அவளது காதலை நிராகரிக்க தகுந்த காரணம் கிடைத்த மகிழ்ச்சியில் உள்ளே நுழைந்தான் விஷ்ணு. அங்கு அவனை எதிர்பார்த்து ஆழ்ந்த சிந்தனையில் அமர்ந்திருந்தாள் கவிதா.
“வா மாமா உனக்குத்தான் வெயிட்டிங்“
“ஏன்?”
“இன்னைக்கு இரவோட அந்த முன்றுமாதம் முடிய போகுது“
“ஆமாம் முடிய போகுது அதுக்கு என்ன?!”
கவிதாவின் கண்களில் குழப்பம் தொற்றிக்கொண்டது. “ஏன் இப்படி பேசறீங்க“
“நான் அவளை பார்த்துவிட்டேன் அவள் பெயர் திவ்யா“
“என்ன சொல்றீங்க“
“என் மனம் அவளுக்கு மட்டும்தான் சொந்தம்” என விஷ்ணு கூற அவளது கண்களில் சந்தோஷமும் குழப்பமும் குடிகொண்டது.
“நீ ஏன் அப்படி பாக்குறேன்னு புரியுது நாளைக்கு காலையில் எப்பவும் நாம போற பஸ்ல வந்திடு அவளை பாக்கலாம்“
அடுத்த நொடி கண்களை கசக்கிக்கொண்டே கவிதா வெளியேறினாள். அவனது மனதை அவளது செய்கை ஏதோ செய்தது.
மேஜையில் அவனுக்காக “என் உயிர் உனக்காக” என நீல நிறத்தில் எழுதப்பட்ட ரோஜா நிற கேக் காத்துகொண்டிருந்தது. அருகே அவனுக்கு பிடித்த வெண்டைக்காய் பொறியலுடன் உணவு தயாராக இருந்தது.
அதை பார்க்கும்போது விஷ்ணு தன்னையே ஓர் குற்றவாளியாக உண்ர்ந்தான். மனதோ அவனை சில கேள்விகளால் துளைத்தது.
‘நீ என்ன பெரிய காதல் மன்னனா? ஒரு பெண் உன்னையெல்லாம் காதலிப்பதே பெரிய விஷயம் இதில் அவளது காதலை உனக்கு மதிக்ககூட தோன்றவில்லையா?!.. உன் நிலைப்பாட்டில் உறுதியாய் இருந்தாயே தவிர அவளது மனதை உணரமறுத்துவிட்டாயே… ஒரு பெண்ணின் கண்ணீருக்கு ஈடே இல்லை…. இது தான் நீ அவளது காதலுக்கு கொடுக்கும் பரிசா…’
இப்படி பலவாறு அவனது மனம் கேள்விகளால் அவனை துளைக்க மெத்தையில் சாய்ந்தான். மீண்டும் கவிதாவின் நினைவுகள் சுற்றி வந்தன.
“நீ ஏன் என்னை அவாய்ட் பன்ற“
“ஏன் உனக்கு தெரியாதா“
“அந்த ரம்யா தானே காரணம்“
“ஆமா“
அவனை பார்த்து சிரித்தவள் ” உன் கனவு தேவதை நானா இருந்திருக்க கூடாதா… அப்படி இருந்திருந்தால் இந்த நொடி நீ என்ன பன்னீருப்ப?”
“ச்ச்… கொஞ்சநேரம் அமைதியா இருக்கியா“
“என்ன மாமா வீட்டுல தான் இப்படி இருக்கேன்னு பார்த்தா இங்கயும் இப்படிதான் இருக்க… உன்னை இந்த கடற்கரையில் சந்திக்க நான் எவ்வளவு பாடுபட்டேன் தெரியுமா“
“நான் நிம்மதியா இருக்குற இடத்துக்கும் வந்துட்ட…” என முகத்தை திருப்பினான்.
கண்ணில் கண்ணீர் நிரம்ப கடற்கரையில் சுற்றியிருந்த ஜோடிகளின் பார்வை கனலாக விஷ்ணுவின் மீது பாய்ந்தன.
