர்கள் பலர். அதனால்தான் தன் கணவனின் மதிப்பு குறையகூடாதென பல இடங்களில் அமைதியாகவே இருந்தாள். இருவருக்கும் இருந்த ஒரே அரவணைப்பு போஸும் பார்வதியும் மட்டுமே ஆனால் இன்று இந்த வார்த்தை காவேரியின் மனதை மேலும் காயபடுத்தியது.

அடுத்து என்ன சொல்லபோகிறார்கள் என்பதை காவேரியின் மனம் அசைபோட துவங்கியது அவள் பல இடங்களில் கேட்ட வாசகங்கள் அல்லவா எப்படி எதிரொலிக்காமல் இருக்கும் “தண்ணி குடுக்காதடி அவ கீழ் ஜாதி பொண்ணு; இவகூடலாம் பழகாத; வீட்டுகுள்ளலாம் கூட்டிகிட்டு வராதடி” என பல வாசகங்கள் காவேரியின் மனதில் இருந்தன. அதில் சிலவற்றை மாரியம்மாளின் வாயில் இருந்து வரும் என எதிர்பார்த்தாள் காவேரி. அதனால் கண்கள் கலங்கின. சன்முகம் அவளை தோளில் சாய்த்து கொண்டு “ஏய் அழாதடி இப்போ என்ன நடந்துருச்சு சின்னபுள்ளையாட்டம் அழாத” என சமாதானம் செய்தார். பார்வதியோ மதில்மேல் பூனையாக செய்வதறியாது நின்றிருந்தாள்.

சன்முகத்தின் தோளில் சாய்ந்து அழுது கொண்டிருந்த காவேரி “போலாங்க” என குரல் கொடுத்தாள் அது சன்முகத்திற்கு மட்டுமே கேட்டிருக்க முடியும். “சரி நீ அழாத” என சமாதானபடுத்திவிட்டு “சரிம்மா தங்கச்சி போஸ்கிட்ட எதுவும் சொல்லவேணாம் வருத்தபடுவான் நான் இன்னொரு நாள் வாரேன்” என வாசலில் இருந்தபடியே தன் மனைவியை அழைத்துக்கொண்டு நடந்தார். இருவரது முகத்திலும் கவலை தென்பட்டது. பார்வதியின் இதயத்தில் ஓர் வலியுணர்வு ஏற்பட்டது.

எதுவும் செய்யமுடியாமல் வீட்டினுள் நுழைந்தாள். “சன்முகம் எவ்வளவு நல்ல பையன் இவகிட்ட எப்புடி போய் மாட்டுனான்” என கேட்டாள் மாமியார். பனிமலையும் வெடிக்கும் அல்லவா வெடித்தாள் பார்வதி. “அத்த உங்களுக்கு இப்போ என்ன பிரச்சனை சும்மா எதாவது பேசிகிட்டே இருப்பீங்களா யாரு யாரு கட்டுன உங்களுக்கு என்ன?” என கிளம்பினாள்.

ஆனால் மாரியாம்மாளின் மனதில் அந்த கடைசி வார்த்தைகள் “உங்க பையன் என்ன கட்டுனதால உங்களுக்கு என்ன பிரச்சனை” என்பது போல பதிந்தது. வாய்க்கும் காதுக்கும் உள்ள தூரம் இதுதான்போல.

உடனே மாரியம்மாள் அழுதுகொண்டே “என் அண்ணன் பொன்னுனா இப்புடி பேசிருப்பாளா! கண்ட நாயெல்லாம் மருமகளா ஏத்துகிட்டேன்ல அதான்டி நான் பன்ன தப்பு எனக்கு இது தேவைதான் ” என கண்ணீரை துடைத்துகொண்டே சில புடவைகளை எடுத்து ஓர் பையில் வைத்தார்.

“அத்த அப்புடி நான் என்ன சொன்னேன்” என தன் மாமியாரை சமாதானப்படுத்த முயன்றார்.

“போதும்டி பொண்டாட்டி வந்ததும் ஆத்தால மறந்துட்டான்ல நான் இனிமே இங்க வரமாட்டேன். எனக்கு என் புருசன் வச்ச தென்னை மரம் இருக்கு தோட்டத்துல அங்கேயே போய் இருந்துகிறேன். இனி எனக்கு அதுங்கதான் புள்ளைங்க” என வேகமாக நடக்க “அத்த என்ன மன்னிச்சுடுங்க” என மறிக்க “நீ எந்த காட்டு சிறுக்கிடி என்ன அத்தனு கூப்புடுற இனி என்ன அப்புடி கூப்பிட்ட அவ்வளவுதான்” என கிளம்பிவிட்டார். சில கிழவிகள் அவரை சமாதானம் செய்வதுபோல “மருமக வந்தாலே இப்புடிதான்” என புரளி கிளம்பியது. பார்வதி அழுதுகொண்டே வீட்டினுள் சென்றுவிட்டார்.

