Tamil Madhura தொடர்கள் கணபதியின் ‘காதல் யுத்தம் ‘ – 5

கணபதியின் ‘காதல் யுத்தம் ‘ – 5

ம்யாவும் விஷ்ணுவும் அந்த சாலையில் நடந்துவர தென்றல் அவர்களை தொட்டுபார்த்து இது கனவா இல்லை நிஜமா என உறுதிபடுத்தி சென்றது.

விஷ்ணு தம்பி சலாம் மலேக்கும்
என அவர்களின் இடதுபுறத்தில் இருந்து ஒரு குரல்.

இது பாய்தான் என்பது குரலால் அறிந்தான். பாய் என்றால் பிரியாணி  மட்டும் இல்லை அவரின் சுக்கு காஃபியும் மனதை வருடகூடியதுதான்.
நாவில் அவரது காஃபியை ஆவலுடன் எதிர்பார்க்கும் சுவை நரம்புகள் முந்திக்கொண்டு நிற்க

நீயும் வா சாப்பிடலாம்என ரம்யாவிற்கு அழைப்பு விடுத்தான்.

இல்லை நீங்க சாப்பிட்டு வாங்கஎன தலைகுனிந்து கொண்டே கூறிய ரம்யா திவ்யாவாக மாறி அலுவலகத்திற்குள் நுழைந்தாள்.

என்ன தம்பி லவ்வாஎன சூடான நக்கலுடன் காஃபியையும் கையில் ஏந்திகொண்டு வந்து நின்றார் பாய்.

அட நீங்க வேற ஏன் பாய்!!” என ஆணுக்கும் வெட்கம் ஏற்படும் என்பதை காட்டினான்.

அவரது பெயர் இவனுக்கு தெரியாது..‌ இவர்களுக்குள் உணர்வுபூர்வமான அன்பு  இருப்பதால் பெயர் தேவைபடவில்லை ஒப்பனைக்கு பாய் என கூறிவந்தான். ஆனாலும் ஒருநாளும் சுக்குக்  காஃபியைத்  தவறவிட்டதில்லை.

காஃபியை குடித்தவன் நாவில் சுவை மாறும் முன்பே பாயிடம் இருந்து விடுப்பு வாங்கிகொண்டு அலுவலகத்தில் நுழைந்தான். அங்கு பிரவின் வந்தது நிற்க.

என்டா ஏதோ ஊருக்கு போறேன்னு சொன்ன?!” என விஷ்ணு கேட்க

அட நீ வேற ஏன்டா வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுற

ஏன்டா என்னடா ஆச்சு?!”

அதான் நம்ம தங்கமான முதலாளி பீட்டர் இருக்கானே அவன் இனிமே இங்கதான் இருப்பானாம்

என்ன?!”

ஆமாண்டா அவனுக்கு ஐ.டி பொண்ணுங்க போர் அடிச்சிட்டாங்க போலஆபிஸைகூட இங்க மாத்திட்டான்டா

ஏன் உன் ஆளு மாலதியை நினைத்தது பயப்படுறியா

ஹுக்கும்…. அவள் என் தங்ககட்டிடா…. சுத்தத்  தங்கம்

அப்பறம் ஏன் புலம்புற?!”

அது ஒன்னும் பெரிய ரகசியம் எல்லாம் இல்லைஇப்ப புதுசா ஒரு பொண்ணு வந்திருக்காளேபெயர் ஏதோ…. ” என யோசித்தவன்திவ்யாஎன முடிக்க விஷ்ணுவின் இதயம் வேகத்தடையில் ஏறும் வாகனத்தை போல சிரமபட்டது.

என்ன திவ்யா வா?!”

ஆமா அந்த பொண்ண இன்டர்வியூல பார்த்தவுடனே முடிவு பண்ணிட்டான் போலஅந்த பொண்ணுக்குதான் வெளிச்சம்என பிரவின் முடிக்கும் முன்னே விஷ்ணுவின் உலகம் இருன்டுவிட்டது. அமைதியாக அங்கிருந்து நகர்ந்தவன் தன் இருக்கையை அடைய சுற்றிலாம் மூடப்பட்ட பீட்டரின் அறையில் இருந்து திவ்யா வெளியே வந்தாள்.

முகத்தில் எந்த சலனமும் இல்லை. அமைதியாக வந்து அமர தன் நீலவிழிகளை வைத்து விஷ்ணுவை தாக்க அதில் முழுவதும் காதல்குடிகொண்டிருந்தது. ஆனால் விஷ்ணுவின் மனம் தான் காதில் விழுந்த ஓர் பழைய நினைவை புரட்டி பார்த்தது.

மீரா ஒரு முயல்குட்டிதான் என்று கூறவேண்டும். நல்ல திறமையும் உழைப்பும் அழகும் உடைய ஒரு பெண். அவள் ஓரிடத்தில் நின்று பார்த்தவர்கள் என்றால் யாரும் இல்லை என அறிதியிட்டு கூறலாம்.