“அழாத ப்ளீஸ் எல்லாரும் பாக்குறாங்க“
“ஐயோ சாரி மாமா நீ ஃபீல் பண்ணாத” என கண்ணை துடைத்துகொண்டு சிரிக்க முற்பட்டாள்.
“சரி நான் கிளம்புறேன்“
“இரு என் கேள்விக்கு பதில் சொல்லிட்டு போ“
“என்ன?” என்பதைப்போல பாசமாக பார்த்தான்.
“நான் அவளா இருந்தா இப்ப என்ன பண்ணிகிட்டு இருந்திருப்ப?”
“தெரியலை” என முடித்தான்.
“சரி ஒண்ணு பண்ணலாம் இப்ப நான்தான் விஷ்ணு நீ உன் கனவு தேவதை சரியா… நீ என்ன செய்றேன்னு பார்க்கலாம்” என கூறிவிட்டு தன்னவன் தன்னிடத்தில் கொடுக்கவேண்டிய காதலை அவனிடத்தில் கொடுக்க நினைத்தாள்.
சுற்றிலும் பார்த்தவன் ” ம்ம் ” என ஒத்துக்கொண்டான்.
நாடகம் அரங்கேற துவங்கியது.
“ரம்யா நான் உன்னை பார்ப்பதற்காகவே இந்த பிறப்பை எடுத்திருக்கிறேன் என நினைக்கிறேன்” என அவனது இரு கையையும் தன் மலர் கைகளில் அடக்கிகொண்டாள்.
காதலுடன் அவள் இவன் கையை பிடித்தது இவனை நிக்ரோம் உலோகத்தால் செய்யப்பட்ட சங்கிலியால் கட்டியதுபோல சிறைப்பட்டு கொண்டது.
அவளோ இவனது கண்களை ஆழமாக பார்க்க அதில் இப்போது வெறுப்பு இல்லாமல் காதல் இருந்தது.
அதை அவள் ரசித்தாள் மேலும் விஷ்ணுவாக தொடர்ந்தாள்.
“பேசுடி என் கண்மனி என்னை ஏத்துகுவியா?”
“நீதான் என் உலகம் இந்த உயிர் உனக்குத்தான்” என ரம்யாவாக மாறியிருந்த விஷ்ணு கவிதாவிடம் கூற கடல் அலைகள் வெண்மலர்களால் அவர்களை வாழ்த்த விரைந்து வந்துகொண்டிருந்தது.
கவிதாவிடம் காதலை உணரதொடங்கியிருந்தான் விஷ்ணு. இந்தநிலை நீடித்தால் கவிதா அவனது சுவர்களை நிரப்ப தயார்… விழியில் விழுந்துகொண்டிருந்தான்.
விழி மொழி கடக்க இதழ்கள் அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறினர்.
“அண்ணே சுண்டல்” என்ற குரல் சட்டென எழும் மின்னல் போல் விஷ்ணுவின் மனதில் கவிதாவை தூக்கி எரிந்து உடனே கனவு தேவதையை நிரப்பிகொண்டு பூட்டியது இதயத்தை.
விஷ்ணுவாக நடித்த கவிதா மீண்டும் விஷ்ணுவின் காதலியாக மாறினாள்.
அதற்கு மேல் மனம் பொறுக்காத விஷ்ணு எழுந்து சென்றான்.
அவர்களது நிலையை புரிந்துகொண்ட சுண்டல் பையன் குழப்பத்தால் அங்கிருந்து நழுவிகொண்டு அடுத்த ஜோடியை நோக்கி நகர்ந்தான்.
கடலையே பார்த்துகொண்டிருந்தவள் தன் மனதின் வலிகளை அந்த உவர்நீருடன் பகிர்ந்துகொண்டிருக்க திரும்பிய விஷ்ணுவின் விழியில் அவளது விழியில் வடிந்த நீர் மாலை வெயிலால் ஒளிர்ந்தது.
அதே கண்ணீர் இன்றும் விஷ்ணுவின் இதயத்தை துளைத்ததால் மனவேதனையில் தவித்தான். இதற்குமேல் மனதை கட்டுபடுத்த முடியாது என நினைத்தவன் வெள்ளைமாத்திரையை மறுபடியும் பயன்படுத்தினான்.
