Tamil Madhura கதைகள்,தொடர்கள் ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்! – 05

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்! – 05

உனக்கென நான் 5

“அன்பு நான் ஏன் இங்க வந்திருக்கேனு தெரியுமா?” என சந்துருவின் வாயிலிருந்து வார்த்தை வரும் தருணம் அவனது ராணி பலகையை விட்டு வெளியேறியிருந்தது.

 

அவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள் “ஏன்” என்ற கேள்வியை கண்ணில் வைத்துகொண்டு.

 

“ஓ நீ ரொம்ப புத்திசாலி ராணியை காலிபன்னிட்டியே” என பலகையை பார்த்தான். இவன் ஏன் என்னை குழப்புகிறான் என நினைத்துகொண்டு மறுபடியும் பலகையை பார்த்தாள். ஆனால் பல எண்ணவோட்டங்கள் அவளுள் அரங்கேற அவனுக்கு அதிஷ்டம். இந்தமுறை அவளது யானையில் ஒன்று பரலோகம் சென்றிருந்தது. அதை கவனிக்காமல் தன் கை வேலைசெய்த இடத்தில் மந்திரியை செலுத்திகொண்டிருந்தாள். அவளது யானையை அழித்த பெருமையில் மீண்டும் பேச ஆரம்பித்திருந்தான்.

 

“உனக்கு என்னை நியாபகம் இல்லையா?” என சந்துரு கேட்டான்.  ஆனால் அன்பரசியின் வாழ்கையில் ஏற்பட்ட விபத்தை பற்றி சந்துருவுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

 

“இல்லை” என பதிலளித்தாள்.

 

‘எப்படி இவள் என்னை மறந்தாள்” என குழப்பிகொண்டே குதிரையை எடுத்து அவளின் ராணியை குறிவைத்தான்.

 

“அன்பு அன்பு ” எனறு வெளியிலிருந்து ஒரு குரல் ஒழித்தது. அது மலரின் குரல்தான். உடனே தன் கையில் எடுத்திருந்த ராணியை பலகையின் ஏதோ ஓரிடத்தில் வைத்துவிட்டு வெளியே ஓடிவிட்டாள். வேகமாக சென்றவள் அவளது குழந்தையை போய் கொஞ்ச ஆரம்பித்துவிட்டாள்.

 

‘என்ன பெரிய செஸ் பிளேர் ஒரு ஆட்டத்தை முழுதாக விளையாடவேண்டும் என்ற ஒரு எண்ணம் இல்லையே’ என சளித்துகொண்டு அந்த ராணியைபார்த்தான். அந்த வெள்ளை அழகுராணி கருமைராஜாவிற்கு முத்தமிட்டபடி நின்றிருந்தது. செக்மேட்… ராஜா அகபட்டிருந்தார் ராணியிடம்.

 

“அடிப்பாவி கேம் முடிச்சுட்டு தான் போனியா” என வெளியே வந்தான்.

 

“ஏண்டி நான் என்ன சொல்லிட்டேன்னும் குழந்தையை வீசிட்டு கோபமா வந்துட்ட ” என மலர் திட்டிகொண்டிருந்தாள்.

 

“…” அன்பரிசி எந்த பதிலும் பேசாமல் அந்த குழந்தையுடன் விளையாடிகொண்டிருந்தாள். இருவரும் வீட்டின் முன்னிருந்த தின்னையில் அமர்ந்திருந்தனர்.

 

“ஏய் மாடு உன்கிட்டதான் பேசிக்கிட்டு இருக்கேன்” என மலர் ஆத்திரமானாள். அன்பரசியிடம் பதில் இல்லை.

 

“இந்த பாருடி ” என அவளது முகத்தை திருப்ப “ஏய் ஏண்டி அழற” என மெதுவான குரலில் கேட்டாள் மலர்.

 

அப்போது சந்துரு வெளியே வந்தான். அவனை பார்த்ததும் தன் கண்ணீரை துடைத்துகொண்டு இயல்புக்கு மாறினாள். ஆனால் மலரின் முகத்தில் ஓர் அதிர்ச்சி தெரிந்தது.

 

“ஹேய் நீ மலர்தான?”  சந்துரு தெளிவாக கேட்டான்.

 

“ஏய் சந்துரு நீ இன்னும் உயிரோடுதான் இருக்கியா” என நக்கலாக கேட்டாள்.

 

“ஏன் நீ கொல்லலாம்னு திட்டம் போட்டுருக்கியா?” என சந்துரு பதிலுக்கு கிண்டல் செய்தான்.

