Tamil Madhura கதைகள்,தொடர்கள் ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 04

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 04

உனக்கென நான் 4

கண்ணீரை தண்ணீரில் வீணடித்து கொண்டிருந்தாள். சிறிது நேரத்தில் நிதானத்திற்கு வந்தவள் குளிக்க ஆரம்பித்திருந்தாள். மஞ்சளிட்டு சீகைகாய் தலையிலிட்டு வாசனைமிகுந்த சோப்பால் உடலை மாற்றி நீரை உடலில் தவழ விட்டாள். பின் அந்த பெட்டியை பிரித்து அந்த சுடிதாரை எடுத்து உடுத்தினாள். தான் சென்று தேர்வு செய்திருந்தாள்கூட இந்த அளவிற்கு இருந்திருக்காது. அப்படியிருக்க எப்படி இவனால் இவ்வளவு துல்லியமாக எடுக்க முடிந்தது. அப்போ இவன் நம்மை அந்த அளவுக்கு பார்த்துள்ளான். சே எல்லா ஆண்களும் இப்படித்தானா என நொந்து கொண்டிருந்தாள்.

 

“யேய் இன்னுமாடி குளிக்குற சீக்கிரம் வாடி” அன்னையின் தாழாட்டு இது.

 

பெருமூச்சு விட்டுக்கொண்டு வெளியே வந்தாள். அழகான நீலநிற உடை மயில் என்ற சொல்லுக்கு உயிர்கொடுத்திருந்தது அந்த சுடிதார். அவள் வீட்டிற்குள் நுழைந்ததும் கேக்கும் அதை சுற்றி சில குழந்தைகள் மற்றும் தனது தந்தை அவனது தந்தை என நினைத்திருந்தனர். அவனோ அந்த கேக்கின் நடுவில் அந்த சுழலும் பொம்மையை நிலைநிறுத்திகொண்டிருந்தான்.

 

“வாவ் யூ லுக் வெரி ப்யூட்டி ஃபுல் ” என்று மனதில் உள்ளதை வெளியே கொட்டிவிட்டான். பதிலுக்கு அவள் வீசிய பார்வையில் தான் ஏதோ தவறாக சொல்லிவிட்டோமா என நினைத்து குனிந்து கொண்டான்.

 

“தலையில் வாரிட்டு வாடி” பார்வதி மீண்டும் திட்டிகொண்டிருந்தார்.

 

“இல்ல பரவாயில்லை அத்த லூஸ் கேர் நல்லாதான் இருக்கு.” அவளுக்கும் லூஸ் கேர்தான விருப்பம் ஆனால் தன்னை சுற்றியுள்ள வளையங்களால் அதை கைவிட்டிருந்தாள். இன்று அதற்கான பலியை இவன் ஏற்றுகொள்வதால் மகிழ்ந்தாள்.

 

அவளை கேக்கின் முன் நிற்கவைத்து அந்த மழலைகள் அவளை சூழ்ந்து கொண்டன. பின் தன் கைபேசியில் அவளது நிழலை சிறைபிடித்தான். பின் கேக்கை வெட்டி கொண்டாட வண்ணவெடிகளால் அந்த இடத்தை நிரப்பினான். சூழ்ந்திருந்தவர்களின் மகிழ்ச்சி இவளையும் ஆட்கொள்ள இவளது மனதிற்கு சிறிது ஆறுதல் தரவே அவன்மீது சிறிது மதிப்பு ஏற்பட்டது. ஆனால் அவனோ உற்சாகமாக அனைத்து குழந்தைகளுக்கும் கேக்கினை பங்கிட்டுகொண்டு இருந்தான். அவனது விளையாட்டில் மகிழந்த குழந்தைகள் அவனையும் தங்களுடன் குழந்தையாக ஏற்றுகொண்டன அவனும் அவ்வாறே மாறிபோனான். முதல்முறையாக அவனை ரசிக்க துவங்கியிருந்தாள்.

 

அவள் தன்னை பார்த்துகொண்டிருந்ததை பார்த்து. “ஐயோ மறந்துட்டேன் இந்தா ஹாப்பி பர்த்டே ” என ஒரு கலரதாள் சுற்றப்பட்ட சிறு பெட்டியை அவளிடம் தந்தான். அவள் தன் தாயை பார்க்க அவள் “வாங்கிக்கோ” என கூறவே அது அவனிடமிருந்து இவளிடம் வந்து சேர்ந்தது.

 

“ம்ம் பிரிச்சு பாரு” என அவனது வார்த்தை வெளிப்படவே அதை பிரித்தாள்.

 

உள்ளேயிருந்து ஓர் ஆன்ட்ராய்டு மொபைல் எட்டிப்பார்த்தது. சற்று விலை அதிகமான பொருள்தான். அன்பரசி யின் முகத்தில் ஓர் கலக்கம் தெரிந்தது. இது எனக்கு வேண்டாம் என்பதை போல.

 

“இங்க ஆப்பிள் ஃபோன் கிடைக்கல அதான் இதை வாங்கி வந்தேன் பிடிச்சிருக்கா” என சந்துரு கேட்க.