சில நேரம் மூளை அவனை புரட்டியெடுக்க மருந்தின் வீரியம் வேலை செய்தது. துயில் கொள்ள துவங்கியிருந்தான்.
மீண்டும் அந்த கனவு மாபெரும் யானையை வீழ்த்தியிருக்க அம்புகள் காற்றை கிழித்து கொண்டு முன்னேறி வந்தன.
இந்த உயிர் எனக்குத்தான் என ஓர் அம்பு கண்கருவிழிக்கு முன்னால் வந்து நின்றது…
இறுதி நொடியின் இறுதியில் இருந்தான் விஷ்ணு. மூளை பய உணர்வை எச்சரிக்கை செய்தது. ஆனால் தூக்கமாத்திரையோ தனது பனியை செவ்வனே செய்தது.
அம்பு அவனை துளைக்கும்முன்னே அவனால் வலியை உணரமுடிந்தது. அந்நநேரம் அம்பு தூள் தூளாக உடைந்து காற்றில் கரைந்தது…
அவன் முன்னே நின்ற ஒரு உருவம்தான் இதற்கு காரணம். விழியை சரிசெய்வதற்குள் தனது இருபுறமும் ஓர் யானை இரண்டாக பிளந்து பறப்பதை பார்த்தான்.
கண்கள் காட்சியை தெளிவாக காண ஓர் அமபுகளாள் ஆன புயலே தன்னை நோக்கி வருவதை உணர்ந்தான். ஆனால் முன்னால் இருந்த உருவம் காற்றில் வாளை மின்னலை போல சுழட்ட அனைத்து அம்புகளும் சிதறி ஓடின.
மழை ஓய்ந்ததும் தூரத்தில் சில மதம் கொண்ட யானைகள் ஓடிவர அந்த உருவத்தின் கைகள் இவனை நோக்கி வந்தது.
அந்த உருவம் ஓர் பெண் என்பதை கரும் கூந்தலின் நிறத்தால் உணர்ந்தான். அதிலிருந்து வீசிய நறுமணம் விஷ்ணுவின் இதயத்தை நிரப்பியது. அவள் திரும்பாமல் கைகளை மட்டும் நீட்ட அதை பற்றிகொண்டான் விஷ்ணு. என்ன ஒரு மென்மையான ஸ்பரிசம் என எண்ணுவதற்குள் அவள் கொடுத்த விசையால் மேல எழுந்தான். எழுந்த வேகத்தில் அவளிடமிருந்து வீசபட்ட வாள் விஷ்ணுவின் கைகளுக்கு வரவே இறுதியாக வந்த ஓர் அம்பை இரண்டாக பிளக்க அது அவளது கழுத்தின் ஓரத்தில் சென்றது.
அதை உறுதி செய்ய திரும்பினான். அவளது முகத்தை காணும் தரிசனம் கிடைத்தது.
இது நன்கு தெரிந்த முகம்தான் ஆம் இது கவிதாவின் முகம் தான் இல்லை இது அழகிய பால்நிலா போல உள்ளதே என கனவில் தெளிவின்மையால் குழம்பினான். அவன் அவளை பார்த்து சிரித்தாள். கன்னக்குழியில் மச்சம் நீச்சல் அடிக்க இது ரம்யா என்பது உறுதியாகியது.
அந்த காட்சி அப்படியே நிற்க மங்கலாக இருந்த ரம்யாவின் உருவம் தெளிவானது. அதில் கோபமும் வெட்கமும் கலந்து அவன் வரைந்த ஓவியத்திற்கான கண்கள் அவன்முன் இருக்க….
‘மனதில் மார்டன் பெண்ணாக வந்த ரம்யா இப்படியா…. இதற்கு வாய்ப்பே இல்லை எல்லாம் மனதின் விளையாட்டு… ரம்யா நேரில் வந்த அதிஷ்டம் தான் தன்னை நீண்ட நாட்களாக வாட்டியெடுத்த கனவில் விடுதலை கிடைத்துவிட்டது‘ என எண்ணிகொண்டே ரம்யாவிடம் காதலை சொல்லும் கனவினை தொடர ஆரம்பித்தான்.
