“உன்னைப் பார்க்கவே எனக்குப் பிடிக்கல திவ்யா…. இங்கிருந்து போயிரு“
கண்ணீர் மேஜையின் மீது வடிந்தது. “ஏண்டா இப்படி பேசற“
“நீ என் கனவு தேவதை இல்லை… அந்தப் பெண் சுத்தமானவள்.. நீ அந்த உருவத்துல இருக்க அவ்வளவுதான்“
“…..” ரம்யாவால் பேசமுடியாத அளவுக்கு அழுகை விம்மிகொண்டு வந்தது.
“உனக்கு பணம்தான்டி முக்கியம்…. போ அந்த பீட்டர் கூடயாவது சந்தோஷமா இரு….” என்று கோபத்துடன் எழுந்து சென்றான். அவனது உணவுகள் குப்பையில் வீழ்த்தபட்டன.
ரம்யாவிற்கோ உலகம் இருண்டு விட்டது. ஏதோ பிரமை பிடித்தவள் போல் ஓர் இடத்தையே பார்த்தது கொண்டிருந்தாள். கண்கள் மட்டும் அதன் வேலையை பார்த்ததுகொண்டிருந்தது. அவளது காதில் விஷ்ணு கூறியது “திவ்யா….திவ்யா….திவ்யா…” என எதிரொலித்துக் கொண்டிருந்தது.
விஷ்ணு உணவுக் கூடத்தில் இருந்து வெளியேறும் முன்னர் தொப் என்ற ஓர் சத்தம் கேட்கவே திரும்ப ஓடி வந்தான்.
அவள்தான் மயங்கி சரிந்தாள். பூ போன்ற மென்மையான மனது அவன் புயல் வார்த்தைகளை தாங்க முடியாமல் மன அழுத்தம் ஏற்பட்டது. மேஜையின் அருகே ஓர் பொதியைப் போல சரிந்து கிடந்தாள்.
அவள்மீது கோபம் இருப்பினும் காதல் என்ற உணர்வு அவனது மூளையை புறக்கணித்து கால்களை அவளை நோக்கி ஓடிவரச் செய்தது. கட்டுப்பாட்டை இழந்தது கால்கள் மட்டும் அல்ல கைகளும்தான். அவளை மயிலை கையால் தூக்ககுவதைபோல ஏந்தியவன் முதலுதவி அறையை நோக்கி ஓடினான்.
அங்கு சில சிகிச்சைகள் செய்தனர் எந்த பலனும் இருப்பதாக தெரியவில்லை. இதயமும் மூச்சும் மட்டுமே விஷ்ணுவிற்காக இயங்கிக் கொண்டிருந்தது.
சுதாரித்துக் கொண்ட விஷ்ணு தனது நண்பனிடம் காரை வாங்கிக் கொண்டு அருகில் இருந்த மருத்துவமனை நோக்கி விரைந்தான். கூடவே அவளது அலுவலகத் தோழிகள் இருவர் உடன் வந்தனர்.
மருத்துவமனையில் சேர்த்த பின் வெளியே விசாலமான இருக்கையில் அமர்ந்து இருந்தான். எண்ணங்கள் அவனை கொல்ல துவங்கியது… உடலளவில் பலமாக தெரிந்தாலும் மனதளவில் பலம் குறைந்தவர்கள் இந்த ஆண்கள்தான்… எத்தனை பிரச்சனை என்றாலும் வெளியில் சொல்லாமல் தன்னையே காயபடுத்திகொள்ளும் இதயம். இன்று அவளிடம் மூளை நடந்துகொண்ட விதத்திற்கு இதயம் தண்டனையை அனுபவித்துகொண்டிருந்தது.
‘என்ன இருந்தாலும் நீ விசாரிச்சுருக்கணும் விஷ்ணு…’ –இதயம்
‘அதுதான் காலையில் அவன் கொடுத்த முத்தத்தை வாங்கிக் கொண்டு வந்தாளே அது போதாதா‘- மூளை
‘நீயும்தான் அன்று அந்த கவிதாவை கடற்கரையில்…..’ என இதயம் தன்பக்கம் உள்ள ஆயுதத்தை எடுக்க.
விஷ்ணுவின் கால்களில் யாரோ தீண்டுவதாக ஓர் உணர்வு. குணிந்து பார்த்துதான் தலையில் ஓர் கட்டுடன் ஒரு சிறுவன் கையில் ஓர் பொம்மை காரை வைத்துகொண்டு..
“ட்ரும்…ட்ரும்..ட்ரும்..ர்ர்ர்ர்ரு” என விஷ்ணுவின் கால்களில் இடித்து கொண்டிருந்தான்.