 

“பரவாயில்லையே என்னை நியாபகம் வச்சுருக்கியே ” என மலர் கூற “அம்மா அங்கால பரமேஸ்வரி உன்னை என்னால மறக்க முடியுமா?” என கூற இருவரும் பலமாக சிரித்தனர். இவர்கள் இருவரையும் பார்த்து நடுவில் அமர்ந்திருந்த அன்பரசி குழப்பத்தில் இருப்பது அவளது கண்ணில் தெரிந்தது.

 

“ஏய் என்னடி பாக்குற நம்ம சந்துருடி” என தன் தோழிக்கு எதையோ உணர்த்த முயன்றாள். ஆனால் சந்துரு  “வேண்டாம்” என தலையால் சைகை காட்டினான். அதை மலர் உடனே புரிந்துகொண்டாள்.

 

அடுத்ததாக பேச்சை தடம்புரட்டும் படலம் அரங்கேறியது. “அப்புறம் சந்துரு என்ன பன்ற?” மலர்தான் துவங்கிவைத்தாள்.

 

“நான் சின்னதா வியாபாரம் பன்றேன் நீ என்ன பன்ற”

 

“நான் என்ன பன்ன அவரை கவனிச்சுகிறதும் என் பட்டுகுட்டிய கொஞ்சுரதும்தான் எனக்கு வேலை” என அன்பரசியின் கையிலிருந்த குழந்தையின் கன்னத்தில் கிள்ளினாள்.

 

“ஓ கல்யாணம் ஆகிறுச்சா?” என சிரித்தான். “பின்ன கல்யாணம் பன்னாமலா குழந்தை இருக்கும்” என முறைத்தாள்.

 

“ஏய் நீ தான சொன்ன நானெல்லாம் கல்யாணம் பன்னாமதான் குழந்தை பெத்துகுவேன்னு…” என சந்துரு சிரித்தான்.

 

“ஏய் லூசு என்னடா அது அப்போ” என சந்துருவின் தோளில் அடித்தாள். “சரி குழந்தைக்கு என்ன பெயர் வச்சருக்க?” என ஆர்வமாக கேட்டான். அப்போதுதான் புரிந்தது அன்பரசிக்கு தான் பெயரைகூட கேட்கவில்லை என்று.

 

“பிரியா” என மலர் முடித்தாள்.

 

“ஓ பிரியா குட்டி வாங்க” என அந்த குழந்தையை நோக்கி தன் இருகையையும் நீட்டினான்.அது சிரித்துகொண்டே கையை நீட்டியது அவனை நோக்கி. ஆனால் அதை மடியில் வைத்திருந்த அன்பரசி சந்துருவை பார்த்து ஒரு பார்வை பார்க்க “குழந்தையை பிரிச்ச கொண்ணுடுவேன்” என்பதுபோல இருந்தது. பின் என்ன நமது ஹீரோ அந்த விபரீதத்தை மீண்டும் முயற்சிக்கவில்லை.

 

இருவரும் பேசிகொண்டிருக்க அன்பரசிக்கு அங்கு இருக்க மனம் விரும்பவில்லை குழந்தையை தூக்கிகொண்டு சற்று தூரம் நடக்க ஆரம்பித்திருந்தாள்.

 

இங்கு இருவரும் பேசிக்கொண்டே இருந்தனர். “அப்புறம் உங்க உட்பி என்ன பன்றாரு” என சந்துரு கேட்க.

 

“அவர் இங்க ஒரு காலேஜ்ல வேலைபாக்குறாரு…ஆமா உனக்கு எவளாவது செட் ஆனாளா?” என மலர் கேட்டாள்.

 

“அந்த அளவுக்கு எனக்கு கொடுப்பினை இல்லம்மா” என சந்துரு சிரித்தான்.

 

“சந்துரு நான் ஒன்னு கேட்கவா ?” என மலர் தயங்கினாள். “ஏய் என்கிட்ட என்ன தயக்கம் சும்மா கேளு” என திறந்துவிட்டான்.

 

“இல்ல அன்பரசியை….” என நிறுத்தினாள்.

 

“அன்பரசியை?!”

 

“சரிவிடு அது எதுக்கு ” என கத்திரிபோட்டாள். சந்துருவும் எதுவும் கேட்கவேண்டாம் என்று நினைத்துகொண்டான். ஆனாலும் அந்த பந்தம் அவனை கேட்க வைத்தது.

 

“அன்புக்கு என்ன பிரச்சனை ஏன் கவலையாவே இருக்கா?” என சந்துரு கேட்டான். “லவ் பன்னாபோல இருக்கு அதான் மனசுகுள்ளேயே வச்சு கஷ்டபடுறா”

 

“இன்னும் லவ் பன்றாளா?”

