கப்பலின் நங்கூரம் நீரை துளைத்து முன்னேறியது. கதவை திறந்து உள்ளே வந்த கேப்டன் “சார் செரிபியன் தீவுக்கு வந்துவிட்டோம்“
இந்த தருணத்திற்காகவை இத்தனை யுகங்கள் காத்திருந்த செங்கோரன் வம்சம் தன் தெய்வமான அகோரனை மீட்கும் ஆசையில் சிரித்தான் பீட்டர்.
புதிதாக கப்பல் அங்கு வந்து நிற்பதை பார்த்த செரிபியன் மக்கள் குழப்பமடைய அதை அழிக்க ஆக்ரோஷமாக ஓடிவந்தனர். கப்பலில் இருந்த அனைவரும் பயத்தில் மூன்று குதிரைத் திறன் உள்ள அட்ரீனலின் பம்ப் இயங்குவதை போல தோன்றியது.
ஆனால் பீட்டர் எந்த கலக்கமும் இல்லாமல் தெளிவாக இருந்தான்.
தனது கை துப்பாகியை எடுத்தவன் விஷ்ணுவை பார்த்து “அவளை தூக்கு ” என உத்தரவிட்டான்.
துப்பாக்கி விஷ்ணுவின் முதுகில் அழுத்தபடவே விஷ்ணு அந்த வெள்ளை உடை தேவதையை தன் இரு கைகளால் தூக்கி கப்பலின் மேல்தளத்திற்கு வந்தான்.
அதிலிருந்து ஒரு சிறிய படகின் துணையுடன் உயரமனிதனுடன் சேர்த்து நான்குபேர் மட்டும் கரையை நோக்கி பயனத்தை துவங்கினர்.
அதில் கடலின் குளிர்ந்த நீர் ரம்யாவின் முகத்தில் படவே. நீல விழிகளை உலகிற்கு காட்ட இமைகளை திறக்க முயன்றாள். தன்னவனின் மடியில் கிடந்த அவளின் கண் அசைவைப் பார்த்த விஷ்ணு அவளது கண்களைக் கையால் பொத்தினான். அவனது செய்கையைப் புரிந்துகொண்ட ரம்யா, மயக்கத்தில் இருப்பது போல நடித்தாள்.
படகு கரையில் மோத நால்வரும் நிலைவிசையால் தாக்கபட்டு சிறிது முன்னால் சென்றனர்.
கரையில் அவளை தூக்கிக்கொண்டு காலை விஷ்ணு வைக்க மற்ற இருவரும் பின்னால் இறங்கினர்.
நீண்ட நாட்களுக்கு பிறகு தங்களின் கடவுளை நேரில் பார்ப்பதால் மரியாதை நிமித்தமாக அனைத்து செரிபியன் மக்களும் மண்டியிட்டு அமர்ந்தனர்.
“என்ன விஷ்ணு இவர்களை பார்த்து சந்தோஷப்படாதே. எல்லாம் என் ஆசான் அகோரியன் வந்ததும் கானலாய் மாறிவிடும். இந்த உலகமே எங்கள் வசம் வந்துவிடும்.”
“அது நடக்காது” என்பது போல ஓர் அனல்பார்வை வீசினான் விஷ்ணு. அங்கு அந்த மக்கள் சேர்த்து வைத்திருந்த இந்திரவர்மனின் நினைவுகள் விஷ்ணுவை மிக பலசாலியாக உணரச் செய்தது.
மயக்கத்தில் இருந்த ரம்யாவும் தன்னைப் புதிதாக உணர்ந்தாள் அவள் மனதில் “இந்திராணி… உலகை காகக்க நீ இறந்துவிடு இறந்துவிடு இறந்துவிடு இப்போதே… இந்த கணமே… ” என அவளே கூறுவதுபோல இருந்தது.
“விஷ்ணு இன்னும் ஐந்து நிமிடங்களில் சூரியப் புயல் ஆரம்பித்ததுவிடும் இவளை அந்த அரியணையில் அமரவை அதுதான் பலிபீடம்” என இந்திராணியின் சமாதியின் மீதிருந்த காண்டீபனின் தங்க அரியணையை காட்டினான். அந்த சமாதிக்கு பலநூறு அடிகளுக்கு கீழ்தான் அகோரியன் இருக்கிறான் என்பது பீட்டருக்குத் தெரியும்.
