Tamil Madhura தொடர்கள் கணபதியின் ‘காதல் யுத்தம் ‘ – 10

கணபதியின் ‘காதல் யுத்தம் ‘ – 10

டு நிசியில் பறந்து வந்த கழுகின் கழுத்தில் இருந்த மண்டை ஓட்டினை திறந்து எடுத்த பட்டுதுணியை வாசிக்க துவங்கினான் காண்டீபன்.

அதில்….

நான் அகோரியன்…. அகோரி படையின் தலைவன். எனக்கு தேவையான ஒரு பொருள் உனது நாட்டில் உள்ளது வீரசெழியா. வெறும் பத்தாயிரம் வீரர்களை கொண்ட நீ என்னை எதிர்த்துநிற்பது என்பது யானைவாயில் இட்ட கவளம் போன்றது. உன்னை அழித்தாவது அந்த பொருளை நான் அடைவேன்.

இந்திரவர்மா இவர்களை காக்க நீ வந்திருப்பது எனக்கு தெரியும். ஆனால் உன் படைகளை நீ இங்கு நகர்த்திவர முடியாது. அப்படி செய்தால் உனது நாட்டுமக்களின் நிலையை நீ உணர்வாய். எனது படைகள் உனது எல்லையிலும் நிறுத்தப்பட்டுள்ளது. எனது தந்தையை கொன்றதற்கு நான் உன்னைப்  பழி  தீர்க்க இந்த இந்திரபுரி போய்தான் தகுந்த சந்தர்ப்பம்.

உங்கள் மூவருக்கும் ஒன்று கூறிகொள்கிறேன். அந்த பிரம்ம அட்சயத்தை நீங்கள் காப்பாற்ற இயலாது.

என முடித்த நேரம் அதில் தடவியிருந்த ஒரு ரசாயனத்தால் அது தீப்பற்றி எரிந்தது.

முடிவு எடுக்கும் இடத்தில் வீரசெழியன் இருந்ததால் சில விசயங்களை காண்டீபனிடமும் இந்திரணிடமும் விசாரிக்க விரும்பினார்.

தீவுகளின் அரசே நீங்கள் என் மறுமகனுடன் வந்திருக்கும்போதே நான் ஐயம்கொண்டேன். நீதி அழியும் நிலையில் குடையை காக்க நீங்கள் வருவீர்கள் என்பது உலகறிந்த விசயம்.”

அது எங்கள் குலக்  கடமை மன்னா

இவர்களின் போர் நடவடிக்கைபற்றி உங்களுக்கு முன்னரே தெரியுமா

ஆம் மாமாஇந்திரன் கூறினான்.
இருவரும் அவனை திரும்பிபார்த்தனர்.

என்ன கூறுகிறாய் இந்திரா.. அப்படியென்றால் தீவுகளின் அரசனின் நண்பன் நீதானாமன்னர் வியப்படைந்தார்.

அவரின் வியப்புக்கு காரணம் இருந்தது. இதே அகோரிபடையினர் எழில் கொஞ்சும் தீவுகளை ஆக்கிரமிக்க தனது பிரம்மாண்ட கப்பல்களை கொண்டு வங்கக்கடல் என்னும் குளத்தில் பயனித்தநேரம்.
அந்த தாக்குதல் எதிர்பார்த்திராத காண்டீபன் திகைத்துநின்றான்.

அந்த சமயம் ருத்ரனிடம் பயின்ற இருமாணவர்கள். ஒருவன் மனதை தெளிந்த நீரோடையாக்குபவன் மற்றொருவன் வாதிறமையும் போர்திறமையும் கொண்டவன். இவர்கள் இருவரும் சிறிதுகாலம் சேர்ந்திருந்தாலும் உலகின் சிறந்த நண்பர்கள். ஒருவன் காண்டீபன் மற்றொருவன் இந்திரவர்மன்.