 

“ஆமா அப்படிதான் தெரியுது ஆனா அவங்க அப்பாவைபத்திதான் தெரியுமே” என மலர் முடித்தாள்.

அந்த நேரம் அந்த இருசக்கர வாகனத்தில் இருவர் வந்தனர்.

 

“வாம்மா மலர் எப்போ வந்த ஊர்ல இருந்து? விட்டுகாரர் சௌக்கியமா?!” என போஸ் வண்டியின் காலை சீராக்கி கொண்டே கேட்டார்.

 

“ம்ம் நல்லா இருக்காங்க பெரியப்பா” என மலர் சுருக்கமாக முடித்தார். போஸிடம் அதிகமாக போசமாட்டாள் மலர். அனைவரும் அப்படிதான் ஆனால் சன்முகம் மட்டும் விதிவிலக்கு.

 

“ஆமா ஏன் அவரு நம்ம ஊருக்கு வரமாட்டாரா… உன்னை மட்டும் அனுப்பி வச்சுருக்காரு” என போஸ் கோபமடைந்தார்.

 

“இல்ல பெரியப்பா கடையில் வேலை ரொம்ப அதிகம் இந்த கடை பசங்களை நம்ப முடியாது அதான் அவரே பாத்துகிறாரு அதான் வீட்டுக்கு வரவே ரொம்ப நேரம் ஆகிறும்” என மலர் வேகமாக சொல்லி முடித்தாள்.

 

“ம்ம்ம்ம்” என்ற உருமளுடன் உள்ளே நுழைந்தார் போஸ் அவரின் நண்பரும் உடன் சென்றார். மலரின் கனவன் இங்க வராமல் இருப்பதற்கு போஸ்தான் காரணம் என அவருக்கு தெரியாமல் இல்லை.

 

“பார்வதி சாப்பாடு போடு….சண்முகம் எங்க சந்துருவையும் வரசொல்… அன்பரசி வா வந்து சாப்பிடு மலரையும் கூட்டி வா” என்று குரல் காற்றை துளைத்தது.

 

அடுத்த நொடி அரக்கபறக்க அனைவரும் வந்து அங்கு ஆஜர் ஆகினர். பார்வதி அனைவருக்கும் பரிமாற அன்பரசி மலரின் குழந்தையை மடியில் வைத்துகொண்டு ஊட்டிவிட்டாள்.

 

சோற்றில் கை வைத்து பிசைந்துகொண்டிருந்த சந்துருவுக்கு மனதிலும் பிசைந்தது. ‘என்ன அன்பரசி காதலிக்குறாளா? ஓஓ வீட்டுல சம்மதிக்கமாட்டாங்கனு பயந்துபோய் சோகமாக இருக்கா… சரி நாம் எப்புடி யாவது அவங்களை சேத்துவச்சிடுவோம்…எனக்கு அவள் முகத்தில் சிரிப்பு இருந்தா அதுவே போதும்… எல்லா பெண்களும் இப்படிதானா?! அப்போ சுவேதா?!” என மனதில் ஓட “சாப்பிடுங்க மாப்ள என்ன கனவுகண்டுகிட்டு இருக்கீங்க” என்ற மிலிட்டரி உத்தரவு.

 

முடிந்ததுகனவு தட்டிலிருந்து பிசைந்து வாயிலிட்டு விழுங்கினான் கனவுகளை.

 

-தொடரும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

கபாடபுரம் – 24கபாடபுரம் – 24

24. புதிய இசையிலக்கணம்   இரண்டுவிதமான இசைகளால் கொடுந்தீவுக் கொலை மறவர்களையும் அவர்கள் தலைவனையும் சாரகுமாரன் வசப்படுத்தினான். பாடலுக்கும், புகழுக்கும், சேர்த்தே இசை என்று இசைவாகத் தமிழில் பெயர் சூட்டியவர்களை வாயார வாழ்த்தினான் அவன். திரும்பத் திரும்ப மீட்டினாலும், பாடினாலும் கேட்பவனுக்குச்

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 38ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 38

38 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன் ஆதர்ஷ், ரகு, வாசு அனைவரும் வந்து விசாரிக்க ஆதர்ஷ் “ஆண்ட்டி டாக்டர் என்ன சொன்னாரு?” செல்வத்தின் மனைவி அம்பிகா “ரொம்ப ப்ரெஷர், ஸ்ட்ரெஸ் அதிகம்னு சொல்லறாரு.. எதைப்பத்தியும் போட்டு ரொம்ப குழப்பிக்காம முடிஞ்சளவுக்கு நல்லா