Tamil Madhura தொடர்கள் சித்ராங்கதா – 17

சித்ராங்கதா – 17

Chitrangathaa – 17

வணக்கம் பிரெண்ட்ஸ்,

சரயுவுக்கும் ஜிஷ்ணுவுக்கும் நீங்கள் அளிக்கும் ஆதரவுக்கு நன்றி. உங்களது கமெண்ட்ஸ் படித்தேன். உங்களது எண்ணங்களைத் தெரிவித்து நீங்கள் அனுப்பிய முகநூல் மெசேஜ் மற்றும் பர்சனல் மெயில்களுக்கு ஓராயிரம் நன்றி. இந்தக் கதையில் நீங்கள் காட்டும் ஈடுபாடும் ஆர்வமும் எனக்கு மகிழ்ச்சியை அளிக்கும் அதே நேரத்தில் உங்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டுமே என்ற கவலையையும் தருகிறது.

இன்றைய பகுதியில் சரயு எதிர்கொள்ளப் போகும் மற்றொரு பிரச்சனை பற்றி உங்களுக்கு சொல்லப் போகிறேன். உங்களோட எண்ணற்ற கேள்விகளில் ஒன்றிற்கு இந்தப் பகுதியில் விடை கிடைக்கும் என்று நம்புகிறேன்.

சரயு ப்ளாஷ்பேக்கில் இனிதான் தனது இருண்ட காலத்தில் முதல் அடியை எடுத்து வைக்கிறாள். தாயில்லாத குறையை இனி காலம் அவளுக்கு வலிக்க வலிக்க உணர்த்தப் போகிறது. அவளுக்கு உங்கள் அனைவரின் சப்போர்ட் கண்டிப்பாகத் தேவை. தருவீர்கள் என்ற நம்பிக்கையுடன் இந்தப் பதிவை இடுகிறேன்.

அன்புடன்,
தமிழ் மதுரா

6 thoughts on “சித்ராங்கதா – 17”

  1. ஹாய் தமிழ்

    என்ன நடக்குது….
    செல்வம் இவ்வளவு மோசமானவனா…. ச்சே… இவனை பற்றி தெரியாமல் சரயு பழகுறாளே…. கூடவே இருந்து குடும்பத்தை கெடுக்கும் கோடாலி … அவனை ஒரே போடா போடு மக்கா…

    கடைசியில நம்ம சம்முவம் மச்சான் இம்புட்டு நல்லவரா…. (இவனையாவது நம்பலாமா….) எந்த புத்துல எந்த பாம்பு இருக்குன்னே தெரியலையே…

    லட்சுமியை அடிச்ச அடியை அந்த களவாணி பயலுக்கு போட்டு இருந்தா சூப்பரா இருந்து இருக்கும்…

    சம்முவம்…செல்வம்… ஜிஷ்ணு …. இன்னும் எத்தனை பேருடா….

  2. தமிழ் , பலாபழத்தின் தோள் பார்த்தால் உள்ளே இருக்கும் இனிய பழம் தெரிவது இல்லை ..அது போல் சரயு சம்முவத்தின் நல்ல மனதை புரிந்து கொள்ளவில்லை …..
    சண்டாளன் செல்வம் என்ன ஒரு திட்டம் போடறான் ? இவன் என்னத்த பண்ண போறானோ ன்னு பக் பக் …….

    slang ,அப்புறம் தின்னவேலி அல்வா கடை , நகை கடை , பைக் பேருன்னு நல்லா ஆராய்ச்சி பண்ணி இருக்கேங்க தமிழ் ……

  3. ஹாய் mam ,
    thank you for your அப்டேட் .நான் தான் இப்போ ,இங்கே first ஆ ?தெரியல ……

    கதையில் வரும் தின்னவேலி பேச்சுக்கு முதல்ல ,ஒரு நன்றி .

    கனத்த பதிவு தான் .

    பெண்ணா பொறப்பது கொடுமையோ ……….?

    அழகாய் இருப்பதும் கொடுமையா ?

    தாயில்லாமல் ,இருப்பது அதிலும் கொடுமை ..

    வெகுளியா இருந்தா இன்னும் கொடுமை

    இப்படி ,பொறுக்கியா ஒரு அக்கா கணவன் இருந்தா -ஒரு சின்னசிறு வெகுளி பெண் ,என்ன செய்யுவா?

    அவள் -ஸ்வீட் சாப்பிட்டதில் தப்பே இல்லை .

    இப்படி உள்ள ஆண் என்னும் ,மிருக ஜென்மங்களால் -எவ்வளவு குடும்பங்கள்
    பாதிக்கப் படுகின்றன ?

    சண்முகம் -கறுப்பா ,முரடா வெளியில் இருந்தாலும் ,உள்ளமும் ,குணமும் வெள்ளையோ வெள்ளை …இதை சரயு வயது பிள்ளைகள் அறிந்து கொள்ளுமோ ?

    அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறேன் ,mam

  4. ஹாய் தமிழ் ,
    சரசு ஒரு விஷ பூச்சியை உள்ளே விட்டுட .சம்யுவை சுத்தியும் ஆபத்து …சமுவம் அருமையான மச்சான் …..நெல்லைஅப்பர்கும் உடல்நிலை சரி இல்லை …..சந்தோச சரவெடிக்கு இனி வாழ்வில் துக்க பக்கங்களா ?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ராணி மங்கம்மாள் – 17ராணி மங்கம்மாள் – 17

17. கெட்ட சொப்பனமும் குழப்பமும்  பேரன் விஜயரங்கனின் ஆசையை மறுக்க முடியாத காரணத்தால் வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தின் கோபுரத்தில் ஏறிக்கொண்டிருந்தாலும் ராணி மங்கம்மாளுக்குப் படியேறி மேலே செல்வது களைப்பாகத்தான் இருந்தது.   பாதிக் கோபுரம் ஏறிக் கொண்டிருக்கும் போதே “இங்கிருந்து ஒருவரைக்

உள்ளம் குழையுதடி கிளியே – 25உள்ளம் குழையுதடி கிளியே – 25

ஹாய் பிரெண்ட்ஸ், சென்ற பகுதிக்கு நீங்கள் அளித்த வரவேற்புக்கு மிக்க நன்றி. இன்றைய முக்கியமான பகுதிக்கு செல்வோம். உள்ளம் குழையுதடி கிளியே – 25 அன்புடன், தமிழ் மதுரா

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 71ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 71

71 – மனதை மாற்றிவிட்டாய் திவி “வெயிட் வெயிட். அது முழுசா பொய்யுமில்லை, உண்மையுமில்ல. இரண்டுமே மிக்சிடு தான்.” “அதான் எப்படி? ” “அனு விசயத்துல சோபி பண்ணத பாத்தபிறகு எனக்கு அவளை சுத்தமா நம்பாதோனல. அதனால என் பிரண்ட் ஒருத்தன்கிட்ட