தனது நண்பன் ஆபத்தில் இருப்பதை உணர்ந்த இந்திரன் தீவுகளின் நீரோட்டத்தை திசைதிருப்பி ராட்சதகண்ணாடிகளால் எதிரியின் கப்பல்களை எரிக்க திட்டம் தீட்டி தூது அனுப்பியிருந்தான்‌. அதனை செயலபடுத்தியதால் காண்டீபன் என்று ஒருவன் இங்கு இருக்கிறான். நல்லாட்சி புரியும் சிற்றரசர்களுக்கு ஆபத்து என்றால் இந்த இருவரும் உதவிக்கு முன்னரே செல்வது வழக்கம்.

ஆம் மாமா நீங்கள் கேள்விபட்டிருந்த அந்த நண்பன் நான்தான்” – இந்திரன்.

அப்படியென்றால் அகோரியின் படையெடுப்பு உனக்கு முன்னரே தெரியும்தானே

ஆம் மாமா

சிறிது யோசித்த மன்னர் முகத்தில் ஓர் ராஜ புன்னகை எதையோ சாதித்த மகிழ்ச்சிதீவுகளின் அரசனும் அவனது நண்பனும் எங்களுக்கு உதவும்போது நான் ஏன் பயம்கொள்ள வேண்டும்

மற்ற இருவரும் மௌனம் காத்தது மன்னரின் புன்னகையை பரித்தது.
ஏன் இந்திரா என்ன ஆகிற்று

இல்லை மாமா இந்த போரின் முடிவில் வெல்லப்போவது அகோரிகள்தான்

என்ன கூறுகிறாய்எனறார் மன்னர் குழப்பமாக.

காண்டீபன் ஆம் என்பதைப்போல தலையசைத்தான்.

இன்னொரு விசயம் மாமா…”

மன்னரின் கடைசி நம்பிக்கை பயனற்றுபோனதால் ஏக்கமாக பார்த்தார்.

இறுதியில் இந்த போரில் பங்கேற்கும் நம்நாட்டு அனைத்து வீரர்களின் உயிரும் பறிக்கப்படும்அதுதான் போரின் முடிவு

அப்படியானால்…” மன்னரின் குரல் சிறுத்தது.

ஆம் மாமா நானும் இதில் பங்கேற்க போகிறேன்

இல்லை வேண்டாம் இந்திரா நீ இளவரசியை அழைத்துகொண்டு குடகு நாட்டிற்கு சென்றுவிடு

அது தர்மம் இல்லை மாமாஎன கூறிவிட்டுஎன்ன சரிதானே நண்பாஎன காண்டீபனை[ப்  பார்த்தான்.

அனைத்து கதவுகளும் அடைபட்டதால் மன்னர் என்ன கூறுவது என்று தெரியாமல் நின்றார்.

ஏன் இந்திரா தோற்கபோகிறோம் என்று தெரிந்தும் ஏன் இருவரும் உயிரை விடுக்க விரும்புகிறீர்கள்

இல்லை மாமா காண்டீபனுக்கு வேறு ஒரு கடமை உள்ளதுபங்கேற்கபோவது நான் மட்டும்தான்

மன்னருக்கு சிறிது பாரம் குறைந்தது. அது ஒருவனாவது உலகை காக்க இருக்கிறான் என்பதால்

சரி தீவுகளின் அரசே அவர்கள் கேட்ட அந்த பிரம்ம அட்சயம் என்பது என்ன?
என்னிடம் இருக்கும் ஒரே அட்சயம் இந்த வற்றாத நதிமட்டடுமே

அது….” என காண்டீபன் முன்னேறிய நேரம் இந்திரன் அவன் கையை பிடித்து வேண்டாம் என்பதுபோல தலையாட்டினான்.

அது வந்து அரசே….. போர் முடியும்போது நீங்கள் அதை அறீவீர்கள்…”

அப்படியென்றால் நீங்கள் இருவரும் அதை காப்பாற்ற தான் வந்திருக்கிறீர்கள்?”