அவனை அப்படியே அள்ளிதூக்கியவன்… “யாருடா செல்லம் நீங்க” என கேட்டான்.
எவ்வளவு துன்பம் இருந்தாலும் ஓர் மழலையின் முகம் அனைத்தையும் விழுங்கிவிடும் என்பது உண்மைதான்.
முகத்தை மகிழ்ச்சியாக வைத்தவனை பார்க்கும் போது ரம்யா செய்யும் குறும்புத்தனம் நினைவுக்கு வந்து சென்றது.
அந்த மழலை தனது சிறிய இதழ்களால் “நீங்க யாமு“
லேசாக சிரித்த விஷ்ணு “நான் விஷ்ணு நீங்க?!”
“விஷ்வு…. நான் ராஜு” என விஷ்ணுவை விஷ்வுவாக மாற்றியிருந்தான்.
“நீங் ஏ விஷ்வு மாமா இங் இருக்க“
அந்த மொழி புதிதுதான் ஆனால் புரியகூடியது. உடனே ரம்யாவை காட்டி “இந்த அக்காவுக்கு உடம்பு சரியில்லை“
கையிலிருந்து இறங்கி ஓடியவன் ரம்யாவிடம் சென்றான். மயக்கத்தில் இருந்த அவளை தொட்டுபார்த்தது விட்டு மீண்டும் விஷ்ணுவிடம் ஓடி வந்தான்.
“அங் அக்கா பொம்மா மாதி அழகா இருக்கு மாமா” என கூற “ஆமா அவ பேரழகுதான்” என அந்த சிறுவனின் கன்னத்தில் முத்தமிட்டான்.
பதிலுக்கு முத்தமிட்டவன் “இந்தா மாமா இங் கார் அங் அக்கா கிட்ட குடு” என தன்னிடம் இருந்த காரை கொடுத்தான்.
அந்த நேரம் “டேய் ராஜு பையா ” என அவனது தாய் அங்கு வந்தார்.
“இது உங்க பையனா?!”
“ஆமாம்“
“என்ன பிராப்ளம் இவனுக்கு ஏன் தலையில் கட்டு போட்டிருக்கு“
அந்த தாய்க்கு அழுகை பீறிட்டு வரவே அவனை தூக்கிகொண்டு கிளம்பினாள்.
தன் கையில் இருந்த அவனது காரை பார்த்துக்கொண்டிருந்தான் விஷ்ணு. அங்கு வந்த செவிலியர் ஒருவர் “சார் அந்த பையன் அழகா இருக்ககான்ல“
“ம்ம்“
“ஆனா அந்த கடவுளுக்கும் அவனை பிடிச்சசிருச்சு போல அதான் இனனும் ஒரு வாரத்துல சொர்கத்துக்கு போயிடுவான்“
“என்ன?”
“ஆமா சார் அவனுக்கு மூளையில் கேன்சர்…. அந்த அம்மா பெரிய பணக்காரங்க ரொம்ப வருசத்துக்கு அப்புறம் பிறந்த குழந்தை….ஆனா சீக்கிரமே இறக்க போறான்… பணத்தை மட்டுமே வச்சிகிட்டு என்னசார் பன்றது” என கூறிவிட்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்தாள்.
அந்த வார்த்தையை கேட்ட விஷ்ணுவிற்கு தான் கூறியது நினைவுக்கு வந்தது “உனக்கு பணம்தான்டி முக்கியம்“
தன் தவற்றை உணர்ந்தவன் அவள் அப்படிப்பட்ட பெண் இல்லை என புத்திக்கு எட்டியது.
அவள் கண்விழித்து விட்டாள் என்று செய்தி வரவும் உள்ளே சென்றவன் அவளை பார்த்தான் அவளோ இவனை பார்த்ததும் கண்களை மீண்டும் நனைத்தாள்.
அவளருகில் சென்றமர்ந்தவன் கண்களை துடைத்ததுவிட்டான்.
“ஏண்டி என்னை கொல்லுற…. நீ இல்லாமல் நான் உயிரோட இருப்பேனா?!”
அவனை எதுவும் கூறாமல் பார்த்துக்கொண்டிருந்தாள்.
“நான் ஏதோ கோபத்தில பேசிட்டேன்னா அதை ஏன் சீரியஸா எடுத்துகிற“
என அவள் நெற்றியில் கைவைத்தான். அவளோ இவனை கண்கள் விரிய ஆழமாக பார்த்தாள்.
அவளது மூளை பல சிந்தனைகளுக்கு இடையே சிக்குன்டதால் அதன் வெப்பம் உயர்ந்திருந்தது.