‘சூரியபுயல் முடிந்ததும் இவளது கபாலத்தை திறந்து அமிர்தத்தை தரையில் சிந்தினால் அகோரியனுக்கு இதெல்லாம் ஒரு பெரிய சிறையே அல்ல‘ என நினைத்து சிரித்தான்.
அந்த நேரம் விஷ்ணு ரம்யாவை அரியணையில் அமர்த்தினான். நீலக்கண்களைத் திறந்தாள் இந்திராணியாக….
அவளை கண்ட மக்கள் அனைவரும் கைகூப்பி வணங்கத் துவங்கினர் ஆனால் அங்கு நடக்கபோகும் விபரீதத்தை அவர்கள் அறிந்திருக்ககவில்லை.
சூரியப் புயல் பூமியை நெருங்கியது. பூமியின் வளிமன்டலத்தால் அது சிவப்பு போர்வையை பூமி முழுதும் பூசியது. பீட்டர் தயாராக இருந்தான். பூமிக்கு கீழே அகோரியனின் கர்ஜனை தெளிவாக கேட்டது.
‘இன்னும் சில நொடிகளே ‘ என துப்பபாக்கியை இந்திராணியின் தலைக்கு நேரே குறிவைத்தான்.
அப்பொழுது வானத்தில் ஓர் கரிய நிறம் பறந்துவருவது தெரிந்தது. அது அசுரவேகத்தில் வந்தது. அதிலிருந்த ஓர் வாள் வீசபட்டது. அது வைர வாள்….. நேராக இந்திராணியின் முன்னால் சென்று விழுந்தது. விஷ்ணுவை அந்த ஆறடி மனிதன் பிடித்திருந்தான்.
“இறந்துவிடு இந்திராணி ” என பெரிய ஓசை அனைவரின் காதிலும் கேட்க தனக்கு முன்னால் கிடந்த வாளை எடுத்தாள் தனது இதயத்தை நோக்கி வேகமாக செலுத்தினாள்.
அந்த நேரம் ஏற்கனவே வலிமையை உணர்ந்து விஷ்ணு போர்வீரன் இந்திரவர்மனாக மாறினான். தன்னை பின்னாலிருந்து பிடித்திருந்த ஆறடி மனிதனை ஒர் மதம்கொண்ட யானையைபோல் தூக்கி முன்னால் ஒரு அடி அடித்தான். அந்தமனிதன் ரத்தமாக சிதறினான்.
இந்திராணியின் கைகள் இதயத்தை நோக்கி வாளைப் பாய்ச்சுவதை பார்த்த இந்திரன் வேகமாக ஓடிவந்து பீட்டரின் தோளில் மிதித்து ரம்யாவிடமிருந்து வாளைப் பிடுங்கிய நேரம் அவளுக்கு பின்னால் இருந்தான்.
ஆனால் பீட்டரின் துப்பாக்கியிலிருந்து சீறி வந்த தோட்டா இந்திராணியின் தலையை நோக்கி வரவே வைரவாளை வீசியிருந்தான் இந்திரன்.
அது அந்த தோட்டாவை இரண்டாக பிளக்க அவை இந்திராணியின் காதருகே உரசிசென்றன.
ஆனாலும் இந்திரன் கொடுத்த விசை அடங்காமல் அந்த வாள் பீட்டரின் கையை துண்டாக்கியது. துப்பாக்கி மண்ணில் விழுந்தது. ஆனாலும் தன் இடையில் இருந்த சிறிய வாளை எடுத்த பீட்டர் இந்திராணியை நோக்கி முன்னேற ஒரு சிறுத்தை போல் இந்திராணியை தாண்டிய இந்திரன் பீட்டரின் முன்னால் வந்து வர்மபுள்ளிகளை தாக்க அவனது நரம்பு மண்டலம் செயலிழந்தது ஆனால் உயிர் மட்டும் இருந்தது. இந்த நிகழ்வு சில நொடிகளில் முடிந்துவிடவே… இப்போதுதான் மக்கள் சுதாரித்துகொண்டனர். பீட்டரின் உடலை ஓநாய்கள் போல பிரித்து எடுத்தனர்.
கடலில் நின்றிருந்த கப்பல் வெடிக்கும் சத்தம் கேட்டது. பெருமூச்சு விட்ட இந்திரவர்மன் சட்டென விஷ்ணுவாக மாறினான்.
ஆனால் ரம்யாவோ அரியணையில் கைவைத்து கொண்டு சிங்கமென இந்திராணியாக அமர்ந்திருந்தாள். அவளது நீல விழிகள் அமிர்தம் ஆதவனுடன் இனைந்திருந்ததால் ஒளியை வெளியிட்டு மின்னின.