சில நேரதுளிகள் கழித்து வந்த போஸ் “அம்மா எங்க” என கேட்க பார்வதி அழுதுகொண்டே அமர்ந்திருந்தாள். அதற்குள் சிலர் வந்து “உன் பொண்டாட்டிதான்பா அடிச்சு விரட்டிட்டா” என தன் பங்கினை ஆற்றினர். “எல்லாம் என் தலை எழுத்துடி உன்கிட்ட நான் படிச்சு படிச்சு சொன்னேன்ல” என பார்வதியிடம் ஆத்திரமாக பேசிவிட்டு தன் தாயை பார்க்க சென்றான் ஆனால் தாய் வரசம்மதிக்கவில்லை.

போஸும் தன் புதுமனைவியிடம் பேசாமலேயே இருந்தார் ஒருவாரகாலமாக. ஆனாலும் தன் தாய்க்கு தேவையான பணமும் மளிகை பொருட்களும் அண்ணாச்சி கடைமூலம் பயனித்துகொண்டிருக்கிறுது. அதை அண்ணாச்சியே கொடுப்பதை போல ஒரு மாய பிம்பம் ஏற்படுத்திகொண்டார் போஸ். இல்லை என்றாள் தன் தாய் நிச்சயம் மறுத்துவிடுவாள்.

தன் அன்பானவர்களின்மீது கோபம் இருந்தாள் அது மூன்றாவது  மனிதன்  மீது பாயும் என்பதைப்போல தன் மகனை பிரித்தவள் அந்த காவேரிதான் என்ற எண்ணம் படிப்படியாக வளர்ந்திருந்தது அந்த தனிமையில் மாரியம்மாவுக்கு.

அதன் எதிரொலிப்பாய்தான் சந்துரு பாதிக்கபட்டான். “எங்க உன் ஆத்தா என்னை கொல்ல சொல்லி அனுப்புனாளா?” என்று மீண்டும் கொட்டினாள் மாரியம்மாள் சந்துருவை பார்த்து.

“அவங்கள கார் அடிச்சிடுச்சு” என கண்ணீருடன் கூறினான் மாரியம்மாவுக்கு தூக்கிவாரி போட்டது. ஆனாலும் சந்துரு அடுத்த தாக்குதலையும் நிகழ்த்திவிட்டான்.
“பாட்டி அம்மா உங்ககிட்ட மன்னிப்பு கேட்க சொன்னாங்க” என கூறினான்.
“எதுக்குப்பா” என பாட்டியின் குரல் ததும்பியது. “தெரியலை ஒரு பாட்டி தோட்டத்துல இருப்பாங்க அதுக்கு நான்தான் காரணம் அவங்கள நீ பாத்தா சொல்ல சொன்னாங்க” என மழலை குரலில் முடித்தான்.

அத்துடன் பீரங்கியால் தகர்ந்த சுவர்போல மாரியம்மாளின் ஜாதி எண்ணம் தூள்தூளானது. கண்ணீருடன் சந்துருவை கட்டியனைத்தார் அவர்களுக்கு இடையே அரிசியும் மாட்டிகொண்டாள். “நான்தான்பா தப்பு பன்னேன் காவேரி ரொம்ப நல்லவபா நான்தான் கெட்டவ” என அழுதாள் மாரியம்மாள்.

“பாட்டி மூச்சுமுட்டுது என்னைய இறக்கி விட்டுட்டு அவன கொஞ்சு” என அரிசியின் குரல் இடிபாடுகளுக்கு நடுவில் இருந்து வந்தது.

உடனே அவனை விடுவித்துவிட்டு வீட்டை பூட்டினார் மாரியம்மாள். மூவரையும் அழைத்துகொண்டு தன் மருமகளின் இல்லம் நோக்கி நடந்தார்.

அங்கே வீட்டை நெருங்கியதும் மணியின் தாய் பார்வதியுடன் சண்டையிட்டுகொண்டிருந்தாள். “என்னடி புள்ளை வளக்குற நல்லா பொம்பளைபுள்ள ஊர்மேயுது. இங்கபாரு என் மகன் மண்டைய ஒடைச்சு விட்டுருக்கா அந்த பிசாசு” என சரமாரி தாக்குதல்கள் நடந்தன. பார்வதியும் எதுவும் பேசமுடியாமல் அமைதியாக கேட்டுகொண்டிருந்தார். கூட்டமாக நின்று பலரும் ரசித்துகொண்டிருக்க.