“ஏண்டி சும்மாவே நீ ஒல்லிக் குச்சி இதுல நீ சாப்பிடுற பாதி சாப்பட்ட மூளைக்கே செலவு பன்னிருவ போலையே…” என கூறினான்.
அவளோ லேசாக சிரிக்க முற்பட்டாள்.
“இங்க பாரு எதையாவது யோசிச்சு கிட்டு இருக்காத… ஒழுங்கா ரெஸ்ட் எடு இல்லை ஒதை விழும்” என அவன் கையை ஓங்க சிரித்துவிட்டு கண்களை மூடினாள்.
சிறிது நேரம் அவளையே பார்த்துகொண்டு அமர்ந்திருந்த விஷ்ணுவை டாக்டர் வந்து எழுப்ப “கொஞ்சம் வெளிய வாங்க“
“சொல்லுங்க டாக்டர்“
“இது சரியா தூங்காததால இருக்கலாம்… சாப்பாடும் ஒரு காரணம்தான்… ஆனால் முக்கியமான காரணம் இது இரண்டும் இல்லை“
“வேற என்ன டாக்டர்“
“அவங்க மனசுக்குள்ள எதையோ வச்சுகிட்டு இருக்காங்க அதை அவங்க சேர் பண்ணாத்தான் ரிலாக்ஸ் ஆவாங்க“
“அப்படின்னா“
“உதாரணத்திற்கு யாரையாவது மிஸ் பண்ணாங்கன்னா இந்தமாதிரி ஏற்படலாம்… கோபம் கூட இதற்கு காரணமாக இருக்கலாம்… தனக்கு ரொம்ப நெருங்கியவங்க திட்டினால் கூட இப்படி நடக்கலாம்… இது மனது சம்பந்தப் பட்ட பிரச்சனை“
“ஓ அப்படியா டாக்டார் நான் பார்த்துகிறேன்“
“இன்னும் ஒருமணி நேரத்துல கூட்டிட்டு போயிடலாம்… இன்னைக்கு இவங்க நல்லா ரெஸ்ட் எடுக்கட்டும்… நான் சில மருந்துகள் எழுதி தாரேன்..” என அவர் கிளம்பினார்.
தனது நண்பனின் காரில் இருவரும் ஏற லேசான சத்தத்துடன் அது கிளம்பியது. ரம்யா சோர்வாக அமர்ந்திருந்தாள். அவளது காப்பகத் தோழிகளிடம் ரம்யா ஊருக்கு சென்றதாக தகவல் தெரிவித்துவிட்டு கார் விஷ்ணுவின் வீட்டை நோக்கி பயணித்து கொண்டிருந்தது.
ரம்யாவை பார்த்துக்கொள்ள ஓர் பெண் வேண்டும் என்பதால் கவிதாவிற்கு சற்று தயக்கத்துடன் வாட்ஸ்அப்பில் மெஸேஜ் செய்தவனுக்கு சில நொடிகளிலேயே அழைப்பு வந்தது.
“ரம்யாவுக்கு என்ன ஆச்சு சொல்லுங்க“
“இல்லை ஜஸ்ட் மயக்கம்தான்“
“சரி நான் ஈவ்னிங் வந்திடுறேன்“
மொத்த நேரங்கள் 0:12 நொடிகள் இனைப்பு துண்டிக்கப்பட்டது.
கார் மெதுவாக சென்று கொண்டிருக்க ரம்யாவின் ஒரு கையை பற்றிகொண்டான் விஷ்ணு. அவளோ சாலையை பார்த்துகொண்டு வரும் ஒரு குழந்தையாக இருந்தாள்.
வழியில் ஒரு பூங்கா தென்படவே அவளது இதயம் இங்கு இளைப்பாறலாம் என கூறியது விஷ்ணுவிற்கு புரிந்தது.
வாகனத்தை நிறுத்தியவன் அவளருகில் வந்து நிற்க, இவன் தோளில் சாய்ந்துகொண்டு நடக்கத் துவங்கினாள்.
ஒரு மரத்தடியில் இவர்களுக்கெண்றே ஒதுக்கப்பட்ட இருக்கை இருக்கவே இருவரும் அமர்ந்தனர்.
அந்த வழியே சென்ற காதல் ஜோடிகள் அவர்களுக்கான இடத்தை தேடி அழைத்தனர். அவர்கள் கண்களும் இவர்கள் மீது சிலநேரம் பாய்ந்தது.
