நிலவு
இரவில் ஒளி கொண்டுவரும் சந்திரனே
பகலுடன் சண்டையிட்டு வாரா இந்திரனே
கருநிற மேகக்கூட்டத்தை ஒளியூட்டச் செய்பவனே
விண்மீன் கூட்டத்தின் தலைவனே!
ஒரு காலம் தோன்றுதலும்
ஒரு காலம் மறைதலும் செய்யும் மாயனே
உன்னைக் காண மனம் துடிக்குதடா
உன்னைக் கண்டு உள்ளம் மகிழ்ந்ததடா
உன் அழகைக் கண்டு வியக்கிறோம்
உன் பண்பாகிய குளிர்ச்சி கொண்டு வாழ்கிறோம்
தன் கலங்கத்தையும் மறைத்து பிறரை மகிழ்விப்பவனே
உன்னைப் போல் அனைவரும் வாழ வாழ்த்துவாயாக
~ஸ்ரீ!!~