ஆம் மாமாஆனால் எனக்கு இந்திராணியும் முக்கியம்அவளது வாழ்க்கை என் தந்தையின் இறுதி ஆசை

அவன் தன் மகள் மீது வைத்திருக்கும் அன்பை நினைத்து கண்கலங்கி இந்திரனை கட்டியணைத்தார் வீரசெழியன்.

சங்குகள் முழங்கட்டும்என்ற உத்தனவுடன் மன்னர் புறபட்டுசென்றார்.

நிலவின் தாலாட்டு இசைக்க ஒரு பேதைமனம் உறங்காமல் தவித்தது.
அது இந்திராணி தான்.

ஏன்டா இத்தனை நாட்களுக்கு பிறகு வந்திருக்கிறாயேநீ எப்படி இருப்பாய் என நான் எத்தனை முறை ஏங்கியிருப்பேன். ஒருமுறையாவது ஒரு தூதாவது அனுப்பியிருப்பாயாஇதில் என்மீது கோபமா என்று வேறு கேட்டாய்ஊடல் இல்லாமல் எப்படி இருக்கும்எனக்கும் கோபம் இருந்தது ஆனாலும் உனது அரவணைப்பினால் அனைத்தும் மெழுகாய் உருகிவிட்டதேஎன நினைத்துகொண்டு இதழ்களை தடவியவள் தலையனையை கட்டியணைத்தாள்.

என்னைவிட உன்னை யாரும் இந்த அளவிற்கு காதலிக்க முடியாது இந்திராஎன நினைத்த நேரம் அவளது கண்ணின் திரையில் துளசியின் கண்ணீர் துளிகள் நிழலாடின.

இந்திராணி நீ என்ன முட்டாளா உன்னைவிட அவனை காதலிக்க ஒருத்தியிருக்கிறாள்நீ அவருக்கு பரிசளித்தது முத்தம் மட்டுமே ஆனால் ஒருத்தி இதயத்தையே கொடுத்து கண்ணீரையே சிந்துகிறாள் என்றால் நீ அவளது காலடி மண்ணிற்கு சமம்என திடீர் குழப்பம் ஏற்பட்டது.

தன் காதல்தான் சிறந்தது என மனதிடம் முறையிட முயலும்போது சங்குகள் முழங்கபட்டன.

இந்திராணியின் சிந்தனை திசைமாறவே எழுந்து பயிற்சி திடலுக்கு ஓடினாள்.

அங்கே அனைத்து போர்வீரர்களும் ஆயத்தமாக நின்றனர். அவர்கள் முன் தனது தந்தையும் தன்னவனும் தீவுகளின் அரசனும் நின்றிருந்தனர்.

தீவுகளின் அரசன் வந்திருக்கும்போதே இவள் யூகித்திருந்தாள் ஆனால் இவ்வளவு விரைவில் நடக்கும் என தெரியாது.

இந்திரபுரி வீரர்களேஉங்கள் வீரத்தை நிரூபிக்க ஓர் வாய்ப்பு வந்துள்ளது. அவர்கள் திருட நினைப்பது இந்த வற்றாத அட்சயம் என்னும் நமது அற்றைதான் அது நமக்கு தாய் போன்றது. நம்மை செழுமையாக வைத்திருந்தது. அதற்கு ஆபத்து என்றால் நாம் என்ன செய்யவேண்டும்என மன்னர் முடித்தநேரம். போர் வீரர்களிடையே பலத்த சத்தம் ஏற்பட்டது அது வெற்றிகளிப்பு

இந்த போரில் நாம் வெல்வது அறிதுதான் ஆனாலும் வீரமரணம் அடைவது நமக்குப்  பெருமைதயாராகுங்கள் வீரர்களேஎன கூறியதும் வீரர்கள் போர் திடலுக்கு நடக்க பூமியே அதிர்ந்தது‌.

