Tamil Madhura சிறுகதைகள் என்ன சொல்ல போகிறாள் – சாயி பிரியதர்ஷினி

என்ன சொல்ல போகிறாள் – சாயி பிரியதர்ஷினி

என்ன சொல்ல போகிறாள்?

இன்னும் அவ வெளில வரல. மறுபடியும் என்ன கூத்து அடிக்க போறாளோ. ஆண்டவா எப்படியாவது என்ன காப்பத்திரு ப்ளீஸ்.. – கண்மூடி வேண்டினான் ஜீவா.

அன்று காலையில் அமைதியாக அறையில் இருந்து எழுந்து வந்தாள் தேஜு. என்னடா இது அதிசயம்னு அவளை பார்த்தும் பார்க்காதது மாதிரி ஜீவா இருந்தான்.

எந்த நேரத்தில் வெடிக்க போகிறாள் என்று தெரியவில்லை. அதற்குள் குளிச்சிட்டு ஆபீஸ்க்கு ஓடிரலாம்னு நினைக்கும் போது தான் ஞபாகம் வந்தது, அன்று ஞாயிறு.

ஆர் யு ஓகே பேபி? என்று கூறி லேசாக நழுவ பார்த்தான்.

எங்க போறீங்க? – தேஜு அமைதியாக கூறினாள்.

அவனுக்கு அதிசயம். இவ்வளவு மரியாதையா?

என்ன பேபி சொன்ன?

ம்ம்ம்ம். எங்கடா போறேன்னு கேட்டேன். – கோவமாக தேஜு.

போச்சுரா என்றபடி,

பேபி, உனக்கு காபி எடுத்துட்டு வரேன்.  

பின்னாலேயே சென்று கிச்சன் மேசையில் அமர்ந்தாள்.

காபி குடுத்துட்டா நீ பண்ணது எல்லாம் சரியா – பொரிந்து தள்ளினாள்.

தேஜும்மா நான் சொல்றது கொஞ்ச… – அவன் முடிக்கவில்லை

“உனக்கு ஆயிரம் டைம் சொல்லிட்டேன். ஒரு வாட்டியாவது கேட்ருக்கியா? இட் ஹர்ட்ஸ் பேட்லி. நா.. நான் இப்போ எப்படி வெளிலே… மை காட். உனக்கு என்ன பத்தி கொஞ்சம் கூட அக்கறை இல்ல. இருந்தா மறுபடியும் இப்படி பண்ணி இருப்பியா?. ஐயாம் கோயிங். நீ அதையே கட்டிட்டு அழு” என்று பல பக்கங்கள் பேசினாள்.

“ஹேய் இருடி. லவ் பண்ணும் போது இந்த தாடி தான் ரொம்ப புடிச்சிருக்கு சொன்ன..” அப்பாவியாக கேட்டான்.

இப்போ புடிக்கல. இங்க பாரு – முகம், கழுத்து, கைகள் என சிவந்து அலர்ஜி போல. நேற்றிரவு விடியலில் தான் முடிந்தது.

சிரித்துக்கொண்டே, அது சரி இப்டியே எப்டி வெளில போவ? இந்தா இந்த க்ரீம் அப்ளை பண்ணு. இல்ல நானே போட்டு விடவா? என்று கேட்டான்.

பேசாத டா. ஹேட் யு ஜீவா .- என்று அறைக்குள் சென்று கதவை அறைந்தாள்.

என்ன பண்ணா சமாதானம் ஆவா? அரை மணி நேரம் கழித்து,

தேஜு கதவு ஓபன் பண்ணு ப்ளீஸ். ரொம்ப ஸாரி. இனிமே இந்த மாதிரி கண்டிப்பா பண்ண மாட்டேன். ப்ளீஸ் பேபி… பத்து நிமிடம் கதவிடம் கெஞ்சிய பிறகு திறந்தாள்.

அவனை பார்த்தவுடன் சிரிப்பு தாங்கவில்லை. விழுந்து விழுந்து சிரித்தாள். கிளீன் ஷேவ் முகத்துடன் இரண்டு மாத தாடியை துறந்திருந்தான்.

இது ஒகே வா பேபி?

1 thought on “என்ன சொல்ல போகிறாள் – சாயி பிரியதர்ஷினி”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

குழலின் குரல் – கி.வா. ஜகன்னாதன்குழலின் குரல் – கி.வா. ஜகன்னாதன்

மலையைச் சார்ந்த சிறிய ஊர் அது. அங்கே இயற்கைத் தேவி தன் முழு எழிலோடு வீற்றிருந்தாள். மலையினின்றும் வீழும் அருவி எப்போதும் சலசல வென்று ஒலித் துக்கொண்டே இருக்கும். மலர், காய், கனி ஆகியவற்றுக்குத் குறைவே இல்லை. தினை, சாமை, வரகு

பம் பகதூர் : குருபக்ஷ் சிங்பம் பகதூர் : குருபக்ஷ் சிங்

பம் பகதூர் : குருபக்ஷ் சிங் (பஞ்சாபிக் கதை) தமிழில் – வல்லிக்கண்ணன் பம் பகதூர் என்ற யானையின் மாவுத்தன் மத்தாதின், யானை நாளுக்கு நாள் அடங்காப்பிடாரியாக ஆகிக் கொண்டு வருவதாக இளவரசனிடம் முறையிட்டான். அதன் துணைக்கு சீக்கு. எனவே, டாக்டரின்

பாலைமர பேய்பாலைமர பேய்

  என் பெயர் ஆதி. நான் கேரள மாநிலத்தில் மலைப்புரம் டிஸ்ட்ரிக்ட்டை சேர்ந்தவன். பல வருடங்களாக துபாயில் வசித்து வருகிறேன். விடுமுறைக்காக எனது உறவினர்களை சந்திக்க கேரளாவிற்கு வந்தேன். எனது சொந்த ஊர் மஞ்சேரிக்கு அருகில் உள்ளது. இரவு நேரத்தில் அங்கு