 

அவனிடம் எப்படி கூறுவது என தெரியாமல் விழித்தாள். “ஹேய் என்ன பிடிக்கலையா ரிட்டன்பன்னி வேற மொபைல் வாங்கிக்கலாம்” என அவன் கூறவே.

 

“இல்லை வோணாம்” என அவள் கூறி முடித்தாள். பின் வாழ்வில் முதல்முறையாக பிறந்தநாள் என்றால் என்ன என்று புரியவைத்தவனை பாரத்து மனதினுள் நன்றி கூறினாள்.

 

பின் போஸ் வழக்கம்போல் தனது தோழரை அழைத்துகொண்டு ஊர்காரர்களுக்கு அறிமுகம் செய்துவைக்க கிளம்பிவிட்டார்.

 

“ஏன்டா நீ சும்மாதானே அப்படி சொன்ன” என சன்முகம் ஆரம்பித்தார்.

 

“என்னடா சொன்னேன்” என பைக்கை ஓட்டிகொண்டே எதிரில் வருபவர்களுக்கு வணக்கம் வைத்துகொண்டு சென்றுகொண்டிருந்தார் போஸ். அந்த ஊரில் அவருக்கு அவ்வளவு மரியாதை உள்ளது.

 

“உன் பொண்ணை என் பையனுக்கு…” என இழுத்தார்.

 

“டேய் நீ விருப்பபட்டு நான் எதையாவது வேணாம்னு சொல்லிருக்கேனா?”

 

“அது இல்லடா” என சன்முகம் நிறுத்த வண்டியை நிறுத்தியவர். “வா டீ சாப்டுகிட்டே பேசலாம்” என அந்த பெட்டி கடையில் நிறுத்தி ஓர் இருக்கையில் அமர்ந்தனர்.

 

அடுத்த நொடி ஒரு சிறுவன் “ஐயா டீ ” என அதை அவரிடம் நீட்டிவிட்டு ஒரு வணக்கம் வைத்தான். அவனுக்கு ராணுவத்தில் சேரவேண்டும் என்ற ஆசை அதனால் போஸிடம் அடிக்கடி அறிவுரை கேட்பதுண்டு.

 

“இங்க பாருடா சன்முகம் என் பொண்ணு உன் வீட்டுல விளக்கேற்ற வரனும்னு நீ ஆசைபடுறியா?”

 

“ஆசைதான் ஆனால் உன் சம்மதம் வேணும்ல அதுவும் இல்லாம நீ அன்னைக்கு சொன்ன விசயம்”

 

“டேய் எனக்கு உன் விருப்பம்தான் முக்கியம்… இப்ப சொல்றேன் அவதான் உன்னொட மருமகள் சரியா” என டீகடையில் நிச்சயம் முடிந்தது.

 

“இல்ல நீ அன்னைக்கு சொன்னியே உன் பொண்ணு ஏதோ மனசுகுள்ள வச்சுகிட்டு கல்யாணம் வேணாம்னு சொல்றான்னு இதை பார்த்தா அவ யாரையோ லவ் பன்றானு நினைக்குறேன்”

 

“அதுக்கு என்னடா”

 

“இல்ல வாழபோறவங்க விருப்பம் இல்லாமல் கல்யாணம் பன்னா நல்லா இருக்காதுடா”

 

“டேய் இப்ப சொல்றேன் அப்படி எதாவது இருந்தாகூட அவ் உன் மருமகளாதான் செத்துபோவாள் சரியா” என வேகமாக பேசிமுடிக்க அந்த வார்த்தைகளின் வலிமையை சன்முகம் நன்றாகவே உணர்ந்தவர். போஸ் பெயருக்கு ஏற்றார்போல் சொன்னதை செய்துவிடுவார்.

 

“டேய் அப்படியெல்லாம் எதுவும் பன்னிடாத அன்பரசிக்கு சம்மதம்னா எனக்கும் சம்மதம்டா” என முடிக்க ஒரு பெரியவர் அங்கு வந்துசேர்ந்தார்.

 

“என்ன மிலிட்டரி காரரே யாரு இது” என கண்ணாடி முகத்தை முழுமையாக மூடி ஓர் பெரியவர் கம்பு உன்றி வந்தார்.

 

“வாங்க ஐயா… இது என் ஃப்ரண்ட் சன்முகம் உங்களுக்கு தெரியுமே”

 

“ஓ சன்முகமா அடையாளமே தெரியலைப்பா எப்படி இருக்க ” என அவர் கூற “நல்லா இருக்கேன் ஐயா ” என சன்முகம் முடித்திருந்தார்.

 

“உன் பையன் என்ன பன்றான்” என அந்த பெரியவர் தொடர்ந்தார்.

 

“அவன் வியாபாரம் பன்றான் ஐயா” என சன்முகம் கூற “ம்ம் நல்லா இருங்க” என இறைவனை வேண்டினார்.

 

“உன் பொண்ண கட்டிகொடுத்து எப்பவும் பிரியாமல் இருங்கப்பா ” என அந்த பெரியவர் கூற

 

“அதுக்குதான் ஐயா வந்துருக்காங்க அன்பரசிய பொண்ணு பாக்க” என போஸ் முடித்தார்.