தந்தையே வாட்படையினரை நான் தலைமை தாங்குகிறேன்இந்திராணி முகத்தில் தெளிவு இருந்தது.

அனைத்து வீரர்களும் கொல்லப்படுவார்கள் என்பதால் மன்னருக்கு அழகிய மகள் இந்திராணியை அனுப்ப மனம் இல்லை.

ஆனால் அவளோ விடுவதாக தெரியவில்லை.. இறுதியாக ஒப்புக்கொள்ள வைத்தாள். வாட்படையின் தளபதியாக குதிரையை எடுத்துகொண்டு நின்றாள் கம்பீரமாக.

என் நேரம் வரும்போது நான் வருகிறேன் நண்பாஎன காண்டீபன் தன் குதிரையில் பறந்து நிலவை நோக்கி மறைந்தான்.

தன்னுடைய வைர வாளை எடுத்து சுழற்றிய இந்திரன் குதிரையை எடுத்துகொண்டு கிளம்பினான்‌. இந்திராணி அவன் பின்னால் சென்றாள். அவனை அரன்மனை மீதிருந்து ஒரு மங்கையின் கண் ஏக்கமாக பார்த்துக்கொண்டிருந்தது.

இவர்கள் இறந்து விடுவார்கள் என்ற விசயத்தை இந்திரன் கூறும்போது திரை மறைவில் இருந்த பார்த்ததால் துளசியின் கண்ணில் நீர் வந்துகொண்டிருந்தது. ஆனாலும் அவனுக்காக காத்து கொண்டிருந்தாள்.

அவர்கள் அனைவரும் செல்லவே சில நூறு வீரர்கள் சூழ மன்னர் யானையின் மீது அமர்ந்து கிளம்பினார்.

நீ ஏன் இந்திராணி போருக்கு வருகிறாய்ஒரு பெண்ணிற்கு போர் ஆபத்து அல்லவா

குதிரையின் மீது அமர்ந்திருந்த தேவதை நிலவொளியில் அழகாக இருந்தாள். அந்த போர் உடை அவளுக்கு மிகவும் நன்றாகவே இருந்தது. “நாட்டை காக்க வீரர்கள் உயிரையும் கொடுக்கலாம் இதில் ஆண்பெண் பேதம் இல்லைஅதுவும் இல்லாமல் நான் இந்த நாட்டின் இளவரசி இந்த மக்களையும் அட்சயத்தையும் காக்கும் பொறுப்பு எனக்கும் உள்ளதுஎன வீரர்களின்  அணிவகுப்பைக்   கிழித்துக் கொண்டு குதிரையை முன்னே பாயசெய்தாள்.

என்னவளுக்கு வீரம் வேண்டும்தான் ஆனால் இவ்வளவு அதிகமாக இருக்கும் என நினைக்கவில்லை இந்திராணி. அழகியே நீ இதற்கு தகுதியானவள்தான்என நினைத்துக் கொண்டு எதுவும் பேசாமல்  அவளுக்கு இனையாக குதிரையை செலுத்தினான்.


போர்த்  திடலை அடைந்தனர். வானத்தில் உள்ள நட்சத்திரங்கள் பூமியில் பிரதிபலிப்பதைப்  போல, கண்ணுக்கு எட்டிய தூரம் வரைக்கும் அகோரிபடையின் முகம் நெருப்பபுகள் தென்பட்டன.

என்ன இந்திராணி பயமா?!”

பயமாதுளியும் இல்லை. நான் இதற்காகத்தான் இத்தனை நாள் காத்திருந்தேன்இந்தப் போரில் வென்று அந்த அகோரியின் தலையை நமது திருமண பரிசாக உங்களுக்குத்  தருகிறேன்என சிரித்தாள்.