இவனது கனவின் விளையாட்டுகளை ரசித்தது பார்த்துகொண்டிருந்த நிலவு ஓரக்கண்ணால் திவ்யா எனும் ரம்யாவை ஓர் பார்வை பார்க்க அவள் இவனை பற்றி தனது தோழி கீர்த்தியிடம் பேசிகொண்டிருந்தாள்.
“என்னடி அப்படி பாக்குற… நான்தான் சொன்னேன் காதல் மேல் எனக்கு நம்பிக்கை இல்லைன்னு… நீயும் ஏதேதோ சொல்லி பாத்த ஆனால் எனக்கு அப்போது மண்டையில் ஏறவில்லை“
“….” மறுமுனையில் பதில் இல்லை.
லேசாக வெட்கபட்டுகொண்டவள் “ஆனா இப்பதான்டி தெரியுது காதல்ன்னா என்னன்னு ஐ திங்க் நான் அவரை லவ் பன்றேன்னு நினைக்கிறேன்” என லேசாக சிரித்தாள் திவ்யா.
“….” மீண்டும் பதில் இல்லை.
“இதை எப்படி அவகிட்ட சொல்றது நீ இருந்திருந்தா கூட எதாவது ஐடியா குடுத்திருப்ப… உனக்குத்தான் என்மேல் அக்கறையே இல்லையே அதான் என்னை விட்டுட்டு சாமிகிட்ட் போய்ட்ட” என லேசாக வழிந்த கண்ணீரை துடைத்துகொண்டு புகைப்படமாக மாறியிருந்த கீர்த்தியை தனது பெட்டியில் வைத்து உறங்க ஆயத்ததமானாள்.
ஆனால் அவளது புது தலையனை அவளின் இருக்கத்தை தாங்க முடியாமல் “மேடம் நீங்க இதை உங்க விஷ்ணு கிட்ட வச்சுக்கோங்க“என கேட்பதை போல கசங்கிய முகத்துடன் இருந்தது.
அவள் அதை பொருட்படுத்தவில்லை… கீர்த்தியின் இறப்புக்கு பிறகு அன்பிற்கு ஏங்கியவளுக்கு மனதில் ஓர் துனை கிடைத்ததால் தன்னவனை நினைத்துகொண்டு அந்த மகளிர் காப்பகத்தின் மெத்தையில் ஓர் காதல் யுத்தமே நடத்திவிட்டாள்.
இவளது பன்பு ஒரு நாளிலே இப்படி மாறியது கண்டு நிலவுக்கும் வெட்கம் வர திறந்திருந்த அவளது ஜன்னல் கதவை தென்றலை அனுப்பி மெதுவாக மூடியது.
*************
பெரிய நெருப்பு பிளம்பு மெதுவாக கிழக்கு திசையில் தோன்ற முனுசாமி
அதன் வெப்பத்தை மெதுவாக உணர்ந்தான். மயங்கிய நிலையிலேயே உறங்கியவன் எழுந்து பார்க்க காலை விருந்தாக அந்த கெட்ட வாசனையும் உடனிருந்தது. அதை தாங்கமுடியாதவன் தீவுக்கு மறுபுறம் சென்று அமர்ந்தான்.
கையிலிருந்த வாளை கொண்டு அருகில் இருந்த ஒரு மரத்தை பதம்பார்க்க அது அடியோடு சாய்ந்தது.
‘டேய் முனியா இது உன் பலம் இல்லை எல்லாம் இந்த கத்தியோட வித்தை‘ என நினைத்துகொண்டு அதிலிருந்த தேங்காய்களை பற்களுக்கு இரையாக்கினான்.
இங்கே இருந்து செல்லவேண்டும் கூடவே அந்த சிலையையும் எடுத்துச்செல்ல வேண்டும் என்ன செய்யலாம் என சிந்திக்க கையிலிருந்த வாள் நானிருக்கிறேன் என அவனது முகத்தில் சூரிய ஒளியை பாய்ச்சியது.
அந்த ஒளி அவனது மனதிலும் வீச ஒரு குரூர பார்வைபார்த்தவன் காலடியில் சில நிமிடங்களில் சில மரங்கள் சரிந்து விழுந்தன.
