பேதையின் பிதற்றலில் பெண் மனதின் பொருள்
எப்போது? எப்படி? என எதிர்பார்த்த தருணத்தை தர
கனவை நனவாக்க வருபவனே
உன்னுடனான என் முதல் சந்திப்பு எப்படி இருக்கும்?
உன் உருவத்தைப் பருகும் வகையில் உன்னைப் பார்ப்பேனோ?
உன்னைக் கண்டதால் உண்டான நாணத்தால் மண்ணைப் பார்ப்பேனோ?
மனநிறைவுடன் அமைதியாய் அத்தருணத்தை ரசிப்பேனோ?
மனமகிழ்ச்சியில் அலைக்கடலாய் ஆர்பரிப்பேனோ?
பிரிவில் வாடிய பேதையாகி பேசாமடந்தையாவேனோ?
பலயுகம் தாண்டி கண்ட களிப்பில் அளவில்லா வாயாடுவேனோ?
நம்மிருவருக்கும் இடையில் வாய்மொழி வேண்டும் என எதிர்பார்ப்பேனோ?
மொழிகளற்று உணர்வுகள் மட்டும் பரிமாற ஏங்குவேனோ?
என் எண்ணத்தை நான் அறியேன் ?
நீயேனும் என்னை உணர்வாயோ?
என் செயலின் பொருளை அறிவாயோ? – இல்லை
பிச்சி பிதற்றுகிறாள் என மீண்டும் பிரிந்து செல்வாயோ?
~ஸ்ரீ !!~
அட… தலைவரை பிரிந்த தலைவியின் ஏக்கம் அப்படியே சங்க காலத்தையம்…. கொஞ்சம் சரயுவையும் ஞாபகப்படுத்துகிறது
நன்றி தோழி.. 🙂