அவளுக்கு சொந்தம் என்று சொல்லிகொள்ள யாரும் இல்லை. அதனால்தானோ என்னவோ இவள் தனது உணர்வுகளை மறந்து ஓர் இயந்திரமாக இயங்கிகொண்டிருந்தாள். ஒரு அனாதை விடுதிதான் தஞ்சம் புக இருந்த ஒரே கூடு அவளுக்கு. பெண்மையை போற்ற வேண்டிய வயதில் அவளோ லட்சியத்திற்க்கு தன்னை அடிமையாக்க அவளது உழைப்பால் பீட்டரின் ஒரு மென்பொருள் நிறுவனம் மிகவேகமாக முன்னேறியது. கூடவே அவளது பெயரும் பீட்டரின் மனதில் மேல்நிலைக்கு வந்தது.

மீரா நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்” – பீட்டர்

சொல்லுங்க சார் நான் அந்த டிகிப்சன் புராஜக்டை ஏற்கனவே உங்ககிட்ட சப்மிட் பன்னிட்டேன்

ஐயோ மீரா நீ ஒரு பெண் அப்படிங்கறது உனக்கு நினைவிருக்கா?”

ஏன் சார் அப்படி கேட்கறீங்க?!” என குறைவான குரலில் கூறினாள்.

நீ ஒரு பெண்ணா உணர்கிறாயோ இல்லையோ நான் ஒரு ஆண் அதனால் ஒன்னு சொன்னா தப்பா நினைச்சுக்க மாட்டியே

சொல்லுங்க சார்

முதல்ல இந்த சார் அப்படின்னு கூப்பிடுறத நிறுத்து

ஏன் சார்

ஏன்னா மீரா அப்படின்னா எனக்கு ரொம்ப பிடிக்கும் திங்க் லவ் யு

என்ன சொல்றீங்க பீட்டர்

உனக்கும் என்னை பிடிக்கும் அப்படின்னு தெரியும் உனக்கு ஒரு துணை  இப்பொழுது தேவை மீராஎன வறண்டு போயிருந்த அவளது அன்பு ஓடையில் பாசம் என்னும் நீரை பாய்ச்சினான்.

அதுவரை தேக்கி வைத்திருந்த அனையை உடைத்துக்கொண்டு அன்பு என்னும் வெள்ளம் பீறிட்டு வெளிவந்தது மீராவுக்கு.

தாய் குழந்தையை கட்டியணைக்க கையை நீட்டுவது போல கையை விரித்தான் பீட்டர். அந்த பாசகயிற்றில் சிக்கியவள் அவனை ஒரு குழந்தைபோல கட்டியணைத்து கொண்டு கண்ணீர் சிந்த அதுவரை பெண்ணாக சமுதாயததில் தனியாக தான் பட்ட இன்னல்களுக்கு மருந்து கிடைத்தது என அவனை மனதில் நிறைத்தாள்.

அவளது காதல் பீட்டரின் பல நிறுவனங்களுக்கு புரளியாய் வந்து சேரும்முன் அவர்கள் எல்லாவிதத்திலும் இணைந்து விட்டனர். எனவே புதிய முதலாளி மீரா என எதிர்பார்த்திருந்த தருணம். இன்னும் சில தகுதிகளை வளர்த்துகொள்ள வேண்டும் எனவே இந்தியாவில் முடியாது வா நாம் லண்டனில் குடியேரலாம் என இருவரும் கிளம்ப ஆயத்தமாகினர்.

தன்னவனுடன் வெளிநாட்டில் புதுவாழ்வு துவங்கபோகும் எண்ணத்தில் காதல் கடலில் நீந்தி கொண்டிருக்க அந்த விடுதியில் படிப்பிற்காக தங்கியிருந்த கீர்த்தி அங்கு வந்தாள்.

மீராவுக்கு மனதளவில் நெருங்கிய ஒரே தோழி கீர்த்தனா தான். பின்ன மிகவும் சிடுசிடுப்பாக இருந்தால் நண்பர்கள் கிடைப்பது அரிதுதானே.


கையில் கணித புத்தகத்துடன் வந்த கீர்த்தனா
என்ன அக்கா ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க

உனக்குத்தான் தெரியுமேஎன காதில் புதிய தோடை மாட்டிக்கொண்டேன் கூற

கங்ராட்ஸ் அக்கா எத்தனை மாசம்என வயிற்றில் கை வைத்தாள்

கீர்த்தி உன்னை…..” என கையை ஓங்க

இல்ல அக்கா எத்தனை மாசம் கழிச்சு திரும்பி வருவீங்கன்னு கேட்க வந்தேன்என கபடமாக சிரித்தாள்.