 

“நல்ல பொண்ணுபா அன்பரசி உன் குடும்பத்துக்கு இனி வெளிச்சம்தான். இதை கேட்டு சந்தோஷப்பட காவேரி இல்லாம போய்டா ” என அந்த பெரியவர் சன்முகத்தின் பழைய நினைவுகளை புரட்டிவிட்டார்.

 

“அம்மா எதாவது வேணுமான்னு கேக்க சென்னாங்க?” என அன்பரசி அவனது அறைக்குள் வந்தாள்.

 

அவனோ சதுரங்கத்தில் போராளிகளை அடுக்கிகொண்டிருந்தான். வெள்ளை ராணியை ராஜாவின் பக்கம் நிறுத்தியவன்.

 

“இல்ல எதுவும் வேணாம்… விளையாடலாமா?” என கேட்டான்.

 

“இல்ல எனக்கு அவ்வளவாக விளையாட தெரியாது” என்று விலகினாள்.

 

“நான் மட்டும் என்ன சாம்பியனா?” என சிரித்தான்.

 

“இல்லை…” என இழுத்தாள். ஓர் சந்துருவுக்கு எதிரில் அமர்ந்து விளையாடுவதில் அவளுக்கு தயக்கம் இருந்தது.

 

“ஓ அத்த எதுவும் வேலை சொன்னாங்களா?” என அவளது முகத்தை பார்த்தான். “அத்தை ” என குரல் கொடுத்தான்.

 

“என்ன மாப்பிள்ளை?” என்ற பதில் குரல் வந்தது.

 

“அன்பரசிக்கு செஸ் விளையாட தெரியாதா?” என குரல் கொடுத்தான்.

 

“தெரியாதா?!!” என சிரித்துவிட்டு “அங்க மேலே பாருப்பா அவ வாங்கி வச்சுருக்க கப்பை” என கேட்க அப்போதுதான் பார்த்தான் அந்த கோப்பைகளையும் மெடல்களையும்.

அன்பரசியோ இன்னும் அமைதியாகவே நின்றாள்.

 

“ஓ காலேஜ் செஸ் சாம்பியன்!”

 

“இல்ல டிஸ்ட்ரிக் சாம்பியன் ” என்ற மெதுவான வார்த்தைகள் வந்தன.

 

“சரி எனக்கும் சொல்லிகுடுங்க டீச்சர்” என கைகட்டி வாயில் விரல்வைத்தான். அவளுக்கு சிரிப்பு வந்துவிட்டது. ஒரு வழியாக அவளை சம்மதிக்க வைத்துவிட்டான்.

 

அவனுக்கு எதிரில் அமர்ந்தாள். “லேடிஸ் ஃபர்ஸ்ட்” என தன்பக்கம் இருந்த வெள்ளை காய்களை அவள் புறமாக திருப்பினான்.

 

அதை பார்த்தவள் ராணியும் ராஜாவும் தவறாக இருந்ததை சரி செய்தாள். “இப்படி தானே எனக்கு சொல்லிகொடுத்தாங்க” என தன் தவற்றை நியாயபடுத்தினான்.

 

அவள் தலையை குனிந்து கொண்டு சிரித்தாள். “அப்பாடா மேடம் சிரிச்சுட்டாங்க சரி ஸ்டார்ட் பன்னலாமா?” என்றான்.

 

அவள் வாயிலிருந்து பதில் வராமல் சிப்பாய் இரண்டடி முன்னே வந்தது. “ம்ம் சரிதான் ” என அவனும் சிப்பாயை முன்னேற்றினான்.

 

“அன்பு நான் ஏன் இங்கு வந்திருக்கேன் தெரியுமா?” என மெதுவான குரலில் கேட்டான்.

 

அவள் அவனது ராணியை வெளியேற்றிவிட்டு அவனை நிமிர்ந்து பார்த்தாள். சதுரங்க ராணி வெளியேற இவள்தான் அவன் ராணி என கூறும் தருனம் வந்தது.

 

-தொடரும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 67ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 67

உனக்கென நான் 67 சுவேதாவை கட்டாயமாக ஆபரேஷன் செய்துவிட்டு வருமாறு சுகுவுடன் அனுப்பிவைத்தான் சந்துரு. அவள் அழுதுகொண்டே சென்றது சந்துருக்கு வருத்தமாக இருந்தாலும் அபரேஷ்ன் முடித்து தங்களுடன் நீண்ட நாள் தங்கையாக வாழ்வால் என்ற தைரியத்துடன் தன் கண்ணீரை மறைத்துகொண்ட் அனுப்பிவைத்தான்.

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 22ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 22

22 – மனதை மாற்றிவிட்டாய் வண்டியில் செல்லும் போது இருவரும் அமைதியாக செல்ல ஆதி “என்ன பேசமாட்டேங்கிறா? கோபமா இருக்காளோ? பின்ன எத்தனை தடவ சாரி சொன்னா, கொஞ்சமாவது மதிச்சியா? எத்தனை கேள்வி கேட்டிட்டு காலைல இருந்து சுத்தி சுத்தி வந்தா.