“இப்படி புதர் மறைவில் அமர்ந்து என்னதான் பேசிவார்களோ ” என விஷ்ணு தன் நண்பன் ஒருவனிடம் கூறியது நினைவுக்கு வந்தது. சரி என்ன நடக்கிறது பார்ப்போம் என்று அமர்ந்திருந்தான் அமைதியாக.
அவள்தான் துவங்கினாள்…. “என்னை மன்னிச்சிருடா“
அவளது முகத்தை பார்த்து “என் செல்லம் என்ன தப்பு பண்ணிங்க மன்னிக்கிறதுக்கு” கண்களில் காதல் இருந்தது
மீண்டும் அழுகை வர அறிகுறி தெரியவே “அழாதடி… உனக்கு என்ன பிரட்சனை இருந்தாலும் சொல் நான் இருக்கிறேன்” என தோளில் சாய்த்து கொண்டான்.
“கீர்த்தி….” என்ற ஓசை கேட்டது அவளிடமிருந்து.
“என்ன கீர்த்தியா“…
கீர்த்தியும் திவயாவும் கூட்டுப் பூழு தோழிகள்…. சிறுவயதில்..
“உனக்கு திவ்யா அப்டிங்குற பெயர் நல்லாவே இல்லைடி “
“எனக்கும்தான் பிடிக்கலை“
“பின்ன ஏன் வச்சுகிட்ட “
“நான் எங்க வச்சேன் எங்க அப்பாதான் இதுக்கெல்லாம் காரணம்“
“எனக்கு திவ்யா பிடிக்கவில்லை உன்னை வழக்கம்போல ரம்யான்னுதான் கூப்பிடுவேன் சரியா“
“எனக்கும் அதுதான் பிடிச்சிருக்கு நீ அப்படியே கூப்பிடு“
“சரி ரம்மி“
புது திவ்யாவாகிய ரம்யா முறைத்தாள்.. ரம்மி என அழைத்ததால் கோபம் அவளுக்கு
“சரி சரி ரம்யா ஒருதரம் ரம்யா இரண்டு தரம் ரம்யா மூன்று தரம்” என ஏலம் விட்டாள் கீர்த்தி.
கோபமாக அவளை துரத்திக்கொண்டு ஓடினாள் ரம்யா. அப்படியே மழலைகள் படை சூழ்ந்துகொள்ள அது ஓடிப்பிடித்து விளையாடும் விளையாட்டாக மாறியது.
இப்படிதான் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும்போது ரம்யாவின் கையைப்பிடித்து ஒருவன் இழுக்க கீழே விழுந்தாள். அவள் எழுந்திருக்கும் வரை காத்திருந்தவன்.
“இங்கபாரு திவ்யா நான் உன்னை காதலிக்கிறேன்… நீ ஒத்துக்கலைன்னா உன்னை கொன்னுடுவேன்” என பையிலிருந்த கத்தியை எடுத்தான்.
அடுத்த கனம் கீர்த்தியின் காலில் இருந்த செருப்பின் தூசிகள் அவனது கன்னத்தில் இருந்தது.
“ஏண்டா நாயே ஒரு பொண்ணுக்கு உன்னை பிடிச்சிருந்தா லவ்வ சொல்லு ….. அவளுக்குப் பிடிக்கலைன்னா விலகி போயிரணும்… அதை விட்டுட்டு கத்தியைக் காட்டுற” என கீர்த்தி ஆயிரம் சரவெடியாய வெடிக்க அவன் ஓட்டமெடுத்தான். அவளோ கீர்த்தியின் பின்னால் மறைந்துகொண்டாள்.
அவளை முன்னால் இழுத்தவள் “ஏண்டி அவன் அப்படி பேசிகிட்டு இருக்கான் நீ அமைதியா இருக்க… கத்தி வேற நீட்டுறான்“
“நான் பொண்ணா இருந்துகிட்டு என்னடி செய்யமுடியும்“
“அப்போ நான் பொண்ணு இல்லையா“
“……” தலையை குனிந்து அமைதியாக இருந்தாள் ரம்யா.
“இங்க பாருடி நமக்கு வருகிற பிரச்சனையை நாம்தான் சமாளிக்கணும்… சிலரை பேசித் திருத்தலாம் இந்தமாதிரி நாயை எல்லாம் பளார்னு குடுத்தாதான் திருத்தும் …. என்ன புரிஞ்சதா“
“ம்ம்” என தலையாட்டியவளுக்கு கீர்த்தி கொடுத்த அறிவுரைதான் பேருந்தில் ஒருத்தனுக்கு கொடுத்த அறைக்கும் திடீரென வந்த தைரியத்திற்கும் காரணம் என தெரியும்.