கட்டுமரம் கட்டுவதில் வல்லமை வாய்ந்த முனுசிமிக்கு இது சாதாரன விசயம்தான். சில உறுதியான கொடிகளை கைபற்றியவன் வேலையை துவங்கினான்.
கட்டுமரத்தின் அளவை கணிப்பதற்காக சிலையை அளவெடுக்க சென்றான். குதிரையின் தூக்கியிருந்த முன்னங்காலில் கயிற்றின் ஒரு முனையை கட்டியவன் மறுமுனையை பின்னால் எடுத்துசென்றான். இது அனைவருக்கும் தெரிந்த அளவிடும் வித்தைதானே என சிரித்தான். அந்த கொடியில் அளவை குறிக்க ஒரு முடிச்சிட்டு எழுந்து நிற்க.
அவனது துடிக்கும் இதயம் ஒரு வினாடி நின்றே விட்டது. அந்த கரிய புகைபோன்ற உருவம் முன்னால் நினறது. தூரத்தில் இருந்து பார்த்ததை விட மிகவும் கொடுரமாக இருந்தது. தனிதீவில் சிக்கியவனுக்கு இதைவிட பெரிய ஆபத்து இல்லைதான்.
அதற்கு கண்கள் இல்லை மாறாக ரத்தத்தால் சிறந்ததை போன்ற ஓர் நீர் இருக்க. அதில் கோபம் தென்பட்டது.
பயத்தின் உச்சியில் இருந்தவன் தன் கீழ் ஆடை நனைந்திருபபதை கவனிக்க நேரம் இல்லைதான்.
அந்த உருவம் இவன் முன் நிற்க்க ஒரு அசரிரி குரல் கேட்டது. “நீ இங்கே இருந்து சென்றுவிடு…செனறு விடு… சென்றுவிடு“
பயத்தில் விழிகளை இமைக்க மறந்தவனின் அனிச்சை செயல் வேலை செய்ய தற்போது இமையை இயக்கினான்.
ஒரு விழியில் ஊடுருவும் தருனம் அங்கே எந்த உருவமும் இல்லை.
“அட சே முனியா… இதெல்லாம் பிரம்மை… ரொம்ப நேரமா தனிமையில் இருக்கோம் அல்லவா அதான் இப்படி” என கூறிவிட்டு கிளம்பினான்.
தனது பலத்தை சோதிக்கும் அளவுக்கு இருந்த மரங்களை தூக்கி அவன் வைத்த நேரம் தூரத்தில் ஓர் சங்கொலி கேட்டது.
காற்றின் உவர்தன்மையால் கண்கள் சிவந்திருந்தால் அவனில் சரியாக பார்க்கமுடியவில்லை. சற்று சிரமப்பட்டு விழித்திரையை குவிக்க அவனது கண்களில் ஓர் கப்பல் செல்வது தெரிந்தது.
அது மிக பிரம்மாண்டமான கப்பல்… இதன் எரிபொருள் செலவை குறைக்க பாய்மரம் கட்டியிருக்க மெதுவாக ஊர்ந்து சென்றது. முனியனோ கையை அசைத்து சைகை செய்ய அந்த கப்பலின் திசை திரும்பவே இல்லை. அவர்கள் தூரத்தில் இருந்த ஒரு தீவை நோக்கி சென்றுகொண்டிருந்தனர்.
அப்போதுதான் கவனித்தான் இங்கு ஏராளமான சிறு தீவுகள் உள்ளது என்பதை. இன்னும் பார்வையை சுருக்கி பார்க்க அந்த கப்பலில் சில தங்க சிலைகள் மின்னியது.
சுதாரித்து கொண்டவன்…. ” டேய் முனியா எல்லா தீவுலையும் சிலைங்க இருக்குது… இவங்க நம்ம தீவை அடைய எப்படியும் ஒரு வாரம் ஆகும்.. இந்த சிலை உனக்குத்தான் சொந்தம் இதை பதுக்கியே ஆகனும்…” என யோசித்தவன் பூமியில் குழிதோண்ட ஆயத்தமானான்.