“ஏய் என்னடி இங்க கத்திகிட்டு இருக்க” என மாரியம்மாவின் ஓசை வரவே மணியின் தாய் திரும்பிபார்க்க அரிசி தன் பாட்டியின் பின்னால் ஒளிந்துகொண்டாள்.

ஆனால் மணியின் தாயோ மாரியம்மாவை பார்த்து பயந்தபோய் “இங்க சும்மா மகன் அரிசி” என புலம்பிகொண்டே நகர்ந்தார். “இங்க என்னடி வித்தையா காட்டுறாங்க போங்கடி” என கூட்டத்தை களைத்துவிட்டார் மாரியம்மாள்.

“இளிச்சவாயன் சிக்குனா அப்புடியே மொளகா அறச்சிடுவாளுக நீ ஏன்டி அங்கேயே நிக்குற உள்ள வா” என அதிர்ச்சியில் உறைந்திருந்த தன் மருமகள் பார்வதியை அழைத்தார்.

பின் போஸ் வந்ததும் ஒரு பாசமலரே படமே ஓடி முடிந்தது. இதற்கெல்லாம் சந்துரு தான் காரணம் என மாரியம்மா ஒரே வார்த்தையில் முடித்துவிட்டார்.

இரவு பாட்டியின் கைவரிசையில் உணவுகள் தாயிரிக்கபட்டு பறகமாறபடவே கூட்டுகுடும்பமாய் உண்டு மகிழ்ந்தனர்.

தன் வீட்டில் உள்ள அனைவரும் சந்துருவின்மீது பாசமாய் இருப்பதை பார்த்து அரிசிக்கும் அவனை பிடித்துவிட்டது. அனைவரும் உறங்கவே அன்று கூட்டுகுடும்பத்தை பௌர்ணமி நிலவு அடைகாத்தது.

தூங்கும்போது சந்துருவோ தனது போர்வையை விரித்து படுத்திருந்தான் ஆனால் தலையில் தலையனை இல்லை குளிரில் புளுவென சுருண்டிருந்தான். அப்போது ஏனோ தெரியவில்லை அன்பரசி விழித்துகொண்டாள். அவன் நடுங்குவதை பார்த்து தன் போர்வையை அவனுக்கு போர்த்தி விட்டாள்.பின் தன் தலையனையை எடுத்து அவனுக்கு வைத்தவள் அந்த தீபத்தின் வெளிச்சத்தில்  சென்று தன் தாயின் சேலை ஒன்றை எடுத்து வந்து தன்னை போர்த்திக்கொண்டு படுத்தாள்.

அரிசியின் இரவு கவசங்கள் மீது கைவைத்தால் மூன்றாம் உலகபோர்தான் என்பதை நன்கு அறிந்திருந்த போஸ் சற்றுமுன் நடந்தகாட்சியை பார்த்து வியப்புடன் மனதில் மகிழ்ந்தார் உறங்குவதுபோல நடித்துகொண்டே.

சந்துருவும் தன் தாய் என்றும் போர்த்தி விடுவது போல கனவில் தோன்ற “அம்மா ” என முனங்கிகொண்டே போர்வையை இருகமூடிகொண்டு உறங்கினான். அந்த வார்த்தை அன்பரசிக்கும் கேட்காமல் இல்லை.

-தொடரும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

சுகமதியின் ‘இதயம் தழுவும் உறவே’ – 11சுகமதியின் ‘இதயம் தழுவும் உறவே’ – 11

இதயம் தழுவும் உறவே – 11   அழகாக தொடர்ந்த நாட்கள், மாதங்களை கடக்க… இப்பொழுதெல்லாம், மாமியார், மருமகளின் உறவு மேலும் இணக்கமானது. ஒரு திருமண விசேஷம் வர, மீனாட்சியோடு யசோதாவே நேரில் சென்று, மற்ற கணவனை இழந்த தாய்மார்களின் தோற்றத்தை

கணபதியின் ‘காதல் யுத்தம் ‘ – 1கணபதியின் ‘காதல் யுத்தம் ‘ – 1

வணக்கம் தோழமைகளே! ‘காதல் யுத்தம்’ என்ற புதினத்தின் மூலம் நமது தளத்தில் அடியெடுத்து வைத்திருக்கும் திரு.கணபதி அவர்களை வரவேற்கிறோம்.  கதையின் கதாநாயகன் விஷ்ணுவை வெறித்தனமாக விரும்பும் கவிதா, ஆனால் தான் கனவில் மட்டுமே தோன்றிக் கண்ணாமூச்சி காட்டும் கனவுக்கன்னியைத் தூரிகையில் சிறைபிடித்துக்