இல்லை இனிமே திரும்ப வரமாட்டேன் என நினைக்கிறேன் அப்படிதான் பீட்டர் பேசறத பார்த்தா தோணுதுஎன கூறிவிட்டு தன் கையில் இருந்த ஓர் வைர மோதிரத்தை கழற்றி கீர்த்தனாவின் கையில் அணிவித்தாள்.

அக்கா இதெல்லாம் வேண்டாம்

என் நியாபகமா வச்சுக்கோஎன கீர்த்தனாவின் கன்னத்தில் முத்தமிட்டாள் மீரா. அதை பார்த்த அந்த விடுதியின் வயதான காப்பாளர் ரஞ்சிதம் அம்மா முகம் சுழித்து கொண்டு செல்ல இருவரும் அதன் அர்த்தம் உணர்ந்து சிரித்துகொண்டனர்.

இரண்டு நாட்களுக்கு பிறகு வெளிநாட்டில் இருந்தபீட்டரின் மொபைலில் இருந்து ஒரு அழைப்பு மீராவிற்கு வர அதை எடுத்தவள்.

கீர்த்தனா கீர்த்தனா……”

ஆமா நான் கீர்த்தனாதான் நீங்க

“….” மறுமுனையில் அழுகுரல் மட்டுமே கேட்டது.

ஹே இது மீராஅக்கா என்ன ஆச்சு ஏன் அழறீங்க

பீட்டர் என்னை ஏமாத்திட்டான் கீர்த்தனா

என்னக்கா சொல்ற

“………கீஈஈஈஈ….ச்ச் ற்ற்ற்ற்இரைச்சல் சத்தம் கேட்க திடீரென மீராவின் அலறல் சத்தத்துடன் இனைப்பு துண்டிக்கப்பட்டது.

நிலைமையை உணர்ந்த கீர்த்தனா உடனே காவல்நிலையத்திற்கு விரைந்தாள்.

இடையில் சிலர் அவளை தடுக்க ஒரு கார் வந்து கீர்த்தனாவை ஏற்றிகொண்டு விரைந்து சென்றது.

ஒரு காட்டினை அடைந்தபிறகுஏன்டி பெரிய இடத்து விசயத்தில் நீ ஏன் தலையிடுற?!” என அவளது மலர் கன்னங்களில் அவர்களது கைவிரல் தடயத்தை மாறிமாறி பதித்தனர்.
அதனால் கன்னங்களின் சிவப்பு நிறம் சிறிது கசியதுவங்கியது.

மயக்கநிலைக்கு சென்றவளை அந்த கயவர்கள் தங்களுக்கு இரையாக்க இறுதியில் தனது மூச்சை நிறுத்தினாள் கீர்த்தனா.

அவளது சடலத்தின் அருகில் கீர்த்தனாவின் காதலன் அரூணையும் வைத்துவிட்டு. அவளை ஓர் விபச்சாரி என்பதைப்போல சித்தரித்து விட்டு அவர்களை நாகம் தீண்டியதைபோல ஏற்பாடு செய்தனர்.

இரு உடலிலும் விசம் ஏறிகொண்டிருக்க கீர்த்தனாவின் கண்ணில் இருந்து கண்ணீர் துளிகள் அரூணுக்காக வந்தது. ஆனால் அவள் கையிலுருந்த மொபைலின் வாட்ஸ் அப்பில் இரண்டு டிக்குகளின் சத்தம் கேட்டவுடன் அதை அருகில் இருந்த குளத்தில் தூக்கி வீசினாள். விசம் மூளையை சென்றடைய சொர்க்கத்தில் ஜோடி சேரும் புறாக்களாக இருவரும் கிளம்பினர்.

மறுநாள் செய்திதாளில் காதலர்கள் காட்டில் உல்லாசமாக இருந்தபோது நாகம் தீண்டி இறப்பு என வந்த செய்தி மீராவை பற்றி அனைவரையும் மறக்கசெய்தது. கீர்த்தனாவை பற்றி பல கதைகள் கட்டிவிடபட்டன.

இந்த சம்பவத்தின் ஆணிவேர் பீட்டர் என்பதை உணர்ந்திருந்த விஷ்ணுவோ துரியேதனனுக்கு கர்னனை போல் தனக்கு வாழ்வளித்தவனை வஞ்சிக்க இயலவில்லை.

ஆனால் அவன் ரம்யா விசயத்தில் தலையிட்டால் புராணங்கள் மாற்றி எழுதப்படும் என்ற உறுதி விஷ்ணுவின் மனதில் நிறைந்து இருந்தது.

************


நெற்றியில் இருந்த வியர்வை துளிகள் தரையை முத்தமிட்டன. சூரியனின் தாக்கம் உடலின் வெப்பநிலையை வெகுவாக உயர்த்திகொண்டிருந்தது. மனித உடலும் அடிப்படையில் ஓர் எந்திரம் தானேஅந்த நிலையை முனியன் உணரத் தொடங்கினான. ஆதலால் கடலிடம் தஞ்சம் புகுந்து குளிரினைக்  கடன் பெறலாம் என கடலை நோக்கி நடந்தான்.