தன்னிடம் இருந்த கூர்மையான கட்டைகளை கொண்டு தோண்ட ஆரம்பிக்க மூச்சு வாங்கியது.
“பாவி பயலுக நான் பணக்காரன் ஆகுறது யாருக்கும் பிடிக்கலை… ஆனாலும் இவனுங்க அறிவாளிதான்… யாரும் பார்த்திட கூடாதுன்னு என்ஜின் ஆஃப் பன்னிட்டு பாய்மரத்தை பயன்படுத்துறாங்க” என திட்டி தீர்த்தவன்.
“இதுக்கு மேல் முடியாதுடா போய் எனர்ஜி ஏத்திட்டு வருவோம்” என கட்டுமரத்தை நோக்கி நடந்தான். அங்கு அவன் வைத்திருந்த இளநீர் அவனை வரவேற்றது.
வானத்திற்கு நன்றி சொல்லும் விதமாக அதை குடித்தவன் முகத்தில் சில்லென்ற கடல்நீர் தெறித்தது.
கடலுக்கு சிறிது தூரமே இடைவெளி இருந்ததால் மீண்டும் நீர் முகத்தில் பட எரிச்சலைப் தான்.
அதில் ஓர் பெரிய மீனின் வால் துள்ளுவது தெரிய மீனவன் மூளை கட்டாபாட்டை எடுத்துகொண்டது.
அருகில் சென்று பார்க்க அது மீன் இல்லை... சற்று பின்வாங்க நினைத்தான். அது பாய்ந்து வந்து இவனை பற்றிக்கொண்டது. பயத்தின் உச்சியில் சென்றமர்ந்த முனியின் முகத்தருகில் வந்த அந்த கடற்கன்னி தனது மொழியில் கத்தியது.
“கீச்ச்ச்ச…..சிவ்வ்வ்வ்… அஃஅஃஅஃ….சிப்ப்ப்ப“
என்று முடித்த நேரம் அது மயங்கி கீழே விழ அதன் முதுகில் இருந்த காயத்தில் இருந்த ரத்தம் பீறிட்டது.
அதனருகில் சென்றவன்…”இந்த இனம் இன்னும் உயிரோடு இருக்கா!… முகம் எவ்வளவு அழகாக இருக்குது…. நீ மட்டும் ஒரு பெண்ணா இருந்திருந்தா உன்னைத்தான் நான் கல்யாணம் பன்னிருப்பேன்… அது சரி யார் உன்னை காயபடுத்தியது..” என யோசிக்கும் போது அந்த கப்பல் சங்கொலி முழங்கியது.
**********
விஷ்ணு பேருந்து நிறுத்தத்திற்கு மெதுவாக நடந்து வர அங்கே கவிதா காத்துக்கொண்டு நின்றாள்.
அவளது சிவந்த கண்களும் சற்று வீங்கியிருந்த பால் போன்ற கன்னங்களை கண்டதும் இவள் இரவெல்லாம் தனக்காக கண்ணீர் வடித்திருக்கிறாள் என்பதை விஷ்ணுவின் மனதில் ஆணி அடித்தது.
அவளை சமாதானம் செய்யலாம் என மனது இசை பாட அருகில் சென்றான். ஆனால் அவளோ முகத்தை திருப்பிகொண்டு நின்றாள். இதுதான் காதலின் ஓர் உன்னத விளையாட்டு.
அவளது செய்கை விஷ்ணுவை மிகவும் வாட்டியது. அவளிடம் எப்போதும் இருக்கும் குறும்புத்தனம் இல்லை... ஏன் சிறு புன்னகை கூட இல்லை. கைக்குட்டையால் அவ்வபோது தனது கண்ணீரை கண்மைகள் அழியாதவாறு துடைத்துகொண்டாள். கையறுநிலையாக உணர்ந்த விஷ்ணு எதுவும் செய்ய இயலாததால் சற்று அமைதியாக விலகி நின்றான்.
ஈகோ என்னும் கேடயத்தை மூளை சுமந்துகொண்டு நிற்க இரண்டு இதயங்களும் அன்பு என்ற ஈர்ப்புவிசையை பரப்பிகொண்டிருந்தன.