‘இவள் இதுக்கு மேல் விட்டால் ரொம்ப அறிவுரை கூறுவாள்‘ என நினைத்த ரம்யா
“உன் ஆளு அருணும் உன்கிட்ட இப்படிதான் அடி வாங்குவானா” நக்கலாக கேட்டாள் ரம்யா.
“சே சே அவர் ரொம்ப நல்லவர்… அவரை பற்றி பேசாதே” என கீர்த்தியின் முகம் வெட்கத்தில் சிவந்தது.
அவளை சீண்டி கொண்டே மைதானத்தில் இருந்து வகுப்பை அடைந்தனர் இருவரும்.
பள்ளிவாழ்கை முடிவில் கீர்த்தியும் ரம்யாவும் பிரியும் தருணம் வந்தது. அருணுக்காக கீர்த்தியோ இயந்திரப்பிரிவினை எடுத்தாள். அருனுடனேயே இருக்கவேண்டும் எண்ணம் அவளுக்கு. ரம்யாவும் அதே பிரிவுதான் ஆனால் வெளியுலக அனுபவம் இல்லாததால் தனது ஊரில் ஓர் கல்லூரியில் சேரந்துகொண்டாள்.
அவளது மதிப்பெண்ணிற்கு இது மிக குறைவுதான்.
அந்த பிரிவிற்கு பின் இருவரும் அடிக்கடி பார்க்கமுடியாத சூழ்நிலை ஏற்பட்டது. எப்பொழுதாவது தீபாவளி பொங்கல்தான். அதிலும் அருனுடன் நேரத்தை செலவழிக்க சென்று விடுவாள் கீர்த்தி.
இவர்களுக்கிடையே இருக்கும் ஒரே பாலம் கைபேசிகள் தான் அதிலும் நவினமயமாக்கப்ட்ட வாட்ஸ்அப் ஒரு வரப்பிராசாதமாகவே அமைந்தது. இருவரும் ஒருவரை ஒருவர் அருகில் இல்லாத குறையாக தன்னை சுற்றி நடக்கும் அனைத்தையும் பகிர்ந்துகொண்டனர்.
ஆனால் சிலநாட்களாக கீர்த்தியடம் இருந்து அழைப்பு வரவில்லை. ‘சரி புராஜக்ட் பன்னிகிட்டு இருப்பாள்‘ என நினைத்த ரம்யாவிற்கு அவளிடம் பேசவேண்டும் என்று தோன்றியது.
கைபேசியில் வித்தை காட்டினாள் ரம்யா.
“கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை
என் கண்களை பறித்துக்கொண்டு ஏன் இன்னும் பேசவில்லை…” என காலர்டியூன் ஒலிக்க..
‘ஏன்டி உன் கண்தான் எட்டு வருசத்துக்கு முன்னாடியே காணாமல் போச்சேடி அருண்கிட்ட‘ என முனங்கியநேரம் இணைப்பு ஏற்கப்பட்டது.
“ஏன்டி ஒரு ஃபோன் பண்ணமாட்ட வாட்ஸ்அப்ல கூட ரிப்ளை இல்லை” எண்ணெயில் கடுகாகப் பொரிந்தாள் ரம்யா.
அந்தபக்கத்தில் மூச்சு வாங்கும் சத்தம் கேட்டது…”ரம்யா ….” குரல் உடைந்திருந்தது.
“என்னடி ஆச்சு ஏன் மூச்சு வாங்குற”
“மீரா அக்கா இருக்காங்கல்ல”
“யாரு?!”
“அதான்டி எங்க ஹாஸ்டல்ல இருக்காங்கன்னு சொல்லிருக்கேனே”
“ஆமா அவங்க கன்சீவா இருந்தாங்கல்ல என்ன குழந்தை பிறந்துடுசச்சா… அது எப்படி மூன்று மாதத்தில் பிறக்கும்” என கிண்டலை தொடர்ந்தாள் ரம்யா.
கீர்த்தியிடம் இருந்த அழுகை சத்தம் மட்டுமே வந்தது.
“ஏன்டி என்னடி ஆச்சு கீர்த்தி.. சொல்லு”
“அவங்க அமெரிக்கா போறாங்கன்னு சொன்னேன்ல”
“ம்ம்”
“அங்க அவங்களுக்கு பிரச்சனை போல அந்த பீட்டர் ஏமாத்திட்டான்டி… அதான் நான் போலிஸ் ஸ்டேஷன் போறேன்” என கீர்த்தி நடந்தாள்.