இன்னும் பாதிவேலை உள்ளது என நினைத்த முனியன் கண்காட்சி அவனுக்கு சிறிது ஆறுதல் அளித்தது. கடற்கரையில் ஓர் இளைஞன் மயங்கிய நிலையில் கரை ஒதுங்கிகிடந்தான்.

அவனை சென்று தூக்கி வாயில் தன்னிடம் இருந்த தண்ணீரை ஊற்ற அவன் மெதுவாக கண் திறந்தான். சிறிது நேரப்  போராட்டத்திற்கு பிறகு அவனை இயல்பு நிலைக்குக்  கொண்டு வந்த முனியன்.

யாருப்பா நீ…. எந்த ஊர்

ஐயா கடவுள் மாதிரி என்னை காத்ததற்கு நன்றிஎன்னைப்  பற்றி எதுவும் கேட்காதீர்கள்….அது கூடிய விரைவில் உங்களுக்கே தெரிய வரும்

ஒரு வேளை இவன் சிலையைத்  திருடிச் செல்ல வந்திருப்பானோஎன நினைத்த முனியன் அமைதியாக இருக்க

ஐயா நீங்கள் மனதில் நினைப்பதை என்னால் உணரமுடிகிறது…. கண்டிப்பாக உங்கள் செல்வத்தை நான் திருடமாட்டேன்என கூறினான் அதில் ஓர் உண்மை தெரிந்தது.

அது இல்லப்பா…”

நீங்கள் என் உயிரை காப்பாற்றியதால் நான் உங்களுக்கு பிரதிபலன் செய்ய வேண்டும்…. உங்களுக்கு நான் உதவலாமா?”

சிறிது சிந்தனை மனதில் ஓடியது முனியனுக்குஇவன் அந்த சிலையை திருடமாட்டான் என நம்பிக்கை வருகிறதுஅப்படி திருடி விட்டால்?!… இவனை வேலை முடிந்தவுடன் தீர்த்துகட்டி விட வேண்டியதுதான்.” என மனதில் நினைத்து முடிந்தத நேரம்.

அப்படியெல்லாம் நடக்காது ஐயா நான் இன்னும் ஐந்து நாட்கள்தான் உயிருடன் இருப்பேன்

அதிர்ச்சியடைந்த முனியன்என்ன?!” என உளற அந்த இளைஞனோ அமைதியுடன் நடந்து சென்று குழியை தோண்டும் வேலையை தொடர்ந்தான்.
கூலி இல்லாமல் வேலைக்கு ஒரு இளிச்சவாயன் கிடைத்ததில் முனியனுக்கும்  மகிழ்ச்சியே…‌


*********

கல்லூரியில் இணையத்தைப்  பற்றிய பாடம் நடந்துகொண்டிருக்க கவிதாவிற்குக்  கண்களின் ஓரம் நீர் துடித்துகொண்டிருந்தது.

இந்த நேரம் அவன் என்ன செய்து கொண்டிருப்பான். அவளுடன் இனிமையாக பேசிகொண்டிருப்பானேஎன்னுடன் கோபமாக பேசினாலும்அவன் பேசினால் போதும் என்றுதானே இருந்து வந்தேன். இனிமேல் அதுவும் கேள்விக்குறியாஎன நினைக்க தங்கதுகள்கள் உருகுவதை போல நீர்த்துளிகள் குறிப்பேட்டின் மீது வந்து விழுந்தன.

என்னடி கவி என்ன ஆச்சுஅருகில் இருந்த மாலா கேட்க.

உடம்பு சரியில்லைடிஎன சமாளிக்க முகம் கண்ணாடியாய் காட்டியது.

உடம்பு சரியில்லாத மாதிரி தெரியலயே மனசு சரியில்லாத மாதிரி தெரியுது

அடுத்த நொடி கண்ணீர் சுனாமியாய் பாய, மாலா ஆசிரியரிடம் ஏதோ காரணம் காட்டி கவிதாவுடன் கேன்டீனில் தஞ்சம்புகுந்தாள்.

அதுவரை அடக்கிவைத்திருந்த வலிகள் தனது தோழியிடம் கண்ணீராய் கொட்டித்  தீர்த்தாள். அதை பொறுமையாக கேட்டுகொண்ட மாலா அவளுக்கு ஆறுதல் சொல்லமுற்பட்டாள்.

ஆனால் விஷ்ணுவிற்கு இவளது நினைப்பு துளியும் இல்லைதன்னவள் தன்னிடம் உள்ளாள் அதிலும் தன்னை ரசிக்கிறாள் என்ற மகிழ்ச்சியில் அவளையே பார்த்துகொண்டிருந்தான்.

என்ன அப்படி பாக்குறீங்கஎன நீல விழிகளை உருட்டி கேட்டாள் ரம்யா.