அந்த விசையால் ஈர்க்கபட்டதைபோல குழிநிறைந்த சாலையில் பேருந்து வந்து நிற்க கவிதா முன்புறமாக ஏறிக்கொண்டு பேருந்துமுழுவதும் நோட்டம் விட்டாள். விஷ்ணு அவளின் செய்கையை பின்னால் இருந்து கவனிக்க இரண்டாவது இருக்கையில் ஓர் அன்னப்பறவை போல அமர்ந்திருந்த ரம்யா சிக்கிகொண்டாள்.
“எக்ஸ் கியூஸ் மி ரம்யா நான் இங்க உட்காரலாமா?!”
இவளுக்கு எப்படி என் பெயர் என நினைத்த ரம்யா “ம்ம் உட்காருங்க” என லேசாக பரவிகிடந்த சுடிதாரை உள்ளிழுத்துகொண்டாள்.
சிரித்த முகத்துடன் அமர்ந்த கவிதா “நான் கவிதா….இவரை உங்களுக்கு தெரியுமா” என கைபேசியில் இருந்த விஷ்ணுவின் புகைபடத்தை காட்டினாள்.
“ம்ம் தெரியும் நான் வேலைக்கு செல்லும் கம்பெனியில் இருக்காங்க” என வெட்கத்தை மறைத்துக்கொண்டு சொல்ல… அவளது கண்களை ஆழமாக பார்த்த கவிதா தொடர்ந்தாள்.
“எவ்வளவு நாட்களாக இவரை உங்களுக்கு தெரியும்“
“நேற்றுதான் எனக்கு தெரியும்... ஆமா நீங்க அவருக்கு என்ன உறவு?” என சந்தேகக் கணையை வீசினாள். இது பெண்களின் இயல்புதான், ஒருவன் மீது அதிக அன்பு செலுத்திவிட்டால் அவனை வேறு யாரும் சொந்தம் கொண்டாட கூடாது என நினைப்பார்கள்.
சிரித்துகொண்டே “ம்ம் அவர் என்னோட காதலன்” என கூற பௌர்னமியாய் இருந்த ரம்யாவின் முகம் சுருங்கியது.
“ஹே என்ன முகம் டல்லாகுது… நான்தான் அவரை காதலிக்கிறேன் அவர் என்னை காதலிக்கவில்லை“
ரம்யாவின் முகத்தில் இப்போது குழப்பம் என்னும் ஒப்பனை சூடிகொள்ள கவிதாவோ தனது கதையை கூறி முடித்தாள். அதில் அன்று கடற்கரையில் நடந்த நிகழ்வுகள் தவிர்க்கப்பட்டது.
அவளது குழந்தை தனத்தை பார்த்த ரம்யாவுக்கு இவளுக்காக அவனை விட்டு கொடுக்கலாம் என தோன்றியது. ஆனால் இது கடவுளின் முடிச்சு என்பதால் ரம்யாவின் மனதில் விஷ்ணுவை விட்டுதரும் எண்ணம் மூட்டைகட்டபட்டது.
அந்த கதையை கேட்டுமுடித்த ரம்யா ஆச்சரியத்தில் அமர “இன்னும் ஒன்று சொல்ல மறந்துவிட்டேன்…”
“என்ன?!” என்பதைபோல ரம்யாவின் முகம் பாவனையை தெளிவாக காட்ட..
“உங்களுக்கு அவரை ஒரு நாள்தான் தெரியும்… ஆனால் அவருக்கு உங்களை ஒரு சில வருடங்களா தெரியும்“
“……” மீண்டும் ரம்யாவின் விழியில் குழப்ப கனைகள்.
உதட்டில் லேசாக புன்னகை உதிர்த்தவள் “நீங்க தான் அவரது கனவுகன்னி…. இங்க பாருங்க உங்க ஓவியங்களை” என அனைத்து புகைப்படத்தையும் காட்ட ரம்யாவிற்க்கோ உடலில் மெய்சிலிர்த்தது.
நீலவிழிகள் காதலை உள்வாங்க ரம்யா விஷ்ணுவை திரும்பி பார்க்க அவன் ஜன்னலுக்கு வெளியே எதையோ ரசித்துக்கொண்டு வந்தான்.