“சரிடி பாத்து போ” என கூறி போனை வைக்க முயன்றால் அதற்குள் அந்த ஒலிபெருக்கியில் இருந்த அலறல் சத்தம் கேட்டது. மீண்டும் காதினருகில் போனை கொண்டுவந்தாள் ரம்யா..
மறுமுனையில் “ஏண்டி போலிஸ் ஸ்டேஷனா போற” அது ஆணின் குரல்.
“டேய் என்னை விடுங்கடா ” இது கீர்த்தி.
“எங்க பாஸ்ஸை எதிர்த்தால் என்ன நடக்கும்னு தெரியணும்ல… அந்த மீரா எப்புடி போனா உனக்கு என்னடி” இது வேறு ஆணின் குரல்.
“டேய் என் அருனை என்னடா பண்ணிங்க” கீர்த்தியின் இந்த குரலில் இருந்து அருண் இறந்துவிட்டான் என்பது தெரிந்தது.
“என்னடி ஓவரா துள்ளுர” என பளார் என்ற ஓர் அரை கீர்த்திக்கு விழுந்தது. கார் இன்ஜின் சத்தம் ஃபோனில் கேட்கவே கீர்த்திக்கு ஆபத்து என ரம்யா உணர்ந்ததால் கண்ணீர் வடிந்தது.
சிறிது நேரம் சென்றபின் இன்ஜின் சத்தம் நிற்கவே கீர்த்தியின் அலறல் சத்தம் கேட்டது..
“டேய் என்னை விட்டுடுங்கடா…..”
அனைவரும் சேர்ந்து அவளை சிதைப்பது ரம்யாவிற்கு தெரிந்தது. காட்டில் இணைப்பில் போதிய சக்தி இல்லாததால் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
சிறிது நேரம் கழித்து ஓர் குறுஞ்செய்தி வாட்ஸ்அப்மூலமாக வந்தது. அதை கண்ணீருடன் தன் விஷ்ணுவிடம் காட்டினாள் ரம்யா.
அதை வாங்கியவன் கீர்த்தி என சிரித்த முகத்துடன் ஒரு பெண்ணின் படம் இருக்க பல உரையாடல்கள் நடந்திருந்தன எழுத்துவடிவில். எல்லாவற்றையும் மேலே தள்ளியவன் இறுதி பக்கத்தை அடைந்தான்.
அதில்…
ரம்யா, அருணைக் கொன்று விட்டனர். அவர் இறந்தபின் நான் வாழ்வதில் அர்த்தம் இல்லை… ஆனால் என் வாழ்கையை கலங்கபடுத்திவிட்டனர். என் கற்பு பறிபோயிற்று, அந்த பீட்டர் தான் இதற்கு காரணம். மீரா அக்கா அமெரிக்கா செல்லவில்லை வேறு எங்கேயோ இருக்கிறாள் என கூறினாள்.. இந்த நேரம் அவளும் இறந்திருப்பாள். நான் உன்னை மிஸ் பன்றேண்டி ரம்மி.
என பதிவுசெய்யபட்டிருந்தது. நினைவுகளை பின்னே செலுத்தியவனுக்கு அந்த செய்திதாளின் தலைப்பு நினைவுக்கு வந்தது.
*காட்டில் பாலியல் உறவில் ஈடுபட்டிருந்த கீர்த்தனா என்ற பெண்ணும் அருண் என்ற மாணவனும் பாம்பு கடித்து மரணம்” அதை பார்த்த விஷ்ணு கூட அவர்களை ஒருமுறை திட்டியிருந்தான்.
“அவள் பெயர் கீர்த்தனாவா?!”
“ம்ம் கீர்த்தனா… நான் கீர்த்தி அப்படின்னு தான் கூப்பிடுவேன்” என கூறும்போது அவளது விழியில் நீர் கசிந்த நீல விழிகள் சிவப்பாக மாறியிருந்தன.
சற்று நிமிர்ந்தவள் கண்களை துடைத்துகொண்டு “அதான் விஷ்ணு அந்த பீட்டரிடம் வேலைக்கு வந்தேன்.. அவனை என் கையால் கொன்றால்தான் என் கீர்த்தி ஆத்மா சாந்தியடையும்” என கண்களில் வெறி தெரிந்தது.
விஷ்ணுவோ குழப்பத்துடன் அவள் முன் அமர்ந்திருந்தான்
“எனக்கு தெரியும் விஷ்ணு உன் வாழ்கைக்கு அர்த்தம் அளித்ததே அவன்தான்… நீயோ கர்ணன் போன்றவன் அதனால் தான் நான் இதை உன்னிடம் கூறினால் என்னை வெறுத்து விடுவாய் என்று பயந்தேன்.”