இல்லை நீ என் கனவில் இருந்த மாதிரியே தான் இருக்க கொஞ்சம் கூட மாற்றம் இல்லைஉனக்கு நான் கனவில் ஏற்கனவே வந்திருக்கேனா

ம்ம்ம் இல்லையே… “

பின்ன எப்படி என்னை விரும்புகிறாய்

உங்களை பார்த்தவுடன் மனதினுள் ஓர் பாதுகாப்பு உணர்வுநீங்கதான் என் உயிர் அப்படின்னு எனக்கு தோணுச்சுஅதுவும் இல்லாமல் ரம்யா அப்படின்னு நீங்க கூப்பிட்டது என்னை ஆச்சரியப் படுத்தியதுஎன பேசிகொண்டே அவனை பார்க்க அவன் இவளது விழியில் விழுந்திருந்தான்.

அந்த நேரம் ரம்யாவின் கண்ணில் இருந்து கண்ணீர் வந்தது. திடுக்கிட்ட விஷ்ணு… “ஏன் அழுகிற ரம்யா

“…..” எதுவும் பேசவில்லை கண்ணீரின் அளவு மட்டும் கூடியது.

சரி அவளாக கூறட்டும் என அவளை தனது நெஞ்சில் புதைத்துகொண்டான்.

சிறிது நேரம் அவனது அரவணைப்பில் கழிந்த பிறகுகீர்த்தி….” என்ற ஓர் குரல் மட்டும் அவளது உதட்டிலிருந்த இவனது இதயத்திற்கு சென்றது.

என்ன கீர்த்தியா…. அவளுக்கு என்ன?”

அவள் இப்ப இல்லைஎன கூறிவிட்டு மேலும் நீரை சிந்தினாள்.

என்ன பிரச்சனை என்று தெரிந்தாள் தானே சமாதானம் செய்வதற்கு.. இந்த பெண்கள் எப்பொழுதும் இப்படிதான் மகிழ்ச்சியை அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்துவிட்டு.. துன்பத்தை மட்டும் தன் மனதிற்குள்ளேயே வைத்துகொள்கிறார்கள். என எண்ணியவன் அவளை சமாதானம் செய்யும் முயற்சியில் தோற்றான்.

சரி இவளது எண்ணத்தை திசை திருப்பலாம் என நினைத்துசரி ஒருவாய் சாப்பிடுஎன அவளுக்கு ஊட்டிவிட்டான்.

கண்ணீர்த்  துளிகள் அவளது கன்னக்குழியை ஆக்கிரமிப்பு செய்ய
நீ அழுதா நல்லாவே இல்லடிஇங்க பாரு மேக் அப் எல்லாம் கலைஞ்சு போயிருச்சுஎன சீண்டினான்.

முகத்தை துடைத்தவள்நான் மேக் அப்பே போடலையே…”

நம்பிட்டேன்…. இங்க பாரு ஏழு கோட்டிங் வெள்ளை அடிச்சிருக்க கருவாச்சி

நீதான் டா கருவாயா

இவள் கருப்பு என்றால் அந்த தாஜ்மகாலும் கருப்புதான் என்று உணர்ந்தாலும் அவளை சமாதானம் செய்ய வழி தெரியாததால்போடி கருவாச்சி இந்தா இந்த சாப்பாட்டை சாப்பிடு கொஞ்சாம் சதையாவது போடும்எலும்பா வேற இருக்கஎன சாதத்தை ஊட்டி விட அதை விழுங்கியவள் அதை இரைப்பையை அடையும் முன்னே

நான் கருப்பாவா இருக்கேன்என குழந்தையாய் கேட்கஆமாண்டி கருவாச்சிஎன மேலும் சீண்ட இவனது முதுகில் செல்லமாக இரண்டு அடி அடித்தாள்.

இந்த கையை வச்சி அடிச்சா எப்படி வலிக்கும்ஏதோ வெண்டைகாய்க்கு கைகால் முளைச்ச மாதிரிஎன மேலும் காதலுடன் சீண்ட கையை பார்த்தாள்.

இப்படி ஒல்லியா இருந்தா உன்னை கல்யாணம் பண்ணிக்கமாட்டேன். நல்லா கொழுகொழுன்னு இருக்கனும்

அப்போ நீ வேற அளை பாருஎன சிரித்தாள்.

எனக்கும் ஆசைதான்ஆனால் கடவுள்தான் முன்னாடியே எழுதி வச்சுட்டாரே..எல்லாம் என் தலையெழுத்துஎன தலையில் கை வைத்தான்.

அப்போ வேற பொண்ணு கிடைச்சா போயிடுவ அப்படிதானேஎன நிமிர்ந்து பார்க்க நீலவிழியில் சோகம் மறைந்து காதலுடன் கோபமும் குடிகொண்டது.