அதன்பின் கவிதா தான் சேர்த்துவைத்திருந்த காதலையும் விஷ்ணுவை பற்றிய தகவலையும் ரம்யாவிடம் ஒப்படைக்க ரம்யாவின் மனது முழுவதுமாய் விஷ்ணுவிற்கு சொந்தமாகியது.
“ம்ம் கவிதா இருந்தாலும் உனக்கு பெரிய மனசு… உன் காதலை எப்படி எனக்காக தியாகம் பன்னமுடியுது“
“அக்கா இப்படி பேசி என்னை பெரிய மனுசி ஆக்கிடாதீங்க… நான் உங்களைவிட ஒரு வயது சின்னபொண்ணு அப்புறம் இன்னொரு விசயம் நான் அவரை இன்னும் லவ் பன்னி கிட்டு தான் இருக்கேன்…. இது ஒருதலைகாதல் இதை அழிக்க யாருக்கும் உரிமை கிடையாது…”
விழிகள் விரிய பார்த்தாள் ரம்யா.
“ஐயோ அக்கா நான் உங்க லவ்வ டிஸ்டர்ப் பன்னமாட்டேன்… நீங்களும் என் லவ்வ டிஸ்டர்ப் பன்னகூடாது… ப்ளீஸ்” என தாடையை பிடித்து கெஞ்ச ரம்யா ‘ இப்படியும் ஒரு பெண்ணா‘ என சிரிக்க நட்பு ஆழமாக மலர்ந்தது.
அடுத்த நிமிடம் பேருந்து நிற்க கவிதா இறங்கி பின்னாலயே வந்த தனது காரில் ஏறி கல்லூரிக்கு விரைந்தாள்.
பேருந்து அடுத்த நிறுத்தமாக கல்லூரியை கடக்க கூட்டம் வெகுவாக குறைந்தது. தோராயமாக பேருந்தின் பணியாளர்களை சேர்த்தே பத்து பேர்தான் இருந்தனர்.
ரம்யா எழுந்து கொண்டு விஷ்ணுவின் அருகில் வந்து அமரவே அவன் எழுந்துகொண்டான்.
நிமிர்ந்து அவனை பார்க்க பொறியில் அகப்பட்ட எலியாக அந்த நிலநிற கண்ணில் சிக்கியவன் கால்கள் அவனை அமரவைத்தது.
“கவிதா எல்லாத்தையும் சொல்லிட்டா” என வெட்கத்துடன் தலையை குனிந்துகொண்டாள்.
‘அவள் எதை சொல்லிவைத்தாலோ‘ என ரவி குழம்பிய நேரம் தான் கையிலிருந்த அம்மன் குங்குமத்தை விஷ்ணுவின் நெற்றியில் பூசிவிட்டு ஒரு இருக்கை முன்னே சென்று அமர்ந்து கொள்ள அவளது தலையில் இருந்த ரோஜா அவனது மடியில் வந்து விழுந்தது.
அதுவரை வேலைசெய்யாமலிருந்த பேருந்தின் இசைப்பான் ஏ. ஆர். ரகுமானாக மாறி…
“ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா
கண்ட பின்னே உன்னிடத்தில் என்னை விட்டு வீடு வந்தேன்
உன்னை தென்றல் தீண்டவும் விட மாட்டேன்
அந்த திங்கள் தீண்டவும் விட மாட்டேன்
உன்னை வேறு கைகளில் தரமாட்டேன்
நான் தரமாட்டேன் நான் தரமாட்டேன்
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா“
என இசைக்க காதல் ரதமாய் பேருந்து நிற்க்க இருவரும் இறங்கி அலுவலகத்தை நோக்கி நடந்தனர். வழியில் எதுவும் பேசிக்கொள்ளவில்லை… இதயம் இனையமாய் மாறி காதலை பறிமாறும்போது வார்த்தைகள் உமையாகிபோனது….
அவர்களது காதல் ரோஜாவை தீயிலிட ஓர் அக்னிச்சூரியன் காத்திருப்பதை அவர்கள் அறியவில்லை…..