விஷ்ணு எதுவும் பேசவில்லை
“சொல்லு விஷ்ணு நான் இப்ப என்ன செய்ய?!” ஏக்கமாக பார்த்தாள்.
அவளுக்கு என்ன சமாதானம் சொல்வது என திணறியவன் அவளது இழப்பு பெரியது என உணர்ந்தான்.
‘பீட்டரின் செயல்களுக்கு தண்டனை தருவது நியாயம் தான் ஆனால் இவள் ஏன் கொலைகாரி ஆகவேண்டும்… சட்டத்தின் வழியாக பார்த்துகொள்ளலாம்‘ என நினைத்து எழுந்தவன் ரம்யாவையும் கைதாங்கலாக தூக்கி தன் தோளில் சாய்ந்து கொண்டு நடக்க ரம்யாவோ இவன் மனதில் இருப்பதை அறிய முடியாமல் குழப்பத்தில் இருந்தாள்.
கார் மெல்லிய சத்தத்துடன் புறப்பட இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. மௌனமாகவே சென்று விஷ்ணுவின் வீட்டை அடைந்தனர்.
ஆனால் அங்கு அவர்களுக்கு முன்பே கவிதா வந்திருந்தாள். காரை விட்டு இறங்கியதும்.
“விஷ்ணு சார் இனிமே நான் எங்க அக்காவை பார்த்துகிறேன் ஏறுங்க ரம்யா” என ஸ்கூட்டருக்கு உயிர்கொடுத்தாள்.
ரம்யாவோ இவனை பார்க்க “நீ போ அவள் உன்னை நல்லா பாத்துப்பா” என்பது போல சைகைகாட்டினான்.
அவனது அனுமதியுடன் அவள் ஏறி அமர ஸ்கூட்டரோ ஒரு தேவதை தன்வீட்டிற்கு வருகிறாள் என்று மகிழ்ச்சியில் விஷ்ணுவின் கருப்பன் மீது ஒளியை பிரதிபலித்து விட்டு சென்றது.
அதை பார்த்தவன் “ஏன்டா கருப்பா உனக்குக் கூட லவ்வா” என கூறிகொண்டே விஷ்ணு கார் கதவை சாத்தினான். அங்கு ரம்யாவின் கைபை இருந்தது.
அதை எடுத்துகொண்டு வீட்டிற்குள் சென்றான்.
அதை மேஜையின் மீது வைத்துவிட்டு கிச்சனில் நுழைந்தவன் மூன்று மணிநேரம் கழித்து வெளியே வந்தான். எல்லா பேட்ஜ்லர்களும் கிச்சனில் படும்பாடு இது. இறுதியாக கையில் காபியுடன் வெளியே வந்தவன் நீண்ட நாட்களுக்கு பிறகு முகநூலுக்குள சென்றான். அது இவனது நேரத்தை மலைப்பாம்பு போல விழுங்க வயிறு ஹைட்ரோகுளோரிக் அமிலத்தை சுரந்தது.
மொபைலை வைத்தவன் சாப்பிட சென்றான். ஒரு வாய் வைத்தவுடன்..
“ஏண்டா விஷ்ணு எல்லா பொருளும் அதிகமா இருக்குங்கிறதுக்காக இப்புடியா தாராள மனதை காட்டுவது…
இந்த உப்பில் சாம்பார் கம்மியா இருக்குடா” என தன் வள்ளல் திறமையை எண்ணி வியந்தான். வேறு வழியில்லாமல் உண்டு முடித்தான்.
சரி ரம்யா என்ன செய்கிறாள் என கேட்போம் என ஃபோனை தட்டிவிட..
மறுமுனையில் கவிதா “சொல்லுங்க சார்”
“ரம்யா எங்க ”
“அவங்க சாப்பிட்டு தூங்கிட்டாங்க”
“சரி அவளை பத்திரமா பாத்துக்கோ”
“என் அக்காவை பாத்துக்க எனக்கு தெரியும் சார் நீங்க ஒன்னும் சொல்லவேண்டாம்” என உரிமை எடுத்துக்கொண்டாள் குரலில் கோபமும் தென்பட்டது.
அந்த வேகத்தில் இனைப்பு துண்டிக்கப்பட்டது.
சரி என போனை வைக்க அவனது போனின் மாமுல் இடத்தை அவளது கைபை அடைந்திருந்தது. அதை பத்திரமாக வைக்க எடுக்கும்போது அதிலிருந்து சில பொருட்கள் வரிசையாக விழுந்தன.