இந்த கண்ணை பார்க்காமல் நான் எப்படி இருப்பேன்என அவளது கண்களை பார்க்க அவளால் அதை தடுக்க முடியவில்லை அதனால் கன்னத்தில் ஒரு முத்தத்தை பரிசளித்து ஓடிவிட்டாள்.

இப்படி செல்லசண்டைகளும் சமாதானங்களும் என அவர்களது காதல் விரைவிலேயே மலர்ந்துவந்தது.

**********

நீ ரொம்ப நல்லா வேலை செய்யுரடா தம்பிஎன நன்கு உட்கார்ந்துகொண்டு அந்த இளைஞனை வேலை வாங்கிக் கொண்டிருந்தான் முனியன்.

முதலாளி என்ற கலை அவனது முகத்தில் தெளிவாக தெரிந்தது. அந்த இளைஞன் அதை பொருட்படுத்தாமல் தன் உயிரைக் காப்பாற்றியதால் அவனுக்கு சேவை செய்து கொண்டிருந்தான்.

ஏன்டா பையா நீ இன்னைக்கு செத்துபோயிடுவேன்னு சொன்ன

சூரியனை நிமிர்ந்து பார்த்த இளைஞன்இன்னும் ஒரு மணி நேரம் உள்ளது ஐயாஎன முடிக்க முனியன் சிரித்துவிட்டான்.

என்னடா பையா உளர்ற  தெம்பாக வேலை செஞ்சுகிட்டு இருக்க பின்ன எப்படி சாகபோகிறாய்என கேட்ட நேரம் மீண்டும் சங்கொலி முழங்கியது.

இந்த கப்பல் காரன் வேற நம்ம தாலிய அறுக்கிறான்நீ வேகமா வேலையப்  பாரு நான் அவனை பார்த்து கொள்கிறேன்என எழுந்து கடற்கரை நோக்கி நடந்தான். அந்த நேரம் அந்த இளைஞன் சிலையை முழுவதும் மணலால் மூடியிருந்தான்.

நம் வேலை முடிந்துவிட்டது என நினைத்து கடலைபார்க்க ஒரு பிரம்மாண்ட கப்பல் வந்து கரையில் நின்றது.

இது கன்டிப்பாக இந்த காலத்து கப்பல் இல்லைஒரு வேலை கடற்கொள்ளையர்களின் கப்பலாக இருக்குமோஎன நினைத்த நேரம் சிலர் கரையை நோக்கி நடந்து வந்தனர்.

கம்பீரமான தோற்றம் தலையில் கிரீடம் என சிலர் ராஜா போல தோற்றமளிக்கபின்னாலையே சில அடிமைகள் ஏதோ ஒரு பெரிய இயந்திரத்தை சுமந்து வர அவர்களை ஒருவன் சாட்டையால் அடித்துகொண்டு வந்தான்.

பொரிய மரத்தின் இடுக்கில் ஒளிந்துகொண்ட முனியன். அவர்களை நோட்டமிட்டான்.
அவர்கள் அந்த இளைஞனை நோக்கி செல்ல இவனோ பயத்தில் உறைந்திருந்தான்.

அவர்கள் அனைவரும் அந்த இளைஞனின் முன்னால் சென்று நிறக வானத்தில் இருந்து ஒற்றைகொம்புடைய குதிரை பறந்து வந்து நின்றது. அதில் லாவகமாக ஏறி அமர்ந்தான் அந்த இளைஞன்.

ஆனால் கப்பலில் இருந்து வந்த ஒருவன் அதன் இறகுகளை வெட்டினான். அந்த இளைஞனின் கோப்த்தில் முகம் சிவந்தது.

அந்த கம்பீரமான தோற்றத்தில் இருந்த ஒருவன்ஏய் காண்டீபா உன் புத்திகூர்மையே கூர்மைதான்…. நீ அழியப் போவதற்கும் அதுதான் காரணம்

ஹா ஹா ஹா என கம்பீரமாக சிரித்த அந்த இளைஞன்நீ என்னை அழிப்பது சுலபமான காரியம்தான் ஆனால் என்னை அழித்தாலும் நீ நினைப்பது நிறைவேறாதுஅந்த பொருளை நீ அடைய முடியாது

இவனது கண்கள் சிவக்கஎன்ன காண்டீபா இப்படி கூறுகிறாய்…. உங்களது நாட்டின் மொத்த சாம்ராஜ்யமும் அழிந்துவிட்டதுஉங்கள் மன்னரை பார்க்கிறாயா?” என கூறிய நேரம் கப்பலில் இருந்து சிலர் ஒரு தங்க சிலையை வீசினர்.