அவளருகில் சென்ற விஷ்ணு அவளது கையை பிடித்து “வா ரம்யா போய்விடலாம்” என இழுத்தான் அவள் அசைவதாக தெரியவில்லை.
“என்னடி ஆச்சு உனக்கு எந்திரி போகலாம்” என கண்ணில் நீர் சுரந்தது.
“அவள் பிரம்ம அட்சயமாகிவிட்டாள் இந்திரா… அவளது பணி இனிமேல் இங்குதான்” என ஒரு அசரிரி ஒலிக்க ரம்யாவை பிடித்து இழுத்தான் விஷ்ணு ஆனால் அந்த முயற்சியில் நழுவியவன் சிறிது தூரம் சென்று கீழே விழுந்தான்.
மீண்டும் எழுந்து அவளை நோக்கி நடக்க அந்த கரிய உருவம் இருவருக்கும் இடையில் வந்து நின்றது.
“இந்திரா நீ பிழை செய்கிறாய்….”
அதை பார்த்த விஷ்ணுவுக்கு நினைவு முழுவதும் இருந்தது “ரம்யா ரம்யா ரம்யா….ரம்யா“
“இந்திரா பாற்கடலை கடையும்போது எப்படி அமிர்தத்திற்கு முன் விசம் வந்ததோ அதே போல்தான் இந்த அகோரியன் என்னும் தீய விசத்தை வெளிவராமல் தடுக்க இந்த பிரம்ம அட்சயத்தை கடவுள் நியமித்திருக்கிறார்… இது இயற்கையின் நியதி இனி அவளது பணி இங்கேதான்” என அந்த உருவம் கூறவே விஷ்ணுவிற்கு எதுவும் தலையில் ஏறவில்லை அவனது ஒரே எண்ணம் ரம்யாவாக இருந்தது.
அந்த உருவத்தை நோக்கி முன்னேறினான் கோபத்துடன்.. “இந்திரா நில் ” என அந்த காண்டீபன் விஷ்ணுவின் மார்பில் கைவைக்க காண்டீபனைத் தள்ளிவிட முயற்சி செய்தான்.
ஆனால் தன் நண்பன் என்றாலும் எல்லை மீறுகிறான் என நினைத்த காண்டீபன் தனது கையில் விசையை செலுத்த சிறிது தூரம் சென்று கீழே விழுந்தான் விஷ்ணு.
அவனது கையில் அந்த வாள் சிக்கியது. “யார் அந்த இந்திரவர்மன்… நான் விஷ்ணு எனக்கு தேவை என் ரம்யா ” என வாளை எடுத்துகொண்டு காண்டீபன் என்னும் கரிய உருவத்தை நோக்கி ஓடிவரவே..
“சிலோச்சனா….” என்ற கர்ஜனை அந்த உருவத்தின் வாயிலிருந்து வெளிப்பட்டது.
அந்த நொடி ஓர் பெரிய கரிய மிருகம் பறந்து வந்து விஷ்ணுவை தூக்கிசென்றது.
பிரம்ம அட்சயம் இருக்கவேண்டிய இடத்திற்கு வந்துவிட்டதால் தன் கடமை முடியவே காண்டீபன் காற்றில் கரைந்து சிவஜோதியாகிய சூரியனை நோக்கி பறந்து ஐக்கியமானான்.
அந்த கரிய மிருகம் காண்டீபனின் குதிரை தான் அது இவனை தூக்கி பறக்க இவனது எண்ணம் ரம்யாவை வலம்வந்ததுகொண்டிருந்தது. கீழே கடல்கள் நீலமாக காட்சியளிக்க அது ரம்யாவின் கண்களை நினைவுபடுத்தியது. ஆங்காங்கே தெரிந்தத சிறுமேடுகள் அவளின் கன்னகுழியின் மச்சத்தை நினைவுபடுத்தின…. காற்றின் ஓசையோ தென்றலாய் பேசும் அவளது குரலை நினைவுபடுத்தின… ஆனால் அந்த நீல விழிகள் என்னை உட்கொண்டதே…
கடலை விழியாக கற்பனை செய்ய அது அவ்வாறே தோன்றியது அவனுக்கு அதில் இறுதியாய் ஒருமுறை விழ எண்ணினான். தான் காற்றில் பறப்பதாய உணர்ந்தான். அவளது விழிகளில் தன் காந்தபார்வை மட்டும் அல்ல தன் உடலையே அர்பணித்தான்.