பதிலுக்கு இந்திரனும் சிரித்தாலும் இவனுக்கு தெரிந்தது ஒரு விசயம் அவளுக்கு தெரியாதல்லவா.

எக்காலத்திலும் வாழும் சித்தர் அகத்தியரின் ஒரு மாணவன் தான் இந்த அகோரியன். ஆனால் வித்தைகளை அழிவுக்கு பயன்படுத்தும் நுட்பத்தை முதலில் அறிந்தவன். உடலின் தோல்களை உயிர் உலோகத்தினால் செய்துள்ளான். அதனால் இந்திரனின் வைரவாள் கூட இவனை துளைப்பது என்பது சிரமமான காரியம். ஆனால் இந்த அழகு தேவதையின் தைரியம் இந்திரனை வியக்கசெய்கிறது.

அந்த நேரம் இந்ததிரபுரியின் படை வந்தது நிற்கவே சிறிது நேரத்தில் மன்னரும் வந்து சேர்ந்தார். இவர்களின் படை அந்த லட்சம் வீரர்களின் முன் சிறு தூசி தான்.

வானத்தில் நிலவை பார்த்த இந்திரன் அதில் காண்டீபன் குதிரையுடன் வட்டமிடும் காட்சி தெரியவே

உட்சிபொழுதுஎன கூறி சைகை செய்தான். காண்டீபன் மின்னல் வேகத்தில் மறைந்தான்.

போர்களத்தில் மழைநீர் தேங்ககியிருக்க நிலவு இந்த ரத்த ஆற்றை பார்க்கமுடியாது என ஒளிந்து கொள்ள ஆதவனும் வெளியே வர பயந்து கொண்டு தாமதித்ததான்.

மெதுவாக வெளிச்சம் பரவ துவங்கியது. மலை இடுக்குகளை பிளந்து கொண்டு ஆதவன் வெளியே வரவே எதிரியின் படையிலிருந்து அம்புமழை வெளிபட்டது.

இதை இந்திரன் ஏற்கனவே எதிர்பார்த்ததிருந்ததால் கேடயங்களின் உதவியுடன் தப்பித்தனர்.

இரண்டு புறமும் வீரர்கள் ஆக்ரோசமாக மோதிக் கொள்ள அந்த மலையுச்சியில் இருந்த கற்கள் அதிர்ச்சியினால் உருன்டோடியது.

இந்திரபுரியின் படை சற்று துவழ்ச்சி கண்டது. நிலைமையை புரிந்துகொண்ட இந்திரன் அந்த லட்சம் வீரர்களின் ஒற்றுமையை பிரிக்க எண்ணினான்.

குமிழிவியூகம் என சைகை செய்தான். தண்ணீருக்கு நடுவில் குமிழ்களை போல கேடயம் ஏந்திய வீரர் கூட்டங்கள் லட்சம் வீரர்களுக்கு மத்தியில் சிறுசிறு குழுக்களாக பிரிய அகோரியன் அதை எதிர்பார்க்கவில்லை.

இந்திரன் ஒரு குமிழிக்ககுள் சண்டையிட இந்திராணி வேறு ஒரு குமிழியில் இருந்தாள். இருவரது குமிழியும் அகோரியனை நெருங்கிகொண்டிருந்தன.

அகோரியன் அந்த குமிழிக்குள் இருந்த இந்திரவர்மனை பார்த்தான் அவனது கையில் வைரவாள் மின்னியது. அது காலம் காலமாக அகோரியன் படையை வீழ்த்துவதற்காகவே செய்யபட்டடது. முன்னேறி வரும் குமிழிகள் அகோரியனுக்கு பயத்தை ஏற்படுத்தின.

கஜங்களைக்  கட்டவிழ்த்து விடுங்கள்என அகோரியன் கர்ஜித்தான்.