அதை பார்த்து அந்த இளைஞன் கோபமும் அழுகையும் கலந்துவரமன்னரையும் அழித்துவிட்டீர்களா…. நீங்கள் அழியபோவது உறுதி

ஹா ஹா..ஹா முதலில் உன் உயிரை காப்பாற்றிக்  கொள் காண்டீபா

என் உயிர்மீது எனக்கு நட்பு இல்லைநான் எனது கடமையை முடித்துவிட்டேன்

அப்படியென்றால் கூறுபவனிடம் செல்…. ம்ம் நடக்கட்டும்என அவன் கண் இமைக்க அடிமைகள் தூக்கிவந்த இயந்திரம் ஒரு அனலைக்  கக்கியது. அதில் தங்கம் கொதித்துகொண்டிருக்க முனியனோ பயத்தின் உச்சியில் உறைந்து போயிருந்தான்.

அடுத்த கணம் அந்த இளைஞன் வாளை உயர்த்த குதிரை தனது முன்னங்காலைத்  தூக்கியது. இயந்திரம் தனது வேலையை முடிந்தவுடன் அந்த உருகிய தங்கம் அவர்களின் மீது ஊற்றபட்டது. அந்த இளைஞனின் முகத்தில் எதையோ சாதித்த புன்னகை இருக்க அவன் உயிரை விட்டான்.

சிறிது நேரம் சென்றபின் அடிமைகள் அந்த சிலையைத்  தூக்க செல்ல, அந்த மனிதனோவேண்டாம் நாம் இங்கு வந்துதுக்கு அடையாளமாய்  இருக்கட்டும் அப்பொழுதுதான் இந்திராணிக்குப்  புத்தி வரும்என கூறி கப்பலை நோக்கி நகர்ந்தனர்.

விழி மூடாமல் பார்த்துகொண்டிருந்த முனியன் உடல் வெப்பநிலை மெர்குரியை மிஞ்சியது. அந்த கப்பல் சங்கொலி முழங்க கடலில் சென்றது. அதை பார்த்தவன் ஆச்சரியத்தில் மூழ்குமாறு திடீரென அந்த பிரம்மாண்டம் காற்றில் கரைந்து மறைந்தது.

இவனோ சிலையின் அருகே வந்து தோண்டி பார்க்க முதலில் புதைக்கபட்ட சிலை அங்கு இல்லை. ஆச்சரியமாக புது சிலையை பார்க்க அதில் தன்னால் ஏற்பட்ட கத்தியின் தடம் இல்லை.

மீண்டும் அந்த வாளை எடுத்து குத்த இந்தமுறை சிவப்பு ரத்தம் பீறிட்டு வெளியே வந்தது.

அவனது தலைக்குள் ஓர் அசரீரிஇப்போது நான் யார் என அறிந்தாயாநான் காண்டீபன்கடல்தீவுகளின் அரசன்…. ஹா ஹா ஹா ஹா….” என கம்பீரமான குரல் அடங்கிபோக சிவப்பு ரத்தம் கருப்பாக மாறி துர்நாற்றம் வீசதுவங்கியது. முனியனோ குழப்பம் பயம் என்னும் சிகரத்தின் உச்சியில் அமர்ந்திருந்தான்.

**************

என்னடா இவ்வளவு ஓவியங்கள் இருக்கு இது எல்லாம் நீ வரைந்ததா?!” சுவரை பார்த்துக்கொண்டிருந்த ரம்யா ஆச்சரியமாக கேட்டாள்.

அமைதியாக சிரித்துகொண்டிருந்த விஷ்ணுஏன்டி நான் வரையமாட்டேனா?!”

இல்லை என்னை பார்க்காமலே எப்படி உங்காலால்…”

யார் சொன்னது நான் உன்னை பார்க்கவில்லைன்னு

ரம்யா புருவத்தை உயர்த்திகாட்டஐயோ இப்படி சந்தேகமா பாக்காதடிகனவில் தினமும் வந்து ஒருத்தனை டார்ச்சர் பன்னிட்டு இப்ப இப்படி கேட்குறியா

அந்த நிலவு முகத்தில் வெட்கம் குடிகொள்ள மேலும் அழகானது. “இந்த முகம்தான் அங்க இருக்குபாருஇதை மட்டும்தான் ஒழுங்கா முடிச்சிருக்கேன்என கண்ணை மூடியிருந்த ஓவியத்தை காட்டினான்.

சீ போடா…”

என்னடி வெட்கப்படுறது பெண்கள் இயல்புதானே

இதற்குமேல் இவன் தன்மீது காதலை அதிகமாக பொழிவான் என்று உணர்ந்த ரம்யாஅது சரி ஏன் எந்த ஓவியத்திலும் கண்கள் இல்லை

நல்லா கேட்ட…. பின்ன இந்த நீல கண்களை மூன்று வினாடிக்கு மேல் எந்த ஒரு ஆனாலும் பார்க்கமுடியாதுஏதோ வண்டை உண்ணும் பூமாதிரி என்னையும் சேரத்து சாப்பிட்டுவிடுதுஇதில் எப்படி என்னால் வரைய முடியும்…”

இப்பொழுது நான் உன் முன்னாடிதானே இருக்கேன் வரைய வேண்டியதுதானேஎன அவள் கூற மீண்டும் சிறு ஊடல் வேண்டும் என நினைத்த விஷ்ணு

இந்திராணி சொன்னா சரியாதான் இருக்கும் இப்பொழுதே ஆரம்பிச்சுடலாமா

வெட்கத்தில் மீண்டும் கன்னங்கள் சிவக்க சிறு புன்னகை அந்த மச்சத்தை சிறைபிடிக்க இவனும் அகப்பட்டு கொண்டான்.