அதை எடுத்து மீண்டும் அதனுள் வைத்தவன் இறுதியாக ஒரு டைரி இருப்பதை பார்த்தான். அதை கையில் எடுத்தவன் மனதில் ‘அடுத்தவர் டைரியை படிப்பது தவறு‘ என தோன்ற அதை கீழே வைக்க கொண்டுசென்றான்.
அதற்குமுன் ‘அடுத்தவள் என்று எப்படி நினைக்கமுடிகிறது உன்னால்..அவள் உன்ன்வள்… அதுமட்டுமில்லை அவளது கடந்த காலத்தை பற்றி தெரிந்தாள் அவளது மனகவலையை போக்க வழி கிடைக்குமல்லவா‘ என தோன்றவே அதை எடுத்துகொண்டு தனது மெத்தைக்கு சென்றான்.
முதல்பக்கத்தை திரும்பியதும்..
கனவுகள் கடவுளின் வரங்கள்
அதை கண்ணகலவிடாமல்
கல்வெட்டாகப் பொறிக்கிறேன் உன்னில்..
என கவிதை இருக்கவே அவளது கவிதை திறனை மெச்சினான் விஷ்ணு.
அடுத்த பக்கத்தை புரட்டியதும்… ஏதோ அவளால் முடிந்த அளவுக்கு ஓர் ஓவியம் வரைந்திருந்தாள் அது ஒரு மன்னரின் உருவம்…. கவிதை போட்டியில் அவளிடம் தோற்ற விஷ்ணு ஓவியபோட்டியில் வென்றதால் சற்று பெருமிதம் கொண்டான்.
அடுத்த பக்கத்தில்….
அவனது முதல் சந்திப்பு இப்படி அமையும் என எதிர்பார்க்கவில்லை. ஆம் அன்று கனவில் தோழியுடன் நடந்து சென்றநேரம் தீடீரென ஓர் புலி எங்களை குறுக்கிட்டது.
என்னதான் இளவரசியாய் இருந்தாலும் என் தோழிகளைக் காப்பது இந்த இந்திராணியின் கடமை அல்லவா அதனால்தான் உயிரை மதிக்காமல் அந்த புலியின் மேல் பாய்ந்தேன்.
ஆனால் எனது தோழிகள் கூச்சலிட்டனர். அதுவும் நன்மைக்கு தான் அப்படி இல்லையெனில் அவன் அங்கு வந்திருக்கமாட்டான். என்ன ஒரு கம்பீரம்.
அவன் கூடவே தீவுகளின் அரசன் வந்திருந்ததால் இவன் உலகின் மிகச்சிறந்த அறிவாளி இந்திரவர்மன் என அறிந்துகொண்டேன். ஆனால் நான் அவனை கண்டதும் காதலில் விழுந்துவிட்டேன். போரில் உணர்வுகளுக்கு இடமில்லை. ஆனால் காதல் புகுந்த சிறிது நேரத்திலேயே என உடலில் பலம் குறைந்தது. அதை பயன்படுத்திய புலி என் தோளில் அதன் நகத்தை பதித்துவிட்டது. அதைக் கொன்றால்தான் அவனுடன் பேசமுடியும் என நினைத்த நான் அதை தூக்கி வீசி என் கத்தியை எடுத்தேன்.
ஆனால் அவனோ தன் வர்ம வித்தையைப் பயன்படுத்தி அதை மயக்கமடைய செய்துவிட்டான். அதன்பின் அவனிடம் பேசியவை இங்கு குறிப்பிட முடியாது.
ஆனால் என் தோழி துளசிக்கு அவன்மீது காதல் வந்துவிட்டது. அதைத் தடுக்கவே..
“நீ ஒன்றும் முடிவு செய்யாதே” என அவளை மிரட்டினேன்.
அதன்பின் சில நாட்களாக அவன்மீது காதல் அதிகரித்தது.. எந்த அளவுக்கு என்றால் போரில் அம்பு மழைகளை மீறி என் உயிரை பணயம் வைத்து அவன் உயிரை அல்ல என் உயிரை காத்தேன்.
உன்னை நேரில் பார்க்க ஆவலாக உள்ளது இந்திரவர்மா என் காதலா.... எப்போது வருவாய்… என எழுதியிருக்க
விஷ்ணுவின் மனதில் “இந்திரவர்மா இந்திரவர்மா இந்திரவர்மா ” என மீண்டும் ஒலித்தது. மூளை தன் கட்டுபாட்டை இழந்து கனவில் புகுந்தது.
அந்த அரண்மனை கதவின் முன் காண்டீபனும் விஷ்ணுவும் நின்றிருந்தனர்.
கணபதியின் ‘காதல் யுத்தம் ‘ – 8