அடுத்த நொடி மதம்கொண்ட யானைகூட்டங்கள் உள்ளே பாய்ந்தன.
இரத்தவெள்ளத்தால் அந்த மண்ணின் நிறம் சிவந்து இருந்தது. அந்த ரத்தங்கள் தெரிக்க யானைகள் ஓடி வந்தன. கண்ணிற்கு தெரியும் எவரையும் தனது ராட்சத பலத்தால் தூக்கி வீசின. சில வீரர்கள் அதன் காலடியில் மிதிபட்டடு இறந்தனர்.

குமிழ்கள் உடைக்கபட்டன. இந்ததிரன் இதை எதிர்பார்த்திருந்தாலும் இவ்வளவு சீக்கிரம் நடக்கும் என நினைக்கவில்லை.

குமிழ்கள் வெடிக்கவே இரண்டு சிங்கங்கள் மட்டும் யானை கூட்டத்திற்கு நடுவே நின்றனர். ஒன்று பெண்சிங்கம் மற்றொன்று இந்திரவர்மன்.

ஆயிரம் யானைகள் சூழ இருவர் மட்டும் இருந்தனர். தன் கையில் இருந்த வைரவாளை தூக்கி விசினான் இந்திரன். அது இந்திராணியின் கைக்கு சென்றது.
அடுத்தநொடி ஒரு யானை வீழ்த்தபட்டடது.

வேகமாக அகோரியனை நோக்கி ஓடவே இந்திராணியிடம் இருந்துபிரிந்து அதிக தூரம் சென்றிருந்தான்‌.

தன் கைவசம் இருந்த சிறிய வாளை எடுத்தவன் ஒரு யானையின் இதயத்தில் பாய்ச்சினான்.

பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது போல பூமியே அதிர்ந்தது, அனைவரும் திகைப்பில் இருந்த நேரம் தான் மிகப்பெரிய யானைபடையின் முன் நிற்பதை உணர்ந்தான். தனக்கு பின்னால் பெரிய யானை ஒன்று விழுந்ததால் ஏற்பட்ட அதிர்வை அவனது கால்பாதத்தால் தற்போது தெளிவாக உணரமுடிந்தது. சுற்றிலும் பார்த்தான் மூன்று மாபெரும் யானைகள் மதம்பிடித்ததைபோல அவன்முன் நெருங்கிவரவே தான் ஒரு நிராயுதபாணியாக நிற்பதை உணர்ந்தான்.

தனது ஆயுதத்தை தேடினான் ஆனால் அந்த கூரிய தனது வாள் சற்றுமுன் இறந்த யானையின் இதயத்தில் சரியாக குத்தபட்டிருப்பதை பார்த்து மீசையை பெருமையாக தடவியவனை ஒரு யானை தனது பெரிய துதிக்கையால் தூக்கி மேலே வீசியது.

காற்றை கிழித்து கொண்டு பறந்த அவனது முடிகள் கண்களின் முன்னே பறக்க அதை பொருட்படுத்தாதவன் அவனது கட்டைவிரலை லாவகமாக மடக்கி யானைகளின் சில இடங்களில் குறிவைத்து தாக்கியதுதான் தாமதம் உடனே துனையில்லாமல் நிற்கும் கருங்ககற்களை போல யானைகள் கீழே சரிந்தன.

வர்மக்கலையின் புனிதத்தை பெருமையாக நினைத்து அவனது பாதங்கள் பூமியை அடையும் நேரம் தூரத்தில் குதிரைபடையின் வீரர்களால் ஏற்பட்டிருந்த அம்பு மழை அவனை அடைந்திருக்க; இதற்குமேல் இந்த உயிர் தனக்கு சொந்தமில்லை என உணர்ந்தான். பலே இது வீரமரணம் என்று நெஞ்சை நிமிர்த்தி நின்றான்.

