இராகம்: நாட்டை தாளம்: ஆதி
கணபதியே வருவாய் அருள்வாய்
(கணபதியே)
மனம் மொழி மெய்யாலே தினம் உன்னைத் துதிக்க
மங்கள இசை என்தன் நாவினில் உதிக்க
(கணபதியே)
ஏழு சுரங்களில் இன்னிசை பாட
எங்கணும் இன்பம் பொங்கியே ஓட
தாளமும் பாவமும் ததும்பிக் கூத்தாட
தரணியில் யாவரும் புகழ்ந்து கொண்டாட
(கணபதியே)
தூக்கிய துதிக்கை வாழ்த்துக்கள் அளிக்க
தொனியும் மணியென கரென் றொலிக்க
ஊக்குக நல்லிசை உள்ளம் களிக்க
உண்மை ஞானம் செல்வம் கொழிக்க
(கணபதியே)
Famous Hindu God! Om Ganapathi..