தொப்பென்ற ஓர் சத்தம் கண்களாய் தெரிந்தது கடலாய் மாறியிருந்தது. முழுவதும் நனைந்துவிட்டான். கால் இடுப்பளவு தண்ணீரில் நின்றான். அந்த குதிரை அவனை கடலில் ஆழ்த்திவிட்டு பறந்துகொண்டிருந்தது.
ரம்யாவின் இழப்பினால் கண்ணீர் வடித்து இடுப்பளவு தண்ணீரில் நின்றான் விஷ்ணு. அவனது சோர்ந்த விழிகளில் தூரத்தில் ஏதோ வேகமாக வருவதாய் தேன்றியது.
இது சுறாதான் என ஊர்ஜிதபடுத்தியவன் “ரம்யா இல்லாத உலகில் நான் இருக்க விரும்பவில்லை என அதை நோக்கி முன்னேறினான்.
******
கடலில் தனக்கு இரைகிடைத்துவிட்டது என்று பசியாய் இருந்த கடலின் கொடூர அரசர்களாகிய சுறாக்கள் கவிதாவை நோக்கி சீறிப்பாய்ந்து வந்தன.
கவிதாவோ மயக்கநிலையில் இருந்தாள். தன்னால் எதுவும் செய்ய முடியாமல் நீரினுள் மூழ்க துவங்கியிருந்தாள். சுறாக்களோ சீறி வந்தன.
அப்போது அங்கு சில அதிசயங்கள் நிகழ்ந்தார் போல சில கடற்கன்னிகள் பல டால்பின் கூட்டங்களுடன் கவிதா என்னும் துளசிக்கு பாதுகாப்பாக சுற்றி நீந்தின. வேகமாக வந்தத சுறாக்கள் பசிமிகுதியால் கடற்கன்னிகளை தன் கோர பற்களால் கடித்து விழுங்க தீவுகளின் அரசனின் கட்டளையை நிறைவேற்ற உயிரை கொடுக்கும் மகிழ்ச்சி அவற்றின் முகத்தில் தென்பட்டது. இறுதியாக எஞ்சியிருந்த சில கடற்கன்னிகளும் இறந்துவிட்டன.
நிலத்தில் மனிதனின் நண்பன் நாய்கள் என்றால் கடலில் அந்த இடத்தை நிரப்புவது டால்பின்களே..
மெதுவாக மூழ்கிகெண்டிருந்த கவிதாவை ஓர் டால்பின் முதுகில் சுமந்துகொண்டு வேகமாக நீந்தியது. அது குறிப்பிட்ட தூரம் கடந்ததும் கவிதா முன்னர் இருந்த இடம் கடற்கன்னிகளின் ரத்தத்தால் நிரப்பபட்டிருந்தது.
*******
அங்கு வேகமாக வந்த சுறாவை நோக்கி நீந்ததியவனுக்கு ஏமாற்றமே நிகழ்ந்தது.
அது சுறா இல்லை அது ஓர் டால்பின்.
‘ஆனால் அதன் முதுகில் வெள்ளளையா ஏதோ உள்ளதே…’ இன்னும் அருகில் வந்தது. அது கவிதாவேதான்….
தான் குழந்தையாக எண்ணும் ஒருத்தி அந்த என்னையே ஏமாற்றி உயிருடன் இருக்ககிறாளா…. விஷ்ணுவால் இதை நம்பவே முடியவில்லை… வேகமாக நீந்திய விஷ்ணு கவிதா என்னும் மலரை அணைத்து மெதுவாக அருகில் இருந்த நிலப்பரப்பை அடைந்தான். ஆனால் அவளது வயிறு நீரால் நிரம்பியிருக்க மயக்கநிலையில் இருந்தாள்…. இதயத்தில் காதை வைத்துபார்க்க அது இயங்கவில்லை…..
“தீவுகளின் அரசே நீங்கள் வந்துவிட்டீர்களா” என பறந்த அந்த கரிய நிற குதிரையை பார்த்த முனியன் தனக்கான கட்டளையை காண்டீபன் கொண்டுவந்திருப்பதாக நினைத்தான்.
குழம்பியிருந்த அவனை சுற்றி ” முனியா உனக்கான கட்டளையை உணர கிழக்கு திசை நோக்கி ஓடு” என காண்டீபன் குரல் அசரிரியாக ஒலித்தது.