சில அம்புகள் அவனை தாண்டி செல்ல சரியாக குறிவைக்கபட்டு பாம்பை போல ஓர் அம்பு அவனது கண்ணிற்குமுன் வந்தது. அரை அங்குல இடைவெளியில் அவனது கண்கள் விரிய அந்த அம்பு அவனது மூளையை தாக்க முன்னேறியது. கண்மணிகள் விரிவடைய வட்டத்தின் நடுவே பதம்பார்க்க அம்பின் முனைகள் நின்றதருணம்.

இவனை தூரத்தில் இருந்து பார்த்த இந்திராணிக்கு இதயமே நின்றுவிடுவதைப்  போல இருந்தது. சில யானைகளை வீழ்த்தியவள் ஒரு குதிரையின் துணையால் அவனிடம் விரைந்து வந்திருந்தாள். வந்த வேகத்ததிலேயே அவனது இமையருகே இருந்த அம்புகள் பொடிப் பொடியாக்கபட்டன.

அதற்கு அடுத்து வந்த அம்புகளை கேடயமே இல்லலாமல் தனது வாள் திறமையால் தவிடுபொடியாக்கினாள். கீழே இருந்த தன்னவனுக்குக்  கைகொடுத்து தூக்கிவிட, வேகமாகப்  பாய்ந்து முன்னேறிவன் கைக்கு அவள் வீசிய வைரவாள் வந்து சேர்ந்தது.

அவனது புராதான  வைரம் போன்ற கற்களால் பட்டை தீட்டபட்டிருந்த வாளால் இறுதியாக வந்த மூன்று அம்புகளை திசைதிருப்பியவன் அவளை பார்க்க….

முள்ளில் ரோஜா போலே போர் உடையில் ஓர் அழகிய பெண்அது தன்னவள் இந்திராணி தனக்காக காற்றிலும் கடுகி வந்துள்ளாள்தெளிவாக அவளை பார்க்க முடிந்தது. அவள் இவனை பார்த்து காதல் புன்னகை வீச ஒரு காலால் மன்டியிட்டு அமர்ந்தான். அடுத்த நொடி அவனது காலில் தன் பூபோன்ற கால்களால் மிதித்தவள் காற்றில் பறந்துகொண்டிருக்க இந்திரனின் பின்னால் ஓர் பெரிய யானை சரிந்து விழுந்தது.. அவளோ மேலும் முன்னேறி கொண்டிருக்க இந்திரன் வாளினை சுழற்றியபடி அவளுடன் முன்னேறினான்….

இந்திரபுரியின் படை மொத்தமாக சிதைந்திருந்தது. இருவர் மட்டும் முன்னேறி கொண்டிருந்தனர். தூரத்தில் இருந்த அகோரியன் இவளை பார்த்துபிரம்ம அட்சயம் ஏன் இங்கு வந்ததுஎன கூறிவிட்டுஅவள் எனக்கானவள் அவளை உயிருடன் பிடியுங்கள் மற்றவர்களை தங்கமாக்குங்கள்என உத்தரவிட்டான்.

அந்தநேரம் இந்திரன் பயந்துகொண்டிருந்த தங்க ஆற்றை பாய்ச்சும் இயந்திரங்கள் வந்து தங்கத்தை உருக்கி போர்களத்தில் பாய்ச்சினர்.

இரு காதல் புறாக்களையும் நோக்கி ஆழிபேரலையாய் தங்கம் வந்துகொண்டிருந்தது…..

அந்த கணத்தில் அகோரியன்படை அரண்மனைக்குள் புகுந்து பெண்களை வேட்டையாட துவங்கின.. ஆனால் துளசி பாதள சிறையில் சென்று தன்னையே அடைத்துக் கொண்டாள். ‘என் உள்ளமும் கற்பும் அவருக்குத்தான் சொந்தம்என உறுதிகொண்டு பாதாள சிறையில் குதித்தாள். அதில் குதித்ததவர்கள் வாழ்நாள் முழுவதும் அங்கேதான் உணவு இல்லாமல் பிணங்களை உண்டு வாழ வேண்டும். தன்னை மீட்க இந்திரன் வருவான் என்ற நம்பிக்கையில் இந்த முடிவை எடுத்தாள்.