நான் உனக்கு ராணி மாதிரியா தெரிகிறேன்

ஆமா என் காதலி எனக்கு ராணிதான்…. ஆனாலும் உன் அழகுக்கு நீஇந்த உலகத்திற்கே ராணிதான்என மேலும் கன்னங்களை செந்நிற படுத்தினான்.

நான் ராணியா அப்ப நீ ராஜா..”

ம்ம் நான் ராஜாவா சரி சரி எனக்கே கொஞ்சம் சிரிப்பு வருகிறதுஎன சிரிப்பை அடக்கினான்.

நீ எனக்கு ராஜா தான்டா இந்திரவர்மாஎன அவனது இதழில் முத்தமிட்டு வெட்கத்தில் ஓடி மறைந்தாள்.

விஷ்ணுவோ என்ன நடந்தது என யூகிக்க முடியாமல் மூளையின் ரத்த ஓட்டம் அதிகமாகியது….

காதல் கடலில் மூழ்கியவனின் காதில் இந்திரவர்மா என ஓசை மலையுச்சியில் சத்தமிட்டதை போல திரும்பதிரும்ப ஒலித்து. கண்கள் எல்லை மீற மெத்தையில் சரிந்தவன் இமைகள் மெதுவாக தனது வேலையை செய்தன.

மீண்டும் அந்த கனவு…..

கண் இமைகளை ஓர் அம்பு துளைக்க முன்னேறிய நேரம் அவளின் வாள் வீச்சினால் தூள் தூளாக பறந்தது.
அம்பு மழையை ஓய செய்தவள் ஓர் வாளை வீச அதில் வைரம் போன்ற கற்களால் பட்டை தீட்டபட்டிருக்க இறுதியாக வந்த மூன்று அம்புகளை திசைதிருப்பியவன் அவளைப்  பார்க்க….

முள்ளில் ரோஜா போலே போர் உடையில் ஓர் அழகிய பெண்அது ரம்யாவேதான்தெளிவாக அவளை பார்க்க முடிந்தது. அவள் இவனை பார்த்து காதல் புன்னகை வீச ஒரு காலால் மன்டியிட்டு அமர்ந்தான். அடுத்த நொடி அவனது காலில் தன் பூபோன்ற கால்களால் மிதித்தவள் காற்றில் பறந்துகொண்டிருக்க விஷ்ணுவின் பின்னால் ஓர் பெரிய யானை சரிந்து விழுந்தது.. அவளோ மேலும் முன்னேறி கொண்டிருக்க விஷ்ணு வாளினை சுழற்றியபடி அவளுடன் முன்னேறினான்….

என்ன இந்திரவர்மா இந்த நாட்டிலாவது உனக்கேற்ற மங்கை இருப்பாள் என நினைக்கிறாயாஎன காண்டீபா  விஷ்ணுவை பார்த்து கேட்க

தெரியவில்லை நண்பா…. ஆனால் நமக்கு தேவை ராஜ கடமையை நிறைவேற்றுவது தான்

அதுவும் சரிதான்என இருவரின் குதிரைகளும் நடந்து செல்ல ஓர் சத்தம் கேட்டது.

யாராவது இருக்கிறீர்களா…. காப்பாற்றுங்கள் ….. இந்திராணிக்கு ஆபத்து…..”

சத்தம் வந்த திசையில் இருவரது குதிரையும் திரும்பியது……

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஒகே என் கள்வனின் மடியில் – 10ஒகே என் கள்வனின் மடியில் – 10

ஹாய் பிரெண்ட்ஸ், சென்ற பகுதிக்கு நீங்கள் அளித்த வரவேற்புக்கு மிக்க நன்றி. இனி வில்லனைப் பார்ப்போமா…. ஒகே என் கள்வனின் மடியில் – 10 அன்புடன், தமிழ் மதுரா

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 02ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 02

2 – மனதை மாற்றிவிட்டாய் வீட்டை அடைந்ததும் அவனை அங்கு எதிர்பாராத அனைவரும் மகிழ்ச்சியில் திளைத்தனர். அவன் விரைந்து தன் தாயிடம் சென்று அவரை அணைத்துக்கொண்டு “சொன்ன மாதிரியே வந்துட்டேன் அம்மா. இனிமேல் எப்போவும் உங்ககூட தான் இருப்பேன் ” என்றவனை