அதை உணர்ந்தவன் வேகமாக தீவின் குறுக்கே ஓட அந்த கரையில் ஓர் இளைஞனின் மடியில் வெள்ளை உடை அணிந்த தேவதை தூங்கிக்கொண்டிருந்தாள்.
“என்ன ஆச்சு தம்பி” பதட்டத்துடன் முனியன்.
“இவள்…. இவள்…. கவிதா….கவிதா…..” என உளறவே முனியனுக்கு புரிந்துவிட்டது.
“நாடியை பிடித்துபார்த்த முனியன் “உயிர் இருக்கிறது தம்பி“… கூடவே விஷ்ணுவிற்கும் உயிர் வந்தது.
“தம்பி வயிற்றை அமுக்கி தண்ணிய வெளியே எடுங்க.... இந்த பொண்ணுக்கு வெப்பம் தேவைப் படுது” என முனியன் அவளது பாதத்தை தேய்த்து விட்டான்.
விஷ்ணு கண்ணீர்சிந்திகொண்டே அவளது வயிற்றில் இருந்து தண்ணீரை வெளியேற்றினான்.
ஆனால் அவள் முழிக்க வில்லை.
“தம்பி நுரையீரல் அதிர்ச்சியில நின்றிருக்கும்னு நினைக்குறேன் உங்க மூச்சை அவளுக்கு கொடுங்க” என முனியன் பாதங்களை வேகமாக தேய்த்து விட்டான்.
‘இவளை அந்தமாதிரி நான் நினைத்தது கூட இல்லையே பின் எப்படி ஆபத்துக்கு பாவம் இல்லை அதிலும் இவள் எனக்காக எவ்வளவு செய்துள்ளாள்…ரம்யா என்னை மன்னித்துவிடு என் இதழ்களையும் மன்னித்துவிடு‘ என நினைத்துகொண்டு தன் மூச்சினை வாய்வழியாக அவளுக்கு செலுத்தினான் விஷ்ணு..
சிறிதுநேர போராட்டத்திற்கு பின் பெரிய இருமலுடன் எழுந்தாள். அவள் பின்னால் வந்த முனியன் அவளது முதுகில் பலமாக தட்டினான். தற்போது இயல்பு நிலைக்கு வந்தாள்.
“அவ்வளவுதான்மா நீ எமனையே ஏமாற்றிவிட்டாய் இனி நீங்க ரெண்டு பேரும் நூறு வருசம் ஒண்ணா வாழுவீங்க” என முனியன் வாழ்த்துப்பாடினான்.
அது கவிதாவின் காதில் தேனை பாய்ச்சினாலும் விஷ்ணுவிற்கு இரும்பைக் காய்ச்சி ஊற்றுவதுபோல தோன்றியது.
அவர்களுக்கு உணவு எடுக்க ஓடினான் முனியன்.
ரம்யாவின் நினைவு வந்தவுடனேயே “ரம்யா அக்காவுக்கு என்ன ஆச்சு?” என அழுதாள்.
“இனி ரம்யா இந்த பூமிக்கு சொந்தமில்லை” என ஒரே வார்த்தையில் முடிக்க கவிதாவிற்கு கண்ணீர் அடக்கமுடியாமல் வந்தது.
அவளிடமிருந்து சிறிதுதூரம் சென்று அமர்ந்தான் விஷ்ணு.
முனியன் சில இளநீரை எடுத்து வரவே அதை அவர்களிடம் கொடுத்தான். ஆனால் அவர்கள் இருவரின் கண்ணீரும் கலந்து இருந்ததால் அது இனிப்பை விடுத்து உவர்ப்பாக மாறியது.
‘இவர்களுக்கு என்ன பிரச்சனை, ஏன் ஆளுக்கு ஒருபுறம் அமர்ந்து அழுகின்றனர்…இது ராஜரகசியமாக இருக்கலாம்… சரி நாம் நமது கடமையை நிறைவேற்றலாம் ‘ என நினைத்துகொண்டு
“இருவரும் கிளம்புங்கள் நீண்டநேரம் இங்கு இருக்க வேண்டாம் ” என அவர்களை தனது கட்டுமரத்திற்கு அழைத்துசென்றான்.