ஆனால் இந்ததிரனோ உருகிய தங்க பேரலையின் முன் என்ன செய்வது என்று தெரியாமல் நின்றான்.

சூரியன் உச்சிபொழுதை அடையவே வானிலிருந்து வந்த ஒரு உருவம் இந்திராணியின் கையை பற்றி கொண்டது. அந்த குறுகிய நொடியை சுதாரித்தவள் தன்னவன் இந்திரனின் கையை பற்றிக்கொள்ள வானத்தில் பறந்தனர்.

அவர்கள் இப்போது காண்டீபன் துணையுடன் பறக்கும் குதிரையில் பறக்க, தங்க ஆறு அனைவரையும் நனைத்தது‌. மன்னர் வீரசெழியன் தங்கசிலையாக மாறினார் தனது வீரர்களுடன் சேர்ந்து.

ஆக்ரோசமாக உருமிய அகோரியன்அவள் என் பசி தீர்க்கவேண்டியவள்பிரம்ம அட்சயத்ததை தவறவிட்டு விட்டோம்என உறுமினான்.

அருகில் இருந்த அவனது அமைச்சர்இல்லை அரசே அவர்கள் அருந்ததி நட்சத்ததிரத்திலிருந்து மூன்று கோணங்கள் தள்ளி பறக்கின்றனர். அப்படி யென்றால் நான் உங்களை அவர்கள் செல்லும் இடத்திற்கு அழைத்து செல்கிறேன்என முடித்தார்.

ஆகட்டும்என்ற பெரிய ஓசையுடன் அங்கிருந்து கிளம்பினான் அகோரியன்.

காண்டீபன் முன் அமர்ந்திருக்க இறுதியாக இருந்த இந்திரன் தன்னவளை கட்டியனைத்துகொண்டே மூவரும் குதிரையில் காண்டீபனின் தீவு கோட்டையை நோக்கி பறந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 37ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 37

37 – மனதை மாற்றிவிட்டாய் அனைவரும் கோவிலில் பேசிக்கொண்டும், வேலை செய்துகொண்டும், விளையாடிக்கொண்டும் இருக்க ஆதியின் கண்கள் போனில் பேசிக்கொண்டே இருந்தாலும் திவியை சுற்றியே இருந்தது. சிறிது நேரம் சென்றதும் அம்மு “நகை எல்லாமே போட்டே இருக்கமுடிலமா” என்று புலம்ப மதி

கணபதியின் ‘காதல் யுத்தம் ‘ – 9கணபதியின் ‘காதல் யுத்தம் ‘ – 9

அந்த டைரியால் மீண்டும் சிக்குண்டான் விஷ்ணு. பிரம்மாண்ட அரண்மனையின் முன் விஷ்ணுவும் காண்டீபனும் நிற்க.. “என்ன இந்திரா இந்த சிறியகதவு தாக்குபிடிக்குமா” – காண்டீபன். அமைதியாக இருந்தான் இந்திரவர்மன். “இந்திரா அந்த மங்கையின் நினைப்பு இன்னும் உன்னைவிட்டு அகலவில்லையோ” முற்றிலும் பார்த்தவன்

தமிழ் மதுராவின் ‘ஒகே என் கள்வனின் மடியில் – 17’தமிழ் மதுராவின் ‘ஒகே என் கள்வனின் மடியில் – 17’

ஹோட்டல் அறைக்குத் திரும்பினார்கள். இருவரும் ஒரே காரில் திரும்பியதைக் கண்டு வெறித்த அமரின் காதுகளில் மட்டும் விழுமாறு மெதுவாய் சொன்னான் வம்சி.   “Early bird gets the worm. But late mouse gets the cheese… வர்றட்டா… தாங்க்ஸ்