அது சில நிமிடங்களில் கடலில் இறங்கியது. தங்கக் குதிரை சிலையுடன் அதை முனியன் இயக்க விஷ்ணு அமர்ந்திருந்தான். ரம்யாவின் மறைவால் அதிகமாக பாதிக்கபட்ட இதயம் கவிதாதான் என நன்கு அறிவான் விஷ்ணு. அதனால் அவள் ஓர் குழந்தையாக விஷ்ணுவின் மடியில் படுத்துகொண்டு அழுதவண்ணம் வந்தாள். நீலகடல் சூரியன் மறையும் நேரம் நேரத்தினால் சிவந்து காணப்படவே அந்த அழகிய இயற்கையில் கட்டுமரம் இயங்கியது.
ஒரு வழியாக நிலா உட்சியை அடைந்த நேரம் அந்தமான் தீவினை அடைந்தனர் .அது முனியனின் கோட்டை. முனியன் தன் மனைவியடம் இவர்களுக்கு உணவு கொடு என்று சென்றவன் தங்கத்தை உருக்க தன் கூட்டாளிகளுடன் சென்றான்.
ஒரு வழியாக அழுது கண்கள் வீங்கிய இருவரும் உறங்கி போகவே அதிகாலையும் வந்தது. முனியன் தூங்காமல் இருந்து தனது வேலையை முடித்திருந்தான். பெரிய இரண்டு சாக்குகளை எடுத்துவந்த முனியன் அதை விஷ்ணுவிடம் கொடுத்தான்.
“இது எதற்கு அண்ணா… நீங்கள் எங்களை காப்பாற்றியதற்கே நான் என்ன கைமாறு செய்யபோகிறேன் என தெரியவில்லை“
“தம்பி இது ராஜகட்டளை… என்னால் அவ்வளவுதான் சொல்லமுடியும்” என கூறிவிட்டு உபசரிப்புகள் முடிய ஒரு விசைப்படகில் சில தோழர்களுடன் விஷ்ணுவையும் கவிதாவையும் ஏற்றிவிட்டான் முனியன்.
“டேய் பாண்டு இவங்க தெய்வம் மாதிரி பத்திரமா கொண்டு போ… வழக்கமான சேட்டையெல்லாம் செய்யகூடாது” என உத்தரவிட அந்த சிறிய கப்பலுக்கு கேப்டனாக அமர்ந்திருந்த ஒரு இளைஞன்.
“ஏய் மாம்ஸ் நீ இவங்களை ராத்திரி தாங்கு தாங்குனு தாங்குன விதத்திலேயே எனக்கு தெரியும்… நீ பயப்படாத ” என ஒரு சல்யூட் வைத்தான்.
கப்பலின் இதயம் அதனுள் டீசல் என்னும் ரத்தம் பாய்ந்ததால் இயங்க துவங்கியது.
எதையோ மறந்த முனியனுக்கு நினைவு வரவே “கவிதா கவிதா“
அவள் திரும்பினாள் “இந்தா இது இருக்கவேண்டியது உன்கிட்ட தான்… இதுவும் ராஜகட்டளை” என அந்த வைரவாளை அவளிடம் கொடுக்க… கப்பல் புறப்பட்டது.
முனியனோ தன்னிடம் இருக்கும் தங்கத்தால் தன் பேட்டையில் உள்ள அனைவருக்கும் விசைப்படகு வாங்கிவிடலாம் எல்லாருக்கும் ஒழுங்காக மாடி வீடு…என திட்டங்களை அடுக்கிக்கொண்டே வீட்டை நோக்கி நடந்தான்.
கப்பல் மூன்று நாட்களாக நீலக் கடலில் பயனித்தும் விஷ்ணு கவிதா விடம் ஒரு வார்த்தைகூட பேசவில்லை. அவனது மனது முழுதும் ரம்யா நிறைந்திருந்தாள். என்றாவது அவள் வருவாள் என விஷ்ணு காத்திருந்தான்.
கவிதாவோ தன் உடன்பிறவா சகோதரியையும் தன் காதலையும் இழந்து நின்றிருந்தாள்.
இருவரும் ஒரே கப்பலில் பயணித்தாலும் அவர்களது இதயம் எதிர் எதிர் திசையில் பயனித்துகொண்டிருந்தது.
இவர்களின் எதிர்காலம் காலபைரவனுக்கு மட்டுமே தெரியும்……..
கணபதியின் ‘காதல் யுத்தம் ‘ – 13

1 thought on “கணபதியின் ‘காதல் யுத்தம் ‘ – 13”
Leave a Reply
You must be logged in to post a comment.
Night ellam kan mulichu kannapinnanu Hollywood films partha pagala ippadithan kannavu varum!